search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுதம்"

    • கொள்ளையடிக்க ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை தல்லாகுளம் போலீசார் சம்பவத்தன்று டாக்டர் தங்கராஜ் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது நீச்சல் குளம் அருகே சந்தேகத்திற்கிடமாக 6 பேர் நின்றிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். இதில் 5 பேர் சிக்கினர். ஒருவன் தப்பி ஓடி விட்டான்.

    போலீசில் சிக்கிய வர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனையிட்டபோது 2 கத்திகள், ஒரு பட்டாக்கத்தி, கயிறுகள், மிளகாய் பொடி பாக்கெட்டுகள் ஆகியவை இருந்தது தெரியவந்தது.

    அதனை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கோரிப்பாளையம் வேலாயுதம் பிள்ளை தெருவை சேர்ந்த மதுரை வீரன் மகன் ரிஷிக்குமார் (வயது 19), சோமசுந்தரம் பிள்ளை தெருவை சேர்ந்த குமரவேல் மகன் விநாயகர் சந்துரு, சின்ன கண்மாய் தெருவை சேர்ந்த ராஜசேகர் மகன் சஞ்சய் (20) மற்றும் 17 வயதுடைய 2 நபர்கள் என தெரியவந்தது.

    இவர்கள் அந்தப் பகுதியில் தனியாக வருபவர்களை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபட ஆயுதங்களை வைத்திருந்தார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருதரப்புக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
    • பனியன் நிறுவனத்துக்குள் கட்டை, கத்தி ஆகியவை எடுத்து கொண்டு அத்துமீறி நுழைந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ராதா நகரை சேர்ந்தவர் அபிஷேக் ( வயது 21). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் வேலை செய்யும் தமிழ்செல்வம் என்பவர் பனியன் நிறுவனத்துக்கு வெளியே நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வசந்த், ரமணா, முரளி ஆகியோர் தமிழ்செல்வத்தை உரசுவது போல் சென்றனர்.

    இதனால் இருதரப்புக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதன்பின் மூவரும் தனது நண்பர்கள் சிலரை அழைத்து பனியன் நிறுவனத்துக்குள் கட்டை, கத்தி ஆகியவை எடுத்து கொண்டு அத்துமீறி நுழைந்தனர். வாக்குவாதம் தொடர்பாக, அங்கிருந்தவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் கேசவன், ரமணா, அருண்குமார், மோகன்ராஜ், தனுஷ்,வசந்த், சந்துரு, முரளி என 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

    • ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சோலையழகுபுரம் 3-வது தெருவில் சென்றபோது சந்தேகப்படும்படியாக பதுங்கிய ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தார்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி மணிகண்டன் ரோந்து சென்றார். அவர் சோலையழகுபுரம் 3-வது தெருவில் சென்றபோது சந்தேகப்படும்படியாக பதுங்கிய ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தார்.

    இதில் அவர் குற்ற செயல் செய்யும் திட்டத்துடன் வாளுடன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்த போது அவர் சோலையழகுபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த பூமிநாதன் மகன் சேதுபதி கார்த்திக் என்பது தெரியவந்தது. அவரை இன்ஸ்பெக்டர் கைது செய்து அவரிடம் இருந்து வாளை பறிமுதல் செய்தார்.

    இதேபோல் தெற்கு வாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் காஜா தெருவில் ரோந்து சென்றார். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தார். இதில் அவர் தெற்குவாசல் காஜா தெருவை சேர்ந்த ராம மூர்த்தி (வயது51) என்று தெரியவந்தது.

    அவரை சோதனை செய்தபோது அவரிடம் பட்டாகத்தி மற்றும் கத்தி இருந்தது தெரியவந்தது. அவற்றை இன்ஸ் பெக்டர் முத்துபிரேம்சந்த் பறிமுதல் செய்ததுடன், ராம மூர்த்தியை கைது செய்தார்.

    • தகாத வார்த்தைகள் பேசி பெண்கள் நடக்க முடியாத நிலை நிலவுகிறது என பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் மனு.
    • கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி செந்தில் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த மனுவில், எங்களது பகுதியில் சமூக விரோதிகள் சிலர் கையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிகின்றனர்.அவர்கள் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. மேலும் தகாத வார்த்தைகள் பேசி பெண்கள் நடக்க முடியாத நிலை நிலவுகிறது .எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறோம் .

    இதன்படி போலீசார் விசாரணையில் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்த அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த்(வயது 35) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நன்றி இல்லாத மனிதன் காற்று, தண்ணீர் இரண்டையும் தான் முதலில் மாசு படுத்துகிறான்.
    • அமேசான் காட்டின் 22 சதவீதத்தை அழித்தவன் மனிதன்.

    பல்லடம் :

    பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளையின் 53 -வதுவான்மழை மாதாந்திர கருத்தரங்கம் வனம் அறக்கட்டளை அலுவலகமான வனாலயத்தில் நடைபெற்றது. சக்தி மசாலா உரிமையாளர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். வனம் அறக்கட்டளை தலைவர் சின்னச்சாமி, செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், சிறு துளி அமைப்பு வனிதா மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனம் அறக்கட்டளை செயலாளர் சுந்தரராஜன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கவிஞர் வைரமுத்து பங்கேற்று பேசியதாவது:- இந்த பூமியில் மனிதன் உயிர் வாழத் தேவையான முக்கியமான இரண்டு காற்று, தண்ணீர். நன்றி இல்லாத மனிதன் அந்த இரண்டையும் தான் முதலில் மாசு படுத்துகிறான். அவர்களை காப்பது மரங்கள். இதை அறியாமல் உலகில் மனிதன் ஆயுதங்களை அதிகம் பிரயோகித்தது மரங்களிடம்தான். ஆம் இதுவரை அவன் அளித்தது எண்ணிலடங்கா மரங்கள். ஏன் அமேசான் காட்டின் 22 சதவீதத்தை அழித்தவன் மனிதன். வனம், சிறுதுளி போன்ற ஆர்வலர்களால் அவன் செய்த தவறுகள் சிறிதேனும் சரி செய்யப்படுகிறது.

    நமது முப்பாட்டன் வள்ளுவன் முதல் குறளில் சொல்வது கடவுள் நம்பிக்கை. அதற்கு அடுத்ததாக தண்ணீரைப் பற்றிச் சொல்லி உள்ளார். ஏன்? தண்ணீர் என்பது அவ்வளவு முக்கியம். அந்தத் தண்ணீரின் தேவை இல்லை என்றால் நீ கடவுளைக் கூட வழிபட முடியாது .இந்த உலகம் 70 விழுக்காடு தண்ணீரால் சூழப்பட்டது. மீதி உள்ள பகுதியில்தான் மனிதன் குடித்தனம் நடத்தி வருகிறான். அவனுடன் புழு, பூச்சி, விலங்குகள், போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன. இனியாவது மாற்றத்தைப் பற்றி யோசி, மரத்தை நேசி.

    இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்கம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு மாலை அணிவித்து கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நாகராஜ்,சூழல் செயற்பாட்டாளர் சந்திரசேகர் வெள்ளிங்கிரி, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, கள் இயக்கத் தலைவர் நல்லசாமி மற்றும் வனம் அமைப்பு நிர்வாகிகள்,உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இந்திய முப்படைகளுக்காக ரூ.9,100 கோடி மதிப்பில் ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான கவுன்சில் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. #DefenceMinistry #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், ரூ.9,100 கோடி மதிப்பு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    ராணுவத்தின் இரண்டு பிரிவுக்கு ஆகாஷ் ஏவுகணைகள் வாங்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 
    ×