என் மலர்
நீங்கள் தேடியது "டொனல்டு ட்ரம்ப்"
- ஒருபுறம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது, மறுபுறம் வெளிப்படையான ராணுவ அழுத்தத்தைத் தொடர்வது என ட்ரம்ப் அரசு இருவியூகத்தை வகுத்துவருகிறது.
- ஒரு சிறிய தவறான கணக்கீடு கூட, நிலைமையை மிக வேகமாகப் போராக மாற்றக்கூடும்
ஈரான் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் இல்லையேல் மோஷமான விஷயங்கள் நடக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற "அமைதி வாரிய" கூட்டத்தில் பேசிய டிரம்ப்,
"நாம் ஈரானுடன் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தம் செய்ய வேண்டும். நல்ல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஈரானுடன் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தம் செய்வது எளிதல்ல என்பது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தம் செய்ய வேண்டும், இல்லையெனில் மோசமான விஷயங்கள் நடக்கும்" என தெரிவித்தார். மேலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் அடுத்த 10 நாட்களுக்குள் முன்னேற்றம் ஏற்பட வேண்டும், இல்லையெனில் அமெரிக்கா அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கில் இராணுவ பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஓமன் நாடு மத்தியஸ்தம் செய்கிறது.
ஒருபக்கம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் மறுபுறம் ஈரான் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் நிறைந்துவருகிறது. சமீப நாட்களில் F-22, F-35 மற்றும் F-16 உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மேம்பட்ட போர் விமானங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளது அமெரிக்கா. இதனுடன் கூடுதல் கடற்படை கப்பல்களும், வான் பாதுகாப்பு அமைப்புகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த ராணுவ குவிப்பை தடுப்பு நடவடிக்கை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேசமயம் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரானும் தெரிவித்துள்ளது.
ஒருபுறம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது, மறுபுறம் வெளிப்படையான ராணுவ அழுத்தத்தைத் தொடர்வது என ட்ரம்ப் அரசு இருவியூகத்தை வகுத்துவருகிறது. கடந்த காலங்களில் திட்டங்கள் பலனளிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் தற்போதைய அணுகுமுறை, சமரசம் செய்யமறுக்கும் ஈரானுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய சூழல் வழக்கத்திற்கு மாறாக மிகவும் பலவீனமாக இருப்பதாக சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரு தரப்புமே ஒரு முழு அளவிலான போரை விரும்புவதாகத் தெரியவில்லை என்றாலும், தீவிரமடைந்துள்ள ராணுவக் குவிப்புகளும், சமரசமற்ற பேச்சுக்களும் தவறு நடப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளன என தெரிவிக்கின்றனர். கடலிலோ, வான்வெளியிலோ அல்லது பிராந்திய பினாமிப் படைகள் மூலமாகவோ ஏற்படும் ஒரு சிறிய தவறான கணக்கீடு கூட, நிலைமையை மிக வேகமாகப் போராக மாற்றக்கூடும் எனவும் எச்சரிக்கின்றனர்.
- எப்ஸ்டீன் மற்றும் பிறரால் எனக்கு எதிராக செய்யப்பட்ட சதி தவிர வேறு எதுவும் என்னைப் பற்றி வெளிவரவில்லை
- நீங்கள் மிகவும் மோசமான செய்தியாளர். அதனால்தான் CNN-க்கு யாரும் ரேட்டிங் கொடுப்பதில்லை
அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்களை ஜன.31ம் தேதி வெளியிட்டது. இதில் உலகின் பல செல்வாக்குமிக்க மனிதர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் பில் கிளிண்டன், இளவரசர் ஆண்ட்ரூ, பிரதமர் மோடி, பில் கேட்ஸ், எலான் மஸ்க், ரிச்சர்ட் பிரான்சன் போன்றோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
இதனால் இந்த எப்ஸ்டீன் ஃபைல்ஸ் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தரவுகள் வெளியான பிறகே அமெரிக்கா- இந்தியா இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்றும் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தொடர்பாக பெண் நிரூபர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, நீ சிரித்து நான் பார்த்ததே இல்லை என ட்ரம்ப் பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களில் பலர், இப்போது வெளியாகியுள்ள திருத்தப்பட்ட ஆவணங்கள் குறித்து அதிருப்தியில் உள்ளனர். சில முழுமையான சாட்சி நேர்காணல்கள் கூட முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இன்னும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "நீங்கள் மிகவும் மோசமான செய்தியாளர். அதனால்தான் CNN-க்கு யாரும் ரேட்டிங் கொடுப்பதில்லை" என்று சாடினார்.
ஓவல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் CNN செய்தியாளர் கைட்லான் காலின்ஸ் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு காலின்ஸைப் பார்த்து, "நான் உங்களை 10 ஆண்டுகளாக அறிவேன், ஆனால் உங்கள் முகத்தில் ஒரு சிரிப்பைக்கூட நான் பார்த்ததில்லை. நீங்கள் ஏன் சிரிப்பதில்லை தெரியுமா? நீங்கள் உண்மையைச் சொல்வதில்லை என்பது உங்களுக்கே தெரியும்" என்று தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்தார்.
மேலும் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கிளறுவது தேசத்திற்கு நல்லதல்ல என்றும், இதிலிருந்து மக்கள் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்றும் தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய ட்ர்ம்ப், "எப்ஸ்டீன் மற்றும் பிறரால் எனக்கு எதிராக செய்யப்பட்ட சதி தவிர வேறு எதுவும் என்னைப் பற்றி வெளிவரவில்லை, இப்போது நாடு வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன்." என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் நடந்த 45 நிமிடங்களுக்குள், சிஎன்என் (CNN) நிறுவனம் கெய்ட்லான் காலின்ஸிற்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில்,
"அவர் ஒரு தனித்துவமான பத்திரிகையாளர், வெள்ளை மாளிகையிலிருந்தும் களத்திலிருந்தும் ஒவ்வொரு நாளும் மிக ஆழமாகவும், மன உறுதியுடனும் செய்திகளை வழங்குகிறார். தனது செயல்திறனை செய்தி வாசிப்பாளராகவும், சிஎன்என் தளங்களிலும் ஒவ்வொரு நாளும் மிகத் திறமையாக வெளிப்படுத்துகிறார், உலகெங்கிலும் உள்ள நேயர்களுக்கு யாரை நம்பலாம் என்று தெரியும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
- அமெரிக்காவிற்கான ஏற்றுமதி மூலம் நமது நாட்டு மக்கள் ஈட்டி வந்த லாபம் இனி கிடைக்காது.
- காங்கிரஸ் தனது இந்திய-எதிர்ப்பு மனநிலையைத் தெளிவுபடுத்துகிறது
காங்கிரஸ் மூத்த தலைவர் பிரித்விராஜ் சவான் வெனிசுலா அதிபர் மதுரோவின் கைது குறித்து தெரிவித்த கருத்து இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகள் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர்,
50 சதவீத வரியுடன் வர்த்தகம் செய்வது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. நடைமுறையில், இது இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தை, குறிப்பாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு செய்யப்படும் ஏற்றுமதியைத் தடுப்பதற்குச் சமமாகும். முன்பு அமெரிக்காவிற்கான ஏற்றுமதி மூலம் நமது நாட்டு மக்கள் ஈட்டி வந்த லாபம் இனி கிடைக்காது. நாம் மாற்றுச் சந்தைகளைத் தேட வேண்டியிருக்கும், அதற்கான முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன." என தெரிவித்தார்.

பிரித்விராஜ் சவான்
தொடர்ந்து மதுரோ கைது குறித்து பேசிய அவர்,
"அப்படியானால் அடுத்தது என்ன என்ற கேள்வி எழுகிறது. வெனிசுலாவில் நடந்தது போன்ற ஒன்று இந்தியாவில் நடக்குமா? திரு. ட்ரம்ப் நமது பிரதமரைக் கடத்திச் செல்வாரா?" என தெரிவித்தார்.
இவரின் இந்த கருத்துகள் விமர்சனங்களையும், கேலி, கிண்டல்களையும் பெற்றுவருகிறது. சமூக வலைதளத்தில் இவரின் இந்த கருத்துகளை பலரும் நகைச்சுவை செய்தாலும், பாஜகவினர் இந்த கருத்துக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
"காங்கிரஸ் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கீழ்த்தரமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் பிருத்விராஜ் சவான் இந்தியாவின் நிலையை வெனிசுலாவுடன் வெட்கமின்றி ஒப்பிடுகிறார். 'வெனிசுலாவில் நடந்தது இந்தியாவில் நடக்குமா?' என்று கேட்பதன் மூலம், காங்கிரஸ் தனது இந்திய-எதிர்ப்பு மனநிலையைத் தெளிவுபடுத்துகிறது. ராகுல் காந்தி பாரதத்தில் குழப்பத்தை விரும்புகிறார். ராகுல் காந்தி பாரதத்தின் விவகாரங்களில் வெளிநாட்டினரின் தலையீட்டை நாடுகிறார்!" என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- தனது அதிகாரத்தை மீறி டிரம்ப் வரிகளை விதித்து உள்ளதாக நீதிமன்றம் கருத்து.
- டிரம்பின் அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்வதாக நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.
அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார்.
அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இதற்கிடையில், டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள வர்த்தக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று விமர்சித்து, அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்வதாக தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும், இத்தகைய வரிகளை விதிக்க டிரம்ப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.
இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் பதவிட்டார். அவரது பதிவில், அமெரிக்காவில் பொருட்களின் விலைகள் மிகக் குறைந்துவிட்டன. பணவீக்கம் கிட்டத்தட்ட இல்லை. எரிசக்தி விலைகள் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. பெட்ரோல் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
பல ஆண்டுகளாக நம்மை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட நாடுகளிலிருந்து டிரில்லியன் கணக்கான டாலர்களைக் கொண்டு வரும் அற்புதமான வரிகள் அனைத்தும் அமெரிக்காவை மீண்டும் வலிமையாகவும் மரியாதைக்குரியதாகவும் ஆக்குகின்றன.
வரிகளும், நாம் ஏற்கனவே பெற்றுள்ள டிரில்லியன் கணக்கான டாலர்களும் இல்லாவிட்டால், நமது நாடு முற்றிலுமாக அழிக்கப்பட்டு, நமது இராணுவ சக்தி உடனடியாக அழிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
- தனது அதிகாரத்தை மீறி ட்ரம்ப் வரிகளை விதித்து உள்ளதாக கருத்து.
- வரி விதிப்பு குறித்து நீதிமன்ற தீர்ப்பு ஒட்டுமொத்த பேரழிவு என ட்ரம்ப் விமர்சனம்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.
அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார்.
அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இதற்கிடையில், டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள வர்த்தக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று விமர்சித்து, அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்வதாக தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும், இத்தகைய வரிகளை விதிக்க டிரம்ப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.
- தன்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால் அமெரிக்காவில் ரத்தக் களறி ஏற்படும் என டிரம்ப் மிரட்டல்
- ட்ரம்ப் தோல்வியடைந்தால் அதிகார மாற்றம் அமைதியான முறையில் நடைபெறாது
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டுடிரம்ப் (வயது 78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அவரை எதிர்த்து ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் (வயது 81) போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தேர்தல் விவாத நிகழ்ச்சியில் டிரம்ப்-ன் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ஜோ பைடன் திணறினார். வேட்பாளரை மாற்ற கட்சியில் பல தலைவர்கள் போர்க்கொடி துாக்கினர். இதையடுத்து அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார்.
இதனையடுத்து, துணை அதிபர் கமலா ஹாரிஸ் (வயது 59) ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவேளை ட்ரம்ப் தோல்வியடைந்தால் கமலா ஹாரிஸ்க்கு அதிகார மாற்றம் அமைதியான முறையில் நடைபெறாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
CBS செய்தி தொலைக்காட்சிக்கு அதிபர் ஜோ பைடன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "ட்ரம்ப் கூறியதில் அர்த்தம் உள்ளது. அதிபர் தேர்தலில் நாங்கள் தோல்வியடைந்தால் அமெரிக்காவே ரத்த களறியாகும்" என்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால் அமெரிக்காவில் ரத்தக் களறி ஏற்படும் என்று கடந்த மார்ச் மாதம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.






