என் மலர்
நீங்கள் தேடியது "Moolaikaraipatti"
- நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்தவர் சுடலை(வயது 48). இவர் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.
- நேற்றிரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு கடை சாவியை ஒரு பையில் வைத்துக்கொண்டு சுடலை மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
நெல்லை:
நெல்லை வண்ணா ர்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்தவர் சுடலை(வயது 48). இவர் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்றிரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு கடை சாவியை ஒரு பையில் வைத்துக்கொண்டு சுடலை மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். மூலக்கரைப்பட்டியை அடுத்த அரசனார்குளம் ஆதிதிராவிடர் நலவிடுதி அருகே சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் அவரை வழிமறித்தது.
பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரது கைப்பையை திருடிக்கொண்டு தப்பி சென்றனர். இதுதொடர்பாக சுடலை மூலக்கரைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.
- நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் அய்யப்பன் கோவில் உள்ளது.
- இந்த கோவிலில் கார்த்திகை மாதம் நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடந்தது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் அய்யப்பன் கோவில் உள்ளது.
பூக்குழி இறங்கும் விழா
இந்த கோவிலில் கார்த்திகை மாதம் நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடந்தது.
இதையொட்டி அய்யப்ப சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அய்யப்ப பக்தர்களின் சிறப்பு பஜனை இடம்பெற்றது. அய்யப்ப பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர். அதன் பின் கோவில் முன்பு பிரமாண்ட பூக்குழி தயார் செய்யப் பட்டது. விஷேச அலங்கார தீபாராத னைகளுக்கு பின்னர் திரளான அய்யப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
- சேர்ந்தனார்குளத்தில் பல நூறு ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.
- மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமையில் பொது மக்கள் சுடுகாட்டில் குடியேற சென்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பருத்திப்பாடு சேர்ந்தனார்குளத்தில் பல நூறு ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு குடிமனை பட்டா இன்னும் வழங்கப்படவில்லை.
மேலும் தனிப்பட்ட நபர்கள் சிலர் சுடுகாட்டு பாதை உள்ளிட்ட பொது இடங்களை தங்களது பட்டா நிலம் என கூறி வேலி அமைத்து தடுத்துள்ள தாகவும் தெரிகிறது.
இதன் காரணமாக இறந்தவரின் உடலை வேறொரு தரப்பினர் வசிக்கும் தெரு வழியாக எடுத்துச் செல்லும் போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் இது வரையிலும் பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
சுடுகாட்டில் குடியேறும் போராட்டம்
இதனையடுத்து இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அங்குள்ள சுடுகாட்டில் குடியேறும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமையில் பொது மக்கள் சுடுகாட்டில் குடியேறி போராட்டம் நடத்துவதற்காக சென்றனர்.
அவர்களை போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து அவர்கள் தெருவிலேயே தங்களது போராட்டத்தை தொடங்கினர்.பின்னர் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் உடன்பாடு ஏற்படாததால் சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிமாணவ, மாணவி களும், பெண்களும், முதி யவர்கள் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில் நடு தெருவில் சமையல் செய்தும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையறிந்து அங்கு வந்த நாங்குநேரி தாசில்தார் இசக்கிப்பாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனால் கோரிக்கை நிறை வேறும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
- இசைக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை (29) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
- சின்னதுரை, இசையை அவதூறாக பேசி செங்கற்களால் தாக்கினார்.
களக்காடு:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பெருமாள்நகர், கீழத்தெருவை சேர்ந்தவர் இசை (வயது26). கார் டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை (29) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இசை தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சின்னதுரை, இசையை அவதூறாக பேசி செங்கற்களால் தாக்கினார். இதில் காயமடைந்த இசை நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இது தொடர்பாக சின்னதுரையை தேடி வருகின்றனர்.
- நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி யில் கார்த்திக் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.
- நேற்று அவரது வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது. அதில் எங்ககிட்ட மோதாதே, செத்துருவ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி யில் கார்த்திக் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார். இவர் அங்கு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று அவரது வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது. அதில், அரிவாள் படம் வரைந்து, எங்ககிட்ட மோதாதே, செத்துருவ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தில் அனுப்புனர் முகவரி இல்லை.
போலீசாரை மிரட்ட வேண்டும் என்பதற்காக யாரோ மர்ம நபர் மொட்டை கடிதம் அனுப்பி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்ம நபரை தேடி வருகிறார்.
- மூலக்கரைப்பட்டி அருகே உள்ள அரசனார்குளத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் என்பவருக்கும், பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லபிள்ளையார்குளத்தை சேர்ந்த ஜெயசுதா (வயது 39) என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
- ஜெயசுதாவுக்கு 15 பவுன் தங்க நகைகளும், ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் அவரது பெற்றோர் வழங்கினர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் வழங்கினர்.
களக்காடு:
நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டி அருகே உள்ள அரசனார்குளத்தை சேர்ந்தவர் லெட்சுமணன். இவருக்கும், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லபிள்ளையார்குளத்தை சேர்ந்த ஜெயசுதா(வயது 39) என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
அப்போது ஜெயசுதாவுக்கு 15 பவுன் தங்க நகைகளும், ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் அவரது பெற்றோர் வழங்கினர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் வழங்கினர்.
திருமணத்திற்கு பின் லெட்சுமணன் தொழில் செய்ய வேண்டும் என்று கூறி ஜெய சுதாவின் 10 பவுன் நகைகளை பெற்று அடமானம் வைத்துள்ளார். அதுபோல அவரது சகோதரர் அய்யப்ப னுக்கு, ஜெயசுதாவின் 5 பவுன் நகைகளை கொடுத்துள்ளார்.
இதுபற்றி ஜெயசுதா தட்டிக்கேட்டதால் அவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன் பின் லெட்சுமணன், அவரது சகோதரர்கள் ராமர், பஞ்சவர்ணம், அய்யப்பன் ஆகியோர் சேர்ந்து ரூ.1.50 லட்சம் தந்துவிடுவதாகவும், விவாகரத்து மனுவில் கையெழுத்து போடும்படியும் மிரட்டி கையெழுத்தை பெற்று நாங்குநேரி கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனிடையே விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயசுதாவிற்கு தெரியாமல் லெட்சுமணன் தெற்கு வாகைகுளத்தை சேர்ந்த தங்கசெல்வம் என்பவரை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இதனை அறிந்த ஜெயசுதா நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து லெட்சுமணன், அவரது சகோதரர்கள் ராமர், பஞ்சவர்ணம், அய்யப்பன், உறவினர் தங்க செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த அவர்கள் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- 6 மாதத்திற்கு முன்பு கார்த்திக் மது அருந்தி விட்டு போதையில் கண்ணாடியை உடைத்தார்.
- மனம் உடைந்து காணப்பட்ட கார்த்திக் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 44). இவர் டெய்லர் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி இந்திராகாந்தி(42). இவர் களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கார்த்திக்கிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து ள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு கார்த்திக் மது அருந்தி விட்டு போதையில் கண்ணாடியை உடைத்தார். இதில் அரவது கையில் நரம்பு அறுபட்டு படுகாயம் அடைந்தார். இதனால் அவரது கை செயல் இழந்தது. இதையடுத்து அவரால் பணிக்கு செல்ல முடியவில்லை. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட கார்த்திக், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மூலக்க ரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- முனைஞ்சிப்பட்டியில் உள்ள வங்கி ஒன்றில் நகை அடகு வைத்து ரூ.90 ஆயிரம் கடன் வாங்கினேன். மேலும் என்னிடம் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் என மொத்தம் ரூ.1,10,000-ஐ வீட்டு பீரோவில் வைத்து இருந்தேன்.
- தினமும் செல்வராஜ் வீட்டை பூட்டிவிட்டு சாவியை அங்குள்ள பாத்ரூமில் வைத்து செல்வது வழக்கம்.
முனைஞ்சிப்பட்டி:
நாங்குநேரியை அடுத்த மூலக்கரைப்பட்டி அருகே உள்ள மேலமுனைஞ்சிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65), விவசாயி. இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் விவசாயம் மற்றும் ஆடுகள் வளர்த்து பராமரித்து வருகிறேன். கடந்த பிப்ரவரி 4-ந்தேதி முனைஞ்சிப்பட்டியில் உள்ள வங்கி ஒன்றில் நகை அடகு வைத்து ரூ.90 ஆயிரம் கடன் வாங்கினேன். மேலும் என்னிடம் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் என மொத்தம் ரூ.1,10,000-ஐ வீட்டு பீரோவில் வைத்து இருந்தேன்.
மறுநாள் எனது வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் 23 பவுன் நகை திருட்டு போனது. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது நானும், எனது மனைவியும் ஆடு மேய்க்க சென்ற நேரத்தில், எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் வீட்டு பக்கம் வந்ததாக கூறினார்கள்.
இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த நான் மூலக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் சந்தேக நபரிடம் போலீசார் இதுவரை விசாரிக்க வில்லை.
எனது வீட்டில் இருந்து திருட்டுபோன நகை, பணம் 6 மாதங்களாகியும் இதுவரை மீட்கப்படவில்லை. எனவே அவற்றை மீட்டு தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், தினமும் செல்வராஜ் வீட்டை பூட்டிவிட்டு சாவியை அங்குள்ள பாத்ரூமில் வைத்து செல்வது வழக்கம். அதனை நன்கு அறிந்தவர்கள் ஆட்கள் இல்லா நேரத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும்.
இதனால் அந்த தெருவில் வசிக்கும் அவரது உறவினர்கள் உள்பட சுமார் 30 பேரின் கைரேகைகளை ஆய்வு செய்து வருகிறோம். சி.சி.டி.வி. மூலமும் அந்த நாளில் அந்த பகுதியில் நடமாடியவர்கள் விபரங்களையும் சேகரித்து வருகிறோம். விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்றனர்.






