search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சக்கரம்"

    • சிறிது நேரத்திலேயே விமானம் அவசராக தரையிறக்கப்பட்டது.
    • விமானத்தில் 249 பேர் இருந்ததாக யுனைடெட் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.

    அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானமான போயிங் 777 ஜெட்லைனர் ஜப்பானுக்குப் புறப்பட்டது.

    விமானம் டேக் ஆஃப் ஆன சில நொடிகளில் திடீரென விமானத்தின் சக்கரம் ஒன்று கழன்று கீழே விழுந்தது. இதில், விமான நிலைய ஊழியர்கள் பயன்படுத்தும் கார் பார்க்கிங்கிற்குள் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன.

    இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிறிது நேரத்திலேயே விமானம் அவசராக தரையிறக்கப்பட்டது.

    இந்த விமானத்தில் 249 பேர் இருந்ததாக யுனைடெட் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.

    போயிங் 777 விமானத்தில், தரையிறங்கும் ஸ்ட்ரட்கள் ஒவ்வொன்றிலும் ஆறு சக்கரங்களைக் கொண்டுள்ளது. இதில், சக்கரம் காணாமல் போனாலோ அல்லது சேதமடைந்தாலோ பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதனால், பயணிகள் பாதுகாப்பாக தரையிறங்கினர்.

    • கனகராஜ் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள கூகையூர் கிராமத்தில் டிராக்டர் ஓர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் கங்க வல்லி வட்டம் நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (வயது 45). டிராக்டர் மெக்கானிக். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள கூகையூர் கிராமத்தில் டிராக்டர் ஓர்க்ஷாப் நடத்தி வருகிறார். ஓர்க்ஷாப்பின் வாசலில் டிராக்ட ரை நிறுத்திவிட்டு முன்பக்கமாக நேற்று பழுதுபார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த சாலையில் வந்த வாகனம் டிராக்டரின் பின்னால் மோதியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய கனக ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கனகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
    • தியாகராஜர், அம்பாள், முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர் தேர்கள் என மொத்தம் 5 தேர்கள் வடம் பிடிக்கப்படும்.

    திருவாரூர்:

    சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும் சர்வதோச பரிகார தலமாகவும் விளங்குவது புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில்.

    இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    இந்த பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் வரும் நாளை ஏப்ரல் 1ஆம் தேதி நடை பெற உள்ளது.

    பிரசித்தி பெற்ற இந்த திருவாரூர் தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேராகும்.

    சாதாரணமாக இந்த தேர் 36 அடி உயரமும் 36 அடி அகலமும் கொண்டது. நான்கு ராட்சச இரும்பு சக்கரங்களுடன் சேர்த்து இதன் எடை சுமார் 220 டன்னாக இருக்கிறது.

    இந்த தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த தேரின் மேல் கட்டுமானம் மூங்கில்கள் மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணி நடைபெற்றுள்ளது.

    அதற்கு மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம்.

    அதற்கு மேல் 6 அடி உயரத்திற்கு தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் இந்த தேர் கட்டப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட பின் தேரின் எடை சுமார் 300 டன் ஆகும்.

    முன்பகுதியில் 33 அடி நீளமும் 11 அடி உயரமும் கொண்ட நான்கு மர குதிரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேர், அம்பாள் தேர், முருகர் தேர், விநாயகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என மொத்தம் ஐந்து தேர்கள் உள்ளது.

    இந்த தேரோட்டத்தின் போது தேரை நிறுத்துவதற்காக 600 முட்டுக்கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.

    இந்த முட்டுக்கட்டைகள் புளிய மரக்கட்டையால் ஆனவை.

    நாளை காலை 5.30 மணிக்கு முருகர், விநாயகர் தேர்கள் இழுக்கப்படுகிறது.

    பின்னர் 7.30 மணிக்கு பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேர் இழுக்கப்படுகிறது.

    இதனை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைக்கிறார்.

    தேர் பாதுகாப்பு பணியில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் சுமார் 1500 போலீசார் ஈடுப்பட்டு உள்ளனர்.

    தேர் திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் விழா கோலம் பூண்டுள்ளது. 

    • கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
    • பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் படுகாயம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரெயில்வே சாலை பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஷியாம் சுந்தர் (வயது 23). இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி ரெயில்வே கேட் அருகில் புதிய பஸ் நிலையத்துக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏற முயன்றபோது கீழே தவறி விழுந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குபதிவு செய்து அரசு பஸ் டிரைவர் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் தகராறில் ஈடுபட்ட வாலிபர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்
    • வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக குழித்துறை வந்தபோது விபத்து

    நாகர்கோவில்:

    குழித்துறை அருகே ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் முத்தையன் (வயது 63). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக குழித்துறை வந்தார்

    பின்னர் பொருட்கள் வாங்கிவிட்டு முத்தையன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கோணம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முத்தையனை அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் (27) தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். அப்போது முத்தையனிடம் ஸ்ரீஜித் குடிக்க பணம் கேட்டார்.முத்தையன் பணம் கொடுக்காததால் அவரை பிடித்து ஸ்ரீஜித் கிழே தள்ளியுள்ளார்.இதில் முத்தையன் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் முத்தையன் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த முத்தையன் உயிருக்கு போராடினார்.இதை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முத்தையனை பரி சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து களியக்காவிளை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள். இதுகுறித்து முத்தையன் மகன் சுஜின் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஸ்ரீஜித் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    ×