search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய விளையாட்டு"

    • 3 ஆயிரம் மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் ஆண்கள் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
    • டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார்.

    சென்னை:

    சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து 43 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    தமிழக வீரர், வீராங்கனைகள் ஆசிய போட்டிகளில் பதக்கங்களை வென்று முத்திரை பதித்து வருகின்றனர். இதுவரை 12 பேர் பதக்கங்களை பெற்றுள்ளனர்.

    நேற்று நடந்த தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சித்ரவேல், வித்யா ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.

    ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் பிரவீன் சித்ரவேல் 16.68 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கம் பெற்றார். 22 வயதான அவர் திருவாரூர் மாவட்டம், செட்டிசத்திரம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஆவார்.

    பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வித்யா ராம்ராஜ் 55.68 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். 25 வயதான அவர் கோவையை சேர்ந்தவர் ஆவார்.

    டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார்.

    ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் பெற்றது. இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பள்ளிகல் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    3 ஆயிரம் மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் ஆண்கள் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆனந்த் குமார் இடம் பெற்றிருந்தார்.

    இதேபோல 3 ஆயிரம் மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் பெண்கள் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த டாக்டர் ஆர்த்தி, கஸ்தூரி ராஜ் மற்றும் கார்த்திகா ஜெகதீஸ்வரன் ஆகியோர் இடம்பெற்றனர்.

    துப்பாக்கி சுடும் போட்டியில் ஆண்கள் டிராப் அணிகள் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. இந்த அணியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பிருதிவிராஜ் தொண்டைமான் இடம் பெற்றார்.

    தடகள போட்டியின் கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சுபா வெங்கடேசன், வித்யா, ராஜேஷ் ஆகியோர் வெள்ளி பதக்கம் பெற்றனர்.

    • துப்பாக்கி சுடுதலில் 7 தங்கமும், தடகளத்தில் 4 தங்கமும், டென்னிஸ், குதிரையேற்றம், ஸ்குவாஷ், பெண்கள் கிரிக்கெட் ஆகியவற்றில் தலா ஒரு தங்கமும் கிடைத்து இருந்தது.
    • வில்வித்தை போட்டியில் பெற்ற தங்கப் பதக்கம் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது.

    ஹாங்சோவ்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் 330 வீரர்களும், 328 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 661 பேர் கலந்து கொண்டுள்ளனர். 35 விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    நேற்றைய 11-வது நாள் போட்டி முடிவில் இந்திய அணி 15 தங்கம், 26 வெள்ளி, 28 வெண்கலம் ஆக மொத்தம் 69 பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

    போட்டியின் 12-வது நாளான இன்று காலை இந்தியாவுக்கு முதலில் வெண்கலம் பதக்கம் கிடைத்தது. 35 கி.மீ. தூர கலப்பு இரட்டையர் நடைப்பந்தயத்தில் இந்திய ஜோடிக்கு பதக்கம் கிடைத்தது.

    ஆசிய விளையாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போட்டியில் மஞ்சு ராணி, ராம் பாபு ஜோடி 5 மணி 51 நிமிடத்தில் இலக்கை கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றது. இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 70 ஆக உயர்ந்தது.

    இந்த பிரிவில் சீனாவுக்கு தங்கமும், ஜப்பானுக்கு வெள்ளியும் கிடைத்தது.

    அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு 16-வது தங்கப்பதக்கம் கிடைத்தது. வில்வித்தை போட்டி மூலம் இந்த தங்கம் கிடைத்தது.

    ஓஜாஸ் தியோடேல்-ஜோதிசுரேகா ஜோடி வில்வித்தை காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்று முத்திரை பதித்தது. இந்த ஜோடி இறுதிப்போட்டியில் 159-158 என்ற கணக்கில் தென்கொரிய ஜோடியை வீழ்த்தியது.

    துப்பாக்கி சுடுதலில் 7 தங்கமும், தடகளத்தில் 4 தங்கமும், டென்னிஸ், குதிரையேற்றம், ஸ்குவாஷ், பெண்கள் கிரிக்கெட் ஆகியவற்றில் தலா ஒரு தங்கமும் கிடைத்து இருந்தது.

    வில்வித்தை போட்டியில் பெற்ற தங்கப் பதக்கம் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை குவித்து புதிய சாதனை படைத்தது.

    16 தங்கம், 26 வெள்ளி, 31 வெண்கலம், ஆக மொத்தம் 73 பதக்கங்களை இதுவரை இந்தியா பெற்றுள்ளது. 8-ந் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது. இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2018-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 70 பதக்கம் பெற்றதே சாதனையாக இருந்தது. இந்த சாதனை இன்று முறியடிக்கப்பட்டு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது.

    அந்த போட்டியில் இந்தியா 16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலம் ஆக மொத்தம் 70 பதக்கங்களை பெற்று இருந்தது.

    • ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் தடகளத்தில் அதிகபட்சமாக 65 பேர் இடம் பெற்றுள்ளனர்.
    • ஹாக்கி அணியில் 36 வீரர், வீராங்கனைகளும், கிரிக்கெட் அணியில் 30 பேரும், துப்பாக்கி சுடுதல் அணியில் 30 பேரும், பாய்மரப்படகு அணியில் 33 பேரும் அங்கம் வகிக்கின்றனர்.

    புதுடெல்லி:

    1951-ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 48 விளையாட்டுகளில் இருந்து மொத்தம் 481 பந்தயங்கள் அரங்கேறுகிறது.

    இந்த போட்டியில் பங்கேற்க மொத்தம் 850 வீரர், வீராங்கனைகள் அடங்கிய பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கம், மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து இருந்தது. இந்த பட்டியலில் இருந்து 38 விளையாட்டுகளை சேர்ந்த 634 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி ஆசிய போட்டியில் கலந்து கொள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று அனுமதி அளித்தது.

    ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்தியா அனுப்பும் 'மெகா' எண்ணிக்கை கொண்ட அணி இதுதான். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு ஜகர்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டில் அதிகபட்சமாக 572 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொண்டு 16 தங்கம் உள்பட 70 பதக்கங்களை வென்று 8-வது இடத்தை பிடித்து இருந்தது.

    ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் தடகளத்தில் அதிகபட்சமாக 65 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 34 வீரர்கள், 31 வீராங்கனைகள் அடங்குவர். இதற்கு அடுத்தபடியாக கால்பந்து அணியில் 44 வீரர், வீராங்கனைகளும், ஹாக்கி அணியில் 36 வீரர், வீராங்கனைகளும், கிரிக்கெட் அணியில் 30 பேரும், துப்பாக்கி சுடுதல் அணியில் 30 பேரும், பாய்மரப்படகு அணியில் 33 பேரும் அங்கம் வகிக்கின்றனர்.

    பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால், ரக்பி ஆகிய விளையாட்டுகளில் வீரர்கள் யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா (65 கிலோ) தகுதி சுற்று போட்டியில் கலந்து கொள்ளாவிட்டாலும், அவரது பெயரை மல்யுத்த சங்கத்தை நிர்வகிக்கும் ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்ததால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணியில் இடம் பெற்று இருப்பவர்களில் நீரஜ் சோப்ரா, ஜோதி யர்ராஜி (தடகளம்), பிரனாய், லக்ஷயா சென், பி.வி.சிந்து (பேட்மிண்டன்), ஷிவதபா, நிகாத் ஜரீன் (குத்துச்சண்டை), பவானி தேவி (வாள்வீச்சு), பிரித்விராஜ் தொண்டைமான், மானு பாகெர் (துப்பாக்கி சுடுதல்), சரத்கமல், சத்யன், மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), மீராபாய் சானு (பளுதூக்குதல்), டி.குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி (செஸ்), சவுரவ் கோஷல், ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பலிக்கல் (ஸ்குவாஷ்), ரோகன் போபண்ணா, ராம்குமார் (டென்னிஸ்) உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

    • நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராவதற்கு அரசாங்கத்திடம் கூடுதல் அவகாசம் கேட்டு இருந்தோம்.
    • தகுதி தேர்வில் பங்கேற்காமல் நேரடியாக போட்டிக்கு தகுதி பெற நான் விரும்பவில்லை.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா. ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஜன் சரண் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் புகார்களை தெரிவித்து டெல்லியில் மல் யுத்த வீரர்-வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    முன்னணி வீரர்-வீராங்கனைகள் நடத்தி வரும் இப்போராட்டம் தொடர்ந்தபடி இருந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் செப்டம்பர் மாதம் தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் ஆகியோருக்கு தகுதி தேர்வில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டு நேரடியாக கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

    டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் இருவருக்கும் இந்த சலுகையை இந்திய மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகிக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி வழங்கியது. இதற்கு இளம் வீரர், வீராங்கனைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    அவர்கள் டெல்லியில் உள்ள இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம் முன்பு நேற்று போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மற்றொரு வீராங்கனையான சாக்ஷி மாலிக் கூறியதாவது:-

    நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராவதற்கு அரசாங்கத்திடம் கூடுதல் அவகாசம் கேட்டு இருந்தோம். ஆகஸ்டு 10-ந் தேதிக்கு பிறகு தகுதியை சோதிக்குமாறு கோரியிருந்தோம். இதையடுத்து அரசாங்கம் கால அவகாசம் வழங்கியது.

    வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோருக்கு ஆசிய விளையாட்டு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் அரசாங்கத்தின் முடிவு, மல்யுத்த வீரர்களின் ஒற்றுமையை உடைக்கும் முயற்சியாகும். ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் என்ற காரணத்திற்காக எனது பெயரும் பரிசீலிக்கப்படும் என்று எனக்கு மின்னஞ்சல் வந்தது. ஆனால் நான் மறுத்து விட்டேன். தகுதி தேர்வில் பங்கேற்காமல் நேரடியாக போட்டிக்கு தகுதி பெற நான் விரும்பவில்லை.

    அனைவருக்கும் நீதியும் நியாயமான தேர்வுக்கான வாய்ப்பும் கிடைக்க வேண்டும். மல்யுத்த வீரர்களின் பெயர்களை நேரடியாக அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு இடையிலான ஒற்றுமையை உடைக்க அரசாங்கம் முயற்சித்துள்ளது.

    அரசாங்கத்தின் இந்த செயலுக்கு பின்னால் உள்ள நோக்கங்கள் குறித்து நான் கவலைப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்படுவதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது.
    • 19-வது ஆசிய விளையாட்டு போட்டி செப்டம் பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது.

    புதுடெல்லி:

    ஆசிய விளையாட்டுப்போட்டி 1951-ம் ஆண்டு டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய விளையாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது.

    கடைசியாக ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் 2018-ம் ஆண்டு நடந்தது. 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியை சீனாவில் உள்ள ஹாங்சோவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 10 முதல் 25-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது.

    கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்படுவதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது.

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி செப்டம் பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது. மொத்தம் 40 விளையாட்டுக்கள் 482 பிரிவில் நடைபெறுகிறது.

    ஆசிய விளையாட்டு போட்டியில் 800 பேர் கொண்ட இந்திய குழு பங்கேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நாடும் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளை கடந்த 15-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டு இருந்தது.

    வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துசண்டை, செஸ், கிரிக்கெட், வாள் வீச்சு, ஆக்கி, கபடி, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் இந்திய அணி கலந்து கொள்கிறது.

    ஜகார்தாவில் 2018-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 524 பேர் கொண்ட இந்திய அணி 36 விளையாட்டுகளில் பங்கேற்றது. கடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம், ஆகமொத்தம் 69 பதக்கங்களை பெற்று இந்தியா 8-வது இடத்தை பிடித்து இருந்தது.

    ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்தியாவை சேர்ந்த தீபிகாகுமாரி, அட்னுதாஸ் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர். #AsianGames2018
    பாலெம்பேஸ்:

    இந்தோனேசியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டி 5-வது நாளாக நடக்கிறது.

    இன்று நடந்த வில்வித்தை போட்டியில் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 6-2 என்ற கணக்கில் வடகொரிய வீராங்கனை ஜியாங்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு இந்திய வீராங்கனையான பிரோமிளா 2-6 என்ற கணக்கில் மாங்கோலியா வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். ஆண்கள் வில்வித்தை பிரிவில் அட்னுதாஸ் 7-3 என்ற கணக்கில் வடகொரியாவை சேர்ந்த யூங்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இதேபோல் மற்றொரு வீரரான விஸ்வாஸ் 6-2 என்ற கணக்கில் மாங்கோலியாவின் பாட்டாவை வீழ்த்தினார். காலையில் ஆண்களுக்கான 50 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டி தகுதி சுற்று நடந்தது. இதில் இந்திய வீரர் விர்தலால் காதே 24.09 வினாடியில் கடந்து 5-வது இடத்தை பிடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு இந்திய வீரரான அன்ஷில் கோத்தாரி இறுதி சுற்றுக்கு முன்னேறவில்லை. அவர் 25.45 வினாடியில் கடந்து 28-வது இடத்தை பிடித்தார்.

    ஆண்கள் 100 மீட்டர் பிரிஸ்டைல் தகுதி சுற்றில் டிசாசா 27-வது இடம் (51.50 வினாடி), விர்தலால் காதே 43-வது இடமும் (59.11 வினாடி) பிடித்து இறுதி சுற்று வாய்ப்பை இழந்தனர்.

    ஆண்கள் 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீஅரி நட்ராஜ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் தகுதி சுற்றில் 2 நிமிடம் 02.97 வினாடியில் கடந்து 7-வது இடத்தை பிடித்தார்.

    மற்றொரு இந்திய வீரர் அத்வாய்பேஜ் 12-வது இடத்தை (2.06.85) பிடித்து வாய்ப்பை இழந்தார். #AsianGames2018
    ×