என் மலர்

  நீங்கள் தேடியது "Summer heat"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. புதுச்சேரியிலும் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது.
  தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், தர்மபுரி, கரூர், நாகை, நாமக்கல், பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக திருத்தணியில் 113.18 டிகிரி வெயில் கொளுத்தி எடுத்தது. புதுச்சேரியிலும் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. முக்கிய நகரங்களில் நேற்றைய வெயில் நிலவரம் வருமாறு:-

  சென்னை நுங்கம்பாக்கம் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

  சென்னை மீனம்பாக்கம் - 104.54 டிகிரி (40.3 செல்சியஸ்)

  கோவை - 98.6 டிகிரி (37 செல்சியஸ்)

  குன்னூர் - 79.7 டிகிரி (26.5 செல்சியஸ்),

  கடலூர் - 100.94 டிகிரி (38.3 செல்சியஸ்)

  தர்மபுரி - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

  கன்னியாகுமரி - 90.68 டிகிரி (32.6 செல்சியஸ்)

  கரூர் - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)

  கொடைக்கானல் - 73.22 டிகிரி (22.9 செல்சியஸ்)

  மதுரை - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)

  நாகை - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)

  நாமக்கல் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

  பாளையங்கோட்டை - 102.38 டிகிரி (39.1 செல்சியஸ்)

  புதுச்சேரி - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

  சேலம் - 104.54 டிகிரி (40.3 செல்சியஸ்)

  தஞ்சை - 95 டிகிரி (35 செல்சியஸ்)

  திருச்சி - 107.24 டிகிரி (41.8 செல்சியஸ்)

  திருத்தணி - 113.18 டிகிரி (45.1 செல்சியஸ்)

  தூத்துக்குடி - 91.76 டிகிரி (33.2 செல்சியஸ்)

  ஊட்டி - 53.42 டிகிரி (11.9 செல்சியஸ்)

  வால்பாறை - 81.5 டிகிரி (27.5 செல்சியஸ்)

  வேலூர் - 110.48 டிகிரி (43.6 செல்சியஸ்)

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு கத்திரி வெயில் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.
  திருச்சி:

  திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு கத்திரி வெயில் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் வெளியில் நடமாட முடியாமல் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

  இந்தநிலையில் அக்னி வெயில் அதன் உக்கிரத்தை காட்டும் அதே வேளையில் நேற்று மாலை 4 மணியளவில் திருச்சி மாநகரில் கருமேகங்கள் திரண்டு காற்று பலமாக வீசி மழை பெய்வதற்கான அறிகுறியை காட்டியது. பலத்த மழை பெய்து வெப்பத்தை குறைக்கப்போகிறது என பொதுமக்கள் நம்பினர்.

  ஆனால் சில நொடிகளில் வீசிய பலத்த காற்று நின்றதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். புழுக்கத்தால் இரவு முழுவதும் அவஸ்தை அடைந்தனர். இருப்பினும் பொன்மலை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது இந்த சாரல் மழையானது வெப்பத்தினை மேலும் அதிகப்படுத்தியது.

  இதனிடையே திருச்சி மாவட்டம் மணப்பாறையை சுற்றியுள்ள புத்தாநத்தம், பண்ணாங்கொம்பு, பொய்கைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் திடீரென நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழை ஒரு சில பகுதிகளில் அரைமணி நேரத்திற்கு மேலாகவும் மற்ற பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும் பலத்த காற்றுடன் பெய்தது. கடுமையான வெயிலால் வெப்பத்தை தாங்க முடியாமல் தவித்து வந்த மக்கள், இந்த திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.

  வெயிலின் தாக்கத்தாலும், குடிநீர் பற்றாக்குறையாலும் மழை பெய்யாதா? என ஏக்கத்தில் இருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தற்போது பெய்த மழை மகிழ்ச்சியை தந்தது. ஆனால் மணப்பாறை நகர் பகுதிகளில் இந்த மழை பெய்யாமல் ஏமாற்றத்தை அளித்தது.

  மேலும் தொடர்ந்து மழை பெய்யுமா? என திருச்சி மாவட்ட பொது மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, தர்மபுரி, கரூர், நாமக்கல், பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 11 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது.
  வேலூரில் அதிகபட்சமாக 108.32 டிகிரி கொளுத்தியது. முக்கிய நகரங்களில் நேற்றைய வெயில் நிலவரம் வருமாறு:-

  சென்னை நுங்கம்பாக்கம் - 97.16 டிகிரி (36.2 செல்சியஸ்)

  சென்னை மீனம்பாக்கம் - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)

  கோவை - 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்)

  குன்னூர் - 78.8 டிகிரி (26 செல்சியஸ்)

  கடலூர் - 99.5 டிகிரி (37.5 செல்சியஸ்)

  தர்மபுரி - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)

  கன்னியாகுமரி - 91.76 டிகிரி (33.2 செல்சியஸ்)

  கரூர் - 107.6 டிகிரி (42 செல்சியஸ்)

  கொடைக்கானல் - 70.88 டிகிரி (21.6 செல்சியஸ்)

  மதுரை - 106.52 டிகிரி (41.4 செல்சியஸ்)

  நாகை - 98.6 டிகிரி (37 செல்சியஸ்)

  நாமக்கல் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

  பாளையங்கோட்டை - 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)

  புதுச்சேரி - 97.16 டிகிரி (36.2 செல்சியஸ்)

  சேலம் - 104 டிகிரி (40 செல்சியஸ்)

  தஞ்சை - 95 டிகிரி (35 செல்சியஸ்)

  திருச்சி - 106.34 டிகிரி (41.3 செல்சியஸ்)

  திருத்தணி - 108.14 டிகிரி (42.3 செல்சியஸ்)

  தூத்துக்குடி - 92.66 டிகிரி (33.7 செல்சியஸ்)

  ஊட்டி - 77.72 டிகிரி (25.4 செல்சியஸ்)

  வால்பாறை - 84.2 டிகிரி (29 செல்சியஸ்)

  வேலூர் - 108.32 டிகிரி (42.4 செல்சியஸ்)

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை என்ன? செய்யக்கூடாதவை என்ன? என புதுவை மாவட்ட கலெக்டர் அருண் கூறியுள்ளார்.
  புதுச்சேரி:

  புதுவையில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இந்த நிலையில் புதுவை மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை என்ன? செய்யக்கூடாதவை என்ன? என புதுவை மாவட்ட கலெக்டர் அருண் கூறியுள்ளார்.

  இதுதொடர்பாக கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  புதுவையில் தற்போது நிலவிவரும் வெப்பம் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படையும் சூழல் உள்ளது. இத்தகைய வெப்ப தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் புதுவை மாவட்ட நிர்வாகம், மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்துகிறது.

  செய்யக்கூடியவைகள்:

  வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் வாயிலாக தரப்படும் உள்ளூர் வானிலை முன் அறிவிப்பின் மூலம் வெப்ப தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா என தெரிந்துகொள்ளவும்.

  தாகமாய் இருந்தாலும், இல்லாவிட்டாலும் போதிய குடிநீரை அவ்வப்போது பருகவும். எடை குறைந்த, வெளிறிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும். வெளியில் செல்லும்போது பாதுகாப்பு கண்ணாடிகள், குடை, தொப்பி, காலணிகளை பயன்படுத்தவும். வெளியிடங்களில் வேலை செய்யும்போது குடை அல்லது தொப்பி அணியவும். தலை, கழுத்து, முகம், கை, கால்களை ஈரத்துணியினால் மூடிக்கொள்ளவும். புத்துணர்ச்சி தரக்கூடிய உப்புக்கரைசல்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்ஸி, கஞ்சி, எலுமிச்சைச்சாறு, மோர் உட்கொள்ளவும்.

  வெப்ப வெடிப்பு, வெப்ப தடை பிடிப்புகள் மற்றும் வெப்ப தாக்கத்தினால் ஏற்படும் பலவீனங்கள், மயக்கம், தலைவலி, வாந்தி, வியர்வை போன்ற அறிகுறிகளை அறிந்திருக்கவும். மயக்கம் மற்றும் இதர உடல் உபாதைகள் ஏற்பட்டால் உடனே டாக்டரை அணுகவும்.

  கால்நடைகளை நிழலான பகுதிகளில் தங்க வைத்து குடிப்பதற்கு போதிய குடிநீர் வழங்கவும். வீட்டை திரைச்சீலைகள், கொட்டகைகள் பயன்படுத்தி போதிய அளவு குளிர்ந்ததாக வைத்திருக்கவும்.

  மின் விசிறிகள், ஈரத் துணிகளை பயன்படுத்தவும். அடிக்கடி குளிர்ந்த நீரால் குளிக்க வேண்டும். கடினமான வேலைகளை அந்நாளின் வெப்பம் குறைந்த காலை மற்றும் மாலை நேரத்தில் செய்ய வேண்டும். கர்ப்பிணிகள் மற்றும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளவர்களின் மேல் தனி கவனம் செலுத்துவது நல்லது.

  செய்யக்கூடாதவைகள்:

  மதியம் 12 மணி முதல் 3 மணிவரை இடைப்பட்ட நேரத்தில் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். இறுக்கமான மற்றும் கனமான ஆடைகளை அணிய வேண்டாம். நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தின் உள்ளே குழந்தைகளையோ, செல்லப்பிராணிகளையோ விட்டுச்செல்ல வேண்டாம்.

  வெயிலின் தாக்கம் அதிகமான நேரங்களில் கடினமான வேலைகளை செய்வதை தவிர்க்க வேண்டும். சமையல் வேலைகளை வெயிலின் உச்சமான நேரங்களில் செய்ய வேண்டாம். சமையலறைகள் போதிய காற்றோட்டம் உள்ளதாக அமையும் வகையில் சமையலறை கதவுகள், ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும்.

  மது, தேநீர், காப்பி, கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள் போன்ற நீர் குறைப்பிகளை தவிர்க்க வேண்டும். உலர்ந்த, கெட்டியான மற்றும் புரத சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

  மாவட்ட நிர்வாகம் இந்திய வானிலை ஆய்வுத்துறை வழங்கும் ஆலோசனைகளை தொடர்ந்து கண்காணித்து பாதகமான சூழ்நிலைக்கு ஏற்றவாறு தக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

  பொதுமக்கள் இது தொடர்பான விவரங்களை கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1070, 1077 எண்களை பயன்படுத்தலாம். தீயணைப்புத்துறை புகார்களுக்கு 101, மின்துறை புகார்களுக்கு 1912, அவசர கால ஊர்திக்கு 108 என்ற எண்களை பயன்படுத்தவும்.

  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதலே ஈரோடு மாவட்டத்தில் வெயில் தொடர்ந்து சதம் அடித்து வருகிறது. நேற்று ஈரோட்டில் 104 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி இருந்தது.
  ஈரோடு:

  அக்னி நட்சத்திரம் வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. வெயிலின் தாக்கத்தை தாக்கு பிடிக்க முடியாமல் ஈரோடு மக்கள் குடைகளை பிடித்துக் கொண்டும், இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் துப்பட்டாவால் முகத்தை மூடி கொண்டும் செல்கின்றனர்.

  அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதலே ஈரோடு மாவட்டத்தில் வெயில் தொடர்ந்து சதம் அடித்து வருகிறது. நேற்று ஈரோட்டில் 104 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி இருந்தது. மேலும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் நீர்நிலைகளை தேடி செல்கின்றனர்.

  வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறையில் சுற்றுலா செல்லும் மக்கள் சுற்றுலா செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

  வெயில் அதிகமாக இருப்பதால் இளநீர், கரும்பு சாறு, மோர் போன்ற குளிர்ச்சியான பானங்களை தேடி மக்கள் படை எடுக்க தொடங்கியுள்ளனர்.

  தொடர்ந்து வெளிநாட்டு குளிர்பானத்தை தவிர்த்து அதிக அளவில் இளநீர், கரும்பு சாறு கடைகளுக்கு மக்கள் வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  வெயில் தாக்கத்திலிருந்து விடுபட தினமும் அதிக அளவில் நீர் பருக வேண்டும் எனவும், வெயில் காலங்களில் சூடான மற்றும் காரமான உணவுகள், எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும். இது போன்ற உணவுகள் அஜீரண வயிற்று கோளாறுகளை ஏற்படுத்தும் எனவும், பருத்தி ஆடைகள் வியர்வையை உறிஞ்சும் தன்மை உள்ளதால் வெயில் காலங்களில் பருத்தி ஆடைகளை பயன்படுத்தலாம் என்றும்,

  உடல் சூட்டை தணிக்க அதிக அளவில் தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சி போன்ற பழங்கள், ஜூஸ் சாப்பிட்டால் உடல் சூட்டை தணிக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அக்னி நட்சத்திரம் தொடங்க 10 நாட்களுக்கு மேல் உள்ள நிலையில் வேலூரில் நேற்று அதிகபட்சமாக 107.6 டிகிரி வெயில் கொளுத்தியது. #SummerHeat
  வேலூர்:

  தமிழகத்தில் பருவமழை தவறியதையடுத்து கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கேற்ப கோடை தொடங்கியதும் 100 டிகிரியை தாண்டியே வெயில் கொளுத்தியது.

  கடந்த 3 நாட்களாக வெயிலின் டிகிரி 105 டிகிரியை தாண்டிய நிலையில் நேற்று 107.6 டிகிரியாக சுட்டெரித்தது. தகித்த வெயிலுடன் அனல் காற்றும் சேர்ந்து வீசியது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் வேதனைக்கு ஆளாகினர்.

  வேலூர் மட்டுமின்றி மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம் நகரங்களில் வெயிலின் உக்கிரம் அதிகரித்து சாலைகளில் மக்கள் நடமாட்டமும், வாகன நடமாட்டமும் குறைந்து மக்களின் இயல்பு வாழ்க்கையில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. குளிர்பான கடைகளிலும், இளநீர் கடைகளிலும், கரும்புச்சாறு, பழரச கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

  இந்த நிலையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்பதால் காலை 10 மணி தொடங்கி மாலை 4 மணி வரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

  அப்படி வெளியில் நடமாடினாலும் குடைகளுடன் செல்வதுடன், அடர்த்தியான வண்ணம் கொண்ட நைலான், பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழை ஆடைகளை தவிர்த்து பருத்தியாலான ஆடைகளை அணிய வேண்டும்.

  அதிகளவில் நீராகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வெப்பத்தாக்குதல் எனப்படும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பில் இருந்தும், கோடைகால நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.   #SummerHeat  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் முறைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #Summer #TuticorinCollector
  தூத்துக்குடி:

  தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  கோடை காலங்களில் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க பொது சுகாதாரத்துறையின் மூலம் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் கோடை வெயிலின் தாக்கத்தை தடுக்க, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெயிலில் வேலை செய்பவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதுடன் தலையில் துண்டு அணிய வேண்டும், தளர்வாக பருத்தி உடைகளை அணிய வேண்டும்.

  சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்தவெளியில் வேலை செய்யும்போது களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வெப்பம் குறைந்த இடங்களுக்கு செல்ல வேண்டும். தேநீர், காபி போன்ற சூடான பானங்களை கோடை காலத்தில் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.  கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க உப்பு கலந்த எலுமிச்சை சாறு அல்லது உப்பு, சர்க்கரை கலந்த கரைசல் ஆகியவற்றை குடிக்க வேண்டும். வெயில் நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்கள் அருகே குழந்தைகளையோ, செல்ல பிராணிகளையோ விட்டு செல்லக்கூடாது. கோடை வெயிலில் வெப்பம் அதிகரிப்பதால் அதிகமான வியர்வை வெளியேறுவதால் உப்புச்சத்து, நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும். எனவே தாகம் இல்லையென்றாலும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியே செல்லும்போது குடிநீர் பாட்டில் எடுத்து செல்ல வேண்டும்.

  களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுக்க வேண்டும். மயக்கம், உடல்சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகில் உள்ள நபரை உதவிக்கு அழைக்க வேண்டும் அல்லது மருத்துவ உதவியை நாட வேண்டும்.

  மேலும், கோடை வெப்பத்தால் பொது இடங்களில் எவரேனும் மயக்கம் அடைந்தால் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து காப்பாற்ற வேண்டும். மயக்கமுற்ற நபரை ஒரு பக்கமாக சாய்த்து நல்ல காற்றோட்டமான நிழல் பகுதியில் படுக்க வைக்க வேண்டும். ஆம்புலன்சுக்கு காத்திருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட நபரை சமதரையில் படுக்க வைத்து கால் மற்றும் இடுப்பு ஆகியவற்றை உயர்த்தி பிடிக்க வேண்டும். உடைகளை தளர்த்தி ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது குளிர்ந்த நீரை உடல் முழுவதும் தொடர்ந்து தெளிக்க வேண்டும்.

  எனவே தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் கோடை வெப்பத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சுகாதாரத்துறையினரின் அறிவுரைகளை பின்பற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Summer #TuticorinCollector

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் நேற்று வேலூர் உள்பட 11 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. அதிகபட்சமாக, வேலூரில் 106.5 டிகிரி கொளுத்தியது. #Summer
  வேலூர்:

  வேலூர் மாவட்டத்தில் கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் மற்ற மாவட்டங்களை விட அதிகமாக இருக்கும்.

  வழக்கமாக ஏப்ரல் மாத இறுதியில் வெயில் அளவு அதிகரித்து, மே மாத இறுதியில் உச்சத்தை தொடும். அந்த சமயத்தில் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தும். ஆனால் இந்தாண்டு கடந்த மாத இறுதியில் இருந்து தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது.

  காலை 8 மணிக்கே வெயில் சுட்டெரிக்கிறது. மதியம் 12 மணிக்கு உச்சம் அடைகிறது. கடுமையான வெயில் அனல் காற்றால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். வேலூரில் நேற்று வெயிலின் அளவு இதுவரை இல்லாத வகையில் 106.5 டிகிரி கொளுத்தியது. இதனால் வேலூரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

  பொதுமக்கள் வெயிலின் வெப்பத்தை தணிக்க குளிர்பான கடைகள், பழச்சாறு கடைகளில் தஞ்சம் அடைந்தனர்.

  பகலில் அடித்த வெயிலின் தாக்கம் இரவிலும் தெரிந்தது. மின்விசிறிகள் அனல்காற்றை கக்கியது. இதனால் குழந்தைகள் முதியவர்கள் தூங்க முடியாமல் தவித்தனர். இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

  தமிழகத்தில் நேற்று வேலூர் உள்பட 11 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. அதிகபட்சமாக, வேலூரில் 106.5 டிகிரி கொளுத்தியது.

  கரூர் பரமத்தியில் 105 டிகிரியும், மதுரை விமான நிலையம், மதுரை தெற்கு, திருச்சி, திருத்தணியில் 104 டிகிரியும், சேலம், நாமக்கலில் 103 டிகிரியும், தருமபுரி, பாளையங்கோட்டையில் 102 டிகிரியும், கோயம்புத்தூரில் 100 டிகிரியும் வாட்டியுள்ளது.

  தமிழகம், புதுச்சேரியில் இன்றும் வறண்ட வானிலை காணப்படும். சில இடங்களில் இன்று வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

  குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது என்றும் அதேநேரத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  #Summer

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அளவு பதிவாகிறது. #Summer
  மதுரை:

  தமிழகத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்கள் கோடை காலம். இந்த காலத்தில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும்.

  அதிலும் சித்திரையில் வரும் அக்னி நட்சத்திர காலம் வெயிலின் உச்சமாக இருக்கும். ஆனால் தற்போது வெயில் எப்போதும் உச்சமாகவே உள்ளது.

  புவி வெப்பமயமாதல், காற்று மாசு போன்றவற்றால பருவநிலை மாறிவிட்டது தான் காரணம். பங்குனியில் வெயிலின் தாக்கம் சாதாரணமாக இருக்கும் நிலை மாறி ஆரம்பத்திலேயே அக்னி நட்சத்திரம் போன்று வெயில் வாட்டி வதைக்கிறது. அனல் காற்றும் வீசுவதால் இரவில் கூட அதன்பிடியில் இருந்து மக்களால் விடுபட முடியவில்லை. சித்திரை தொடங்கும் முன்பே வெயில் தாக்கம் அதிகமாகி வருகிறது.

  மதுரை நகரில் கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அளவு பதிவாகிறது. வெயிலுக்கு பயந்து பொதுமக்களும் காலை நேரங்களில் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். மாலையிலும் அதன் தாக்கம் உள்ளது.

  வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள குளிர்பானம் கடைகளை நோக்கி படையெடுக்கின்றனர். #Summer
   
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் இந்த ஆண்டும் வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். #MeteorologicalCenter #Summer
  சென்னை:

  சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் நேற்று உலக வானிலை தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் சூரிய சந்திர ராவ் தலைமை தாங்கினார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் முன்னிலை வகித்தார்.  நிகழ்ச்சிக்கு பின்னர் பாலசந்திரன் நிருபர்களிடம் கூறும்போது, “இந்தியாவில் கடந்த 1980-ம் ஆண்டுக்கு பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டும் தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும். ” என்றார்.

  உலக வானிலை தினத்தை முன்னிட்டு சென்னை வானிலை ஆய்வு மையத்தில் சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியில் காற்றின் வேகத்தை அளக்கும் கருவி உள்ளிட்ட கருவிகள், கஜா புயல் குறித்த வானிலை படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  இவ்வாறு அவர் கூறினார். #MeteorologicalCenter #Summer
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம் 110 டிகிரியை கடந்து மக்களை சுட்டெரித்தது. இந்தாண்டு மழை குறுக்கிட்டு அக்னி வெயில் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்றியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
  வேலூர்:

  கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வேலூர் மாவட்டத்தில் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. மார்ச், ஏப்ரலில் 106 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. திருத்தணியில் அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயில் பயத்தால் மதிய நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர தயங்கினர்.

  வாகனங்களில் செல்வோர் சிரமப்பட்டனர். பகல், இரவு நேரங்களில் அனல் காற்று வீசியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மின்விசிறிகளும் அனல் காற்றை கக்கியது. வீடுகளில் தூங்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

  இந்த நிலையில் கோடையின் உக்கிரமான அக்னி வெயில் இம்மாதம் 4-ந் தேதி தொடங்கியது. வெயில் தாண்டவமாட போகிறது என்று வேலூர் மக்கள் அஞ்சினர். ஆனால் மாறாக அக்னி தொடங்கும் முந்தைய நாள் மாலை மழை கொட்டி தீர்த்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.

  அக்னி தொடங்கிய 4-ந் தேதி 95.7 டிகிரி வெயிலும், 5-ந் தேதி 99.7 டிகிரியும் வெயில் அடித்தது. பிறகு வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் மாறி மாறி 100 டிகிரி, 99 டிகிரி என வாட்டியது. 14-ந் தேதி 103 டிகிரிக்கு அக்னி வெயில் கொளுத்தியது.

  பிறகு நடுநடுவே மழை பெய்தது. மாவட்டம் முழு வதும் ஈரப்பதத்துடன் மாலை நேரங்களில் குளிர் காற்றும் வீசியது. கடந்த 19-ந் தேதி திடீரென 104.5 டிகிரிக்கு வெயில் உச்சத்தை எட்டி வாட்டியது. பிறகு, 24-ந் தேதி 98.2 டிகிரி, 25-ந் தேதி 97.9 டிகிரி வெப்பநிலைக்கு குறைந்தது.

  இப்படிப்பட்ட நிலையை உருவாக்கிய அக்னி வெயில் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று 102.6 டிகிரி வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திர காலங்களில் இடைப்பட்ட மழையால், வெயிலின் தாக்கம் குறைந்தே காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

  கடந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம் 110 டிகிரியை கடந்து மக்களை சுட்டெரித்தது. இந்தாண்டு மழை குறுக்கிட்டு அக்னி வெயில் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்றியது. இதனால் அக்னியில் இருந்து தப்பித்தோம் என பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

  இந்த நிலையில் அக்னி நிறைவு பெற்ற பிறகு, இன்று வெப்பநிலை அதிகரித்துள்ளது. காலையில் இருந்தே வெயில் உக்ரம் அதிகளவில் உள்ளது. மதியம் 12 மணி அளவில் 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. இதனால் வேலூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

  ×