மோட்டார் சைக்கிளில் சென்ற போது கை தவறி கீழே விழுந்த ஒரு வயது குழந்தை பலி

சென்னையில் இருந்து, ரெயில் மூலம் திருப்பூருக்கு நேற்று அதிகாலை வந்தனர். தாராபுரம் அரசுமருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

தாராபுரம், எம்.எஸ்.பி., நகரை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி ஆர்த்தி இவர்களுக்கு, யாழினிஎன்ற ஒரு வயதில் குழந்தை உள்ளது. சென்னையில் இருந்து,ரெயில் மூலம் திருப்பூருக்கு நேற்று அதிகாலை வந்தனர்.

தொடர்ந்து, தாராபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் குழந்தைஉட்பட, 3 பேரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

தாராபுரம் அருகே நஞ்சியம்பாளையத்தை அடைந்த போது, வேகத்தடை இருப்பதுதெரியாமல் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஏற்றினார். அப்போது, வண்டியில் அமர்ந்திருந்த ஆர்த்தியின் கையில் இருந்த குழந்தை கை தவறி ரோட்டில் விழுந்து படுகாயமடைந்தது.

இதையடுத்து தாராபுரம் அரசுமருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு,பின், திருப்பூருக்கு கொண்டு செல்லும் போதுகுழந்தை பரிதாபமாக இறந்தது.இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com