என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மூலைக்கரைப்பட்டி அருகே டிரைவர் மீது தாக்குதல் - வாலிபருக்கு வலைவீச்சு
  X

  மூலைக்கரைப்பட்டி அருகே டிரைவர் மீது தாக்குதல் - வாலிபருக்கு வலைவீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இசைக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை (29) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
  • சின்னதுரை, இசையை அவதூறாக பேசி செங்கற்களால் தாக்கினார்.

  களக்காடு:

  மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பெருமாள்நகர், கீழத்தெருவை சேர்ந்தவர் இசை (வயது26). கார் டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை (29) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இசை தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார்.

  அப்போது அங்கு வந்த சின்னதுரை, இசையை அவதூறாக பேசி செங்கற்களால் தாக்கினார். இதில் காயமடைந்த இசை நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இது தொடர்பாக சின்னதுரையை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×