search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுன்சில் கூட்டம்"

    • திருப்பூரில் ஆர்பிட்ரேஷன் கவுன்சில் கடந்த 27 ஆண்டுகளாக இயங்கி வருகிறது
    • நிர்வாக வசதிக்காக தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகக்குழு அமைக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் ஆர்பிட்ரேஷன் கவுன்சில் கடந்த 27 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இவற்றில் 19 தொழில் அமைப்புகள் உறுப்பினராக இணைந்துள்ளன. நிர்வாக வசதிக்காக தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகக்குழு அமைக்கப்படுகிறது. ஆர்பிட்ரேஷன் நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் ஆர்பிட்ரேஷன் கவுன்சில் அவசர கூட்டம் சைமா அலுவலகத்தில் நடந்தது. இதற்கு சைமா சங்க தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ஆர்பிட்ரேஷன் கவுன்சில் தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆர்பிட்ரேஷன் கவுன்சில் நிர்வாகக்குழு, மேலும் ஓராண்டுக்கு பதவியில் தொடருவது என்று தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் புதிதாக 20 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். டீமா உள்ளிட்ட சங்கங்கள், ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் இணைந்து தொழில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

    • யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • முடிவில் யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.துணைத் தலைவர் ராஜ வேணி, ஆணையாளர் செந்தாமரை செல்வி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நடந்த விவா தங்கள் வரு மாறு:- கவுன்சி லர் ராஜ்குமார்:-வெண்ணத்தூர் ஊராட்சி முத்த ரவு நாதபுரம் கிராம கண்மா யில் தேவி பட்டி னம் ஊராட்சி குப்பைகளை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. கண்மாயில் கொட்டாமல் மாற்று இடம் தேர்வு செய்து குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர் மனோ கரன்:-கலெக்டர் அலுவலக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பேராவூர் ஊராட்சி குப்பைகளை கொட்டுவதால் அப்பகுதி மக்கள் பாதிப்படை கின்றனர். எனவே அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதை தடுத்து மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும். ஆணை யாளர்:- கவுன்சிலர்கள் தெரிவித்த குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் உலக ராணி, சீனி இப்ராஹிம் அம்மாள், மாணிக்க சாரதி, கல்பனா தேவி, பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.முடிவில் யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன் நன்றி கூறினார்.

    • கழிவுநீர் கால்வாய், குடிநீர் பைப் லைன அமைத்தல், மினி டேங்க் அமைத்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
    • 30 ஆண்டு காலம் பணிபுரிந்து நேற்று ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் வெங்கட லட்சுமி, கலா ஆகியோருக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கி அவர்களது பணிக்கு பாரா ட்டு தெரிவிக்கப்பட்டது.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் பி.சி.ஆர். மனோகரன் தலைமையில் நடந்தது.

    செயல் அலுவலர் ஆயிஷா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு வார்டுகளில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் பைப் லைன அமைத்தல், மினி டேங்க் அமைத்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து காரிமங்கலம் பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் விரிவாக்க பணி, சந்தை மேம்படுத்தும் பணி ஆகியவற்றிற்காக 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரி வித்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து 30 ஆண்டு காலம் பணிபுரிந்து நேற்று ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் வெங்கட லட்சுமி, கலா ஆகியோருக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கி அவர்களது பணிக்கு பாரா ட்டு தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் மாதப்பன், ரமேஷ், சுரேந்திரன், கீதா, சக்தி, பிரியா, இந்திராணி, நாகம்மாள், செவத்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. செங்கம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக்பாஷா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், குடிநீர், கழிவுநீர்கால்வாய், தெருவிளக்குகள், சாலை வசதிகள் உட்பட அடிப்படை தேவைகள் நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றது.

    வளர்ச்சி திட்ட பணிகளுக்கான 24 தீர்மானங்கள் இந்த கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்வில் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்வின் முடிவில் இளநிலை எழுத்தர் பிரசாந்த் நன்றி கூறினார்.

    • வரவு செலவு கணக்கு தீர்மானங்கள் வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது.
    • பேரூராட்சி பொது நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் பி.சி.ஆர் மனோகரன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ஆயிஷா துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வரவு செலவு கணக்கு தீர்மானங்கள் வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் பேரூராட்சி பொது நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுமக்கள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி உட்பட பல்வேறு நிலுவை தொகைகளை செலுத்த கேட்டுக் கொள்ளப்பட்டது.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் மாதப்பன், சதீஷ் குமார், சுரேந்திரன், ரமேஷ், சிவக்குமார், சக்தி, கீதா, பிரியா, ராஜம்மாள், ராதா, இந்திராணி, நாகம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • உதவியாளர் மாணிக்கராஜ் தீர்மானங்களை வாசித்தார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் யூனியன் கவுன்சிலின் மாதாந்திர கூட்டம் தலைவர் சண்முகவடிவேல் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள் பிரகாசம், இளங்கோ, துணைத்தலைவர் மீனாள் வெள்ளைசாமி முன்னிலை வகித்தனர். உதவியாளர் மாணிக்கராஜ் தீர்மானங்களை வாசித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பிரசாந்த் நன்றி கூறினார். கவுன்சிலர்கள் கருப்பையா, சரவணன், ராமசந்திரன், ராமசாமி, பழனியப்பன், சுமதி செல்வகுமார், கலைமகள் ராமசாமி, பாக்கியலட்சுமி, சகாதேவன், ராமேசுவரி கருணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் பேசிய தலைவர், இன்னும் 2 ஆண்டு காலத்திற்குள் விடுபட்டுள்ள மற்றும் புதிதாக அமைக்க வேண்டிய கிராம இணைப்பு சாலைகள் குறித்து துரிதமாக பதிவு செய்து சாலைகள் போடுவதற்கு வழிவகை செய்யுமாறு கவுன்சிலர்களிடம் வலியுறுத்தினார். கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தினர். உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க யூனியன் சேர்மன் சண்முகவடிவேல் அலுவலர்களிடம் கூறினார்.

    • போகலூர் யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • முதல் கட்டமாக ரூ.50 லட்சத்தில் 3 சாலைகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பூமிநாதன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சிவசாமி வரவேற்றார். கவுன்சிலர் காளிதாஸ் பேசுகையில், கொடிக்குளம், உரத்தூர்,கோரை குளம் உள்ளிட்ட கிராமங்களில் காவிரி கூட்டு குடிநீரை முறையாக விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர். அதிகாரிகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றார். துணைத் தலைவர் பூமிநாதன் பேசுகையில், அரியக்குடி, முத்துச்செல்லாபுரம், அ.புத்தூர், முஸ்லிம் குடியிருப்பு உட்பட பல்வேறு பகுதிகளில் காவிரி கூட்டுக் குழு நீர் வரவில்லை என்றார்.

    காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட உதவி பொறியாளர்: சாலை அமைக்கும் பணியின் போது காவிரி குடிநீர் குழாய் உடைந்து உள்ளது. கோடையை காலம் என்பதால் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. விரைவில் சரி செய்யப்படும் என்றார். தலைவர் சத்யா குணசேகரன் பேசுகையில், முதலமைச்சரின் சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.9 கோடி போகலூர் யனியனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.50 லட்சத்தில் 3 சாலைகள் அமைக்கும் பணி நடைபெறும். தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு மழை காலத்திற்குள் அனைத்து சாலைகளும் அமைக்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள பழுதடைந்த சாலைகள் பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மழை காலத்திற்கு முன்பாக அனைத்து அத்தியாவாசிய தேவைகளுக்கான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா? என்பதை அலுவலர்கள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதில் கவுன்சிலர்கள் தேன்மொழி, முருகேசுவரி, காளீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.

    • முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • தரமான பைப்புகளை வாங்கி குடிநீர் குழாய்களை பதிக்க வேண்டும்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் ஷாஜகான் தலைமையில், உதவி சேர்மன் வயணப்பெருமாள் முன்னிலையில் நடந்தது. செயல் அலுவலர் மாலதி வரவேற்றார். மொத்தம் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மோகன்தாஸ்

    (7-வது வார்டு தி.மு.க.): 2023-24 சொத்துவரி செலுத்துபவர்களுக்கு அெஜண்டாவில் உள்ளபடி ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுமா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சேர்மன், சொத்துவரி 2023-24-க்கு முழுமையாக கட்டினால் 5 சதவீத ஊக்கத்தொகை கழித்தே பெற்றுக்கொள்ளப்படும் என்றார். சேகர் (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்): முதுகுளத்தூரில் மட்டுமே டெண்டரில் குறைத்து போடப்படுகிறது. சமரசம் பேச வேண்டும் என்றார். சேர்மன்: எல்லா இடத்திலும் அப்படித்தான் நடக்கிறது. காண்ட்ராக்டர்கள் ஒத்துழைத்தால் போகலாம். கவுன்சிலர் மோகன்தாஸ்: தரமான பைப்புகளை வாங்கி குடிநீர் குழாய்களை பதிக்க வேண்டும். சேர்மன்: அரசு விதிமுறைப்படிதான் வாங்க முடியும். இவ்வாறு விவாதம் நடந்தது.

    • சிவகங்கை அருகே நெற்குப்பை பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • இளநிலை உதவியாளர் சேரலாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி கூட்டம் சேர்மன் புசலான் தலைமையில் நடந்தது.

    செயல் அலுவலர் கணேசன், துணை சேர்மன் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிளாமடம் கிராம பகுதியில் பொது கழிப்பிட கட்டிடம் கட்டப்படுவது குறித்தும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுவது குறித்தும், 2021-22 மானிய தவணையில் சுகாதார மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், மழைநீர் சேகரிப்பு பகுதிகளை மறுசுழற்சி செய்தல், சின்டெக்ஸ் டேங்க் பராமரிப்பு பணி மேற்கொள்ளுதல், ஆழ்குழாய் கிணறு அமைத்தல் போன்றவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பருவமழை தொடங்க இருப்பதால் கொசு உற்பத்தியை கட்டுப்ப டுத்தவும், நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் உபகரணங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தபுள்ளி கோருவது குறித்தும், பேரூராட்சி பயன்பாட்டிற்கு பேட்டரி வாகனங்கள் வாங்குவது குறித்தும், விவாதிக்கப்பட்டது.

    இளநிலை உதவியாளர் சேரலாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

    • ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • தலைவர் முகமது யாசின் தலைமையில் நடந்தது.

    மேலூர்

    மேலூர் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் முகமது யாசின் தலைமையில் நடந்தது. இதில் 46 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

    2-வது வார்டு அ.ம.மு.க. கவுன்சிலர் ஆனந்த் வெங்கடேஸ்வரா நகரில் காவிரி கூட்டு குடிநீர் இணைப்பு அமைத்து தர வேண்டும். வெங்கடேஸ்வரா விரிவாக்க பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் கட்ட வேண்டும். பர்மா காலனியில் எரிமேடை அமைக்க வேண்டும் என்றுகோரி தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

    இதற்கு பதிலளித்த நகர்மன்ற தலைவர், காவிரி கூட்டுக் குடிநீர் மேலூரில் உள்ள அனைத்து வார்டுகளிலும், நகராட்சி குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி கொடுக்கப்படும் என்றார்.

    9-வது வார்டு கவுன்சிலர் அருண் சுந்தரபிரபு, பட்டாகுளம் மாயானத்தில் எரிவாயு தகன மேடையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், மின் மயானத்தை கியாஸ் மூலமாக மாற்றப்படும் என்றார்.

    23-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் திவாகர் தமிழரசன், 12-வது கவுன்சிலர் அறிவழகன் ஆகியோர் தங்கள் வார்டில் தேவைகள் குறித்து பேசினர். அதற்கு தலைவர் நகராட்சி பகுதியில் யார் ஆக்கிரமித்தாலும் அந்த ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் நலன் கருதி நாளை (22-ந் தேதி) 1 முதல் 27 வார்டுகளிலும் அகற்றப்படும்.

    குப்பைகளை அள்ளுவதற்கு குப்பை வண்டிகளை தயார் செய்து தரப்படும். அனைத்து கவுன்சிலர் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார். மேலூர் நகர் பகுதியில் கழிவு நீர் வாய்க்கால், சாலை, பாலம் போன்ற அடிப்படைத் தேவைகள் அமைக்கும் பணிகளுக்கு ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் துணைத் தலைவர் இளஞ்செழியன், ஆணையாளர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், சுகாதார அலுவலர் மணிகண்டன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    ×