search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tasmac supervisor"

    • சூப்பர்வைசர் வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்து திருப்பி தராமல் கொலை மிரட்டலும் விடுத்த வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தம பாளையம் வடக்குரத வீதியை சேர்ந்தவர் முத்துக்கருப்பையா மகன் முத்துகார்த்தி(37). இவர் பி.இ., படித்துவிட்டு சின்னமனூரில் உரக்கடை வைத்துள்ளார். இவரது நண்பர் கோவிந்தன்ப ட்டிைய சேர்ந்த முத்துக்கும ரேசன்(40). இவர் அப்பகுதி யில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாள ராக வேலைபார்த்து வருகிறார்.

    இவர் முத்துகார்த்தியிடம் டாஸ்மாக்கில் மாவட்ட சூப்பர்வைசர் வேலை வாங்கி தர ரூ.10 லட்சம் செலவாகும். ஆனால் நண்பர் என்பதால் ரூ.8 லட்சம் கொடுத்தால் அந்த வேலையை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனைதொடர்ந்து முத்துகார்த்தி தனது மனைவி உமா வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சத்தை முத்துக்குமரேசன் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.

    ஆனால் அதன்பின்னர் உறுதியளித்தபடி வேலை வாங்கிதரவில்லை. இது குறித்து கேட்டபோது முறையான பதில் அளிக்க வில்லை. மேலும் பணத்தை திருப்பிதரமுடியாது. வேலையும் வாங்கி தர முடியாது என கூறி கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்து முத்துகார்த்தி உத்தம பாளையம் போலீஸ்நிலை யத்தில் புகார் செய்தார்.

    மேலும் கோர்ட்டிலும் முறையிட்டுள்ளார்.அத ன்பேரில் உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சிலைமணி, சப்-இன்ஸ்பெக்டர் விஜ ய்ஆனந்த் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுவாதி ஆலோசனைபேரில் திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
    • மதுரை டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் காசிமாயன் (வயது 53). இவர் பேச்சியம்மன் படித்துறை, ஆறுமுக சந்தியில் உள்ள டாஸ்மாக் கடையில், மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் காசிமாயன் சம்பவத்தன்று இரவு கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் மதுபானம் வாங்கினார்கள்.

    இதற்கான பணத்தை அவர்கள் தரவில்லை. எனவே காசி மாயன் தட்டி கேட்டார். அப்போது அந்த கும்பல் மாமூல் கேட்டு மிரட்டியது. இதற்கு அவர் தர மறுத்து விட்டார். எனவே ஆத்திரம் அடைந்த 2 பேர் கும்பல், காசிமாயனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றது.

    மதுரையில் டாஸ்மாக் மேற்பார்வையாளரை 2 பேர் கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுவாதி ஆலோசனைபேரில், திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் இது தொடர்பாக சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கண்காணிப்பு காமிராவை கைப்பற்றிய போலீசார், அவற்றில் இடம் பெற்று உள்ள காட்சி பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தனர்.

    இதில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் காசிமாயனை தாக்கிய கும்பல் பற்றிய விவரம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று இரவு திலகர் திடல், அபிமன்னன் தெருவுக்கு சென்றனர். அங்கு வீட்டுக்குள் பதுங்கி இருந்த 2 பேரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் அபிமன்னன் தெருவை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா (வயது 23), வெங்கடேஷ் (வயது 25) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் மேற்பார்வையாளரை மாமூல் கேட்டு மிரட்டி தாக்கியதாக மேற்கண்ட 2 பேரையும், திலகர்திடல் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேத்தியாத்தோப்பு அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.
    கடலூர்:

    சேத்தியாத்தோப்பு அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். இது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி டாஸ்மாக் கடையில் சாக்காங்குடியை சேர்ந்த மோகன்(வயது 46) என்பவர் மேற்பார்வையாளராகவும், வளையமாதேவியைச்சேர்ந்த வீரமணி(41) என்பவர் உள்பட 3 பேர் விற்பனையாளராகவும் வேலை பார்க்கிறார்கள்.

    இதில் விற்பனையாளர் வீரமணி பற்றி டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு மோகன் புகார் கடிதம் எழுதி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் வீரமணியை இடமாற்றம் செய்யாமல் இருக்க வேண்டுமானால் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருமாறு வீரமணியிடம் மேற்பார்வையாளர் மோகன் கேட்டுள்ளார்.

    இது பற்றி வீரமணி கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மோகனை பொறி வைத்து பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வீரமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனர்.

    இந்த நிலையில் நேற்று வளையமாதேவி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த மோகன் வீரமணியிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு மெல்வின், இன்ஸ்பெக்டர் மாலா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மோகனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இதன்பிறகு அவரை கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவரை வருகிற 5-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி ரவி உத்தரவிட்டார். இதையடுத்து மோகன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    சுசீந்திரம் அருகே நள்ளிரவில் டாஸ்மாக் சூப்பர் வைசரை தாக்கி ரூ.2½ லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    என்.ஜி.ஓ. காலனி:

    சுசீந்திரத்தை அடுத்த அக்கரை பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. புதுக்கிராமம் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 49) என்பவர் டாஸ்மாக் கடை சூப்பர் வைசராக பணி புரிந்து வருகிறார். அவருடன் இங்கு 2 விற்பனையாளர்களும் உள்ளனர். அவர்கள் தினமும் இரவு 10 மணிக்கு கடை மூடிய பின்பு வசூலான பணத்தை எண்ணி வீட்டிற்கு எடுத்துச் செல்வது வழக்கம்.

    நேற்றும் இதுபோல கடை மூடியதும், வசூல் பணம் முழுவதையும் எண்ணி பதிவேட்டில் குறிப்பிட்டனர். மொத்தம் ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 30 பணம் வசூலாகி இருந்தது.

    வசூலான பணம் ரூ.2½ லட்சத்தையும் ஒரு பையில் எடுத்துக் கொண்டு மூவரும் வீட்டிற்கு புறப்பட்டனர். சூப்பர் வைசர் முருகன், பணத்துடன் தனது மோட்டார் சைக்கிள் அருகே சென்றார். விற்பனையாளர்கள் இருவரும் கடையின் ‌ஷட்டரை அடைத்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது டாஸ்மாக் கடை அருகே மூடிக்கிடந்த பாருக்குள் இருந்து முனங்கல் சத்தம் கேட்டது. உடனே சூப்பர் வைசர் முருகன் அங்கு சென்று பார்த்தார். உள்ளே 4 மர்ம நபர்கள் இருந்தனர். கைகளில் அரிவாள், உருட்டுக்கட்டையுடன் இருந்த அவர்கள், முருகனை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர்.

    முருகனின் அலறல் சத்தம் கேட்டு விற்பனையாளர்கள் இருவரும் ஓடி வந்தனர். அவர்களையும் மர்மநபர்கள் மடக்கிப்பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் மூவருக்கும் கொலை மிரட்டல் விடுத்து விரட்டி அடித்தனர். அதன் பிறகு மர்மநபர்கள் 4 பேரும் டாஸ்மாக் கடையில் வசூலான மொத்த பணம் ரூ.2½ லட்சத்தையும் எடுத்துக் கொண்டு தலைமறைவாகினர்.

    இந்த கொள்ளை சம்பவம் பற்றி சூப்பர் வைசர் முருகன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கி பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    சம்பவம் நடந்த டாஸ்மாக் கடை அருகே உள்ள கட்டிடங்களில் கண்காணிப்பு கேமிரா உள்ளதா? என்பதை போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் கொள்ளையரின் உருவப் படங்கள் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சம்பவம் நடந்த டாஸ்மாக் கடையின் பின்புறம் 4 வழிச்சாலை உள்ளது. டாஸ்மாக் ஊழியரிடம் கொள்ளை அடித்த மர்மநபர்கள் அந்த வழியாகத்தான் தப்பிச் சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    கொள்ளை நடந்த டாஸ்மாக் கடை அருகில் தான் சுசீந்திரம் போலீஸ் நிலையம் உள்ளது. அதன் அருகேயே துணிகர கொள்ளை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் மாமூல் கேட்டு மிரட்டி தாக்குதல் நடத்திய தினகரன் கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பாப்பாநாடு காவல்சரகம் தொண்டராம்பட்டில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடை இதற்கு முன்பு ஊருக்குள் இருந்துள்ளது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஊருக்கு வெளியில் இந்த கடை கொண்டு செல்லப்பட்டது. இந்த கடையில் மேற்பார்வையாளராக ஒக்கநாடு மேலையூரை சேர்ந்த லட்சுமணன் என்பவர் உள்ளார்.

    இந்த கடை ஊரை விட்டு சென்று விடக்கூடாது என்று ஊருக்கு வெளியில் கடை அமைய அமமுக ஒரத்தநாடு ஒன்றிய செயலாளராக உள்ள ஆசைத்தம்பி நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஆசைத்தம்பி அடிக்கடி டாஸ்மாக் கடைக்கு சென்று இலவசமாக மது வாங்கி செல்வது வழக்கமாம். மேலும் ரூ.10 ஆயிரம் மாமூல் தரவேண்டும் என்றும் கேட்டு வந்தாராம். ஆனால் லட்சுமணன் மாமுல் தரமுடியாது. அவ்வப்போது இலவசமாக மதுபாட்டில் வாங்கி செல்கிறீர்கள். அத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம்.

    இந்நிலையில் நேற்று இரவு டாஸ்மாக் கடைக்கு வந்த ஆசைத்தம்பி இதுகுறித்து கேட்டு லட்சுமணனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் ஆத்திரமடைந்த ஆசைத்தம்பி தான் எடுத்து வந்த இரும்பு கம்பியால் டாஸ்மாக் மேற்பார்வையாளர் லட்சுமணனை கடுமையாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்தார்.உடனடியாக அவரை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து லட்சுமணன் பாப்பாநாடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இன்று காலை டாஸ்மாக் மேற்பார்வையாளர் லட்சுமணனை தாக்கியதாக அமமுக ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    டாஸ்மாக் சூப்பர்வைசர் கண்ணில் மிளகாய் பொடி தூவி ரூ. 3லட்சத்து 40 ஆயிரத்தை பறித்து சென்ற 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் -கொடுமுடி ரோட்டில் வாய்க்கால் மேடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இக்கடையின் சூப்பர்வைசராக முத்தூரை சேர்ந்த கார்த்தி (33) பணிபுரிந்து வருகிறார்.

    இவர் நேற்று கடையில் வசூலான பணத்தையும், காங்கயம் ரோட்டில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தையும் எடுத்து கொண்டு நத்தக் காடையூரில் உள்ள வங்கியில் செலுத்த மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் புதுப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் டாஸ்மாக் சூப்பர்வைசர் கார்த்தியை உதைத்து கீழே தள்ளி விட்டனர்.அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவி அவரிடமிருந்து ரூ. 3 லட்சத்து 40 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதில் காயம் அடைந்த கார்த்தி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. பணம் பறித்த கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். டாஸ்மாக் சூப்பர் வைசர் பணம் கொண்டு செல்வதை நன்கு அறிந்தவர்கள் தான் அவரை தாக்கி பணத்தை பறித்து சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews
    ×