search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரும்பு கம்பிகள்"

    • சிலம்பரசன், அவருடைய நண்பர் முகேஷ், நிசாகன் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்களில் அதி வேகமாக சென்றனர்.
    • இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ஸ்டீபன்ராஜை அடித்து, உதைத்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நிரவி மேலஓடுதுறை அந்தோனி யார் கோவில்தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது 28). இவர், இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் வேலை செய்துவருகிறார். இந்த நிலையில் நிரவி காமராஜர் நகரைச்சேர்ந்த சிலம்பரசன், அவருடைய நண்பர் முகேஷ், நிசாகன் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்களில் அதி வேகமாக சென்றனர். அவர்களை ஸ்டீபன்ராஜ், ஏன் தெருவில் அதிவேகமாக செல்கிறீர்கள். அங்கு நிறைய குழந்தைகள் உள்ளது. அவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டால் யார் பதில் சொல்வது என கண்டித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ஸ்டீபன்ராஜை அடித்து, உதைத்தனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தபோது, 3 பேரும் தப்பியோடிவிட்டனர். இதில் காயம் அடைந்த ஸ்டீபன்ராஜை, அங்குள்ளோர், காரைக் கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஸ்டீபன்ராஜ் நிரவி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் திடீரென மாயமானது.
    • நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி‌. காலனியை சேர்ந்த போஜராஜன் (வயது 25) மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய 2 பேர் கட்டுமான பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பார்வதி நகரில் ஒரு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் அங்கிருந்து இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் திடீரென மாயமானது. இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனியை சேர்ந்த போஜராஜன் (வயது 25) மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய 2 பேர் கட்டுமான பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போஜராஜன் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தனர்.

    • சாலை ஓரத்தில் குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான மூடப்படாமல் இருந்தது.
    • மக்கள் மற்றும் பாதசாரிகள் மாலைமலர் நாளிதழுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி காந்திமைதானம் பகுதியில் இருந்து காமராஜர் சதுக்கம் செல்லும் வழியில் சாலை ஓரத்தில் குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான மூடப்படாமல் இருந்த குழியால் விபத்து ஏற்படும் அச்சம் இருப்பதாக கடந்த வாரம் மாலைமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் வாயிலாக சம்மந்தபட்ட அதிகாரிகள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அந்த குழியினை இரும்பு கம்பிகள் மூலம் அடைத்தனர். இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் பாதசாரிகள் மாலைமலர் நாளிதழுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    • கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வரும் விவேகானந்தன் அம்மா பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குருமூர்த்தி மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
    • பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள படவல்கால்வாய் பகுதியில் தனியார் பனியன் கம்பெனி உள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது.

    இந்த கம்பெனியில் சம்ப வத்தன்று சிங்கம்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (36) 2 பேரும் சேர்ந்து கம்பெனிக்கு சொந்தமான பழைய இரும்பு கம்பிகளை திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வரும் விவேகானந்தன் அம்மா பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குருமூர்த்தி மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கம்பிகள் மற்றும் கம்பிகளை திருடி செல்வதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சிதம்பரத்தில் இரும்பு கம்பிகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஜாசி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிசந்த் மற்றும் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த அனிஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் பைபாஸ் ரோட்டில் உள்ள கூத்தன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் லஷ்மி நாராயண ரெட்டி (42) இவர் அதே பகுதியில் தனியார் இன்ஜினியரிங் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கடையில் இரும்பு கம்பிகளை திருடிய 2 நபர்களை பிடித்து அண்ணாமலை நகர் போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் விசாரணை செய்ததில் உத்திரபிரதேசம் மாநிலம் ஜாசி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிசந்த் மற்றும் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த அனிஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

    • அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்ததால் விபத்தை தவிர்க்க 10 அடி உயரத்துக்கு இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • 40 கிலோ மீட்டர் வேகத்திலும், வளைவுகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டது.

    கோவை

    கோவை-திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக 3.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.253 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது.

    இந்த மேம்பாலமானது ஜூன் மாதம் 11-ந்தேதி திறக்கப்பட்டது. பாலம் திறந்து சில நாட்களிலேயே அடுத்தடுத்து நடந்த விபத்தில் 2 பேர் பலியானார். இதனையடுத்து எதிர்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் தடுக்க உரிய முன் எச்சரிக்கையாக வேகத்தடைகள், பேரி கார்டுகள், ஒளிரும் பட்டைகள் அமைக்கப்பட்டன.

    இதற்காக பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது.பின்னர் சில தினங்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது. 40 கிலோ மீட்டர் வேகத்திலும், வளைவுகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்த ஆனந்தகுமார் (51) பைக்கில் சென்ற போது நிலை தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்து பலியானார். இதனால் திருச்சி ரோடு மேம்பாலத்தில் விபத்தினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

    சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் சென்று பாலத்தில் தொடர் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது இந்த மேம்பாலத்தில் தொடர் விபத்துகளை தடுக்க மேம்பாலத்தின் இருபுறமும் சுமார் 10 அடி உயரத்துக்கு இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    மேலும் தற்போது அந்த பகுதியில் வாகன போக்குவரத்தின் வேகத்தை குறைக்க சாலையின் நடுவில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து விரைவில் அங்கு தடுப்பு கம்பிகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஆய்வு பணிகளில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

    ×