என் மலர்
உள்ளூர் செய்திகள்

யூனியன் கவுன்சில் கூட்டம்
- திருப்பத்தூர் யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
- உதவியாளர் மாணிக்கராஜ் தீர்மானங்களை வாசித்தார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் யூனியன் கவுன்சிலின் மாதாந்திர கூட்டம் தலைவர் சண்முகவடிவேல் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள் பிரகாசம், இளங்கோ, துணைத்தலைவர் மீனாள் வெள்ளைசாமி முன்னிலை வகித்தனர். உதவியாளர் மாணிக்கராஜ் தீர்மானங்களை வாசித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பிரசாந்த் நன்றி கூறினார். கவுன்சிலர்கள் கருப்பையா, சரவணன், ராமசந்திரன், ராமசாமி, பழனியப்பன், சுமதி செல்வகுமார், கலைமகள் ராமசாமி, பாக்கியலட்சுமி, சகாதேவன், ராமேசுவரி கருணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய தலைவர், இன்னும் 2 ஆண்டு காலத்திற்குள் விடுபட்டுள்ள மற்றும் புதிதாக அமைக்க வேண்டிய கிராம இணைப்பு சாலைகள் குறித்து துரிதமாக பதிவு செய்து சாலைகள் போடுவதற்கு வழிவகை செய்யுமாறு கவுன்சிலர்களிடம் வலியுறுத்தினார். கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தினர். உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க யூனியன் சேர்மன் சண்முகவடிவேல் அலுவலர்களிடம் கூறினார்.






