search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுமை பெண் திட்டத்தில் 981 மாணவிகளுக்கு ரூ.1000 உதவி தொகை
    X

    புதுமைப்பெண் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த காட்சி.

    புதுமை பெண் திட்டத்தில் 981 மாணவிகளுக்கு ரூ.1000 உதவி தொகை

    • குமரி மாவட்டத்தில் 2-ம் கட்டமாக வழங்கப்படுகிறது
    • கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்

    நாகர்கோவில்:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட் டத்தின் கீழ் அரசு பள்ளி களில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் 2-வது கட்ட தொடக்க விழா நிகழ்ச்சி இன்று சென்னையில் நடந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    குமரி மாவட்டத்தில் இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடந்தது. விழாவிற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி வைத்தார். சமூக நல அதிகாரி சரோஜினி வரவேற்று பேசினார்.

    விழாவில் மாணவ மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டத்தை கலெக்டர் பி.என். ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.இதைத் தொடர்ந்து 981 மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கப்பட்டது.

    விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

    புதுமைப்பெண் திட்டம் என்பது மிக முக்கிய மான திட்டம் ஆகும். பெண் குழந்தைகள் கல்வி இடைநில்லாமல் தடுப்பதற்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு சில இடங் களில் திருமணங்கள் நடைபெறும். அதை தடுப்பதற்கும் இந்த திட்டம் உதவும். இந்த திட்டத்தை மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்ஜினீயரிங், மருத்து வம் தவிர பல்வேறு படிப்பு கள் உள்ளது. சட்டம், வேளாண்மை போன்ற படிப்புகள் எல்லாம் உள்ளது. தற்போது நுழைவுத் தேர்வு எழுதுவதிலும் மாணவிகள் கவனம் செலுத்தி தங்களது திறமைகளை வெளிக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு மாணவிகளிடமும் ஒவ்வொரு திறமைகள் உள்ளது. தங்களது திறமைகளை நீங்கள் வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகை யில் இந்த திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெறும் மாணவிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது

    அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி பெறும் மாணவிகள் இணைய தளம் வாயிலாக இந்த உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம். புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக குமரியில் முதல் கட்டமாக 1987 பேருக்கு உதவி தொகை வழங்கப்பட்டது. 2-வது கட்டமாக 981 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., பத்மநாபபுரம் சப்- கலெக்டர் கவுசிக், கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, ஸ்காட் கல்லூரி முதல்வர் எட்வர்ட், மருத்துவ கல்லூரி முதல்வர் பிரின்ஸ்பயஸ், முன்னோடி வங்கி மேலாளர் பீரவின்,கவுன்சிலர் கவுசிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேவதாஸ் நன்றி கூறினார்.

    Next Story
    ×