காரிமங்கலத்தில் பேரூராட்சி கவுன்சில் கூட்டம்

வரவு செலவு கணக்கு தீர்மானங்கள் வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது.பேரூராட்சி பொது நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
காரிமங்கலத்தில் பேரூராட்சி கவுன்சில் கூட்டம்
Published on

காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் பி.சி.ஆர் மனோகரன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ஆயிஷா துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வரவு செலவு கணக்கு தீர்மானங்கள் வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் பேரூராட்சி பொது நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுமக்கள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி உட்பட பல்வேறு நிலுவை தொகைகளை செலுத்த கேட்டுக் கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் மாதப்பன், சதீஷ் குமார், சுரேந்திரன், ரமேஷ், சிவக்குமார், சக்தி, கீதா, பிரியா, ராஜம்மாள், ராதா, இந்திராணி, நாகம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com