search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரிமங்கலம் பேரூராட்சி கவுன்சில் கூட்டம்
    X

    காரிமங்கலம் பேரூராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டதை படத்தில் காணலாம்.

    காரிமங்கலம் பேரூராட்சி கவுன்சில் கூட்டம்

    • கழிவுநீர் கால்வாய், குடிநீர் பைப் லைன அமைத்தல், மினி டேங்க் அமைத்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
    • 30 ஆண்டு காலம் பணிபுரிந்து நேற்று ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் வெங்கட லட்சுமி, கலா ஆகியோருக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கி அவர்களது பணிக்கு பாரா ட்டு தெரிவிக்கப்பட்டது.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் பி.சி.ஆர். மனோகரன் தலைமையில் நடந்தது.

    செயல் அலுவலர் ஆயிஷா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு வார்டுகளில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் பைப் லைன அமைத்தல், மினி டேங்க் அமைத்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து காரிமங்கலம் பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் விரிவாக்க பணி, சந்தை மேம்படுத்தும் பணி ஆகியவற்றிற்காக 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரி வித்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து 30 ஆண்டு காலம் பணிபுரிந்து நேற்று ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் வெங்கட லட்சுமி, கலா ஆகியோருக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கி அவர்களது பணிக்கு பாரா ட்டு தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் மாதப்பன், ரமேஷ், சுரேந்திரன், கீதா, சக்தி, பிரியா, இந்திராணி, நாகம்மாள், செவத்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×