என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூலக்கரைப்பட்டி அருகே டாஸ்மாக் விற்பனையாளரிடம் திருட்டு
    X

    மூலக்கரைப்பட்டி அருகே டாஸ்மாக் விற்பனையாளரிடம் திருட்டு

    • நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்தவர் சுடலை(வயது 48). இவர் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.
    • நேற்றிரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு கடை சாவியை ஒரு பையில் வைத்துக்கொண்டு சுடலை மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    நெல்லை:

    நெல்லை வண்ணா ர்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்தவர் சுடலை(வயது 48). இவர் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்றிரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு கடை சாவியை ஒரு பையில் வைத்துக்கொண்டு சுடலை மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். மூலக்கரைப்பட்டியை அடுத்த அரசனார்குளம் ஆதிதிராவிடர் நலவிடுதி அருகே சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் அவரை வழிமறித்தது.

    பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரது கைப்பையை திருடிக்கொண்டு தப்பி சென்றனர். இதுதொடர்பாக சுடலை மூலக்கரைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×