சேலம் சந்தைபேட்டை அரசு மதுபான பாரில் 123 பாட்டில்கள் பறிமுதல்

சந்தைப்பேட்டை பகுதியில் இரவு 11 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 123 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.
சேலம் சந்தைபேட்டை அரசு மதுபான பாரில்  123 பாட்டில்கள் பறிமுதல்
Published on

சேலம்:

சேலம் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் பாபு நேற்று இரவு செவ்வாய்பேட்டை அருகே உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் இரவு 11 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த டாஸ்மாக் கடை எண் 2226-ல் உள்ள பார் திறந்து இருப்பது கண்டு உடனடியாக உள்ளே சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 123 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். மேலும் கடையில் இருந்த 4 பேரை பிடித்து சேலம் செவ்வாய்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com