search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rafale issue"

    ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு தவறான தகவல்களை தெரிவித்து தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றதாக, சுப்ரீம் கோர்ட்டில் யஷ்வந்த் சின்கா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்து உள்ளனர். #Rafale #YashwantSinha
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டதில் ஊழல் நடந்ததாக கூறி முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கடந்த டிசம்பர் 14-ந்தேதி தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது.

    இந்த நிலையில், அந்த ஒப்பந்தம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான புதிய ஆவணங்களின் அடிப்படையில், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், பத்திரிகையில் வெளியான தகவல் முழுமை இல்லாதது என்றும், மேலும் அந்த தகவல் சட்டவிரோதமாக பெறப்பட்டது என்றும், எனவே மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுவுக்கு யஷ்வந்த் சின்கா உள்ளிட்ட 3 பேர் சார்பிலும் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் எதிர்பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சில உண்மைகளை மறைத்து, தவறான தகவல்களை தெரிவித்து அதன் அடிப்படையில் மத்திய அரசு தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்று இருப்பதாகவும், எனவே அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    இந்த எதிர்பதில் மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உண்மைகளை மறைத்து தவறான தகவல்களின் அடிப்படையில் அரசு தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றதாக கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது, அடிப்படை இல்லாதது என்றும், பத்திரிகையில் வெளியான சில குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் தவறான எண்ணத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

    பொய்யான தகவல்கள் வெளியாக காரணமாக இருந்து கோர்ட்டை தவறாக வழிநடத்தியதற்காக அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    யஷ்வந்த் சின்கா உள்ளிட்டோரின் மறுஆய்வு மனு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. #Rafale #YashwantSinha
    ரபேல் போர் விமான பேரம் தொடர்பான வழக்கில், சீராய்வு மனுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்யக்கூடாது என மத்திய அரசு கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. #RafaleDeal #SC
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட் கடந்த டிசம்பர் 14-ந் தேதி தள்ளுபடி செய்தது. ரபேல் ஒப்பந்தத்தில் தவறு ஏதும் நடைபெறவில்லை என கூறியது. அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, ஒரு ஆங்கில பத்திரிகையில் ரபேல் பேரம் குறித்த ரகசிய ஆவணங்கள் வெளியாகின. அதே ஆவணங்கள், சீராய்வு மனுக்களுடனும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள், ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார். பின்னர், “ஆவணங்கள் திருடப்படவில்லை, நகல் எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.



    அதன்பின்னர் சீராய்வு மனுக்களுக்கு மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரபேல் ரகசிய ஆவணங்களை திருடி வெளியிட்டதால், தேச பாதுகாப்புக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த ஆவணங்களை உச்ச நீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்றனர்.

    சீராய்வு மனுக்களுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை பரிசீலனைக்கு ஏற்க முடிவு செய்திருப்பதாகவும், அந்த ஆவணங்கள் மீது விரிவாக ஆய்வு செய்யப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர். விசாரணை தொடங்கும் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளனர். #RafaleDeal #SC
    ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #RahulGandhi #PMModi #RafaleIssue
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் பிரான்சிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளது. ரபேல் மோசடியில் பிரதமர் மோடி தவறு செய்துள்ளார். மோசடி நடந்துள்ளது தெளிவாக தெரிகிறது.

    பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பொய்களை கூறுகிறார். பிரதமர் மோடியினாலே அனில் அம்பானியை தான் தேர்வு செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஒப்புக்கொண்டுள்ளார்.



    பிரதமர் மோடி 30 ஆயிரம் கோடி ரூபாயை விமானப் படையிடம் இருந்து கொள்ளையடித்து அனில் அம்பானிக்கு கொடுத்துள்ளார். இதைத்தான் நாங்கள் கடந்த ஓராண்டாக எழுப்பி வருகிறோம்.

    தற்போது மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் அளித்த அறிக்கையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகையில், பிரதமர் மோடி தனியாக பேசி உள்ளார் என கூறப்பட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பொய்யான தகவல்களை அளித்துள்ளது என தெரிவித்துள்ளார். #RahulGandhi #PMModi #RafaleIssue
    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி யஷ்வந்த்சின்கா, அருண் ஷோரி, பிரசாந்த் பூ‌ஷன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுவை தாக்கல் செய்தனர். #rafaleissue #supremecourt #YashwantSinha

    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் வகை போர் விமானம் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. ரபேல் விமான கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறியும், இதனால் கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி பல்வேறு பொது நல மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.


    இந்த மனுக்களை கடந்த 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. ரபேல் போர் விமான கொள்முதல் நடவடிக்கைகளில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் எதுவுமில்லை என்று தீர்ப்பளித்தது.

    கொள்முதல் நடவடிக்கைகளில் கோர்ட்டு தலையிடுவதற்கான அவசியம் ஏற்படவில்லை என்றும் தீர்ப்பில் தெரிவித்தது.

    இந்த நிலையில் ரபேல் விவகார தீர்ப்பு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. பா.ஜனதா அதிருப்தியாளர்களும், முன்னாள் மத்திய மந்திரிகளான யஷ்வந்த்சின்கா, அருண் ஷோரி மற்றும் மூத்த வக்கீல் பிரசாந்த் பூசன் ஆகியோர் சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    ரபேல் விவகார வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தவறான தகவல்களை அளித்துள்ளது. இதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு சீராய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டது. #rafaleissue #supremecourt #YashwantSinha

    ரபேல் விவகாரத்தில் மோடியின் மோசடியை அம்பலப்படுத்துவோம் என்று பாராளுமன்ற நிதிக்குழு தலைவர் வீரப்பமொய்லி கூறியுள்ளார். #RafaleCase

    சென்னை:

    ரபேல் விவகாரத்தில் நடந்துள்ள குளறுபடிகள் பற்றி, நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று மாநில தலைநகரங்களில் முக்கிய தலைவர்கள் விளக்கம் அளித்தனர்.

    சென்னையில் பாராளுமன்ற நிதிக்குழு தலைவர் வீரப்பமொய்லி இன்று சத்தியமூர்த்திபவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் முன்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டது. நான் பிரதமரானால் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்.

    ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும். வேலையில்லா திண்டாட்டம் இருக்காது என்றெல்லாம் வாக்குறுதி அளித்தார். ஆனால் எதையும் நிறைவேற்றவிலை. மக்கள் ஏமாந்ததுதான் மிச்சம்.

     


    அதன் காரணமாகத்தான் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் மீண்டும் காங்கிரசை மக்கள் பதவியில் அமர்த்தி இருக்கிறார்கள். அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலிலும் ராகுல் தலைமையில் காங்கிரசை ஆட்சியில் அமர்த்துவதற்கான சிக்னல்தான் இது.

    ரபேல் போர் விமானம் வாங்குவதில் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. தவறான தகவல்களை சுப்ரீம் கோர்ட்டுக்கு அளித்து தீர்ப்பு பெற்றிருக்கிறார்கள்.

    இந்த விவகாரத்தில் மோடி செய்துள்ள மோசடிகள், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் அம்பலமாகும். கூட்டுக்குழு விசாரணை நடத்தாமல் விடமாட்டோம். இதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.

    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் கூறி வருகிறார்கள். ஆனால் விசாரணைக்குப் பிறகு மன்னிப்பு கேட்கப் போவது யார் என்பது வெளிச்சத்துக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக வீரப்பமொய்லியை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் சிரஞ்சீவி, தணிகாசலம், ராயபுரம் மனோகர், ஜி.கே.தாஸ் ஆகியோர் வரவேற்றனர். #RafaleCase

    மோடியும், அனில் அம்பானியும் இணைந்து ராணுவத்தில் ரூ.1¼ லட்சம் கோடிக்கு துல்லிய தாக்குதல் நடத்தி உள்ளனர் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். #Rafale #Modi #AnilAmbani #RahulGandhi
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு 2016-ல் மோடி அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

    இந்தநிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அளித்த பேட்டியில், ‘போர் விமான ஒப்பந்தத்தில் உதிரிபாகங்களை தயாரிப்பதற்கு இந்தியாவின் சார்பில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டது. எங்களுக்கு வேறு வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார். இதனால் இந்த விவகாரம் சூடுபிடித்து உள்ளது. ஹாலண்டே பிரான்ஸ் அதிபராக இருந்தபோதுதான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, நினைவு கூரத்தக்கது.



    இதுகுறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேயின் கருத்து, பிரதமர் மோடி ஒரு திருடர் என்பதற்கு உறுதியான ஆதாரமாக அமைந்து உள்ளது. அது நமது பிரதமரை திருடர் என்று கூறுகிறது. எனவே இந்த விவகாரத்தில் தனது பெயர் அடிபடுவது பற்றி மோடி தெளிவு படுத்தவேண்டும். ஏனென்றால் பிரதமர் ஊழல்வாதி என்பதில் நாங்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அதேபோல் நாட்டின் பாதுகாவலரான பிரதமர் திருடர் என்பது நாட்டு மக்களின் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது.

    எனவே ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஹாலண்டே கூறியிருப்பது பற்றி மோடி விளக்கம் அளிக்கவேண்டும். இதில் ஏன் பிரதமர் மவுனம் சாதிக்கிறார் என்று தெரியவில்லை. ஏனென்றால் இது நாட்டின் பாதுகாப்பு படை பற்றிய விவகாரம். ஊழல் தொடர்பான விஷயம்.

    ஹாலண்டேயின் கருத்தை ஏற்றுக் கொள்கிறாரா?...அல்லது ஹாலண்டே பொய் சொல்கிறாரா? என்பது பற்றி பிரதமர் மோடி விளக்கவேண்டும். இதில் எது உண்மை என்பதை அவர் தெளிவு படுத்த வேண்டும்.

    ரபேல் போர் விமான முறைகேடு விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேயையும் அழைக்கலாம்.

    மோடியை இந்த விவகாரத்தில் பாதுகாப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியின் பல்வேறு ராணுவ மந்திரிகளும் பொய் சொல்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ராகுல்காந்தி நேற்று தனது டுவிட்டர் பதிவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல்(சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்தியதை மோடி அரசு பெருமையாக கூறுவதை ரபேல் போர் விமான ஒப்பந்தத்துடன் தொடர்புபடுத்தி கிண்டல் செய்தார்.

    அவர், “பிரதமர் மோடியும், அனில் அம்பானியும் இணைந்து இந்திய ராணுவத்தின் ரூ.1.30 லட்சம் கோடி மீது துல்லிய தாக்குதல் நடத்தி உள்ளனர். நாட்டுக்காக தியாகம் செய்த வீரர்கள் சிந்திய ரத்தத்தை நீங்கள்(மோடி) அவமதித்து உள்ளர்கள். இது வெட்கக் கேடானது. மேலும் நீங்கள் இந்தியாவின் ஆன்மாவிற்கு துரோகமும் செய்து விட்டீர்கள்” என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். Rafale #Modi #AnilAmbani #RahulGandhi 
    ×