search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Physiotherapy"

    • சிற்றூர்களில்கூட `பிசியோதெரபி மையங்கள்’ முளைத்துவிட்டன.
    • குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கு வலியை குறைக்கிறது.

    பிசியோதெரபி என்றும் அழைக்கப்படும் பிசிக்கல் தெரபி என்பது உடல் சார்ந்த நோய் அல்லது மூட்டு வலி, தசை வலி, பக்கவாதம், சிதைவு போன்ற நிலைமைகள் உள்ள பெரும்பாலான மக்களுக்கு சிகிச்சையின் ஒரு முக்கிய பகுதியாகும். இது பிசியோதெரபிஸ்ட்டால் நடத்தப்படுகிறது. வீட்டிலும் வேலையிலும் சுறுசுறுப்பான மற்றும் சுதந்திரமான வாழ்க்கையை மீண்டும் தொடங்க அல்லது பராமரிக்க உதவுகிறது.

    சிற்றூர்களில்கூட `பிசியோதெரபி மையங்கள்' முளைத்துவிட்டன. சரி, அது என்ன பிசியோதெரபி? எலும்பு மூட்டு, தசைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டால், அவற்றைச் சரிசெய்யவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவும் சிகிச்சை. ஊசி, மருந்துகளை பயன்படுத்தாமல் உடற்பயிற்சி, தெரபியூடிக் மசாஜ், வெப்ப சிகிச்சை, மின் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் ஒரு வழிமுறை.உடலில் அடிபட்டால் காயத்தின் தீவிரத்தைக் குறைக்கவும், பாதிப்பிலிருந்து மீளவும் இது உதவும்.

    உடற்பயிற்சி சிகிச்சை

    பிசியோதெரபிஸ்டுகள் நோயாளிகள் இயக்கம், நெகிழ்வுத்தன்மை மற்றும் வலிமையை மேம்படுத்துவதற்கு உடற்பயிற்சியை பயன்படுத்துகின்றனர், இது குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கு வலியைக் குறைக்கிறது.

    பிசியோதெரபிஸ்டுகள் ஒவ்வொரு நோயாளியும் சரியான உடற்பயிற்சி திட்டத்தைப் பெறுவதை உறுதிசெய்ய பயிற்சி பெற்றுள்ளனர், மேலும் உங்கள் சிகிச்சையில் இருந்து நீங்கள் அதிக பலன்களை பெறுவதை உறுதிசெய்யும் திட்டத்தை கற்றுக்கொள்ளவும், செயல்படுத்தவும் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

    மூட்டுகள் மற்றும் தசைகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம் வலியைக் குறைக்கவும், உடலை சுதந்திரமாக நகர்த்தவும் உதவும். பிசியோதெரபிஸ்டுகள் நோயாளிகளுக்கு இந்த நுட்பங்களை உடற்பயிற்சி சிகிச்சை போன்ற மற்ற சிகிச்சை அணுகுமுறைகளுடன் பயன்படுத்தி நோயாளிகள் விரைவாக குணமடைய உதவலாம்.

    அக்குபஞ்சர் மற்றும் உலர் ஊசி

    பல பிசியோதெரபிஸ்டுகள் வலி நிவாரணம் மற்றும் தசை செயல்பாட்டிற்கு உதவுவதற்காக குத்தூசி மருத்துவம் மற்றும் உலர் ஊசி துறையில் கூடுதல் பயிற்சி பெற்றுள்ளனர்.

    மின் சிகிச்சை:

    எலக்ட்ரோதெரபி சிகிச்சை, அல்ட்ராசவுண்ட், (இன்டர்ஃபெரன்ஷியல் தெரபி), இழுவை, அகச்சிவப்பு, பாரஃபின் மெழுகு குளியல் சிகிச்சை, மின் தூண்டுதல், குறுகிய வேவ் டயதர்மி, சிபிஎம், லேசர் ஆகியவை எலக்ட்ரோ மோடலிட்டிகள் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

    வயோதிகம் மற்றும் அதிக இயக்கம் காரணமாக எலும்பு, மூட்டுகள் தேய்மானம் அடையும். அதனால் ஏற்படும் வலியைப் போக்கவும், தேய்மானத்தைச் சரிசெய்யவும் பிசியோதெரபி அவசியம். இந்த சிகிச்சையை தொடர்ந்து அளித்தால்தான் பாதிக்கப்பட்ட மூட்டுகளை மீண்டும் செயல்படவைக்க முடியும்.

    பிசியோதெரபியை எப்போது நிறுத்த வேண்டும்?

    நமக்கு ஏற்படும் சில பிரச்னைகளுக்கு சில நாட்கள் மட்டும் கிளினிக் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். பிறகு, வீட்டில் பயிற்சிகளை செய்தாலே போதும். சில பிரச்னைகளுக்கு நீண்டகாலம் சிகிச்சை எடுக்கவேண்டி இருக்கும். அது முடிந்ததும், பிசியோதெரபிஸ்ட்டின் ஆலோசனைப்படி சிகிச்சையை நிறுத்திக்கொள்ளலாம்.

    • பிசியோதெரபி பல்வேறு துணை சிறப்புகளின் வடிவத்தில் உருவாகியுள்ளது.
    • பாதிக்கப்பட்ட பகுதிகளை வலுப்படுத்த உதவுகிறது.

    பிசியோதெரபி என்பது ஒரு சுகாதார பாதுகாப்பு தொழிலாகும், இது மசாஜ், வெப்ப சிகிச்சை, உடற்பயிற்சி, மின் சிகிச்சை, நோயாளி கல்வி மற்றும் காயம், நோய் அல்லது குறைபாடு சிகிச்சைக்கான ஆலோசனை போன்ற பல்வேறு சிகிச்சை முறைகளை உள்ளடக்கியது.

    பிசியோதெரபி பல்வேறு துணை சிறப்புகளின் வடிவத்தில் உருவாகியுள்ளது. பிசியோதெரபி பல்வேறு நிலைமைகளை மிகவும் பயனுள்ள மற்றும் பொருத்தமான வழியில் சமாளிக்க உதவுகிறது. பல்வேறு துணை சிறப்புகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளின் பட்டியல்:

    நரம்பியல் பிசியோதெரபி - நரம்பியல் நிலைமைகள் தீவிர தசை பலவீனம், சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு இழப்பு, தசை பிடிப்பு, நடுக்கம், செயல்பாடு இழப்பு மற்றும் உணர்வு குறைதல். நரம்பியல் பிசியோதெரபி என்பது பக்கவாதம், முதுகுத்தண்டு காயங்கள், அதிர்ச்சிகரமான மூளை காயங்கள், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், சியாட்டிகா, அனியூரிசம் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற நரம்பு மற்றும் நரம்புத்தசை அமைப்பில் இருந்து உருவாகும் இயக்கம் மற்றும் செயல்பாட்டு கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    எலும்பியல்/ தசைக்கூட்டு பிசியோதெரபி - தசைகள், தசைநார்கள், எலும்புகள், மூட்டுகள் மற்றும் தசைநாண்களை சரிசெய்வது உள்ளிட்ட மனித தசைக்கூட்டு அமைப்பு தொடர்பான குறைபாடுகளை சரிசெய்தல் மற்றும் நோய்களுக்கு சிகிச்சையளிப்பது. இதன் முக்கிய நோக்கம் வலியை குறைப்பது மற்றும் எலும்பு காயத்தை சரிசெய்வதாகும்.

    கார்டியோபுல்மோனரி பிசியோதெரபி - இதயத்தடுப்பு மற்றும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் போன்ற இதய நுரையீரல் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த துணை சிறப்பு சிகிச்சை அளிக்கிறது. பிசியோதெரபிஸ்டுகள் இருதய மறுவாழ்வு மையங்களை நடத்துகிறார்கள் மற்றும் நோயாளிகளுக்கு அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும் சில வகையான பயிற்சிகள் மற்றும் பயிற்சி நுட்பங்களை பற்றி அவர்களுக்கு கற்பிக்கிறார்கள்.

    குழந்தைகளுக்கான பிசியோதெரபி - குழந்தைகளுக்கான பிசியோதெரபிஸ்ட்கள் கடுமையான காயங்கள், பிறக்கும் போது இருக்கும் குறைபாடுகள், உடல் வளர்ச்சியில் தாமதம், அல்லது பெருமூளை வாதம் போன்ற சில மரபணு குறைபாடுகளை மேம்படுத்த உதவுகிறார்கள். பிசியோதெரபிஸ்டுகள் குழந்தைகளில் பல்வேறு சிகிச்சை பயிற்சிகளை பயன்படுத்துகின்றனர். இது பாதிக்கப்பட்ட பகுதிகளை வலுப்படுத்த உதவுகிறது. அதன் மூலம் அந்த பகுதிகளின் துல்லியமான மற்றும் ஒட்டுமொத்த இயக்கத்தை மேம்படுத்துகிறது.

    முதியோர் பிசியோதெரபி - கீல்வாதம் (மூட்டுகளில் வலி), ஆஸ்டியோபோரோசிஸ் (உடையக்கூடிய மற்றும் உடையக்கூடிய எலும்புகள்) போன்ற வயது தொடர்பான சில மருத்துவ நிலைகளை கையாள்கிறது. முதியோர் பிசியோதெரபிஸ்டுகள் முதியோர்களுக்கு வலியை அதிகரிக்கக்கூடிய சில அசைவுகளை கட்டுப்படுத்தி, நோயாளிகளுக்கு நடை உதவியாளர்களை வழங்கி ஒட்டுமொத்த இயக்கத்தை மேம்படுத்தவும், பல்வேறு நுட்பங்கள் மற்றும் பயிற்சிகளை பயன்படுத்தி வலியை குறைக்கவும் வழிகாட்டுகிறார்கள்.

    • மம்தா பானர்ஜிக்கு இடது கால் மூட்டு மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.
    • வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

    கொல்கத்தா :

    மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 27-ந்தேதி வடக்கு வங்காள பகுதியில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோசமான வானிலை காரணமாக செவோக் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    அப்போது மம்தா பானர்ஜிக்கு இடது கால் மூட்டு மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

    தனக்கு தற்போது பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும் காயத்தில் இருந்து குணமடைந்து வருவதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தனது டுவிட்டர் தளத்தில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

    • தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பிற மருத்துவ துறையின் தலையீடு இல்லாமல் பிசியோதெரபி மருத்துவ துறையை தனிதுறையாக அறிவிக்க வேண்டும்

    கோவை:

    தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் இன்று முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஸியோதெரபி மருத்துவர் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் ராஜா செல்வகுமார் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் டாக்டர் ராஜேஷ் கண்ணா முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்த்தில் தென்காசி மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் மரு.செல்வராஜ் அவர்கள் பிசியோதெரபி மருத்துவர்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது .

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க மாநில தலைவரும் பிசியோதெரபி மருத்துவருமான டாக்டர்.ராஜா செல்வகுமார் பேசியதாவது:-

    தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் வாசுதேவ நல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு இருந்த வருகை பதிவேட்டை பார்த்துள்ளார். அப்போது அதில், சரத்குமார் என்பவர் பெயருக்கு முன்னால் "இயன்முறை மருத்துவர்" என்ற பதவி பொறுப்பை பார்த்து, காழ்ப்புணர்வு கொண்ட அவர், இவன் மருத்துவர் இல்லை என்று ஒருமையில் பேசியதுடன், "பயிற்றுநர்" என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. இவர் மீது தமிழக அரசு துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன் கைது செய்ய வேண்டும். மருத்துவ காழ்ப்புணர்ச்சியோடு இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க பிசியோதெரபி மருத்துவத்திற்கென்று அனைத்து மாவட்ட ங்களிலும் தனி மாவட்ட இணை இயக்குநர்களை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் டாக்டர்.ராஜேஸ் கண்ணா பேசுகையில், சமூக நீதி மருத்துவ துறையில் காப்பாற்ற பட வேண்டும். எனவே பிற மருத்துவ துறையின் தலையீடு இல்லாமல் பிசியோதெரபி மருத்துவ துறையை தனிதுறையாக அறிவிக்க வேண்டும். என்றனர்.

    இதில் சங்க சட்ட ஆலோசகரும், சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவருமான சாக்ரடீஸ், சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் பொதுச் செயலாளர் சு.பா. முத்து கிருஷ்ணன், மாவட்ட தலைவர் கவர்னர் பாண்டியன், மாவட்டச் செயலாளர் மூர்த்தி தர்மராஜ், சில்வா, தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க கோவை மாவட்ட தலைவர் டாக்டர்.கணபதி முருகன் மற்றும் செயலாளர் டாக்டர்.சுகன்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஒரு நபரின் உடல் வலிமையை மேம்படுத்தவும், அதிகரிக்கவும், பிசியோதெரபி உதவும். காயத்துக்கு பின் ஒருவர் சரியாக எழுந்து நடமாட பிசியோதெரபி உதவுகிறது.
    சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதே பிசியோதெரபி நிபுணரின் வேலை. இது வலி நிவாரணம் மூலமாகவும், உடற்பயிற்சி மூலமாகவும் நடக்கும். காயத்துக்கு பின் ஒருவர் சரியாக எழுந்து நடமாட பிசியோதெரபி உதவுகிறது.

    மூட்டுகளில் இருக்கும் மெல்லிய திசுக்களை அசைத்தல், உடலில் இருக்கும் நச்சை நீக்குதல், தசைகளை தளர்த்து ஓய்வெடுத்தல் என இந்த சிகிச்சை நடக்கும். ஒரு நபரின் உடல் வலிமையை மேம்படுத்தவும், அதிகரிக்கவும், பிசியோதெரபி உதவும். அதே நேரத்தில் இருக்கும் உபாதைகளையும் சரி செய்யும்.

    காயத்தின் தன்மை அல்லது உபாதையின் தன்மையை பொருத்து பிசியோதெரபி நிபுணர் பல்வேறு சிகிச்சை முறைகளைக் கையாளுவார். ஒரு அறுவை சிகிச்சை அல்லது காயத்துக்கு பின், ஒருவரின் உடல் முழுமையாக மீள பிசியோதெரபி மிக முக்கியமானது.

    சிகிச்சை காலம் முழுவதும் தவறாமல் எல்லா பயிற்சிகளையும் அக்கறையுடன் செய்வீர்களென்றால், பிசியோதெரபி உங்களை பரிபூரணமாகக் குணப்படுத்தி, ஆரோக்கியமான, சுதந்திரமான வாழ்க்கை வாழ உதவும்.

    நாள்தோறும் புதிய வியாதிகளும், பலப்பல புதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால் ‘பிசியோதெரபி’ மருத்துவத்தின் பங்கு மருத்துவத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
    ‘இயன்முறை மருத்துவம்’ என்பது மருந்துகள் இன்றி இயற்கையாக உடற்பயிற்சியின் மூலம் உடலை பக்குவப்படுத்தும் மருத்துவ முறையாகும். இது உடல் இயக்கத்தை முறைப்படுத்தும் மருத்துவத் துறையாகும்.

    ஒருவர் காயம் அல்லது நோயால் பாதிக்கப்படும்போது உடலில் உள்ள உறுப்புகள் செயலிழக்கும். அப்போது இயன்முறை மருத்துவம் தான் உடற்பயிற்சி மூலம் உடலை இயக்க நிலைக்கு கொண்டு வந்து அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க துணை செய்கிறது.

    பெரும்பாலானோர் மூட்டுவலி, கழுத்துவலி, முதுகு வலி, ஆஸ்துமா போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 75 சதவீதம் பேர் இயன்முறை மருத்துவத்தால் குணமடைந்துள்ளனர் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

    பிறக்கும் போதே சில குழந்தைகள் ஊனமாக பிறக்கின்றனர். மற்றும் கை, கால் மடிந்து அல்லது பிறந்த பிறகு கீழே விழுந்து பாதிப்படைகிறது. அப்போது அதனை மருந்தால் சரிசெய்ய இயலாது. இயன்முறை மருத்துவம் செய்யப்பட்டு அது சரி செய்யப்படுகிறது.

    விபத்தால் சிலர் கை, கால் மற்றும் எலும்பு முறிவுகளை அடைகின்றனர். அதனை மீண்டும் பழைய நிலைக்கு இயங்க வைக்க ‘பிசியோதெரபி’ முறை பயன்படுத்துகின்றனர்.

    மருந்துகள் இன்றி மருத்துவம் பயன்படுத்தும் ஒரே மருத்துவம் ‘இயன்முறை மருத்துவம்’ மட்டுமே.

    உடல் பருமனை உடற்பயிற்சி மூலமே சுலபமாக குறைக்க முடியும். அன்றாட செய்யும் உடற்பயிற்சியால் உடல் எடை மற்றும் மூட்டுவலி இருதய பிரச்சினை அனைத்தும் சரி செய்ய இயன்முறை மருத்துவம் பெரிதும் உதவுகிறது.

    நாள்தோறும் புதிய வியாதிகளும், பலப்பல புதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால் ‘பிசியோதெரபி’ மருத்துவத்தின் பங்கு மருத்துவத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
    ×