search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "20 assembly byelection"

    அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் 20 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஆலோசிக்கப்படுகிறது. #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

    கட்சியின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.


    20 தொகுதி இடைத்தேர்தலுக்காக நியமிக்கப்பட்டிருந்த பொறுப்பாளர்களும் இதில் கலந்து கொள்கின்றனர்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்பட 20 தொகுதிகளுக்கும் பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதால் அதை எதிர்கொள்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இடைத்தேர்தல் நடைபெற்றால் தொகுதி வாரியாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.

    ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் பட்டியலை சரி பார்த்து வாக்குச்சாவடி முகவர்களையும் அ.தி.மு.க. தயார் நிலையில் வைத்திருப்பதால் தேர்தல் தேதியை எப்போது அறிவித்தாலும் அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து இதில் பேச உள்ளனர்.

    இது தவிர கட்சியின் பொதுக்குழுவை எப்போது கூட்டலாம் என்பது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். #ADMK
    கஜா புயல் குறித்து முன் எச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு மிக சிறப்பாக செயலாற்றி உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். #TNGovt #GajaCyclone #Krishnasamy
    தூத்துக்குடி:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:‍-

    தேவந்திரகுல வேளாள‌ர்களை பட்டியலில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்ப்பதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம். பட்டியல் இனத்தில் 7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என மாற்றம் செய்யவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தாலுகா அலுவலகங்களில் மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகின்ற‌ன.

    20 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை தீர்மானிக்கும் கட்சியாக புதிய தமிழகம் உள்ளது. 8 தொகுதிகளில் எங்கள் கட்சி வெற்றிபெறும். தேர்தலில் இணைந்தோ அல்லது தனித்தோ தேர்தலை சந்திக்க தயார் நிலையில் புதிய தமிழகம் கட்சி உள்ளது.

    கஜா புயல் குறித்து முன் எச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு மிக சிறப்பாக செயலாற்றி உள்ளது. அதற்கு பாராட்டுக்கள். புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகளை அரசு இன்னும் தீவிர‌மாக செயல்படுத்தவேண்டும்.

    தமிழகத்தில் அநாகரீக‌மான அரசியல் நடைபெறுகிறது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உதவி செய்யுங்கள். அதை வைத்து அரசியல் செய்யாதீர்கள். நிவாரண உதவிகள் வழங்குவதிலும் அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால் சிலர் தூண்டுதலின்பேரில் நல உதவிகள் வழங்கப்படுவது தடுக்கப்படுகிறது.


    சில கட்சிகள் மக்களை தூண்டி விடுகின்றன. டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வரப்போகும் சட்டமன்ற தேர்தல் குறித்து அரசியல் சின்னங்களை பொது, அரசு இடங்களிலும் வரைவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNGovt #GajaCyclone #Krishnasamy
    இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. டெபாசிட் இழப்பது உறுதி என்று கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி தெரிவித்தார். #Pugazhendhi #TTVDhinakaran #ADMK
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை ரெட் அலர்ட் காரணம் கூறி தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்தது. தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் 20 தொகுதிகளும் காலியாக உள்ளன.

    அ.ம.மு.க. சார்பில் அத்தொகுதிகளில் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். இதனையும் இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோர் காரணம் தேடி தேர்தலை நிறுத்த முயன்றால் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியது வரும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மை பெற 8 தொகுதிகளில் வென்றாலே போதும் என பேசுகின்றனர்.


    தமிழகத்தில் 234 தொகுகளிலும் தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெற முடியாது. உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் என எந்த தேர்தலையும் சந்திக்க அ.தி.மு.க. பயந்து வருகிறது.

    கர்நாடக இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவு வரும் மக்களவை தேர்தல்களிலும் எதிரொலிக்கும். உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆதரவு குறைந்துள்ளது.

    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இடங்களை ரஜினி மற்றும் கமல்ஹாசனால் ஒரு போதும் பிடிக்க முடியாது. சர்கார் படத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ இலவச விளம்பரம் தேடித்தந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Pugazhendhi #TTVDhinakaran #ADMK
    ×