search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக போலீஸ்"

    • பொதுமக்களிடம் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும். அதற்காக அதிகாரிகளுக்கு நான் நேரில் பயிற்சி அளித்தேன்.
    • நம்மைப்பற்றிய விமர்சனம் பலவரும். இங்கு குறைகள் பூதாகரமாக பார்க்கப்படும்.

    சென்னை:

    தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த சைலேந்திரபாபு காவல் அதிகாரிகள், மற்றும் போலீசாருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

    அதில் தனது பணிக்காலத் தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளை சுட்டிக் காட்டி இருப்பதுடன் காவலர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் அறிவுறுத்தியுள்ளார். கடிதத்தில் சைலேந்திரபாபு கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்து பணி நிறைவு பெற்று உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.

    இரண்டாண்டு காலம் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரித்தோம், குற்ற நிகழ்வுகளை தடுத்தோம், நடந்த குற்றங்களைக் கண்டுபிடித்தோம். கண்டுபிடிக்க முடியாத சில வழக்குகளில் இன்னும் தீவிர விசாரணை செய்கிறோம்.

    ஆனால், தவறாக ஒருவரை குற்றவாளியாக்கவில்லை. அதுபோல குற்றம் செய்தவர்கள் யாராக இருந் தாலும் அவர்களை விட்டு விடவில்லை.

    ரவுடிகள் தொல்லை இல்லை, கூலிப்படைகள் நடமாட்டம் இல்லை என்ற நிலைமையை உருவாக்கினோம். இவை அனைத்தும் உங்கள் முயற்சியால் ஏற்பட்டது. எனவே உங்களுக்கு பாராட்டுகள். உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன்.

    கடந்த 2 ஆண்டுகளில் 3 லட்சம் இந்திய தண்டனை சட்ட வழக்குகள், 6 லட்சம் சிறு வழக்குகள், 18 லட்சம் இதர மனுக்கள் விசாரிக்கப்பட்டன. மோட்டார் வாகன சட்டத்தில் 5 கோடியே 30 ஆயிரம் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 536 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இவை பெரும் பணியாகும்.

    பொதுமக்களிடம் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும். அதற்காக அதிகாரிகளுக்கு நான் நேரில் பயிற்சி அளித்தேன். தலைமைப் பண்பு வளர்க்க உடல்நலம், மனநலம் காக்க வேண்டும். தொடர்கல்வி கற்க வேண்டும். ஒருமணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அளவோடு உணவு உண்ண வேண்டும். காவல்துறையின் 1,34,000 பேரும் ஓர் ஆளுமை என்ற நிலை வரவேண்டும். அப்போது நம் செயல் சிறப்படையும். காவல்துறையின் செயல்பாட்டில் விரும்பத்தக்க மாற்றம் ஏற்படும்.

    வதந்திகளைக் கையாண்டது, ரவுடிகளின் கொட்டத்தை அடக்கியது, கூலிப்படையினரை காணாமல் போகச் செய்தது, போதைப் பொருள் நட மாட்டத்தை குறைத்தது, தொழில்நுட்பத்தில் ஏற்படுத்திய புரட்சி போன்ற உங்கள் சாதனைகளைப் பார்த்து நான் வியப்படைகிறேன்.

    பொதுமக்கள் நம்மிடம் நிறைய எதிர்ப்பார்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்து, அவர்களின் மனதில் இடம் பிடிப்பது நமது லட்சியமாக இருக்க வேண்டும்.

    நம்மைப்பற்றிய விமர்சனம் பலவரும். இங்கு குறைகள் பூதாகரமாக பார்க்கப்படும். ஆனால், நிறைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை. இருப்பினும் குற்றச் சாட்டுகளை ஆராய்ந்து பார்த்து, அவற்றின் உண்மைத் தன்மையை கண்டறிந்து நம்மை நாம் திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாக அதை எடுத்துக்கொண்டு, நாம் சரியான பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் 47 ஆயிரத்து 248 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
    • ஏப்ரல் 3-ந்தேதி இரவு முதல் “கஞ்சா வேட்டை 4.0” அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

    தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, 2021-ம் ஆண்டு முதல் 'கஞ்சா வேட்டை' நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் 47 ஆயிரத்து 248 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 20 ஆயிரத்து 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25,721 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே கடந்த ஏப்ரல் 3-ந்தேதி இரவு முதல் "கஞ்சா வேட்டை 4.0" அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி குன்றத்தூரில் நடைபெற்ற வாகன சோதனையின் போது ரூ.1 கோடி மதிப்புள்ள 22 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட 7 சரக்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே கஞ்சா பதுக்கி வைப்பவர்கள், விற்பர்கள் குறித்து 044-28447701 என்ற தொலைபேசி எண்ணிலும் tndgpcontrolroom@mail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீவிரவாத எதிர்ப்பு படை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
    • தமிழக எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

    சென்னை:

    கோவையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் தீவிரவாத எதிர்ப்பு படை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி தீவிரவாத எதிர்ப்பு படையை தமிழக போலீஸ் உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் தீவிரவாத எதிர்ப்பு படை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. உளவுப் பிரிவில் இருந்து தீவிரவாத எதிர்ப்பு படைக்கு ஆட்கள் வரவழைக்கப்படுகிறார்கள். இந்த படையில் மொத்தம் 383 பேர் இருப்பார்கள்.

    இதற்காக ரூ.57.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தீவிரவாத எதிர்ப்பு படை இருக்கும். தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள் மற்றும் நகரங்களை நாள்கள் பட்டியலிட்டு உள்ளோம். கோவை, மதுரை மற்றும் சென்னைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    தமிழக எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

    இந்த தீவிரவாத எதிர்ப்புபடை கேரளாவில் தண்டர்போல்ட், ஆந்திராவில் ஆக்டோபஸ், வடமாநிலங்களில் தீவிரவாத எதிர்ப்பு படை ஆகிய பெயர்களில் உள்ளன.

    புலனாய்வு பிரிவுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் முக்கிய வழக்குகளை விசாரித்த அதிகாரிகளுடன் ஆலோசனை கேட்கப்பட்டு உள்ளது. தீவிரவாதிகளுக்கு தமிழக எல்லைக்கு அப்பால் தொடர்பு இருந்தால் மற்ற மாநில காவல் துறை அல்லது மத்திய புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் வழக்கை எவ்வாறு விசாரிப்பது என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.
    • வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது என தெரிவித்தது.

    சென்னை:

    புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    31.12.2022 அன்று இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

    வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது.

    31.12.2022 அன்று மாலை முதல் சுமார் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்க்காவல் படையினர் என பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாகன சோதனை தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். எனவே, நள்ளிரவு, மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை.

    முதல் நாள் இரவும், புத்தாண்டின் போதும் கடற்கரைகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது.

    மது அருந்தியவர்கள், வாகனம் ஓட்டக் கூடாது. மீறினால் கைது செய்யப்படுவர், அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

    வழிபாட்டுத் தலங்களுக்கு காவல்துறையால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள்.

    கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

    அசம்பாவிதம் இல்லாத, விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சின்னு முஸ்தாக் மத்திய பிரதேசத்தின் கஞ்சர்சேர்வா பகுதியில் பதுங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
    • தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வரும் காட்சியைப் போல் குற்றவாளியை அங்கு சென்று போலீசார் பிடித்துள்ளனர்.

    சென்னை:

    கோவை மாவட்டத்தில் நகை தயாரிப்பு பட்டறைகளில் தயாரிக்கப்படும் நகைகள் அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

    அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் கோவையில் இருந்து ஐதராபாத்திற்கு நகைகளைக் கொண்டு சென்ற ஒரு வாகனத்தில் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புடைய 6.5 கிலோ தங்கம் திருடுபோனது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நகைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை சுங்கச்சாவடிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் போலீசார் கண்காணித்தனர். அப்போது அந்த வாகனத்தை கார் ஒன்று பின்தொடர்ந்து சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    அந்த காரின் நம்பரை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபரின் பெயர் சின்னு முஸ்தாக் என்பதும், அந்த நபர் மத்திய பிரதேச மாநிலம் கஞ்சர்சேர்வா என்ற பகுதியில் பதுங்கி இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கோவை மாநகர காவல்துறை சார்பில் 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார் மத்திய பிரதேசத்திற்குச் சென்றனர்.

    அங்கு சென்று கஞ்சர்சேர்வா பகுதி குறித்து தனிப்படை போலீசார் விசாரித்த போது, அங்கு குற்றப்பின்னணி கொண்ட நபர்கள் பலர் வசித்து வருவதாகவும், அவர்களிடம் நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அங்கு செல்வதற்கு உள்ளூர் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் பலர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனையடுத்து உள்ளூர் போலீஸ் உதவியுடன் தமிழகத்தைச் சேர்ந்த தனிப்படை போலீசார் கஞ்சர்சேர்வா கிராமத்திற்குச் சென்றனர். அங்கு பதுங்கியிருந்த குற்றவாளி சின்னு முஸ்தாக்கை அடையாளம் கண்டு போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது, அங்குள்ள கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து போலீசை தாக்கத் தொடங்கியுள்ளனர். இதனிடையே போலீசார் ஒருபுறம் துப்பாக்கியைக் காட்டி கிராம மக்களை கட்டுப்படுத்த முயன்றபோது, மறுபுறம் தமிழக போலீசார் சின்னு முஸ்தாக்கை வண்டியில் ஏற்றி அங்கிருந்து விரைந்தனர். தமிழில் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் வரும் காட்சியைப் போல் சுமார் 10 நிமிட இடைவெளியில் இந்த சம்பவம் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரை தனிப்படை போலீசார் தமிழகத்திற்கு கொண்டு வந்தனர்.

    இரு மாநில போலீசாரின் உதவியுடன் திருடப்பட்ட 6.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் துணிச்சலாக செயல்பட்டு குற்றவாளியைப் பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டி தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கிராமத்திற்குள் புகுந்த போலீசார் மீது அங்குள்ள மக்கள் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவங்கள் அதில் பதிவாகியுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டி.ஜி.பி.யின் சீருடை தோள் பட்டையில் ஐ.பி.எஸ். என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும்.
    • கூடுதல் டி.ஜி.பி. சீருடையிலும் இந்த அடையாளங்கள் உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் காவலர் முதல் டி.ஜி.பி. வரை போலீசாருக்கு ஒரே மாதிரியான காக்கி சீருடைகள் வழங்கப்பட்டு உள்ள போதிலும் அவரவர் அதிகாரத்துக்கு ஏற்ப சீருடையில் சின்னங்கள் இடம் பெற்றிருக்கும்.

    டி.ஜி.பி.யின் சீருடை தோள் பட்டையில் ஐ.பி.எஸ். என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும். அசோக சின்னம், வாள், சிறியதடி ஆகியவையும் இடம் பெற்றிருக்கும்.

    தொப்பியில் வெள்ளி ஜரிகை, ஆலிவ் இலை வடிவிலான ஐ.பி.எஸ். சின்னம் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும். இதே போன்று கூடுதல் டி.ஜி.பி. சீருடையிலும் இந்த அடையாளங்கள் உள்ளன.

    தமிழக காவல் துறை இன்ஸ்பெக்டரின் சீருடையில் 3 ஸ்டார்களும், சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் 2 ஸ்டார்களும் இடம் பெற்றிருக்கும். ஏட்டுவின் சீருடையில் 3 பட்டைகள் போடப்பட்டிருக்கும்.

    காவலர்கள் எந்த வகை பிரிவில் பணியாற்றுகிறார்கள் என்பதை குறிக்கும் வகையில் இதுபோன்ற அடையாளங்கள் இடம் பெற்றிருந்த போதிலும் தமிழக காவல் துறை என்பதை குறிப்பிட்டு எந்த சின்னமும் இருக்காது.

    இந்த நிலையில் "தமிழ்நாடு போலீஸ்" என்கிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட புதிய சீருடை சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இந்த புதிய சின்னத்தை காவலர் முதல் டி.ஜி.பி. வரை அனைவரும் அணிந்து கொள்வார்கள். கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆலோசனையின் முடிவிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    புதிய போலீஸ் சீருடை சின்னத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம், அசோக சின்னம், தேசிய கொடி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அதனுடன் காவல் என்ற வார்த்தைகள் தமிழில் இடம் பெற்றுள்ளது.

    தமிழகத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கு போலீசார், ரெயில்வே போலீசார், மகளிர் போலீசார், போக்கு வரத்து போலீசார் என சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் காவலர்கள் விரைவில் தங்களது சீருடையில் புதிய சின்னத்தை வைத்து தைத்து பயன்படுத்திக் கொள்ள உள்ளனர்.

    இதற்கான தொடக்க விழா விரைவில் நடைபெற உள்ளது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

    • தமிழகத்தில் அடுத்தடுத்து லாக்கப் மரணங்கள் நடக்கின்றன என மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
    • அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் ஒவ்வொரு மாதமும் வெளியிடுவோம் என்றார் அண்ணாமலை.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தி.மு.க. அமைச்சர்கள் பா.ஜ.க. தொண்டர்களை பற்றி கூறும் பேச்சுகளை சிறந்த நகைச்சுவை படமாக மக்கள் பார்த்து ரசிப்பார்கள்.

    அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் ஒவ்வொரு மாதமும் வெளியிடுவோம். ஆவினில் ஊழல் குறித்து நான் சொன்னதும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் ஊழல் இல்லை என விளக்கம் கொடுத்தார். அப்படியிருக்கையில் எதற்காக சுகாதார செயலரை மாற்றியுள்ளார்?

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு 7 லாக்கப் மரணங்களைத் தாண்டிவிட்டது. சாத்தான்குளம் விவகாரத்தில் காவல்துறை செய்திருப்பது மிகவும் தவறானது.

    அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் உள்ளிட்டோர் அதனை அரசியல் நிகழ்ச்சியாக மாற்றினர். ஆனால், இப்போது தி.மு.க. ஆட்சியில் அடுத்தடுத்து லாக்கப் மரணங்கள், கூட்டு பலாத்காரம், சாலையில் வெட்டுவது போன்ற செயல்கள் நடப்பது அரசின் செயலின்மையை காட்டுகிறது.

    தமிழக போலீஸ் ஒரு பல் பிடுங்கப்பட்ட பாம்பாக உள்ளது. இதில் தி.மு.க.வின் அரசியல் தலையீடுதான் முதலில் சரிசெய்யப்பட வேண்டியது என தெரிவித்துள்ளார்.

    ×