

தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 387 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை விசாரணை செய்து பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்ப ந்தப்பட்டதுறைஅலுவ லர்களுக்கு அறிவுறு த்தப்பட்டு உள்ளது. மேலும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரங்களை உடனடியாக மனுதாரருக்கு தெரிவி க்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.