என் மலர்

  நீங்கள் தேடியது "உலக கோப்பை கிரிக்கெட் 2019"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி 105 ரன்களில் சுருட்டியது.
  நாட்டிங்காம்:

  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. கேப்டன் ஹோல்டரின் இந்த முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துகளை எதிர்கொள்ள பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறினர்.

  துவக்க வீரர் இமாம் உல் ஹக் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், பகார் ஜமான்-பாபர் ஆசம் இருவரும் சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்த முயற்சி செய்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த ஜோடியை ரஸல் பிரித்தார். பகார் ஜமான் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அபாபர் ஆசமும் 22 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன்பிறகு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.


  ஹாரிஸ் சோகைல் (8), சர்பிராஸ் அகமது (8), இமாத் வாசிம் (1), சதாப் கான் (0), ஹசன் அலி (1) என அடுத்தடுத்து அவுட் ஆகினர். சரிவில் இருந்து மீட்டெடுக்க கடுமையாகப் போராடிய முகமது ஹபீஸ் 16 ரன்களும், வகாப் ரியாஸ் 18 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால், 21.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி, 105 ரன்களில் சுருண்டது.

  வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் தாமஸ் 4 விக்கெட்டுகளும், ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், ரஸல் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

  இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  2019 இந்திய பொது தேர்தலில் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தி சுமார் எட்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தகவல் பரவி வருகிறது.  இந்தியாவில் நடந்து முடிந்த 2019 பொது தேர்தலில் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தி 8,54,297 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

  இதே தகவலை ஃபேஸ்புக்கில் பலர் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். ரமேஷ் ஷர்மா சங்கேனர் என்ற பெயர் கொண்ட நபர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ராகுல் காந்தி வயநாட்டில் 8,54,297 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றும், இதன் மூலம் 2019 பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக ராகுல் காந்தி இருக்கிறார் எனவும் பதிவிட்டுள்ளார்.  ஐ.டி. & சோஷியல் மீடியா செல் காங்கிரஸ் எனும் ஃபேஸ்புக் பக்கம் இதே பதிவினை பகிர்ந்து இருக்கிறது. எனினும், இது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் கிடையாது.

  உண்மையில் ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாட்டில் அவர் மொத்தம் 7,06,367 வாக்குகளையே பெற்றார். வயநாட்டில் இரண்டாவது இடம் பிடித்த வேட்பாளர் மொத்தம் 2,74,597 வாக்குகளை பெற்றிருக்கிறார். இதன்மூலம் ராகுல் காந்தி 4,37,770 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.  இதுதவிர 2019 பொது தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராகுல் காந்தி கிடையாது. 2019 பொது தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றவர்கள் பட்டியலின் முதல் மூன்று இடங்களில் பா.ஜ.க. கட்சியின் வேட்பாளர்களே இருக்கின்றனர்.   இந்திய தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தின் படி பா.ஜ.க.-வின் சி.ஆர். பாட்டீல் சுமார் 6.89 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இவரை தொடர்ந்து ஹரியானாவின் கர்னல் தொகுதியில் போட்டியிட்ட சஞ்சய் பாட்டியா 6.56 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஹரியானாவின் ஃபாரிதாபாத் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணன் பால் 6.38 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

  ராகுல் காந்தி சுமார் எட்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக ஃபேஸ்புக்கில் பரவும் தகவல்கள் உண்மையில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரசார் பாரதி மற்றும் கூகுள் இணைந்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை யூடியூபில் நேரலை செய்ய இருக்கிறது.  பிரசார் பாரதி மற்றும் கூகுள் இணைந்து 2019 பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை யூடியூப் தளத்தில் நேரலை செய்ய இருக்கின்றன. நேரலையில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் நேரலை செய்யப்படுகின்றன.

  கூகுள் மற்றும் பிரசார் பாரதி ஜனநாயகத்தின் மிகப்பெரும் திருவிழாவினை மே 23 ஆம் தேதி கொண்டாட இருக்கின்றன. கொண்டாட்டத்தின் அங்கமாக 2019 பொது தேர்தல் முடிவுகளை யூடியூபில் நேரலை செய்ய இருப்பதாக பிரசார் பாரதி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  இந்தியா முழுக்க யூடியூப் தளத்தை எங்கிருந்து இயக்கினாலும் வலைதள பக்கத்தின் முகப்பு பகுதியில் டி.டி. நியூஸ் வழங்கும் தேர்தல் முடிவுகள் இடம்பெறும். தேர்தல் முடிவுகள் யூடியூப் தளம் மற்றும் மொபைல் செயலி என இரண்டிலும் நேரலை செய்யப்படும் என பிரசார் பாரதியின் சஷி சேகர் வெம்பதி தெரிவித்தார்.   கூகுள், செயலி மற்றும் வலைதளத்தில் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

  யூடியூப் தளத்தில் முகப்பு பகுதியில் தோன்றும் இணைய ஆப்ஷனை க்ளிக் செய்ததும், டி.டி. நியூஸ் யூடியூப் சேனல் திறக்கும். இதுதவிர டி.டி. சேவை கிடைக்கும் 14 இதர மொழிகளில் நேரலையை பார்க்க முடியும். 

  இவ்வாறு செய்யும் போது வாக்குப்பதிவு எண்ணிக்கை சார்ந்த விவரங்களை வெவ்வேறு மொழிகளில் டிஜிட்டல் முறையில் வழங்க முடியும். இத்துடன் விவரங்கள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாக இருக்கும். மேலும் கூகுள் மற்றும் பிரசார் பாரதி இணைந்து செயல்பட இருப்பது இதுவே முதல் முறை ஆகும் என சஷி சேகர் வெம்பதி தெரிவித்தார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிரையம்ப் இந்தியா நிறுவனத்தின் புதிய 2019 ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.  இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மோட்டார்சைக்கிள் பிரிவில் சாகசப் பிரியர்களுக்கான பைக் மாடல்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இளைஞர்களை வெகுவாகக் கவர்வதற்காக முன்னணி நிறுவனங்கள் இத்தகைய சாகச பைக்குகளை அதிக அளவில் அறிமுகம் செய்கின்றன. 

  அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரீமியம் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டிரையம்ப் புதிய மாடல் ஸ்கிராம்ப்ளர் 1200 எக்ஸ்.சி. மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் மே மாதம் 23-ந் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. 

  சர்வதேச அளவில் எக்ஸ்.சி. மற்றும் எக்ஸ்.இ. என இரண்டு மாடல்களில் இது கிடைக்கிறது. இதில் எக்ஸ்.சி. மாடல் மட்டும் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த சாகச பைக் மாடலில் டபுள் கிரேடில் சேசிஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.  முதல் முறையாக இதன் முன்சக்கரம் 21 அங்குல அளவிலும், பின் சக்கரம் 17 அங்குல அளவில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. வயர் ஸ்போக் சக்கரங்களைக் கொண்ட இந்த மோட்டார்சைக்கிளில் டியூப்லெஸ் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சாகசப் பயணத்துக்கேற்ற வகையில் பைரேலி ஸ்கார்பியன் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

  இவை நெடுந்தூர வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் டயர்களாகும். இதில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஷாக் அப்சார்பர்கள் உள்ளன. இதில் பிரெம்போ எம்.50 நான்கு பிஸ்டன் காலிபர் டிஸ்க் பிரேக் முன் சக்கரத்திலும், டியூயல் பிஸ்டன் பிரெம்போ டிஸ்க் பிரேக் பின் சக்கரத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் உள்ள என்ஜின் ஏற்கனவே தர்க்ஸ்டன் மாடலில் பயன்படுத்தப்பட்டதாகும்.  இது 90 ஹெச்.பி. திறனை 7,400 ஆர்.பி.எம். வேகத்திலும், 110 என்.எம். டார்க் செயல்திறனை 3,950 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. இதில் ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச், டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதி, ஏ.பி.எஸ். (ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்) போன்றவை உள்ளன. 

  இந்த மோட்டார்சைக்கிளில் ஐந்து வகையான டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. சாதாரண சாலை, மழை நேர சாலை, கரடு முரடான சாலை, ஸ்போர்ட் மற்றும் ஒருவர் மட்டும் பயணிப்பது என ஐந்து வகையான ஓட்டும் நிலைகள் உள்ளன. 

  இதில் டி.எஃப்.டி. டிஸ்பிளே உள்ளது. நேவிகேஷன் வசதி, புளூடூத் இணைப்பு, டயர் காற்றழுத்தத்தை உணர்த்துவது, யு.எஸ்.பி. போர்ட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்தியாவில் இதன் விலை ரூ.15 லட்சத்துக்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் காயம் காரணமாக எஞ்சிய போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில் தற்போது உடல் தகுதி பெற்று, உலக கோப்பையில் பங்கேற்க உள்ளார்.
  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ், கடந்த 5ம் தேதி பஞ்சாப்புக்கு எதிரான  ஆட்டத்தில் பந்தை தடுக்க பாய்ந்து விழுந்த போது (14-வது ஓவர்) இடது தோள்பட்டையில் காயம் அடைந்தார். வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக வெளியேறினார்.

  எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் (அதாவது பிளே-ஆப் சுற்றில்) விளையாட வாய்ப்பில்லை என்றே தோன்றுவதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார். அதேபோல் அந்த தொடரின் கடைசி ஆட்டங்களில் விளையாடவில்லை.  இதையடுத்து உலக கோப்பைக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ் இடம் பெற்றிருந்தார். காயம் ஏற்பட்டதையடுத்து, அவரது உடல்நலம் குணமடைவதை பொருத்தே கேதருக்கு பதிலாக, யாரை தேர்வு செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

  கேதரின் உடல் நலனை கவனித்து வந்த இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பர்ஹர்ட், அவர் குணமடைய பயிற்சி அளித்து வந்தார். உடல்நிலை தேறி வந்த நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு உடல் தகுதி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் கேதர் குணமடைந்தார் என தெரிய வந்துள்ளது.

  இந்நிலையில் 22ம் தேதி இங்கிலாந்து செல்லும் இந்திய அணியினருடன் கேதரும் செல்ல உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிடும் என தெரிகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அன்பால் நெகிழ வைத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வாட்சன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன்னில் தோல்வியடைந்தது. சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி வரை முயற்சித்த வாட்சன் ரன் அவுட் என்ற முறையில் வெளியேறினார்.

  இந்நிலையில் ஐபிஎல் இறுதி போட்டி முடிந்த பின், வாட்சன் பற்றிய ஒரு புகைப்படம் சமூக வளைதளங்களில் பரவியது. அந்த புகைப்படத்தில் வாட்சன் ரத்த காயங்களுடன் ஆடியது தெரிய வந்தது. இதனை அனைவரும் முதலில் பொய்யான செய்தி என கிண்டல் செய்தனர். அதன் பிறகு போட்டியின் ஹைலைட்சை பார்த்து அனைத்து ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.  இதனையடுத்து ரத்தம் சொட்ட சொட்ட அணியின் வெற்றிக்காக விளையாடிய வாட்சனுக்கு சில தினங்களாக ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக வாட்சன் வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளார்.

  அந்த வீடியோவில் வாட்சன் கூறியதாவது:-

  கடந்த 2 நாட்களாக ஆதரவு தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மும்பை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கடைசி வரை முயன்று 1 ரன்னில்தான் தோல்வியடைந்தோம். ஆனாலும் மிகவும் சிறப்பான ஆட்டமாகும்.

  அடுத்த வருடம் இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். உங்கள் ஆதரவுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் விசில் போடு.

  இவ்வாறு வீடியோவில் கூறியிருந்தார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்ற விவகாரம் தொடர்பாக எந்த கருத்தும் கூறாமல் இருந்த கேப்டன் விராட் கோலி தனது மவுனத்தை கலைத்து உள்ளார்.
  புதுடெல்லி:

  12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரையில் நடக்கிறது.

  இந்த போட்டிக்காக 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் விக்கெட் கீப்பர் டோனி தொடர்பாக கடும் விமர்சனம் எழுந்தது. அதிரடி ஆட்டக்காரர் ரிசப் பந்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது தவறு என்று முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.  அனுபவத்தின் அடிப்படையிலேயே தினேஷ் கார்த்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் விளக்கம் அளித்து இருந்தார்.

  இந்த விவகாரம் தொடர்பாக எந்த கருத்தும் கூறாமல் இருந்த கேப்டன் விராட் கோலி தனது மவுனத்தை கலைத்து உள்ளார். உலக கோப்பை போட்டியில் ரி‌ஷப் பந்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்? என்பதற்கு அவர் விளக்கம் அளித்து உள்ளார்.

  தினேஷ்கார்த்திக் உலக கோப்பைக்கான அணியில் தேர்வு செய்ததற்கு அவரது அனுபவமே முக்கிய காரணம். நெருக்கடியான நேரத்திலும், இக்கட்டான சூழ்நிலையிலும் அமைதியாக இருந்து நிதானமாக ‘பேட்டிங்’ செய்யக்கூடிய திறமை கொண்டவர். இந்த ஒரு வி‌ஷயத்தை கிரிக்கெட் வாரியத்தில் உள்ள அனைவரும் தேர்வு குழுவினரும் ஒப்புக் கொண்டனர். இதனால் தினேஷ் கார்த்திக்குக்கு இயல்பாகவே வாய்ப்பு வழங்கப்பட்டது.  தினேஷ் கார்த்திக்கு அனுபவம் இருக்கிறது. டோனிக்கு ஒருவேளை காயம் ஏற்பட்டு அவர் ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் தினேஷ் கார்த்திக்கால் கீப்பிங் பணியை கவனிக்க முடியும்.

  மேலும் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யக்கூடிய சிறப்பான திறமையை பெற்றவர். இந்த அடிப்படையில் தான் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  33 வயதான சென்னையை சேர்ந்த தினேஷ் கார்த்திக் டோனி வருவதற்கு ஒரு ஆண்டு முன்பே சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார்.

  2004-ல் அறிமுகமான அவர் 2007 உலககோப்பை அணியில் இடம் பெற்றார். ஆனால் ஒரு ஆட்டத்தில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது 2-வது முறையாக உலககோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய அணியின் 4-வது வீரர் வரிசைக்கு இவர் தான் பொருத்தமானவராக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பிர் கூறியுள்ளார்.
  புதுடெல்லி:

  இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பிர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  இந்த உலக கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்று கூறுவது கடினம். ஏனென்றால் போட்டி முறை சுவாரசியமாக இருக்கிறது. அனைத்து அணிகளும் ஒன்றோடு ஒன்று மோதுகிறது. இதுதான் உண்மையான சாம்பியனை நிர்ணயம் செய்யும்.

  தொடக்கத்தில் சிறப்பாக ஆடாவிட்டால் அதில் இருந்து மீண்டு முன்னேறி வருவது சவாலானது. இந்திய அணியை பொறுத்தவரை அரை இறுதிக்கு தகுதிபெறும்.

  கேப்டன் விராட்கோலி, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, வேகப்பந்து வீரர் பும்ரா ஆகியோர் உலக கோப்பையில் முக்கிய பங்கு வகிப்பார்கள். பும்ரா எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்.

  4-வது வீரர் வரிசைக்கு லோகேஷ் ராகுல் தான் பொறுத்தமானவர். ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் தினேஷ் கார்த்திக் சிறந்தவர். ஆனாலும் அவர் 6 அல்லது 7-வது வரிசைக்குத்தான் தகுதியானவர்.

  லோகேஷ் ராகுல்

  பும்ரா, முகமது சமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருடன் மேலும் பக்கபலமாக இன்னொரு வேகப்பந்து வீரர் தேவை என்றே கருதுகிறேன்.

  ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகியோர் பந்து வீசுவார்கள் என்றாலும் என்னால் சமாதானம் அடைய முடியவில்லை.

  இவ்வாறு காம்பிர் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.பி.எல். போட்டியில் கோலியின் கேப்டன் ஷிப்பை இந்திய அணியுடன் ஒப்பிட கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
  கொல்கத்தா:

  12-வது ஐ.பி.எல். போட்டி தொடரில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 ஆட்டத்தில் 5 வெற்றி, 8 தோல்வி பெற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. 11 புள்ளிகளுடன் அந்த அணி கடைசி இடத்தை பிடித்தது.

  ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு முன்பு விராட் கோலியின் கேப்டன் ஷிப்பை முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் விமர்சனம் செய்திருந்தார்.

  ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத விராட்கோலி, கேப்டனாக நீடிப்பதற்கு அவர் அணி நிர்வாகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூறினார்.

  இதற்கிடையே இந்த முறையும் பெங்களூர் அணி சாதிக்க தவறியது. தொடக்கத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது.

  ஆனால் ஐ.பி.எல்.லில் விராட்கோலியின் கேப்டன் ஷிப் உலக கோப்பை போட்டியில் எதிரொலிக்கும் என்று கருத்து நிலவுகிறது.

  இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் கோலியின் கேப்டன் ஷிப்பை இந்திய அணியுடன் ஒப்பிட கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

  விராட்கோலியின் ஐ.பி.எல். போட்டி கேப்டன் ஷிப்பை இந்திய அணி விளையாடும் போட்டிகளுடன் ஒப்பிடக்கூடாது. இந்திய அணிக்காக கோலியின் கேப்டன்ஷிப் மிக நன்றாக உள்ளது.

  ரோகித்சர்மா துணை கேப்டனாக உள்ளார். அணியில் டோனி இருக்கிறார். ஆகையால் அவர் நல்ல ஆதரவு பெற்று இருக்கிறார். உலக கோப்பை போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முக்கிய பங்களிப்பு அளிப்பார். அவர் அற்புதமான பார்மில் இருக்கிறார். அவர் இந்திய அணிக்கான வாய்ப்பில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்.

  உலக கோப்பை அரை இறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெறும். இங்கிலாந்தில் நடக்கும் உலக போட்டியில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன்பு சாம்பியன்ஸ் டிராபியை வென்றனர். 2009-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்றனர்.

  இந்திய அணி வலுவானதாக இருக்கிறது. உலக கோப்பை போட்டிகளில் விளையாடும் போது இந்தியா அணி எப்போதுமே வாய்ப்பில் இருக்கும். கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்திய அணி உள்ளதால் நெருக்கடி இருக்கும். ஆனால் அதுவே இந்திய வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேறு ஒருவரின் ஓட்டை நான் போடவில்லை, எனது வாக்கைத்தான் பதிவு செய்தேன். எனவே இதை கள்ள ஓட்டு என்று சொல்வது தவறு என்று நேற்று சிவகார்த்திகேயன் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
  நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்டு பள்ளிக்கு வந்தார். ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லாததால் திரும்பிச் சென்றார். சில மணிநேரம் கழித்து மீண்டும் ஓட்டுபோட வந்த சிவகார்த்திகேயனை வாக்களிக்க ஓட்டுச்சாவடி ஊழியர்கள் அனுமதித்தனர்.

  வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் சிவகார்த்திகேயன் ஓட்டு போட்டது சர்ச்சையை கிளப்பியது. அவர் பதிவு செய்தது கள்ள ஓட்டு என்றும் விமர்சனங்கள் கிளம்பின. இதற்கு பதில் அளித்து சென்னையில் நேற்று சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி வருமாறு:-

  நாடாளுமன்ற தேர்தலில் நான் வாக்களித்ததை சர்ச்சையாக்கி உள்ளனர். எனது ஓட்டைத்தான் நான் பதிவு செய்தேன். அதற்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. நான் இந்த நாட்டின் குடிமகன். எனவே எனக்கு வாக்களிக்க உரிமை உள்ளது. தேர்தல் கமிஷனே அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.  ஒரு மாதத்திற்கு முன்பு எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தது. இப்போது பட்டியலில் இல்லை என்றால் அது என்னுடைய தவறு இல்லை. நான் வேறு ஒருவர் பெயரில் ஓட்டு போடவில்லை. எனது வாக்கைத்தான் பதிவு செய்தேன். இதை கள்ள ஓட்டு என்று சொல்வது தவறு.

  எல்லோரும் ஓட்டு போட்ட மாதிரி தான் எனது வாக்கை பதிவு செய்தேன். பட்டியலில் பெயர் இல்லாதது எனது தவறு அல்ல. வாக்களிக்க அனுமதித்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று தான் தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார். என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றோ, விசாரணைக்கு அழைக்கப்படுவேன் என்றோ அவர் சொல்லவில்லை.

  இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print