பிரதமரின் காப்பீட்டு திட்ட முகாம்

விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்
பிரதமரின் காப்பீட்டு திட்ட முகாம்
Published on

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா, அன்பூண்டி ஊராட்சியில் நேற்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் பாரத பிரதமரின் காப்பீட்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மண்டல மேலாளர் ஜான்வெட் மற்றும் நிதி சேர்க்கை மேலாளர் கோகுல கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற தலைவர் உஷாராணி ரஜினி வரவேற்று பேசினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பொது இயக்குனர் ஜெயஸ்ரீ கலந்து கொண்டு பேசினார். இதில் முன்னோடி வங்கி மேலாளர் ஜாமல் மொய்தீன் மற்றும் வங்கியின் அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com