என் மலர்
உள்ளூர் செய்திகள்

பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்ற இருவர் கைது
- ஏரிக்கரை பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை.
- தனது வீட்டில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே வெவ்வேறு சம்பவங்களில் திருட்டுத்தனமாக பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவற்றின் விவரம் வருமாறு:-
தஞ்சாவூர் அருகே உள்ள சின்ன புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி.
இவரது மனைவி ராணி (வயது 44).
இவர் அருகே உள்ள ஏரிக்கரை பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார்.
தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராணியை கைது செய்தனர்.
இதேபோல் குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல் (36) என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அவரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story






