கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட்- எர்ணாகுளத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.வயநாடு, இடுக்கி, ஆலப்புழா, பத்தனம்திட்ட ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை.
கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட்- எர்ணாகுளத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு
Published on

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று, 5 மற்றும் 6-ம் தேதி ஆகிய 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோல், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், வயநாடு, இடுக்கி, ஆலப்புழா, பத்தனம்திட்ட ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சுள் எச்சரிக்கையும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com