search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரெயிலுக்கு தென்காசியில் நிறுத்தம் இல்லை

    எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் தென்காசியில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    நெல்லை:

     தென்னக ரெயில்வே சார்பில் பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

    அந்த வகையில் வருகிற 4-ந்தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 6-ந்தேதி வரை எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
     
    இந்த ரயில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மதியம் 12.35  மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்ற டையும். 

    மறு மார்க்கமாக ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் வகையில் இயக்கப்படுகிறது.

    எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு கோட்டயம், சங்கனாச்சேரி, கொல்லம், புணலூர், செங்கோட்டை, கடையநல்லூர், ராஜபாளையம், காரைக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு சென்றடைகிறது. 

    தமிழகத்தில் செங்கோட்டையை அடுத்து கடையநல்லூரில் தான் இந்த ரெயிலுக்கு நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசியில் இந்த ரெயில் நின்று செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

     மாவட்டத்தின் தலைநகரான தென்காசியில் இந்த சிறப்பு ரெயில் நிற்காமல் செல்லும் என்ற அறிவிப்பால் தென்காசி மாவட்ட ரெயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

     இதுகுறித்து பயணிகள் கூறுகையில், செங்கோட்டை-விருதுநகர் வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கை யிலும்,வருவாயிலும் முதலிடம் பிடித்தது தென்காசி ெரயில் நிலையம் ஆகும். 

    சுமார் 15 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த மாவட்டத்தில் தலைநகரில் இதுவரை எந்த ஒரு ரெயிலும் நிற்காமல் சென்றது இல்லை. ஆனால் தற்போது எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே இயக்கப்பட உள்ள வாராந்திர சிறப்பு ரெயிலுக்கு தென்காசியில் நிறுத்தம் இல்லை என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பயணிகள் தென்காசி ரெயில் நிலையத்தில் இருந்து தான் பயணம் செய்வார்கள் என்பதால் இந்த வாராந்திர சிறப்பு ரெயிலுக்கு தென்காசியில் நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×