ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேர் கைது

ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.சோலையழகுபுரம் 3-வது தெருவில் சென்றபோது சந்தேகப்படும்படியாக பதுங்கிய ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தார்.
ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேர் கைது
Published on

மதுரை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி மணிகண்டன் ரோந்து சென்றார். அவர் சோலையழகுபுரம் 3-வது தெருவில் சென்றபோது சந்தேகப்படும்படியாக பதுங்கிய ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தார்.

இதில் அவர் குற்ற செயல் செய்யும் திட்டத்துடன் வாளுடன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்த போது அவர் சோலையழகுபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த பூமிநாதன் மகன் சேதுபதி கார்த்திக் என்பது தெரியவந்தது. அவரை இன்ஸ்பெக்டர் கைது செய்து அவரிடம் இருந்து வாளை பறிமுதல் செய்தார்.

இதேபோல் தெற்கு வாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் காஜா தெருவில் ரோந்து சென்றார். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தார். இதில் அவர் தெற்குவாசல் காஜா தெருவை சேர்ந்த ராம மூர்த்தி (வயது51) என்று தெரியவந்தது.

அவரை சோதனை செய்தபோது அவரிடம் பட்டாகத்தி மற்றும் கத்தி இருந்தது தெரியவந்தது. அவற்றை இன்ஸ் பெக்டர் முத்துபிரேம்சந்த் பறிமுதல் செய்ததுடன், ராம மூர்த்தியை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com