search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதவி தொகை"

    • மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும்.
    • விண்ணப்ப படிவத்தில் 7-ம் பக்கத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலரிடம் கையொப்பம் பெற்று வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டு களுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் துயரினை துடைக்கும் வகையில் மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் 3 ஆண்டு காலத்திற்கும் வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் தற்பொழுது 1.10.2023 முதல் 31.12.2023 வரையிலான காலாண்டிற்கு மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரார்கள் தகுதியானவர்கள் ஆவர்.

    தகுதியுடையவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். விண்ணப்ப படிவத்தில் 7-ம் பக்கத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவ லரிடம் கையொப்பம் பெற்று வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

    சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்த வர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்ந்து 10 ஆண்டுகள் மட்டும் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்து, 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் முதிர்வுத் தொகைக்கு விண்ணப் பிக்கலாம்.
    • ஒவ் வொரு மாதமும் 2-வது செவ்வாய் கிழமைகளில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் கட்டிடத்தில் இயங்கும், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழக முதல்வரின், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்து, 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் முதிர்வுத் தொகைக்கு விண்ணப் பிக்கலாம். அந்த வகையில், ஒவ் வொரு மாதமும் 2-வது செவ்வாய் கிழமைகளில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் கட்டிடத்தில் இயங்கும், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் கலந்து கொள்ளலாம். முதிர்வுத்தொகை பெறுவதற்கு விண்ணப் பித்து பயனடையலாம். ரூ.1,500 மற்றும் ரூ.15,200 டெபாசிட் தொகை பத்திரம் அசல் மற்றும் நகல், 10-ம் வகுப்பு முடித்ததற்கான சான்றிதழ் நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல் (பயனாளியின் பெயரில்-தனி வங்கிக்கணக்கு), பாஸ் போர்்ட் அளவு புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், ஆதார் கார்டு நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நடக்கும் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித் துள்ளார்.

    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான தகுதி வரை பதிவு செய்தவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600ம், மேல்நிலைக் கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.750-ம், பட்டதாரிகள் எனில் ரூ.1000-ம், 10 வருடங்களுக்கு வழங்கப்படுகிறது.
    • மனுதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    தேனி:

    தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 30.06.2023 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது. தற்போது இத்திட்டத்தின்படி காலாண்டு ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.600ம், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.900ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.1200ம், பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ.1800ம், 3 வருடங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் ஒரு வருடம் நிறைவு செய்திருத்திலே போதுமானது. இவ்வாறான மனுதாரர்களின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான தகுதி வரை பதிவு செய்தவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600ம், மேல்நிலைக் கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.750-ம், பட்டதாரிகள் எனில் ரூ.1000-ம், 10 வருடங்களுக்கு வழங்கப்படுகிறது.

    30.06.2023-ம் தேதி அன்று நிலவரப்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும், ஏனையோரைப் பொறுத்த மட்டில் 40 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

    மனுதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் குடும்ப ஆண்டு வருமானத்திற்கு உச்ச வரம்பு கிடையாது.

    பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டதாரிகள் இந்த உதவித் தொகை பெற தகுதியில்லாதவர்கள்.

    இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் அல்லது தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்புகொண்டு விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • குமரி மாவட்டத்தில் 2-ம் கட்டமாக வழங்கப்படுகிறது
    • கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்

    நாகர்கோவில்:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட் டத்தின் கீழ் அரசு பள்ளி களில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் 2-வது கட்ட தொடக்க விழா நிகழ்ச்சி இன்று சென்னையில் நடந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    குமரி மாவட்டத்தில் இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடந்தது. விழாவிற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி வைத்தார். சமூக நல அதிகாரி சரோஜினி வரவேற்று பேசினார்.

    விழாவில் மாணவ மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டத்தை கலெக்டர் பி.என். ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.இதைத் தொடர்ந்து 981 மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கப்பட்டது.

    விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

    புதுமைப்பெண் திட்டம் என்பது மிக முக்கிய மான திட்டம் ஆகும். பெண் குழந்தைகள் கல்வி இடைநில்லாமல் தடுப்பதற்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு சில இடங் களில் திருமணங்கள் நடைபெறும். அதை தடுப்பதற்கும் இந்த திட்டம் உதவும். இந்த திட்டத்தை மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்ஜினீயரிங், மருத்து வம் தவிர பல்வேறு படிப்பு கள் உள்ளது. சட்டம், வேளாண்மை போன்ற படிப்புகள் எல்லாம் உள்ளது. தற்போது நுழைவுத் தேர்வு எழுதுவதிலும் மாணவிகள் கவனம் செலுத்தி தங்களது திறமைகளை வெளிக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு மாணவிகளிடமும் ஒவ்வொரு திறமைகள் உள்ளது. தங்களது திறமைகளை நீங்கள் வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகை யில் இந்த திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெறும் மாணவிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது

    அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி பெறும் மாணவிகள் இணைய தளம் வாயிலாக இந்த உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம். புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக குமரியில் முதல் கட்டமாக 1987 பேருக்கு உதவி தொகை வழங்கப்பட்டது. 2-வது கட்டமாக 981 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., பத்மநாபபுரம் சப்- கலெக்டர் கவுசிக், கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, ஸ்காட் கல்லூரி முதல்வர் எட்வர்ட், மருத்துவ கல்லூரி முதல்வர் பிரின்ஸ்பயஸ், முன்னோடி வங்கி மேலாளர் பீரவின்,கவுன்சிலர் கவுசிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேவதாஸ் நன்றி கூறினார்.

    • முதியோர் உதவி தொகை ரூ. 3000 உயர்த்தி வழங்க வேண்டும்.
    • 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட 20-வது மாநாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு மண்ணை சாலையில் அமைந்துள்ள சீனிவாசராவ் நினைவிடத்திலிருந்து சுடர் ஒளி ஏற்றி ஊர்வலமாக வந்து கொடியேற்றி மாநாட்டை தொடங்கினர்.

    மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் கலைமணி தலைமை தாங்கினார். இதில் விவசாயத் தொழிலாளிக்கு தனித்துறையை உருவாக்கிட வேண்டும், முதியோர் உதவித் தொகை ரூ. 3000 உயர்த்தி வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த மாநாட்டில் அமிர்தலிங்கம் மாநில பொதுச் செயலாளர், சங்கர் மாநில பொருளாளர், குமாரராஜா மாவட்ட செயலாளர், கந்தசாமி மாவட்ட துணைத்தலைவர், பாலைய்யா மாவட்ட பொருளாளர், லிங்கம் மாவட்ட துணை செயலாளர், மணியன் மாவட்ட துணை செயலாளர், மாரியம்மாள் மாநிலக்குழு, மணி மாவட்டத் துணைத் தலைவர், ரவி ஒன்றிய செயலாளர், சுப்பிரமணியன் நகர செயலாளர், ஜீவானந்தம் ஒன்றிய தலைவர், கார்த்தி நகர தலைவர், மாநில மாவட்ட நகர ஒன்றிய குழு உறுப்பினர்கள் 500-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கணவரை இழந்த பெண்ணுக்கு உதவி தொகை வழங்குவதாக மாவட்ட கலெக்டர் மோகன்தெரிவித்தார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே அன்னியூர் ஊராட்சியை சேர்ந்தமுருகன் (வயது 40) அவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்தபொழுது இறந்தார். இதையொட்டி அவரது குடும்பம் வருமானமின்றி கஷ்டப்படுவதாக அவரது மனைவிநளினி மாதாந்திர உதவித்தொகை வழங்க கேட்டுக்கொண்டதற்கிணங்க அவருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 குழந்தைகளின் நன்றாக படிக்க வைக்க தேவையான உதவிகளும் வழங்குவதாக மாவட்ட கலெக்டர் மோகன்,தெரிவித்தார்.

    • குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 387 மனுக்கள் பெறப்பட்டது.‌
    • உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 387 மனுக்கள் பெறப்பட்டது.‌ இந்த மனுக்களை விசாரணை செய்து பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்ப ந்தப்பட்டதுறைஅலுவ லர்களுக்கு அறிவுறு த்தப்பட்டு உள்ளது. மேலும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரங்களை உடனடியாக மனுதாரருக்கு தெரிவி க்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளவர்களுக்கு மட்டும் உதவித்தொகை
    • இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வைத்திருக்கும் முதியோர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும்

    நாகர்கோவில்:

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் வறிய நிலையில் வாழும் முதியோர்களுக்கு அரசின் சார் பில் ரூ.1,000 உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வைத்திருக்கும் முதியோர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும் என்ற அரசு திடீரென அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு முதியோர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.

    ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளவர்களுக்கு மட்டும் உதவித்தொகை என்ற அறிவிப்பை தொடர்ந்து இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வைத்திருப்பவர்கள் ஒன்றை திரும்ப ஒப்படைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன் சிலிண்டர்வைப்பு தொகை ரூ.450 மட்டுமே இருந்தது.

    எனவே அந்த எரிவாயு சிலிண்டரை திருப்பி ஒப்படைக்கும் போது ரூ.450 மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரே வைப்புத் தொகையின் மூலம் இரண்டு சமையல் எரி வாயு சிலிண் டரை பெற்றவர்கள் ஒரு சிலிண்ட ரை மட்டும் ஒப்படைக்க முடியாது.

    இரண்டு சிலிண்டர்களை யும் ஒன்றாகதான் ஒப்படைக்க முடியும். அப்படி ஒப்படைக்கப்படும்போது அவர்களுக்கு இரண்டு சிலிண்டர்களுக்கான வைப்புத் தொகையாக ரூ.900 வழங்கப்படுகிறது.

    அதன் பிறகு புதிதாக ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் பெற வைப்புத் தொகையாக ரூ.2,500 ரூபாய் கட்டி சமையல் எரிவாயு சிலிண் டர் பெறுகின்ற சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு முதியோர் உதவித் தொகை பெற ஒரு சமையல் எரிவாயு என்ற அரசின் புதிய உத்தரவினை ரத்து செய்து முதல்வர் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஜமாபந்தியில் 71 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக பெருமகளூர் புனிதகுமார் உள்பட 4 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையும், முதியோர் உதவி தொகையும் வழங்க ஆணை வழங்கினார்.
    • வருகிற 28-ந் தேதி ஆவணம் உள் வட்டத்திற்கும், 29-ந் தேதி பேராவூரணி உள்வட்டத்திற்கும் வருவாய் கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

    பேராவூரணி:

    பேராவூரணி வட்டாட்சி யர் அலுவலகத்தில் 1431 பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் தொடங்கியது. நேற்று பெருமகளூர் உள்வட்டம் கிராம கணக்கு வழக்குகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ஜமாபந்தியில் 71 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக பெருமகளூர் புனிதகுமார் உள்பட 4 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையும் 2 முதியோர் உதவி தொகை வழங்க ஆணையை வழங்கினார்.அப்போது, தாசில்தார் சுகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர், வேளாண் துறையினர், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மற்ற துறையினர் கலந்து கொண்டனர்.இன்று குருவிக்கரம்பை உள்வட்டத்திற்கு ஜமாபந்தி நடைபெற்றது. வருகிற, 28-ந் தேதி ஆவணம் உள் வட்டத்திற்கும், 29-ந் தேதி பேராவூரணி உள்வட்டத்திற்கும் வருவாய் கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

    • கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
    • ரூ.85 ஆயிரம் வழங்கினர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே மாதனூரில் அறக்கட்டளை சார்பாக கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    முன்னாள் எம்.பி. மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சண்முகம், நினைவு அறக்கட்டளை சார்பாக கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ரூ.85 ஆயிரத்தை ஒன்றியக் குழுத் தலைவர் சுரேஷ்குமார் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கன்னிப்பன் பரிமளா கார்த்திக் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×