என் மலர்
நீங்கள் தேடியது "Elon Musk"
- நிலவைவிட செவ்வாய் நமக்கு தூரமாக உள்ளது.
- நம்முடைய இலக்கை தற்போது நிலவுக்கு வைப்போம்.
உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழில் அதிபரும் ஆனவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதை இலக்காக கொண்டிருந்தார். இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பும் வகையிலான ஸ்டார்ஷிப் ரக விண்கலன்களை தவிர்த்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிற்கு பால்கன், ராப்டர் உள்ளிட்ட ராக்கெட்களை தயாரித்து கொடுத்து வருகிறது.
இந்தாண்டு இறுதிக்குள் செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலன் ஒன்றை அனுப்பி இதற்கான முயற்சியில் இறங்க எலான் மஸ்க் திட்டமிட்டிருந்தார். இந்தநிலையில் அந்த திட்டத்தை தற்போது தள்ளிப்போடுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"நிலவைவிட செவ்வாய் நமக்கு தூரமாக உள்ளது. எனவே நம்முடைய இலக்கை தற்போது நிலவுக்கு வைப்போம். இந்தாண்டு இறுதிக்குள் அங்கு விண்கலன் அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் ஒரு தன்னிறைவு நகரத்தை உருவாக்கி மக்களை குடியேற செய்வோம்" என்றார். இந்தாண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
- எக்ஸ்ஏஐ (xAI) எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை 2023 ஆம் ஆண்டு எலான் மஸ்க் தொடங்கினார்.
- இரு நிறுவனங்களும் இணையும் போது 1.25 ட்ரில்லியன் டாலர் மதிப்பை அடையும்.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட AI செயலிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சாட்ஜிபிடி உலகளவில் வரவேற்பை பெற்ற நிலையில், ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவரும், உலகின் நம்பர் ஒன் கோடீசுவரருமான எலான் மஸ்க், எக்ஸ்ஏஐ (xAI) எனும் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை 2023 ஆம் ஆண்டு தொடங்கினார்.
இந்நிலையில், எலான் மஸ்கின் விண்வெளி ஆய்வு நிறுவனமான SpaceX, அவரது AI நிறுவனமான xAI நிறுவனத்தை வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
SpaceX மற்றும் xAI ஆகிய இரு நிறுவனங்களும் இணையும் போது 1.25 ட்ரில்லியன் டாலர் மதிப்பில் உலகிலேயே அதிக மதிப்பு மிக்க தனியார் நிறுவனம் என்ற பெயரை SpaceX பெறுகிறது. இதன்மூலம் X வலைதளம், Grok Al, Grokpedia என அனைத்தும் SpaceX நிறுவனத்தின்கீழ் செல்கிறது.
- 72 மணிநேரத்திற்குள் அனைத்து ஆபாசப் படங்களையும் நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்தது.
- எக்ஸ் தளத்தில் இருந்து 600 கணக்குகளும், சுமார் 3,500 சட்டவிரோத உள்ளடக்கங்களும் நீக்கப்பட்டுள்ளன.
எலான் மஸ்க்குக்கு சொந்தமான சமூக ஊடகமாக எக்ஸ் தளத்தின் ஏஐ சாட்போட் ஆன Grok மூலம் சமூக விரோதிகளால் பெண்களின் ஆபாசப் படங்கள் உருவாக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, ஜனவரி 2-ம் தேதி மத்திய அமைச்சகம் எக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
72 மணிநேரத்திற்குள் அனைத்து ஆபாசப் படங்களையும் நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்தது. சரியான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் எக்ஸ் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டதோடு, இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதி அளித்துள்ளது.
மேலும், அரசின் உத்தரவைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் இருந்து 600 கணக்குகளும், சுமார் 3,500 சட்டவிரோத உள்ளடக்கங்களும் நீக்கப்பட்டுள்ளன.
- 2025-ல் டெஸ்லா 1.64 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
- இது 2024 வருடத்தை விட 9 சதவீதம் குறைவு.
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. டெஸ்லா நிறுவனம்தான் உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகனம் விற்பனை நிறுவனம் என்ற பெயரை கொண்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடமாக டெஸ்லாவின் விற்பனை வெகுவாக குறைந்த நிலையில், இந்த பெயரை சீன நிறுவனத்திடம் இழந்துள்ளது.
2025-ல் டெஸ்லா 1.64 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2024 வருடத்தை விட 9 சதவீதம் குறைவு.

சீனாவின் BYD நிறுவனம் 2025-ல் 2.26 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
விற்பனை குறைவு, பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும், பங்குச் சந்தையில் டெஸ்லாவின் மதிப்பு ஏறக்குறைய 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
- இம்மாதத்தின் 2-வது வாரத்தில் அவரது சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலரை எட்டியது.
- ஒரே வாரத்தில் சொத்தின் மதிப்பு 749 பில்லியன் டாலர்களாக உயர்ந்து எலான் மஸ்க் புதிய சாதனையை படைத்து உள்ளார்.
உலக பணக்காரர்களில் முதலிடத்தில் ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா, ஸ்டார்லிங்க் ஆகிய நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் உள்ளார். இதற்கிடையே சமீபத்தில் அவரது நிகர சொத்து மதிப்பு 600 பில்லியன் அமெரிக்க டாலர்களை(இந்திய மதிப்பில் ரூ.54.46 லட்சம்) எட்டியது. இதன்மூலம் 600 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்தை எட்டிய முதல் நபர் என்ற சாதனையை எலான் மஸ்க் படைத்தார்.
இந்த நிலையில் எலான் மஸ்க்கின் சொத்து 700 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் மீதான வழக்கில் எலான் மஸ்க்குக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததையடுத்து அவரது நிகர சொத்து மதிப்பு 749 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ.67 லட்சம் கோடி) உயர்ந்தது.
கடந்த அக்டோபர் மாதத்தில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலர் மதிப்பாக இருந்தது.
இதற்கிடையே, 800 பில்லியன் டாலர் மதிப்பீட்டு சந்தையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பட்டியலிடப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், இம்மாதத்தின் 2-வது வாரத்தில் அவரது சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலரை எட்டியது. தற்போது ஒரே வாரத்தில் சொத்தின் மதிப்பு 749 பில்லியன் டாலர்களாக உயர்ந்து எலான் மஸ்க் புதிய சாதனையை படைத்து உள்ளார்.
- எலான் மஸ்கின் சொத்துமதிப்பு அண்மையில் கிடுகிடுவென உயர தொடங்கியது.
- 600 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துமதிப்பை தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை மஸ்க் படைத்தார்.
உலக பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் இன்டெஸ்க் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் தனுக்கு 1 ட்ரில்லியன் டாலர் (ரூ.88 லட்சம் கோடி) ஊதியம் வழங்க வேண்டும் என டெஸ்லா நிறுவனத்திடம் அண்மையில் கோரிக்கை வைத்தார். இதற்கு டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதை பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து எலான் மஸ்கின் சொத்துமதிப்பு கிடுகிடுவென உயர தொடங்கியது. இதன்மூலம் 600 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துமதிப்பை தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை மஸ்க் படைத்தார்.
தற்போது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 648 பில்லியன் அமெரிக்க டாலரை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
- 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை மீறியது எக்ஸ்.
- முன்னதாக டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை மீறியதற்காக ஆப்பிள் மற்றும் மெட்டா உள்ளிட்டவற்றிற்கு அபராதம் விதித்தது.
27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டதின் கடுமையான உள்ளடக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதற்காக எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைத்தளத்திற்கு 140 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த விதிமீறலால் ஐரோப்பிய எக்ஸ் பயனர்கள் பல்வேறு மோசடிகளுக்கு ஆளாக்கக்கூடும் என்றும் எக்ஸ் தங்களின் விளம்பர தரவுத்தளத்திற்கான விதிமுறைகளுக்கு இணங்கத் தவறிவிட்டது என்றும் ஐரோப்பியஒன்றியம் குற்றம்சாட்டி இருந்தது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், இறையாண்மை தனிப்பட்ட நாடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும், அப்போதுதான் அரசாங்கங்கள் தங்கள் மக்களின் நலன்களை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை மீறியதற்காக ஆப்பிள் மற்றும் மெட்டா உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மொத்தம் 797 மில்லியன் டாலர் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஐரோப்பிய ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
- தேவையான தரவுகளை தர மறுப்பது உள்ளிட்ட காரணங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
ஐரோப்பிய ஒழுங்கு முறை ஆணையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய சட்டவிதிமுறைகளை அறிமுகம் செய்தது. அதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சட்டவிதிகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டு இருந்தது.
அப்போதிருந்தே உலகின் முன்னணி தொழில் அதிபரான எலான் மஸ்கின், எக்ஸ் வலைத்தளம் அந்த புதிய விதிகளுக்கு இணங்கவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக ஐரோப்பிய ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில் விதிகளுக்கு இணங்க மறுத்த எக்ஸ் வலைத்தளம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த நிறுவனத்துக்கு 120 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,259 கோடி) அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் ஐரோப்பிய ஆணையம் அறிவித்து உள்ளது. சில இடங்களில் பாதுகாப்பு குறைபாடான ஏமாற்றும் வடிவமைப்புகள் இருப்பதாகவும், ஆய்வாளர்களுக்குத் தேவையான தரவுகளை தர மறுப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
- அணு ஆயுதங்கள், வலிமை வாய்ந்த நாடுகளுக்கு இடையே போரையோ அல்லது போரின் அச்சுறுத்தலையோ தடுக்கின்றன.
- எனவே நிர்வாகத்தில் அவற்றின் செயல்திறன் குறைந்துள்ளது
உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க், உலகம் விரைவில் ஒரு உலகளாவிய மோதலில் சிக்கும் என்று எச்சரித்துள்ளார்.
உலகளாவிய நிர்வாகத்தின் மீது அணுசக்தி தடுப்பின் விளைவு குறித்து 'X' தளத்தில் ஒரு பயனர் விவாதித்ததற்குப் பதிலளிக்கும் விதமாகவே மஸ்க் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஹண்டர் ஆஷ் என்ற எக்ஸ் பயனர், அணு ஆயுதங்கள், வலிமை வாய்ந்த நாடுகளுக்கு இடையே போரையோ அல்லது போரின் அச்சுறுத்தலையோ தடுக்கின்றன. போர் அச்சுறுத்தல் இல்லாததால் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் செயலற்றுப் போயுள்ளன, எனவே நிர்வாகத்தில் அவற்றின் செயல்திறன் குறைந்துள்ளது என்று பதிவிட்டிருந்தார்.
எக்ஸ் சமூக ஊடகத்தின் உரிமையாளராகவும் உள்ள எலான் மஸ்க் இதற்கு பதிலளிக்கையில், "போர் நிச்சயம் நடக்கும். எப்போது என்று நீங்கள் கேட்கலாம். என் கணிப்புப்படி 2030-க்குள் நடக்கும். போர் தவிர்க்க முடியாதது. இன்னும் ஐந்து ஆண்டுகளில், அல்லது அதிகபட்சமாக 10 ஆண்டுகளில் அது நடக்கும்" என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், தனது இந்தக் கருத்து குறித்து எலான் மஸ்க் குறிப்பிட்டோ அல்லது விரிவாகவோ எதுவும் கூறவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கீழ் அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) தலைவராக மஸ்க் பெற்ற அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, அவரது இந்தக் கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
- திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெற்ற நன்மைகள் ஏராளம்.
- என் வாழ்க்கத்துணை ஷிவோன் ஜிலிஸ் கூட பாதி இந்தியர் தான்
Zerodha இணை நிறுவனர் நிகில் காமத்தின் பாட்காஸ்டில் உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் தனது மனைவி, குடும்பம் குறித்து விரிவாக பேசியுள்ளார்.
அந்த பாட்காஸ்டில் பேசிய எலான் மஸ்க், "திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெற்ற நன்மைகள் ஏராளம். இவ்வளவு ஏன் என் வாழ்க்கத்துணை ஷிவோன் ஜிலிஸ் கூட பாதி இந்தியர் தான். அவர் கனடாவில் வளர்ந்தாலும், குழந்தையிலேயே தத்து கொடுக்கப்பட்டவர். இதுகுறித்த முழு தகவல் தெரியவில்லை.
அதேபோல நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்கர் சுப்ரமணியன் சந்திரசேகரின் நினைவாக என் மகனின் பெயரில் ஒரு பகுதிக்கு 'சேகர்' என சூட்டியுள்ளேன்" என்று தெரிவித்தார்.
- X இன் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டிலும் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டதாக பலர் புகாரளித்தனர்.
- செயலிழப்பு குறித்து X நிறுவனத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.
முன்னணி சமூக ஊடகமான எக்ஸ் எக்ஸ் தளம் உலகம் முழுவதும் திடீரென முடங்கியது. இன்று (நவம்பர் 18) செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 5 மணியளவில், எக்ஸ் தளத்தை அணுகுவதில் பயனர்கள் சிரமங்களைச் சந்தித்தனர்.
X இன் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டிலும் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டதாக பலர் புகாரளித்தனர். இருப்பினும், செயலிழப்பு குறித்து X நிறுவனத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. இந்நிலையில், மீண்டும் எக்ஸ் வலைத்தளம் செயல்பட தொடங்கியதால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
X இதுபோன்ற செயலிழப்புகளை சந்திப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, இந்த தளம் பல முறை முடங்கி மீண்டுள்ளது. கடந்த 2022 இல் இந்த ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி அதற்கு உலக பணக்காரர் எலான் மஸ்க் எக்ஸ் என பெயர் மாற்றியது குறிப்பிடத்தக்கது.
- உலகிலேயே முதல் ட்ரில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரர் ஆகிறார் எலான் மஸ்க்.
- பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக பெறுவார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் தனுக்கு 1 ட்ரில்லியன் டாலர் (ரூ.88 லட்சம் கோடி) ஊதியம் வழங்க வேண்டும் என டெஸ்லா நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்த கோரிக்கை நிறைவேறினால், உலகிலேயே முதல் ட்ரில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரர் ஆகிறார்.
இந்த நிலையில், எலான் மஸ்க் சுமார் 1 ட்ரில்லியன் டாலர் (ரூ.88 லட்சம் கோடி) தொகையை, ஊதியமாக வழங்க டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளவனர்.
இதை பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எலான் மஸ்க் உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, எலான் மஸ்க்கின் அரசியல் கருத்துகள் டெஸ்லா கார்களின் விற்பனை சறுக்களை சந்தித்துள்ளது. ஆனாலும், டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு மிக அதிகமாகவே இருக்கிறது. இந்த சூழலில், எலான் மஸ்க் கூடுதல் சம்பளம் கேட்டிருப்பது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.






