என் மலர்
நீங்கள் தேடியது "கன்னியாகுமரி கடற்கரை"
- 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர்.
- கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கன்னியாகுமரி:
கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதையொட்டி சனிக்கிழமையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத் துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 7 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இருப்பினும் சுமார் 3 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர்.
133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர். மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் வெயில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- காதலர் தினத்தன்று தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதற்காக பரிசுப் பொருட்களை விதவிதமாக வாங்கி செல்கின்றனர்.
- காதலர் தினத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் கன்னியாகுமரியில் காதல் ஜோடியினர் இப்போதே வரத் தொடங்கி விட்டனர்.
கன்னியாகுமரி:
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி உலக காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு வருகிற 14-ந்தேதி நாடு முழுவதும் உலக காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
காதலர் தினத்தன்று காதல் ஜோடியினர் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவருக்கொருவர் வாழ்த்து அட்டைகள் வழங்கியும், பரிசுப் பொருட்களை வழங்கியும் கொண்டாடி மகிழ்வது வழக்கம். அந்த அடிப்படையில் வருகிற 14-ந்தேதி காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக காதல் ஜோடியினர் இப்போதே பரிசுப் பொருட்களை தேடி அலையத் தொடங்கி விட்டனர். கன்னியாகுமரி கடற்கரையில் இன்று காலை முதலே ஏராளமான காதல் ஜோடியினர் வந்து பரிசுப் பொருட்களை தேடி அலைந்த வண்ணமாக இருந்தனர். காதலர் தினத்தன்று தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதற்காக பரிசுப் பொருட்களை விதவிதமாக வாங்கி செல்கின்றனர்.
கன்னியாகுமரி கடற்கரையில் இருக்கும் சங்கு வியாபாரிகளிடம் காதல் ஜோடியினர் தங்களது காதலர்களின் பெயர்களை எழுதி பரிசுப் பொருட்களாக வாங்கி செல்கின்றனர். அதேபோல ஒரே அரிசியில் காதலர்கள் தங்களது பெயர்களை எழுதி வாங்கிச் செல்கின்றனர். மேலும் காதலர் தின வாழ்த்து அட்டைகளையும் கடைகளில் வாங்கிச் செல்கின்றனர்.
காதலர் தினத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் கன்னியாகுமரியில் காதல் ஜோடியினர் இப்போதே வரத் தொடங்கி விட்டனர். இதனால் கடற்கரையில் காதல் ஜோடிகள் அத்துமீறுகிறார்களா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காதலர் தினத்தன்று கன்னியாகுமரி கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காதலர் தினத்தன்று கன்னியாகுமரி கடற்கரையில் மறைவான இடங்களில் அத்துமீறி செயல்படும் காதல் ஜோடியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
- கடற்கரையில் கிடந்த பேரல் கப்பலில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
- ஒரு நிறுவனத்திற்கு சொந்தமான ஆயில் பேரல் என்று எழுதப்பட்டு இருந்தது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி அருகே முகிலன் குடியிருப்பு கடற்கரை பகுதியில் இன்று காலை மர்மபொருள் ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. இதை பார்த்த பொதுமக்கள் கன்னியாகுமரி கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவல் அந்த பகுதி மக்களுக்கும் தெரிய வந்தது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர். கடலோர காவல்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது கரை ஒதுங்கியது இரும்பு பேரல் என தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
கடற்கரையில் கிடந்த பேரல் கப்பலில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பேரலை மீட்டு கன்னியாகுமரியில் உள்ள கடலோர காவல் படை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மீட்கப்பட்ட பேரல், சிறிது துருபிடித்த நிலையில் இருந்தது. ஒரு நிறுவனத்திற்கு சொந்தமான ஆயில் பேரல் என்று எழுதப்பட்டு இருந்தது. எனவே அந்த பேரலில் ஆயில் இருக்கலாம் என்று தெரிகிறது. வெளிநாடுகளுக்கு சென்ற கப்பலில் இருந்து தவறி விழுந்த பேரல், கடலில் உள்ள நீரோட்டத்தின் மூலமாக இந்த பகுதியில் ஒதுங்கி இருக்கலாம் என்று தெரிகிறது.
போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பேரலை திறந்து சோதனை செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் அந்த பேரலை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடற்கரையில் பேரல் கரை ஒதுங்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கோவில்களில் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.
- கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது.
முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறைகடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.***கன்னியாகுமரி, ஜூன்.12-
இந்தியாவின் தென் கொடி முனையில் அமைந்து உள்ளது கன்னி யாகுமரி. இங்கு ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை குடும்பத் தோடு குதூகலத்துடன் கொண்டாட சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வந்த வண்ணமாக இருப்பார்கள். இதனால் இந்த 2 மாத காலமும் இங்கு கோடை விடுமுறை சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு கோடை விடுமுறை சீசன் நேற்றுடன் முடிவ டைந்தது. இதைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.
இதனால் கன்னியாகு மரிக்கு சுற்றுலா பயணி களின் வருகை அடியோடு குறைந்து விட்டது. இன்று காலையில் 1500 முதல் 2000 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து உள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால் விவேகா னந்தர் மண்டபத்துக்கு செல்லும் "கியூ" செட்டில் ஆட்கள் இல்லாமல் வெறிச் சோடி காணப்படுகிறது. கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில், விவேகானந்த புரம் கடற்கரையில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாஜலபதிகோவில் ஆகிய கோவில்களில் பக்தர்களின் கூட்டம் குறை வாகவே காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி யில் இருந்து வட்டக்கோட் டைக்கு உல்லாச படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை யும் வெகுவாக குறைந்து விட்டது. கன்னியாகுமரியில் உள்ள முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்க ரைப்பகுதி, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், மீன் காட்சிசாலை, கடற்கரையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள், அரசு பழத் தோட்டத்தில் உள்ள சுற்றுச் சூழல் பூங்கா, அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மியூசியம் வட்டக்கோட்டை பீச், சொத்தவிளை பீச், சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி போன்ற அனைத்து சுற்றுலா தலங்களும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன. இதனால் கடைகளில் வியாபாரம் இன்றி வியாபாரிகள் தவிக்கிறார்கள்.
- நமது நாட்டின் தேசியக் கொடியின் மூவர்ண நிறத்திலான பலூன் பறக்கவிடப்பட்டது.
- 3 நாட்கள் நடத்தப்படும் காற்றாடி திருவிழா, இன்றும், நாளையும் சங்குத்துறை கடற்கரையில் நடக்கிறது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்ட நிர்வாகமும் மாவட்ட சுற்றுலா துறையும் இணைந்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கன்னியாகுமரியில் முதல் முறையாக காற்றாடி திருவிழாவை நடத்தின. சூரிய அஸ்தமன காட்சி முனைய பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
இந்த காற்றாடி திருவிழாவில் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களை சேர்ந்த காற்றாடி இயக்குவர்கள் பல வண்ண காற்றாடிகளை பறக்க விட்டனர். முதலில் வாழ்க தமிழ் என்ற வாசகத்துடனான காற்றாடி பறக்க விடப்பட்டது. அதன்பிறகு நமது நாட்டின் தேசியக் கொடியின் மூவர்ண நிறத்திலான பலூன் பறக்கவிடப்பட்டது. தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட காற்றாடிகள் பறக்க விடப்பட்டு வானத்தில் வர்ணஜாலங்கள் காட்டின.
புலி உருவங்களுடன் கூடிய காற்றாடி, கார்ட்டூன் தொடர்களில் வரும் ஸ்பான்ஜ் பாப் உருவ காற்றாடி, சோட்டா பீம், டோலு-போலு, சுட்கி, பாலகணேசா, யானை, அசோக சக்கர வடிவிலான காற்றாடி என பலவித காற்றாடிகள் விண்ணில் பறக்க விடப்பட்டன. இதனை சுற்றுலா பயணிகளும் மாணவ-மாணவிகளும் கண்டு ரசித்தனர்.
தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெக்கி என்பவர் தனது குழுவினருடன் தங்கள் நாட்டின் பிரபலமான கார்ட்டூன் பொம்மை உருவ காற்றாடியை பறக்க விட்டனர். அவர் கூறுகையில், கன்னியாகுமரி கடற்கரை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்தியாவில் 2-வது முறையாக காற்றாடி திருவிழாவில் பங்கேற்கிறோம் என்றார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த மேகுல் படக் கூறுகையில், கன்னியாகுமரி மிகவும் அருமையான சுற்றுலா தலம். இந்த காற்றாடி திருவிழா, சுற்றுலா வளர்ச்சிக்கு மிகவும உறுதுணையாக இருக்கும். நான் 2007-ம் ஆண்டு முதல் காற்றாடிகளை பறக்க விட்டு வருகிறேன். இந்தோனேசியாவில் உலக அளவிலான காற்றாடி கண்காட்சியில் நான் காற்றாடி பறக்க விட்டபோது, நமது பிரதமரும், இந்தோனேசியா பிரதமரும் பார்வையிட்டனர் என்றார்.
கன்னியாகுமரியில் காற்று பலமாக வீசியதால், காற்றாடிகளை கட்டுப்படுத்துவதில் சிரமமான நிலை நிலவியதாக காற்றாடி திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் பெனடிக்ட்சா வியோ தெரிவித்தார். உலக அளவிலான காற்றாடி திருவிழா, ஏறத்தாழ 50, 60 இடங்களில் நடக்கிறது. இதில் பிரான்ஸ், இத்தாலி நாடுகளில் நடப்பது தான் பெரிய திருவிழா ஆகும். கன்னியாகுமரியில் முதல் முறையாக காற்றாடி திருவிழா நடைபெற்றுள்ளது. காற்றாடிகள் தயாரிக்க ரூ.1 லட்சத்துக்கு மேல் ஆகிறது என்றும் அவர் கூறினார்.
3 நாட்கள் நடத்தப்படும் காற்றாடி திருவிழா, இன்றும், நாளையும் சங்குத்துறை கடற்கரையில் நடக்கிறது. மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது.
தொடக்க விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பட்டம் பறக்கவிட்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்:-
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சர்வதேச அளவில் காற்றாடி திருவிழா 3 நாட்கள் நடக்கிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கன்னியாகுமரி மேம்படுத்தப்பட்டு வருகிறது. விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழையினால் ஆன கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்படுகிறது என்றார்.
- கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக படகுத்துறையிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- சுற்றுலா பயணிகள் வருகை “திடீர்” என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு 2 சீசன் காலங்கள் உண்டு. ஒன்று நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் காலமாகும். இன்னொன்று ஏப்ரல், மே மாதங்களில் வரும் கோடை விடுமுறை சீசன் காலம் ஆகும்.
இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் சீசன் காலங்களில் மட்டும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக இருப்பார்கள். இதேபோல் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது விடுமுறை இல்லாத நாட்களிலும் கன்னியாகுமரிக்கு வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இன்று கன்னியாகுமரிக்கு வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இதனால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.
அதேபோல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக படகுத்துறையிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மேலும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை, பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிவதால் அனைத்து சுற்றுலா தலங்களும் களை கட்டியது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச்சென்ற வண்ணமாக உள்ளனர். அந்த அடிப்படையில் சனிக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.
முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.
கடந்த 3 நாட்களாக மழை மேகமூட்டத்தினால் தெரியாமல் இருந்த சூரிய உதயம் இன்று மழை மேகம் நீங்கியதைத்தொடர்ந்து கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாகத்தெரிந்தது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.
மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன்காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம், பாரதமாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், ராமர் கோவில், வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கன்னியாகுமரியில் விடுமுறை நாளான இன்று சபரிமலை சீசன் களைகட்டி உள்ளது.
இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிவதால் அனைத்து சுற்றுலா தலங்களும் களை கட்டியது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- காதல் ஜோடியினர் ஒருவரை ஒருவர் கரம் கோர்த்தபடியும், தோளில் கை போட்டபடியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர்.
- காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கன்னியாகுமரி:
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று காதல் ஜோடிகளின் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரியிலும் இன்று காதல் ஜோடிகள் குவிந்தனர். கன்னியாகுமரி கடற்கரையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரைப் பகுதியில் உள்ள சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைப் பகுதி, கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் காதல் ஜோடியினர் இன்று காலையிலிருந்தே வந்து குவிய தொடங்கினர்.
காதல் ஜோடியினர் ஒருவரை ஒருவர் கரம் கோர்த்தபடியும், தோளில் கை போட்டபடியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர். கடற்கரையில் நின்றவாறு காதல் ஜோடிகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையின் பின் பகுதியை கவர் செய்து தாங்கள் கன்னியாகுமரிக்கு வந்ததை நினைவுகூரும் வகையில் செல்போன் மூலம் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கன்னியாகுமரி கடற்கரை பகுதி, காந்தி மண்டபம் பஜார், கடற்கரை சாலை, சன்னதி தெரு, விவேகானந்தராக் ரோடு, ஆகிய பகுதிகளில் உள்ள சங்கு கடைகளில் காதலர்கள் பலரும் கூடி நின்று தங்கள் பெயர்களை கடல் சங்கில் பதிவு செய்து வாங்கிச் சென்றனர்.
இதேபோல ஒரே அரிசியில் காதல் ஜோடியினர் இருவர் பெயரையும் பதிவு செய்தனர். அவற்றை ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்ந்தனர். இதனால் பரிசுப்பொருட்கள் கடைகளில் காதல் ஜோடி கூட்டம் அலைமோதியது.
கடற்கரையிலுள்ள காட்சி கோபுரம் மற்றும் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களிலும் காதலர்கள் பலர் ஜோடியாக அமர்ந்து கடலின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து இன்று ஏராளமான காதல் ஜோடிகள், மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு வந்திருந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் கடற்கரை சாலையில் ரேஸ் செய்தபடி வலம் வந்தனர்.
மறைவான இடங்களில் அமர்ந்து அத்துமீறிய சில காதல் ஜோடிகளை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஒரு சில காதல் ஜோடிகள் மறைவான இடங்களில் அமர்ந்து தங்கள் காதல் லீலைகளை அரங்கேற்றினர். கடற்கரை பகுதியில் காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்தனர். காதல் ஜோடியினர் ரோஜா மலர்களை ஒருவருக்கொருவர் பரிமாறி காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி.மகேஷ்குமார் தலைமையில் போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவிலும் காதல் ஜோடிகள் அதிகமானோர் வந்திருந்தனர்.
- படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்திருந்தனர்.
- மீனவர்கள் கடலுக்கு செல்லாதால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
நாகர்கோவில்:
தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் இன்று காலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியில் இன்று மதியம் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் கடற்கரையில் இருந்த சுற்றுலாப் பயணிகள் ஓட்டம் பிடித்தனர். சில சுற்றுலா பயணிகள் குடை பிடித்தவாறு கடல் அழகை ரசித்தனர். அப்போது குடையை சூறைக்காற்று தூக்கி சென்றது.
மேலும் அந்த பகுதியில் கடல் சீற்றத்துடனும் காணப்பட்டது. ராட்சத அலைகள் 10 முதல் 15 அடி உயரத்திற்கு எழும்பின. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேறினார்கள். முட்டம் , ராஜாக்கமங்கலம் துறை, நீரோடி, குளச்சல், தேங்காய்பட்டினம், சொத்தவிளை உள்ளிட்ட அனைத்து மீனவ கிராமங்களிலும் இன்று கடல் சீற்றமாக காணப்பட்டது. மழையும் விட்டுவிட்டு பெய்தவாறு இருந்தது.
ஏற்கனவே மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்திருந்தனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாதால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. குமரி மாவட்டத்தில் கனமழையுடன் சூறைக்காற்றும் நீடிப்பதால் பொதுமக்கள் யாரும் நீர்நிலைகள் அருகே செல்ல வேண்டாம் என்றும், நீர்நிலைகள் பகுதிகளில் நின்று செல்பி எடுக்க வேண்டாம் என்றும் கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் பகுதிகளில் வழக்கமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
- சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்று குறைவாக காணப்பட்டது. கடற்கரை பகுதிகள் வெறிச்சோடியது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரிக்கு கோடை விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இதனால் கன்னியாகுமரி கடற்கரை காலை, மாலை நேரங்களில் பரபரப்பாக இருக்கும். சூரிய உதயத்தை காண காலையிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததால் கன்னியாகுமரி களைகட்டி இருந்தது. கோடை விடுமுறை முடிவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர்.

நேற்றும் காலையில் கூட்டம் அலைமோதிய நிலையில், பிரதமர் மோடி 3 நாள் கன்னியாகுமரி வருகையைடுத்து கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கடற்கரை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பிரதமர் கன்னியாகுமரி வந்திருப்பதை தொடர்ந்து கன்னியாகுமரியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்று குறைவாக காணப்பட்டது. கடற்கரை பகுதிகள் வெறிச்சோடியது.
காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் பகுதிகளில் வழக்கமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் இன்று அந்த சாலை வெறிச்சோடி காணப்பட்டது. கன்னியாகுமரியில் உள்ள கடைகள் வழக்கம் போல் திறந்து செயல்பட்டாலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இல்லாததால் வியாபாரம் இன்றி வெறிச்சோடி இருந்தது.
- மழை மேகத்தால் தெரியாமல் இருந்த சூரிய உதயம் கடந்த 3 நாட்களுக்கு பிறகு இன்று தெளிவாக தெரிந்தது.
- அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவதன் காரணமாக இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல் ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.
இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தநிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர்.
கன்னியாகுமரிக்கும் இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
மழை மேகத்தால் தெரியாமல் இருந்த சூரிய உதயம் கடந்த 3 நாட்களுக்கு பிறகு இன்று தெளிவாக தெரிந்தது. சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.
மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம் பாரதமாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், கொட்டாரம் ராமர் கோவில், வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் கன்னியாகுமரியில் இன்று சபரிமலை சீசன் களைகட்டியது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்ததால் கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- கடல் உள்வாங்கியதால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால் நனைக்க அச்சப்பட்டனர்.
- சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலைக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கன்னியாகுமரி கடலில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. கடல் சீற்றம், கொந்தளிப்பு, உள்வாங்குவது, நீர்மட்டம் தாழ்வது, நீர்மட்டம் உயர்வது என பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று இரவு கன்னியாகுமரியில் கடல் "திடீர்" என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதை பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால்நனைக்க அச்சப்பட்டனர்.
ஆனால் எந்தவித அச்சமுமின்றி மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டு கரைக்கு திரும்பினர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை பகுதியில் கடல் உள்வாங்கி இருந்தாலும் கன்னியாகுமரியில் வங்ககடல் பகுதியில் கடலின் தன்மை இயல்பு நிலையில் காணப்பட்டதால் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது.
சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகிறார்கள். அதே சமயம் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள்ஆனந்த குளியல் போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.






