search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ernakulam"

    எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் தென்காசியில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    நெல்லை:

     தென்னக ரெயில்வே சார்பில் பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

    அந்த வகையில் வருகிற 4-ந்தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 6-ந்தேதி வரை எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
     
    இந்த ரயில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மதியம் 12.35  மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்ற டையும். 

    மறு மார்க்கமாக ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் வகையில் இயக்கப்படுகிறது.

    எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு கோட்டயம், சங்கனாச்சேரி, கொல்லம், புணலூர், செங்கோட்டை, கடையநல்லூர், ராஜபாளையம், காரைக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு சென்றடைகிறது. 

    தமிழகத்தில் செங்கோட்டையை அடுத்து கடையநல்லூரில் தான் இந்த ரெயிலுக்கு நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசியில் இந்த ரெயில் நின்று செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

     மாவட்டத்தின் தலைநகரான தென்காசியில் இந்த சிறப்பு ரெயில் நிற்காமல் செல்லும் என்ற அறிவிப்பால் தென்காசி மாவட்ட ரெயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

     இதுகுறித்து பயணிகள் கூறுகையில், செங்கோட்டை-விருதுநகர் வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கை யிலும்,வருவாயிலும் முதலிடம் பிடித்தது தென்காசி ெரயில் நிலையம் ஆகும். 

    சுமார் 15 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த மாவட்டத்தில் தலைநகரில் இதுவரை எந்த ஒரு ரெயிலும் நிற்காமல் சென்றது இல்லை. ஆனால் தற்போது எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே இயக்கப்பட உள்ள வாராந்திர சிறப்பு ரெயிலுக்கு தென்காசியில் நிறுத்தம் இல்லை என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பயணிகள் தென்காசி ரெயில் நிலையத்தில் இருந்து தான் பயணம் செய்வார்கள் என்பதால் இந்த வாராந்திர சிறப்பு ரெயிலுக்கு தென்காசியில் நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    எர்ணாகுளம் காய்கறி மார்க்கெட்டில் குப்பைகளை அகற்றக்கோரி நீதிபதி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தின் மைய பகுதியில் காய்கறி மார்க்கெட் உள்ளது.

    இந்த மார்க்கெட்டில் தேங்கும் குப்பைகள் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்தது. ஒரு வாரமாகியும் இந்த குப்பைகள் அகற்றப்படவில்லை.

    இதுபற்றி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் அருகில் உள்ள பள்ளி நிர்வாகத்தினர் கொச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகும் குப்பைகள் அகற்றப்படவில்லை.

    இந்த நிலையில் எர்ணாகுளம் சட்ட உதவி மைய துணை நீதிபதி பசீர் நேற்று இக்குப்பைகளை அகற்றக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். காய்கறி மார்க்கெட் அருகே குவித்து வைக்கப்பட்ட குப்பைகளின் அருகில் அமர்ந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இது கொச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் மின்னல் வேகத்தில் மார்க்கெட்டுக்கு வந்தனர். 1 மணி நேரத்தில் குப்பைகள் அனைத்தையும் அகற்றினர்.

    நீதிபதி ஒருவர் நேரடியாக களத்தில் இறங்கி போராடியதும், இதனால் ஒரு வாரமாக தேங்கி கிடந்த குப்பை உடனடியாக அகற்றப்பட்டதும் அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

    கேரளாவில் கடந்த சில மாதங்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. சுகாதார சீர்கேடே இந்நோய்களுக்கு காரணம். எனவே சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைக்க வேண்டும். எனவே தான் குப்பைகளை அகற்ற போராட்டத்தில் ஈடுபட்டேன்.

    இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பலர் இதுபற்றி புகார் தெரிவித்தனர். அக்கம் பக்கத்தினரும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றே இப்போராட்டத்தை நடத்தினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, எர்ணாகுளம் காய்கறி மார்க்கெட்டில் தினமும் 6 முதல் 7 லோடு குப்பைகள் தேங்கும். அவற்றை உடனுக்குடன் அகற்றுவோம். கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால் குப்பைகளை அகற்ற முடியவில்லை. எனவேதான் குப்பைகள் தேங்கி விட்டது என்றனர். #Tamilnews
    தனது 2 வயதில் பார்வையை இழந்தாலும் மனஉறுதி குலையாமல் கடுமையாக போராடி ஐ.ஏ.எஸ் தேர்வில் வென்ற பிரஞ்ஜாலின் பட்டில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பயிற்சி கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே’... இந்த பாடல் வரிகளுக்கு உயிரூட்டும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது குறித்து விபரம் வருமாறு:-

    கர்நாடக மாநிலம் உல்லாஷ் நகரை சேர்ந்தவர் என்.பி. பட்டில் என்ஜினீயராக உள்ளார். இவரது மனைவி ஜோதி. இவர்களது மகள் பிரஞ்ஜாலின் பட்டில். இவர் 2 வயதாக இருந்தபோது காய்ச்சலால் 2 கண்களின் பார்வை பறிபோனது.

    இருந்தாலும் பெற்றோர் மகளுக்கு தைரியமும், ஊக்கமும் கொடுத்து வளர்த்தனர். பிரஞ்ஜாலின் பட்டில் வளர வளர சமூக சேவையில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் வந்தது. படிப்பிலும் தீராத தாகம் இருந்த அவர் தொடுதிரை உதவியுடன் நன்கு படித்து வந்தார். மும்பை கல்லூரியில் பட்டப்படிப்பை முடிதார்.

    பின்னர் டெல்லியில் உள்ள சர்வதேச கல்லூரியில் எம்.பில். மற்றும் பி.எச்.டி. டாக்டர் பட்டம் முடித்தார். கடந்த 2014-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.தேர்வு எழுதினார். 773-வது இடமே கிடைத்ததால் அவரால் கலெக்டர் ஆக முடியவில்லை. அதே நேரத்தில் ரெயில்வே துறையில் தேர்வாகி கணக்கு பிரிவில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அவரது லட்சியமான கலெக்டர் கனவு அவரை வாட்டியது.

    இதனையடுத்து அவர் 2017-ம் ஆண்டு மீண்டும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினார். இந்த முறை 124-வது இடத்தை பிடித்தார். இந்த இடம் கலெக்டர் தேர்வுக்கு போதுமானதாக இருந்தது.


    தேர்வில் வெற்றி பெற்ற அவர் நேற்று கேரள மாநிலம் எர்ணாகுளம் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி கலெக்டராக பொறுப்பேற்றார். தனக்கு ஊக்கமும், தைரியமும் கொடுத்து வளர்த்த தனது தாய் தன்னை இருக்கையில் அமர வைக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டார்.

    நெகிழ்ச்சியடைந்த அதிகாரிகள் அதற்கு அனுமதியளித்தனர். அதன்படி அவரது தாய் ஜோதி மகளை கலெக்டர் இருக்கையில் அமர வைத்தார். நேரடி கலெக்டர் தேர்வில் இந்தியாவிலேயே கண்பார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கலெக்டராக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. #Tamilnews
    ×