நாவல்பழம் பறிக்க முயன்ற சிறுவன் மரத்தில் இருந்து கீழே விழுந்து பலி

மாதேஷ் நாவல்பழம் மரத்தில் ஏறி பழம் பறிக்க முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாவல்பழம் பறிக்க முயன்ற சிறுவன் மரத்தில் இருந்து கீழே விழுந்து பலி
Published on

ஈரோடு:

தாளவாடி அடுத்துள்ள ஆசனூர், கெத்தேசல் பகுதியை சேர்ந்தவர் மாதேவன். இவரது அண்ணன் ஜடையப்பா. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் அண்ணன் மனைவி மாதி என்பவரை மாதேவன் திருமணம் செய்து கொண்டார்.

இதில் மாதேவனுக்கு சித்தார்த் என்ற மகனும், அண்ணன் ஜடையப்பா மூலம் மாதிக்கு பார்வதி என்ற மகளும், மாதேஸ் என்ற மகனும் இருந்தனர். கடந்த 16-ந் தேதி கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது மாதேஷ் வீட்டிற்கு அருகில் உள்ள நாவல்பழம் மரத்தில் ஏறி பழம் பறிக்க முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாதேஷ் இறந்தார். இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com