உத்தமபாளையம் : டாஸ்மாக் சூப்பர்வைசர் வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி

சூப்பர்வைசர் வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்து திருப்பி தராமல் கொலை மிரட்டலும் விடுத்த வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் உத்தம பாளையம் வடக்குரத வீதியை சேர்ந்தவர் முத்துக்கருப்பையா மகன் முத்துகார்த்தி(37). இவர் பி.இ., படித்துவிட்டு சின்னமனூரில் உரக்கடை வைத்துள்ளார். இவரது நண்பர் கோவிந்தன்ப ட்டிைய சேர்ந்த முத்துக்கும ரேசன்(40). இவர் அப்பகுதி யில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாள ராக வேலைபார்த்து வருகிறார்.

இவர் முத்துகார்த்தியிடம் டாஸ்மாக்கில் மாவட்ட சூப்பர்வைசர் வேலை வாங்கி தர ரூ.10 லட்சம் செலவாகும். ஆனால் நண்பர் என்பதால் ரூ.8 லட்சம் கொடுத்தால் அந்த வேலையை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனைதொடர்ந்து முத்துகார்த்தி தனது மனைவி உமா வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சத்தை முத்துக்குமரேசன் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.

ஆனால் அதன்பின்னர் உறுதியளித்தபடி வேலை வாங்கிதரவில்லை. இது குறித்து கேட்டபோது முறையான பதில் அளிக்க வில்லை. மேலும் பணத்தை திருப்பிதரமுடியாது. வேலையும் வாங்கி தர முடியாது என கூறி கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்து முத்துகார்த்தி உத்தம பாளையம் போலீஸ்நிலை யத்தில் புகார் செய்தார்.

மேலும் கோர்ட்டிலும் முறையிட்டுள்ளார்.அத ன்பேரில் உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சிலைமணி, சப்-இன்ஸ்பெக்டர் விஜ ய்ஆனந்த் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com