search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழே விழுந்து"

    • பூங்கொடி மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • இதில் அவருக்கு தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.

    பெருந்துறை:

    திருப்பூர் மாவட்டம் நீலகண்டபுரம் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி பூங்கொடி (வயது 55).

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தீபாவளி அன்று ஈரோட்டில் உள்ள அவர்க ளது உறவினரை பார்ப்பத ற்காக தனது மகன் கவுதம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    மோட்டார் சைக்கிளை கவுதம் ஓட்டி வந்தார். பூங்கொடி பின் பகுதியில் அமர்ந்து கொண்டு வந்தார்.

    இதை தொடர்ந்து அவர்கள் பெருந்துறை அடுத்த ஊத்துக்குளி- விஜயமங்கலம் ரோட்டில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது பூங்கொடி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்டு அவரது மகன் அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    மேலும் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார்.

    பெருந்துறை:

    பவானி சீட்டி காலனியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 33). மெக்கானிக். இவர் சம்பவத்தன்று இரவு பெருந்துறை சிப்காட்டில் வேலையை முடித்து விட்டு தனது மொபட்டில் ஊருக்கு திரும்பி சென்றார்.

    பெருந்துறை பவானி ரோடு, டீச்சர் காலனி அருகில் சென்றபோது நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த மகேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் சம்பவத்தன்று நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • திடீரென தவறி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள மானாங்கோரை மேலநெடார் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 80).

    உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் சம்பவத்தன்று தஞ்சை மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    திடீரென தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி பலியானார்.

    இது குறித்து பழனிச்சாமியின் மகன் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில்

    தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • சென்னையில் இருந்து, ரெயில் மூலம் திருப்பூருக்கு நேற்று அதிகாலை வந்தனர்.
    • தாராபுரம் அரசுமருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    தாராபுரம், எம்.எஸ்.பி., நகரை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி ஆர்த்தி இவர்களுக்கு, யாழினிஎன்ற ஒரு வயதில் குழந்தை உள்ளது. சென்னையில் இருந்து,ரெயில் மூலம் திருப்பூருக்கு நேற்று அதிகாலை வந்தனர்.

    தொடர்ந்து, தாராபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் குழந்தைஉட்பட, 3 பேரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    தாராபுரம் அருகே நஞ்சியம்பாளையத்தை அடைந்த போது, வேகத்தடை இருப்பதுதெரியாமல் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஏற்றினார். அப்போது, வண்டியில் அமர்ந்திருந்த ஆர்த்தியின் கையில் இருந்த குழந்தை கை தவறி ரோட்டில் விழுந்து படுகாயமடைந்தது.

    இதையடுத்து தாராபுரம் அரசுமருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு,பின், திருப்பூருக்கு கொண்டு செல்லும் போதுகுழந்தை பரிதாபமாக இறந்தது.இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாதேஷ் நாவல்பழம் மரத்தில் ஏறி பழம் பறிக்க முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    தாளவாடி அடுத்துள்ள ஆசனூர், கெத்தேசல் பகுதியை சேர்ந்தவர் மாதேவன். இவரது அண்ணன் ஜடையப்பா. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் அண்ணன் மனைவி மாதி என்பவரை மாதேவன் திருமணம் செய்து கொண்டார்.

    இதில் மாதேவனுக்கு சித்தார்த் என்ற மகனும், அண்ணன் ஜடையப்பா மூலம் மாதிக்கு பார்வதி என்ற மகளும், மாதேஸ் என்ற மகனும் இருந்தனர். கடந்த 16-ந் தேதி கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

    அப்போது மாதேஷ் வீட்டிற்கு அருகில் உள்ள நாவல்பழம் மரத்தில் ஏறி பழம் பறிக்க முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாதேஷ் இறந்தார். இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    ×