என் மலர்
நீங்கள் தேடியது "puthiya tamilagam katchi"
- கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் வெளியே வரவேண்டும்.
- சம்பவம் நடந்து 7 நாட்கள் ஆகியும் இன்னும் அவர் வெளியில் வராமல் இருப்பது அரசியல் தலைவருக்கு நல்லது அல்ல.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று சில பேர் கூறிக் கொண்டிருக்கிறார்கள், இது நடந்தது எப்படி என்பதை கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, அவர் மீது ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டக் கூடாது.
இந்த சம்பவத்தை வைத்து விஜய்யை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு வருகிறார்கள். அவரை மொத்தமாக காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே காவல்துறை விஜய்யின் மாநாடுகளை பார்த்திருக்கிறது. கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமின்றி அனைவரும் அவரைப் பார்ப்பதற்கு வருவார்கள். அப்படி இருக்கும்போது அவரது பிரசாரத்துக்காக ஒதுக்கப்பட்ட இடம் சரியான தேர்வு இல்லை. இதனை காவல்துறை அவரிடம் அறிவுறுத்தி இருக்க வேண்டும்.
பெரிய வாகனமாக இருந்தபோதிலும் குறுகிய பாதையில் குவிந்திருந்த மக்கள் இடையே நகர்ந்து சென்று கொடுக்கப்பட்ட இடத்தில் தான் நீங்கள் பேச வேண்டும் என்று காவல்துறை சொல்லி வற்புறுத்தி உள்ளே அனுப்பி இருக்கிறார்கள்.
சம்பவம் நடந்த உடனே விஜய்யை காவல்துறையினரே உடனடியாக வெளியேறுங்கள் என்று கூறினார்களா? அல்லது அவரே வெளியேறினாரா என்பது போன்ற விவரங்களும் இந்த விஷயத்தில் வெளிவர வேண்டும்.
இது பற்றி வெளிப்படையாக விசாரணை நடத்த வேண்டும். கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் வெளியே வரவேண்டும். சம்பவம் நடந்து 7 நாட்கள் ஆகியும் இன்னும் அவர் வெளியில் வராமல் இருப்பது அரசியல் தலைவருக்கு நல்லது அல்ல.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவர் அரசியலுக்கு வந்து உள்ளார். எனவே அவரை முடித்து கட்டிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் செயல்படுவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
தேனியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் இன பிரிவில் இருந்து விலக்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இணைக்க வேண்டும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு, சலுகை தேவை இல்லை, எங்களுக்கான அடையாளமும் உரிமையும் வேண்டும். தமிழகத்தில் கஜா புயலால் 10 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில் திருவாரூர் தொகுதிக்கு பிப்ரவரி 7-ந் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. திருவாரூர் தொகுதி உள்பட 20 தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் நடத்த கூடாது. அவ்வாறு நடத்தினால் முறைகேடு நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #Krishnasamy #ThiruvarurByElection #GajaCyclone
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேவந்திரகுல வேளாளர்களை பட்டியலில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்ப்பதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம். பட்டியல் இனத்தில் 7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என மாற்றம் செய்யவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தாலுகா அலுவலகங்களில் மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
20 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை தீர்மானிக்கும் கட்சியாக புதிய தமிழகம் உள்ளது. 8 தொகுதிகளில் எங்கள் கட்சி வெற்றிபெறும். தேர்தலில் இணைந்தோ அல்லது தனித்தோ தேர்தலை சந்திக்க தயார் நிலையில் புதிய தமிழகம் கட்சி உள்ளது.
கஜா புயல் குறித்து முன் எச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு மிக சிறப்பாக செயலாற்றி உள்ளது. அதற்கு பாராட்டுக்கள். புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகளை அரசு இன்னும் தீவிரமாக செயல்படுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #TNGovt #GajaCyclone #Krishnasamy
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் புதிய தமிழகம் கட்சி திண்டுக்கல், தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் சரவணன், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் அய்யர்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சவுந்திரராஜன் வரவேற்றார்.
அதன்பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் பதிலும் வருமாறு:-
கேள்வி:-தமிழக அமைச்சர்கள் சிலர் மேடை பேச்சில் சர்ச்சை ஏற்படுகிறதே?
பதில்:- அமைச்சர்களை குற்றம்சாட்ட முடியாது. ஒருவர் மட்டுமே பேசி வந்த கட்சி என்பதால் மேடையில் பேச்சு சில தடுமாற்றம் வருகிறது.
கேள்வி:- நடிகர் கருணாஸ் கைது பற்றி?
பதில்:- ஒரு சட்டமன்ற உறுப்பினர் மேடையில் அப்படி பேச கூடாது. முதல் அமைச்சரைப் பற்றியும் பேசுவது தமிழக அரசை பற்றி பேசுவதற்கு சமம், ஆனால் நாகரீகமாக பேச வேண்டும். கைது நடவடிக்கை சரியானது தான்.
கேள்வி:-தமிழகத்தில் நர்சிங் படிப்புக்கு தகுதி திறன் தேவையா?
பதில்:-நீட் தேர்வை வரவேற்கிறேன். பொறியியல் படிப்பு, டாக்டர் படிப்பு உட்பட அனைத்து படிப்புகளுக்கும் தகுதி திறன் மாணவர்களுக்கு அவசியம், அப்படி தகுதி திறன் வளர்த்து கொள்ள வேண்டும். செவிலியர்களுக்கு தகுதி திறன் முக்கியமானது. இப்படிப்பட்ட கல்லூரி இல்லை, நீட் தேர்வுக்கான அடிப்படை கல்வி கொடுக்க வேண்டும்.
கேள்வி:-பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்த நடவடிக்கை?
பதில்:- மத்திய மாநில அரசு தான் கட்டுப்படுத்த வேண்டும். இந்திய பிரதமர் நேரில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Krishnasamy #Karunas
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கரூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தேவேந்திர குல வேளாளர்கள் 6 பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். எனவே தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க அரசாணை வெளியிட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
மேலும் எஸ்.சி. பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை இதர பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 6-ந்தேதி திருச்சி உழவர் சந்தையில் மாநாடு நடத்தப்படுகிறது. தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரை அறிவிக்கும் முழு அதிகாரம் தமிழக அரசின் கையில் உள்ளது.

எச்.ராஜா விவகாரமானது உடனடியாக கைது செய்வதும், பின்னர் கைது செய்வதும் வழக்கின் தன்மையை பொறுத்து உள்ளது. கருத்துரிமைக்கும் எல்லை, வரம்பு, நாகரீகம் உள்ளது. முதல்வர் -காவல் துறை பற்றி நடிகர் கருணாஸ் பேசியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். எம்.எல்.ஏ. பதவியை பறிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. எனவே கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை பறித்து கடுமையான சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #PuthiyaTamilagam #Krishnasamy #Karunas






