search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்பீட்டு திட்டம்"

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விடுபட்ட பயனாளிகள் பயன் தரும் வகையில் காப்பீடுதிட்ட அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. இம்முகாமினை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு ஆய்வு செய்து செய்தார். அவர் பேசியதாவது,விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர், செஞ்சி, விக்கிரவாண்டி ஆகிய இடங்களில் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நடைபெற்று வருகின்றது. இம்முகாமினை பயன்படுத்தி மக்கள் பயன்பெற வேண்டும் என கூறினார்.

    முகாமில் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், ஒன்றிய குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், நகர செயலாளர் பூக்கடை கணேசன், பேரூராட்சி மன்றம் துணைத் தலைவர் ஜோதி, வட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட பிரதிநிதி மோகன்ராஜ், ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் கிருஷ்ணராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர் மணிவண்ணன், நகர சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சுலைமான், நகர துணை செயலாளர் தில்லை.காமராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், மருத்துவ காப்பீடு ஊழியர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகராட்சி, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும், ரோட்டரி டயாலிசிஸ் சென்டரில் முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அறிமுக விழா நடந்தது.

    பயனாளி களுக்கு முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டையினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி, திருவண்ணா மலை நாடாளுமன்ற உறுப்பினர்.

    சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி. மாநில தட்கள் சங்கத் துணைத்தலைவர். எ.வ.வே.கம்பன், இணை இயக்குநர் சுகாதரா துறை ஏழுமலை. மாநில கைப்பந்து சங்க துணை தலைவர். ஸ்ரீதரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
    • ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா, அன்பூண்டி ஊராட்சியில் நேற்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் பாரத பிரதமரின் காப்பீட்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    மண்டல மேலாளர் ஜான்வெட் மற்றும் நிதி சேர்க்கை மேலாளர் கோகுல கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற தலைவர் உஷாராணி ரஜினி வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக பொது இயக்குனர் ஜெயஸ்ரீ கலந்து கொண்டு பேசினார். இதில் முன்னோடி வங்கி மேலாளர் ஜாமல் மொய்தீன் மற்றும் வங்கியின் அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

    • மண்டபம், எஸ்.மாரியூரில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 24-ந் தேதி நடக்கிறது.
    • மேல்சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் சிகிச்சை வழங்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 24-ந்தேதி மண்டபம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் கடலாடி அருகே எஸ்.மாரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

    இந்த முகாமில் அனைத்து சிறப்பு மருத்துவப் பிரிவுகளும் பங்கேற்கும் வகையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பங்கேற்கின்றனர். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமும் செயல்படுத்தப்படும்.

    உடல் பரிசோதனை, ரத்த அழுத்தம், நீரிழிவு, பல் பரிசோதனை, கொழுப்பு, உப்பு, ரத்தம், சிறுநீர் பரிசோதனை, கருப்பைவாய் பரிசோதனை மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை, இதய நோய், மனநலம், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலம், காது, மூக்கு, தொண்டை, எலும்பியல், கண் மருத்துவம், தோல் வியாதி, இந்திய மருத்துவம் மற்றும் சித்தா மருத்துவம், தாய்-சேய் நல ஆலோசனை ஆகிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. மருந்துகளும் வழங்கப்படும்.

    பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். தெரிவிக்கப்படாத பரிசோதனை முடிவுகள் வாட்ஸ்-அப் மற்றும் இ-மெயில் மூலம் அனுப்பப் பட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படும். இதனையடுத்து தொற்று நோய் கண்டறியப்பட்ட 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மக்களைத்தேடி மருத்துவம் மூலமாக அவர்கள் வீடு தேடியே மருந்துகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேல்சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் சிகிச்சை வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • தென்னைமர காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 16,290 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், வறட்சி, பூச்சிநோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, நிலஅதிர்வு, ஆழிப்பேரலையால் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்க ப்பட்டாலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ தென்னைமர காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.

    தென்னை சாகுபடி விவசாயிகள் தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ, வரப்பில் வரிசையாகவோ, வீட்டுத்தோட்டத்திலோ குறைந்த பட்சம் பலன் தரக்கூடிய 5 மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும்.

    இத்திட்டத்தின் கீழ் குட்டை மற்றும் ஒட்டுரக தென்னை மரங்களை 4 ஆண்டு முதலும், நெட்டை மரங்களை 7 ஆண்டு முதலும் 60 ஆண்டுகள் வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.

    ஒரு ஹெக்ேடருக்கு சுமார் 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய இயலும்.

    காப்பீடு செய்ய வேண்டிய தென்னை மரங்களை வண்ணம் பூசி 1,2,3.. என எண்கள் குறித்து விவசாயியுடன் புகைபடம் எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.

    4 முதல் 15 வயதுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.2.25-ம், 16 வயது முதல் 60 வயதுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.3.50-ம், பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும்.

    காப்பீடு செய்வதற்கு முன்மொழி படிவத்துடன், ஆதார் நகல், வங்கிகணக்கு புத்தகத்தின் முதல் பக்கநகல், சிட்டா, அடங்கல், நிலவரைபடம், விவசாயியின் புகைப்படம், சுய அறிவிப்பு கடிதம்,

    காப்பீடு செய்வதற்கன வேளாண்மை உதவி இயக்குநரின் சான்றிதழ், கட்டணத்திற்கான வரைவோலை ஆகியவற்றை இணைத்து, அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    கூடுதல் விவரங்க ளுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்கமையத்தை தொடர்பு கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையின் கீழ் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் ஆண்டு விழா நடைபெற்றது.
    • அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாளர்கள் 8 பேருக்கு பாராட்டு நற்சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையின் கீழ் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கிபேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது :- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 5 ஆயிரத்து 504 பேர் ரூ.5 கோடியே 57 லட்சத்து 86 ஆயிரத்து 907 மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக பெற்றுள்ளனர். இந்த திட்டத்தை பற்றி அறிய 14555 அல்லது 1800 425 3993 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலமாக 1,451 வகையான மருத்துவ சிகிச்சைகள், 151 வகையான தொடர் சிகிச்சைகள், 38 வகையான பரிசோதனைகள், மற்றும் இதயம், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஞ்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை, காது நுண்திறன் கருவி பொருத்துதல் என உயர்ரக சிகிச்சைகளும் அடங்கும் என கலெக்டர் வினீத் தெரிவித்தார்.

    இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்த 8 பேருக்கு நினைவுப்பரிசு, புதிதாக சேர்க்கப்பட்ட 5 பேருக்கு அடையாள அட்டை, சிறப்பாக செயல்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் பகுதி மேலாளர்கள், காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்கள் என 8 பேருக்கு பாராட்டு நற்சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன், இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) பிரேமலதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

    ×