search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் தாக்குதல்"

    • காயமடைந்த டிரைவர் உள்பட 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • பஸ்சில் புகுந்து டிரைவரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பஸ் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை திருவாய்ப்பாடியை சேர்ந்த ரமேஷ் (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    இந்த பஸ் கும்பகோணம் பாலக்கரை அருகே வந்து கொண்டிருந்த போது பஸ்சுக்கு முன்பு சிலர் தகராறில் ஈடுபட்டிருந்தனர். இதனை கண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது திடீரென பஸ்சை ஏன் நிறுத்தி இருக்கிறாய்? எனக்கூறி 8 பேர் கொண்ட மர்ம கும்பல் பஸ்சின் உள்ளே சென்று டிரைவர் ரமேஷை சரமாரியாக தாக்கினர். இதில் ரமேஷின் மூக்கு, கண், முகம் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பஸ்சை விட்டு வெளியே ஓடினர்.

    அந்த கும்பல் டிரைவரை எட்டி உதைத்து கீழே தள்ளியதுடன், மேலும், 2 பேரையும் தாக்கினர். வலி தாங்காமல் டிரைவர் கூச்சலிடுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் டிரைவரை மீட்க சென்றனர். அப்போது 2 பேர் பொதுமக்களிடம் சிக்கினர்.

    தகவல் அறிந்து வந்த கும்பகோணம் நகர கிழக்கு போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் கும்பகோணம் பாலக்கரை பகுதியை சேர்ந்த சுதர்சன், ஜனார்த்தனன் என்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரின் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    காயமடைந்த டிரைவர் உள்பட 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பஸ்சில் புகுந்து டிரைவரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பஸ்நிலையத்தில் இருந்த அனைத்து அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ்களை இயக்க மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கண்டக்டர்கள் போராட்டத்தால் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் சேவை சுமார் ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரின் மையப் பகுதியான தேரடியில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வரும் கட்டுமான தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து சாலை ஓரத்தில் நின்று வெவ்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் செங்குன்றம் பகுதியில் இருந்து திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கு(எண்55) அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

    தேரடி அருகே வந்தபோது பஸ் திரும்ப வழி இல்லாமல் சாலையோரத்தில் தொழிலாளர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பஸ் டிரைவர் கட்டிட தொழிலாளர்களிடம் வாக்கு வாதத்தில ஈடுபட்டு ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் டிரைவர் பஸ்சை பஸ் நிலையத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தினார்.

    இந்த நிலையில் அங்கு வந்த மர்மநபர்கள் பஸ் நிலையத்துக்குள் நின்ற அரசு பஸ்டிரைவரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பஸ்நிலையத்தில் இருந்த அனைத்து அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ்களை இயக்க மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிரைவரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த போராட்டத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் தனியார் பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்தனர். டிரைவர்-கண்டக்டர்கள் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தால் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் சேவை சுமார் ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.

    • வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர்
    • கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் கோமங்கலம் அருகே உள்ள புது காலனியை சேர்ந்த 38 வயது இளம் பெண்.

    இவர் கோமங்கலம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கஞ்சம்பட்டியை சேர்ந்த திருமணமான 35 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக எனக்கு தெரிய வந்தது. இது குறித்து நான் எனது கணவரிடம் கேட்ட போது எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 13-ந் தேதி எனது பாட்டி இறந்து விட்டார்.

    அவரது இறுதி சடங்கிற்கு நான் சென்றேன். அங்கு எனது கணவருடன் கள்ளத்தொடர்பில் உள்ள இளம்பெண்ணின் மாமியார் வந்து இருந்தார். அவரிடம் நான் எனது கணவரின் கள்ளக்காதல் குறித்து தெரிவித்தேன். இது குறித்து அவர் இளம்பெண்ணிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    சம்பவத்தன்று நான் வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது எனது கணவரின் கள்ளக்காதலி அவரது கணவருடன் எங்கள் வீட்டிற்கு வந்தனர். என்னிடம் ஏன் தேவையில்லாத வதந்தி எல்லாம் பரப்புகிறாய் என கேட்டு தகாத வார்த்தைகளால் பேசினர். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்து அவர்கள் 2 பேரும் சேர்ந்து என்னை தாக்கினர். எனது கணவரும் அவர்களுடன் சேர்ந்து தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த என்னை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். எனவே அவர்கள் 3 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் இளம்பெண்ணின் கணவர், அவரது கள்ளக்காதலி, அவரது கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×