search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடை அடைப்பு"

    • சென்னிமலை முருகன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்பட்டது.
    • பின்னர் இரவு 7.35 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு கிரகண தோஷ சாந்தி சிறப்பு பூஜை நடத்தப்பட்டடது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்பட்டது.

    அதனால், காலசந்தி பூஜை, உச்சிகாலம், சாயரட்சை பூஜை நடைபெற்று பகல் 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை சென்னிமலை முருகன் கோவில் சாமி மூலஸ்தான கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்பட்டது.

    நேற்று செவ்வாய்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. இருந்தாலும் பக்தர்களை பகல் 1.30 மணியில் இருந்து கோவில் பணியாளர்கள் கொஞ்சம், கொஞ்சமாக வெளியேற்றி நடைசாத்தப்பட்டது.

    பின்னர் இரவு 7.35 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு கிரகண தோஷ சாந்தி சிறப்பு பூஜை நடத்தப்பட்டடது. அதன் பின்பு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இரவு வேங்கை மர ரதம் உலா நடைபெறவில்லை.

    • சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைசாத்தப்பட்டது.
    • 7.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

    மதுரை

    சந்திர கிரகணம் இன்று மதியம் 2.39 மணிக்கு தொடங்கி, மாலை 6.19 மணி வரை ஏற்படும் என்பதால் சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஆகம விதிப்படி கோவில் நடைகள் சாத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இன்று சந்திர கிரகணம் என்பதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலசந்தி- சாயரட்சை பூஜைகள் முடிந்த பிறகு கோவில் நடை இன்று காலை 9.30 மணிக்கு சாத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் கிரகண நேரத்தில் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதிக்கப்படவில்லை.

    சந்திர கிரகணம் முடிந்து இன்று இரவு 7.30 மணிக்கு பிறகு நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமின்றி 22 உப கோவில்களின் நடைகளும் இன்று சாத்தப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து மத்திம காலத்தில் சுவாமிகளுக்கு மாலை 4.30 மணிக்கு தீர்த்தம் கொடுக்கப்படும். அதன் பிறகு சந்திரசேகரர் புறப்பாடு நடக்கும். இரவு 7 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடக்கும். 7.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதன் பிறகு பக்தர்கள் மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • சந்திர கிரகணத்தையொட்டி நடவடிக்கை
    • சாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை

    வேலூர்:

    சந்திர கிரகணம் இன்று மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.29 மணி வரை நிகழ்கிறது. இதனையொட்டி கோவில்களில் நடை சாத்தப்பட்டது.

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் இன்று மதியம் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான சீனிவாச பெருமாள் கோவிலில் காலை முதலே நடை சாத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்த பிறகு தேவஸ்தான கோவில் நடை திறக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி அம்மன் கோவிலில் இன்று சந்திர கிரகணத்தையொட்டி மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

    ஸ்ரீபுரம் தங்கக் கோவில் இன்று மதியம் 12 மணிக்கு மூடப்பட்டது.தொடர்ந்து இன்று முழுவதும் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இதேபோல ரத்தினகிரி, வள்ளிமலை உள்ளிட்ட முருகர் கோவிலிலும் இன்று சந்திர கிரகணத்தையொட்டி மதியம் முதல் இரவு 7 மணி வரை நடை சாத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    • இரவு 7.45 மணிக்கு பரிகார பூஜைகள் நடத்தி மீண்டும் திறக்கப்படுகிறது
    • இன்று மாலை 5.27 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்ம னை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும். இந்த நிலையில் இன்று மாலை 5.27 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது.

    இந்த சந்திரகிரகண நேரத்தில் கோவில்களில் மூலஸ்தானகருவறையில் கிரகணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருப்ப தற்காக கோவில் நடை அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று மாலை 4 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது.

    மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுவதற்கு பதிலாக 3¾ மணி நேரம் தாமதமாக இரவு 7.45 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சந்திர கிரகண நேரத்தில் கிரகணத்தினுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையைசுற்றி தர்ப்பை புல்லால் கட்டி பட்டு துணி யால் மூடி வைக்கப்படுகிறது.

    சந்திர கிரகணம் முடிந்த பிறகு கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பகவதி அம்மன் விக்ரக சிலைக்கு அபிஷேகம் நடத்தி கோவில் நடை திறக்க ப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    • சென்னிமலை முருகன் கோவிலில் இன்று, அமாவசை தினத்தில் ஏரளாமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • சூரிய கிரகணத்தை யொட்டி இன்று மதியம் 1 மணிக்கு அனைத்து கோவில்களின் நடை அடைக்கப்பட்டது.

    ஈரோடு:

    சென்னிமலை முருகன் கோவிலில் இன்று, அம்மாவசை தினத்தில் ஏரளாமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று அமாவசை நாளில் தீபாவளி பண்டிகை விடுமுறை, செவ்வாய்கிழமையும் ஒருங்கிணைந்து வந்ததால் சென்னிமலை முருகன் கோவிலில் அதிகாலை 5.30 மணி முதலே கூட்டம் அதிகமாக இருந்தது. இதைத்தொடர்ந்து மதியத்துக்கு மேல் நடை சாத்தப்பட்டது,

    இதே போல் சத்திய மங்கலம் அடுத்த பண்ணாரி யம்மன் கோவிலில் அமா வாசையை யொட்டி இன்று ஏராள மான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி இன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டது. தொடர்ந்து ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடகா மாநில பக்தர்களும் அதிகளவு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சூரிய கிரகணத்தை யொட்டி இன்று மதியம் 1 மணி கோவில் நடை சாத்த ப்பட்டது. இதே போல் ஈரோடு பெரிய மாரியம்மன், சத்திய மங்கலம் தண்டு மாரியம்மன், கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன் அந்தியூர் பக்தர காளியம்மன் கோவில் உள் அனைத்து கோவில் களிலும் ஏராளமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து சூரிய கிரகணத்தை யொட்டி இன்று மதியம் 1 மணிக்கு அனைத்து கோவில்களின் நடை அடைக்கப்பட்டது.

    • இரவு 7 மணிக்கு பின் வழிபாடுகள் நடைபெறும்.
    • கடைசி சூரிய கிரகணம் இன்று நடக்கிறது.

    கோவை:

    நடப்பாண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நடக்கிறது. இன்று மாலை 5.21 மணியில் இருந்து மாலை 6.23 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கிறது.சூரிய கிரகண நேரத்தில் கோவில்களின் நடை அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி கோவையில் உள்ள முக்கிய கோவில்களின் நடைகள் அடைக்கப்படுகிறது.

    கோவை வடவள்ளி அருகே மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். இந்த கோவிலில் இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை மருதமலை முருகன் கோவில் நடை அடைக்கப்படுகிறது. அப்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    சூரிய கிரகணம் முடிந்தவுடன் நாளை காலை 6 மணி முதல் வழக்கம்போல் கோவில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பொள்ளாச்சி மாசாணி யம்மன் கோவிலுக்கு உள்ளூர் வெளியூர் பக்தர்கள் என தினமும் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து ெசல்கின்றனர்.

    சூரிய கிரகணத்தையொட்டி ஆனைமலை மாசாணி யம்மன் கோவில் நடை இன்று பிற்பகல் 3 மணி முதல் அடைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதி கிடையாது. நாளை வழக்கம்போல காலை 6 மணி முதல் நடை திறந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    ஈச்சனாரி விநாயகர் கோவில் நடை இன்று மாலை 3 முதல் இரவு 7 மணி வரை அடைக்கப்படும். இந்த சமயத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    இரவு 7 மணிக்கு பின் வழிபாடுகள் நடைபெறும். அப்போது பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.இதேபோல கோவையில் உள்ள பல கோவில்களில் இன்று மாலை நடை அடைக்கப்படுகிறது.

    • இரவு 7 மணிக்கு பிறகு பரிகார பூஜைகள் முடிந்து நடை திறக்கப்படுகிறது
    • பகவதி அம்மன் விக்ரக சிலையைசுற்றி தர்ப்பை புல்லால் கட்டி பட்டு துணியால் மூடி வைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று மாலை 5.27 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகண நேரத்தில் கோவில்களில் மூலஸ்தான கருவறையில் கிரகணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக கோவில் நடை அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி சூரிய கிரகணத்தையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று மாலை 3 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது.

    மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுவதற்கு பதிலாக 3 மணி நேரம் தாமதமாக இரவு 7 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இந்த 3 மணி நேரமும் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். சூரிய கிரகண நேரத்தில் கிரகணத்தினுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையைசுற்றி தர்ப்பை புல்லால் கட்டி பட்டு துணியால் மூடி வைக்கப்படுகிறது.

    சூரிய கிரகணம் முடிந்த பிறகு கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பகவதி அம்மன் விக்ரக சிலைக்கு அபிஷேகம் நடத்தி கோவில் நடை திறக்கப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    • வருகிற 25-ந் தேதி மாலை 5.23 மணிக்கு சூரியகிரகணம் தொடங்கி 6.23 மணிக்கு முடிவடைவதால் சென்னிமலை முருகன் கோவில் சுவாமி மூலஸ்தான நடை சாத்தப்படும்.
    • இந்நேரத்தில் மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசிக்கவோ அனுமதி இல்லை.

    சென்னிமலை:

    வருகிற அக்டோபர் மாதம் 25-ந் தேதி அன்று மாலை 5.23 மணிக்கு சூரியகிரகணம் தொடங்கி 6.23 மணிக்கு முடிவடைவதால் காலசந்தி பூஜை, உச்சிகாலம், சாயரட்சை பூஜை நடைபெற்று பகல் 2.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை சென்னிமலை முருகன் கோவில் சுவாமி மூலஸ்தான கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்படும்.

    இந்நேரத்தில் மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசிக்கவோ அனுமதி இல்லை. இரவு 7:35 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்ப–டுவர். அன்று மட்டும் இரவு வேங்கை மர ரதம் உலா நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×