என் மலர்tooltip icon

    இந்தியா

    ஓடும் ரெயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த பெண்... காப்பாற்றிய ரயில்வே ஊழியர்
    X

    ஓடும் ரெயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த பெண்... காப்பாற்றிய ரயில்வே ஊழியர்

    • ரெயில்வே ஊழியர் ராகவன் உன்னி துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றினார்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    கேரள மாநிலம் எர்ணாகுளம் வடக்கு ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த பெண்ணை, கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில்வே ஊழியர் ராகவன் உன்னி காப்பாற்றினார்.

    ரெயில் நிலையத்தில் ஓடிக்கொண்டிருந்த விரைவு ரெயிலில் இருந்து கீழே இறங்க முற்பட்டபோது இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணை, அவ்வழியே சென்ற ரெயில்வே ஊழியர் ராகவன் உன்னி துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார்.

    இச்சம்பவம் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    Next Story
    ×