search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐந்து மாநில தேர்தல்"

    • பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது.
    • மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ் அறிவிப்பு.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், மிசோரம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

    மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. பதவியை தக்கவைத்துக் கொண்டது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸிடமிருந்து ஆட்சியை தன்வசம் ஆக்கியது பா.ஜ.க. இதன் மூலமாக மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்து, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

     


    சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தேவ் சாய் பதவியேற்றுள்ளார். மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் யார் அடுத்த முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் அறிவிக்கப்பட்டார்.

    ராஜஸ்தானில் இரண்டு முறை (2003-08 மற்றும் 2013-18) முதல்வராக பணியாற்றிய வசுந்தரா ராஜே பதவியை கைப்பற்றுவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், முதல் முறை சட்டமன்ற உறுப்பினரான பஜன்லால் சர்மா ராஜஸ்தான் மாநில முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தற்போதைய நிலையில் நாடு முழுக்க பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண் முதல்வர்கள் ஒருவர்கூட இல்லை. மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி மட்டுமே நாட்டின் ஒரே பெண் முதல்வர் ஆவார்.

    முன்னதாக சுஷ்மா சுவராஜ், ஆனந்திபென் படேல், உமா பாரதி, வசுந்தரா ராஜே போன்ற பெண் முதல்வர்கள் பா.ஜ.க.-வில் ஆட்சி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமித் ஷா மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம்
    • ராகுல் காந்தி சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம்

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா நினைக்கிறது. அதேவேளையில் சத்தீஸ்கரில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் விரும்புகிறது.

    தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு தேசிய தலைவர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மத்திய பிரதேசத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார்.

    ஜபால்புர், சிந்த்வாரா, போபால், சத்தார்புர், ரெவா, ஷஹ்டோல், உஜ்ஜைன், இந்தூர், குவாலியர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் அமித் ஷா பல்வேறு பேரணியில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இன்று மதியம் ஜபால்புரில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார். மாலை 4 மணிக்கு சிந்த்வாரா மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது, வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெறும்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி, சத்தீஸ்கர் மாநிலத்தில் நான்கு தொகுதிகளில் நடைபெறும் பேரணியில் கலந்த கொள்ள இருக்கிறார். இன்றும், நாளையும் சத்தீஸ்கரில் கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

    இன்று ராய்ப்பூர் வரும் ராகுல் காந்தி மதியம் ஒரு மணிக்கு பானுபிரதாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் பேரணியில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன்பின் மதியம் 2.40 மணிக்கு கொண்டகான் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பேரணியில் கலந்து கொண்டு பேசுகிறார். அதேபோல் நாளை இரண்டு இடங்களில் பேசுகிறார்.

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் வருகிற 7-ந்தேதி (நவம்பர்) 20 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

    • மோடியின் தெய்வ வழிபாடு குறித்து பிரியங்கா விமர்சனம்
    • ஹிமாந்தா சர்மா, சத்தீஸ்கர் மாநில முஸ்லிம் மந்திரியை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்

    ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான காலமே உள்ளதால் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவரான பிரியங்கா காந்தி, ராஜஸ்தானில் நடைபெற்ற பேரணியின்போது பிரதமர் மோடியின் தெய்வ வழிபாடு குறித்து பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாருக்கு வருகிற திங்கட்கிழமைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில், நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளது.

    அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா சர்மா, சத்தீஸ்கரில் மதமாற்றம் நடைபெறுவதாக விமர்னம் செய்திருந்தார். மேலும், சத்தீஸ்கர் மாநில முஸ்லிம் மந்திரியை தாக்கி பேசினார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் ஹிமாந்தா சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில் பா.ஜனதா இந்த முறை வெற்றி பெற திட்டமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    • 229 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிடப்பட்டுள்ளது
    • முதற்கட்டாக அறிவித்ததில் மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர் மாற்றப்பட்டுள்ளது

    மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

    ஏற்கனவே 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டிருந்த நிலையில், நேற்றிரவு 88 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பெட்டல் மாவட்டத்தில் உள்ள அம்லா தொகுதிக்கான வேட்பாளர் பெயர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    துணை பெண் கலெக்டரான நிஷா என்பவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், ஆளும் பா.ஜனதா அரசு இன்னும் அவரது ராஜினாமாவை ஏற்கவில்லை. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் ஒரு இடத்திற்கு மட்டும் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் பெயரை வெளியிடவில்லை.

    முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்திருந்த மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

    • ஐந்து மாநில தேர்தல் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது
    • ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற பதவிக் காலங்கள் வருகிற ஜனவரி மாதம் முதல் வாரத்திற்குள் முடிவடைய இருக்கின்றன.

    இதனால் டிசம்பர் மாதத்திற்குள் ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலை நடத்த மத்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கியது. ஐந்து மாநிலங்களுக்கும் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து, தேர்தல் நடத்தப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில், இன்று மதியம் ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி டெல்லியில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தேர்தல் தேதியை வெளியிடுவார்.

    ராஜஸ்தானில் காங்கிரசும், மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவும், தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சியும் நடைபெற்று வருகிறது.

    ×