search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water supply"

    • நீர்வரத்தானது தற்பொழுது ஒரு வாரத்திற்கு முன்பு 2000 கனஅடியாக குறைந்தது.
    • ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் கொட்டும் தண்ணீர் ஆனது குறைவாகவே காணப்படுகிறது.

    ஒகேனக்கல்:

    தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு மழை இல்லாததாலும் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரானது முற்றிலும் நிறுத்தப்பட்டாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக 3 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்த நீர்வரத்தானது தற்பொழுது ஒரு வாரத்திற்கு முன்பு 2000 கனஅடியாக குறைந்தது.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 1500 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்து சரிவு காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் கொட்டும் தண்ணீர் ஆனது குறைவாகவே காணப்படுகிறது.

    தொடர் விடுமுறை காரணமாக இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    சுற்றுலா பயணிகள் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் எண்ணை மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும், கடைவீதியிலும், மீன் மற்றும் இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 

    • அதிகபட்சமாக குண்டாறு அணையில் 3.5 மில்லிமீட்டர் மழை பெய்தது.
    • பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்டவற்றில் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்கின்றனர்.'

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணையின் நீர்மட்டம் அரை அடி உயர்ந்து 107.40 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 857 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 504 கனஅடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறில் 119.62 அடியும், மணிமுத்தாறில் 74.85 அடியும் நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 376 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    மாவட்டம் முழுவதும் இந்த மாதத்தில் 249 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழை அளவை விட 19.59 சதவீதம் கூடுதலாகும். இந்த ஆண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரை மாவட்டம் முழுவதும் 367.33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் பிசான பருவ நெல் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றுப்படுகையை ஒட்டி அமைந்துள்ள வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, முக்கூடல், கோபாலசமுத்திரம், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் குண்டாறு மற்றும் கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக குண்டாறு அணையில் 3.5 மில்லிமீட்டர் மழை பெய்தது. இன்று காலையில் சிவகிரி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் மழை குறைந்ததால் அருவிகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்து தண்ணீர் மிதமாக விழுகிறது. இதனால் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்டவற்றில் அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதியம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பருவமழை காரணமாக வானம் பார்த்த பூமியான பல்வேறு இடங்களில் குளிர்ந்துள்ளன. இதன்காரணமாக அப்பகுதிகளில் வெண்டை, சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.

    தற்போது புதியம்புத்தூர் அருகே குப்பனாபுரம் பகுதியில் மக்காச்சோளப்பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. இவை விவசாயிகளுக்கு அதிக பலன் தரும் வகையில் இருப்பதால் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். விரைவில் அவை அறுவடையாகும்.

    • லெனின் வீதி, சபரி நகர், புரட்சி தலைவி நகர், சாணரப்பேட்டை மற்றும் அதனைசார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
    • பொதுப்பணித்துறை பொது சுகாதாரகோட்ட செயற்பொறியாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவைதனகோடி நகர் மற்றும் சாணரப்பேட்டைமேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பராமரிப்பு பணி வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை தனகோடிநகர், தர்மாபுரி, லெனின் வீதி, சபரி நகர், புரட்சி தலைவி நகர், சாணரப்பேட்டை மற்றும் அதனைசார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    காந்தி திருநல்லூர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி காரணமாக 29-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை காந்தி திருநல்லூர், தனபாலன் நகர், கல்கி நகர், சேரன் நகர், அகத்தியர்கோட்டம், அருணா நகர், கணபதி நகர், என்.ஆர்.ராஜீவ் நகர், வள்ளலார் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    கோரிமேடு (இந்திராநகர் அரசு தொடக்கப்பள்ளி அருகில்) பூத்துறை ரோட்டில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை குருநகர், சிவாஜி நகர், பிரியதர்ஷினி நகர், இஸ்ரவேல் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது.

    இத்தகவலை பொதுப்பணித்துறை பொது சுகாதாரகோட்ட செயற்பொறியாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

    • புகார் தெரிவிக்க கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுஅறை 24 மணி நேரமும் இயங்கும்.
    • 2149 களப்பணியாளர்களுடன், மொத்தம் 542 இயந்திரங்கள் கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

    குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றுதல் தொடர்பாக பொது மக்கள் புகார் தெரிவிக்க சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள மக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 044-45674567, கட்டணமில்லா தொலைபேசி எண் 1916ல் பொது மக்கள் புகார் அளிக்கலாம் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    மேலும், குடிநீர் வழங்கல், கழிவுநீரை அகற்றுதல் தொடர்பாபன புகார் தெரிவிக்க கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுஅறை 24 மணி நேரமும் இயங்கும் எனவும் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 66 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 176 ஜெட்ராடிங் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    2149 களப்பணியாளர்களுடன், மொத்தம் 542 இயந்திரங்கள் கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    • ஆனந்தா நகர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • ராதாகிருஷ்ணன் நகர், மீனாட்சிபேட்டை, திலாசுப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி ஆனந்தா நகர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில்  பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே , காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆனந்தா நகர், கதிர்காமம், ராதாகிருஷ்ணன் நகர், மீனாட்சிபேட்டை, திலாசுப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது.

    இதே போல் கோரிமேடு அரசு மருந்தகம் உட்புறம் உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே அன்று கால ை 10 மணி முதல் மால ை 5.30 மணி வரை போலீஸ் குடியிருப்பு, சிவாஜி நகர், இந்திராநகர் விரிவு, இலுப்பை தோப்பு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
    • இந்நிலையில் கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே தண்ணீர் ஆறு போல ஓடியது.

    கடலூர்:

    கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கடலூரின் பல்வேறு பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் குண்டு உப்பலவாடியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இது அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு, அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே தண்ணீர் ஆறு போல ஓடியது. இதனைக் கண்ட போக்குவரத்து போலீசார், இது தொடர்பாக பொதுப்பணித் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், சாலையில் இருந்து தண்ணீர் வருவதை உறுதி செய்தனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள கூட்டு குடிநீர் திட்ட வால்வை மூடி தண்ணீர் வருவதை நிறுத்தினர். இதனால் கடலூரில் ஒரு சில இடங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    • வருகிற டிசம்பர் மாதத்திற்குள் சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும்.
    • சீவலப்பேரியி லிருந்து சுமார் 115 கிலோ மீட்டர் தூரம் குழாய்கள் பதிக்கப்பட்டு, தாமிரபரணி தண்ணீர் கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். ரகுராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிற வகையில் முதல்-அமைச்சர் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை நகராட்சிகளுக்கு ரூ.444 கோடிசெலவில் சீவலப்பே ரியிலிருந்து புதிய குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து பணிகள் நடைபெற்று வருகிறது. சீவலப்பேரியி லிருந்து சுமார் 115 கிலோ மீட்டர் தூரம் குழாய்கள் பதிக்கப்பட்டு, தாமிரபரணி தண்ணீர் கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இத்திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கப்படும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குழாய்கள் பதிக்கும் பணிகளின் போது உள்ள நடைமுறை சிக்கல்களை நகராட்சித்துறை, நெடுஞ்சா லைத்துறை உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறைகளின் ஒத்துழைப்போடு இணைந்து, பணியினை விரைவுபடுத்த வேண்டும், குழாய் பதிக்கும் இடங்களில் சீரானமின் விநியோகம் கிடைப்பதற்கு தேவையான மின்சாரகட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

    இந்த புதிய குடிநீர் திட்ட பணிகளை குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சா லைத்துறை, மின்சாரத்துறை, நகராட்சி உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள்ளாக அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர் நகராட்சிகளுக்கு சீரான தண்ணீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை களை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

    சேலம்:

    கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவ மழை போதுமான அளவு பெய்யவில்லை. மேலும் கர்நாடக அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை.

    இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் கடந்த 10-ந் தேதி காலை 6 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை 15 ஆயிரத்து 260 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 15 ஆயிரத்து 433 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    கடந்த 10-ந் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30.99 அடியாக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 41.1 அடியாக உயர்ந்தது. இதனால் கடந்த 5 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது குறிப்பிட தக்கது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • வில்லானேந்தல் கிராமத்திற்கு முதல்முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
    • இதனை கிராம பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும் இனிப்பு வழங்கி விழாவாக கொண்டாடினர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள எம். புதுக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட வில்லானேந்தல் கிராமத்தில், பல ஆண்டு களாக மக்கள் கண்மாய் தண்ணீரை தேக்கி வைத்து, அதனை குடிநீராகவும், மற்ற உபயோகத்திற்கும் பயன்படுத்தி வந்தனர்.தற்போது உள்ள கால கட்டத்தில், தனியாரிடம் குடிநீரை குடம் ஒன்று ரூ.7 க்கு விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில், பல்வேறு இடங்களில் போர் வெல் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோ கிக்க பல முறை முயற் சித்தும், அது உப்பு தண்ணீராகவும் குடிநீருக்கு உகந்த தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டதால், பயனளிக்காமல் போய் விட்டது.

    இது குறித்து ஊராட்சித் தலைவர் முருகன் மற்றும் கிராம பொது மக்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு குடிநீர் கேட்டு பல்வேறு மனுக்களை நேரில் சென்றும் பதிவு தபால் மூலமா கவும் கோரிக்கை மனுவை அளித்தனர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், ஊராட்சியின் உபரி நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் குண்டாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரையின் கீழ் பைப் லயன் அமைத்து வில்லானேந்தல் கிராமத்திற்கு முதல் முறையாக குடிநீர் வினி யோகம் வழங்கப்பட்டது.

    இதனை கிராம பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும் இனிப்பு வழங்கி விழாவாக கொண்டாடினர்.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
    • ஒகேனக்கல் காவிரியில் நேற்று விநாடிக்கு 500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1,500 கனஅடியாக அதிகரித்தது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நேற்று விநாடிக்கு 500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1,500 கனஅடியாக அதிகரித்தது.

    அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 199 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 142 கன அடியாக குறைந்துள்ளது,

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக இருப்பதால்நீ ர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது.

    நேற்று 74.85 அடியாக இருந்த நீர்மட்டம்இ ன்று காலை 73.90 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 36.14 டி.எம்.சியாக உள்ளது. 

    • கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பெய்யாததால் காவிரியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
    • ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டி வருகிறது.

    தருமபுரி:

    கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு 290 கிலோ மீட்டா் பயணித்து தமிழகத்தில் பிலிகுண்டுலு பகுதியில் நுழைந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆறு வழியாக மேட்டூர் அணையை சென்றடைகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து சுமார் 12-க்கும் மேற்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பயன்பாட்டுக்கும் காவிரி நீர் பயன்படுகிறது.

    ஆண்டு தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும்.

    கர்நாடக மாநிலத்தில் மழை பெய்ய தொடங்கினால் அங்குள்ள கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, ஆகிய அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை சென்றடையும்.

    இந்த ஆண்டு பருவ மழை தொடங்காத காரணத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்றைய நிலவரப்படி வினாடிக்கு 300 கன அடியாக குறைந்துள்ளது.

    நீர்வரத்து குறைந்ததன் காரணமாக பறந்து விரிந்த காவிரி ஆறு, சிறு ஓடை போல சுருங்கி தண்ணீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நின்று காட்சி அளிக்கிறது.

    தண்ணீர்வரத்து இல்லாத காரணத்தால் ஆற்றுப்பகுதி பாறைகளாக காட்சியளிக்கிறது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி முதல் 2.85 கன அடி வரை தண்ணீா் ஒகேனக்கல் பகுதியை கடந்து சென்றது.

    தற்போது தண்ணீா் வழிந்தோடிய பகுதிகள் வறண்டு பாறை முகடுகளாக காணப்படுகிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கூட்டு குடிநீர் ஏற்றும் பகுதிக்கு தண்ணீர் வராததால் மணல் மூட்டைகளை அடுக்கி சிறு ஓடைகளாக ஓடும் தண்ணீரை தேக்கி நீர் ஏற்றப்படுகிறது.

    400 கன அடியில் இருந்து 300 கன அடியாக நீர் வரத்து குறைந்துள்ளது.

    கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என அம்மாநில துணை முதலமைச்சரும், நீர்வளத் துறை அமைச்சருமான சிவகுமார் தெரிவித்து வருகிறார்.

    தற்பொழுது காவிரி ஆற்றில் குறைந்து வரும் நீரால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும்.

    உடனடியாக தமிழக, மத்திய அரசு மற்றும் கர்நாடகா அரசிடம் பேசி மத்திய அரசின் நதி நீர் ஆணையம் பிறப்பித்துள்ள ஆணையின் படி தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பெய்யாததால் காவிரியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

    இந்த ஆண்டு நீர்வரத்து இல்லாததால் ஒகேனக்கல் காவிரி ஆறு வறண்டு வருகிறது. ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டி வருகிறது.

    கடந்தாண்டு ஜூலை 15-ம் தேதி காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் முதல் 2.85 கனஅடி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
    • நேற்று 89.51 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 88.58 அடியாக சரிந்துள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 800 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலையும் அதே அளவில் நீடிக்கிறது.

    அதேசமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 121 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 117 கன அடியாக குறைந்துள்ளது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    நீர் வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 89.51 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 88.58 அடியாக சரிந்துள்ளது.

    ×