என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டென்னிஸ்"

    • உலக டென்னிஸ் லீக்கின் முதல் 3 சீசன் யுஏஇ-யில் நடைபெற்றது.
    • தற்போது பெங்களூருவில் டிசம்பர் 17 முதல் 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    உலக டென்னிஸ் லீக்கின் முதல் மூன்று சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது. 4ஆவது சீசன் வருகிற டிசம்பர் 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பெங்களூரு எஸ்.எம். கிருஷ்ணா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் நான்கு அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியிலும் நான்கு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். வெளிநாட்டு மற்றும் இந்திய வீரர்கள் என மொத்தம் 16 பேர் இந்த லீக்கில் விளையாடுகின்றனர்.

    கேம் சேஞ்சர்ஸ் பால்கான்ஸ் அணியில் டேனில் மெத்வதேவ், ரோகன் போபண்ணா, மக்டா லினேட் மக்றும் சஹஜா யமலபள்ளி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    வி.பி. ரியாலிட்டி ஹாக்ஸ் அணியில் யுகி பாம்ரி, மாயா ரேவதி, எலினா ஸ்விடோலினா, டெனிஸ் ஷபோவலோவ் ஆகியோர் இடம பிடித்துள்ளனர்.

    ஆசிஸ் மாவெரிக்ஸ் கைட்ஸ் அணியில் நிக் கர்கியோஸ், தக்ஷினேஷ்வர் சுரேஷ், மார்தா கோஸ்ட்யுக், அங்கிதா ரெய்னா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    ஏஓஎஸ் ஈகிள்ஸ் அணியில் கெயில் மோன்பில்ஸ், சுமித் நகல், பவுலா படோசா, ஸ்ரீவள்ளி பாமிதிபாட்டி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.
    • இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் லெர்னெர் தியான் உடன் மோதினார்.

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் லெர்னெர் தியான் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய சின்னர் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2 ஆவது முறையாக சீனா ஓபன் கோப்பையை வென்றார்.

    • சின்சினாட்டி ஓபன் அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.
    • இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், நம்பர் 1 வீரரான சின்னரை எதிர்கொண்டார்.

    இறுதிப்போட்டியின் முதல் செட்டில் அல்காரஸ் 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சின்னர் போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து அல்காரஸ் சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.

    • இந்த படத்தில் அக்‌ஷய்குமாருடன் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • பல்வேறு பட்டங்களை வென்றுள்ள சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து மணந்தார்.

    கபில்தேவ், சச்சின் தெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, மேரிகோம், பி.வி.சிந்து, சாய்னா, மிதாலி ராஜ் போன்ற இந்திய விளையாட்டு வீரர்-வீராங்கனைகளின் வாழ்க்கை திரைப்படமாகி இருக்கிறது.

    அந்தவகையில் பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கையும் படமாகிறது. கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த முயற்சிகள் தற்போது மீண்டும் தீவிரமாகி இருக்கிறது.

    அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தீபிகா படுகோனே, பரினிதி சோப்ரா ஆகியோரை சானியா மிர்சா பரிந்துரைத்திருந்தார். தனது வாழ்க்கை வரலாறு படமாவது குறித்து சானியா மிர்சா மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், இந்த படத்தில் அக்ஷய்குமாருடன் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    டென்னிஸ் விளையாட்டில் இந்தியா சார்பில் பல்வேறு பட்டங்களை வென்றுள்ள சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து மணந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். 2023-ம் ஆண்டில் டென்னிசில் இருந்து அவர் ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீரர் பப்ளிக் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    சுவிஸ்:

    சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக், சக நாட்டு வீரரான அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பப்ளிக் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற உள்ள காலிறுதியில் பப்ளிக் அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ கோம்சேனாவை சந்திக்க உள்ளார்.

    • ஜானிக் சின்னர் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடினர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

    தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்டு சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் அடுத்த 3 செட்களை 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    இதனையடுத்து விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்களுக்கான விருந்து நிகழ்வில் நடனமாடிய ஜன்னிக் சின்னர் மற்றும் இகா ஸ்வியாடெக் இணைந்து நடனமாடினர். இது தொடர்பான புகைப்படங்களை விம்பிள்டன் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

    • அல்காரஸ் 6-2, 6-3, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • மற்றொரு காலிறுதி சுற்றில் கரன் கச்சனாவை வீழ்த்தி டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் அல்காரஸ், இங்கிலாந்தின் கேமரூன் நோரி உடன் காலிறுதி சுற்றில் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-3, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி சுற்றில் ரஷியாவின் கரன் கச்சனாவை வீழ்த்தி அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • உலக டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.
    • WTA 250 டென்னிஸ் தொடர் போட்டிகள் நடைபெற உள்ளன.

    250 சர்வதேச புள்ளிகளை கொண்ட WTA மகளிர் டென்னிஸ் தொடர் வரும் அக்டோபரில் சென்னையில் 2 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என உலக டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.

    அதன்படி நடப்பாண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி WTA 250 மகளிர் டென்னிஸ் தொடர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னையில் WTA 250 டென்னிஸ் போட்டிகள் நடைபெற்ற நிலையில் அதன் பின்னர் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில்WTA 250 டென்னிஸ் தொடர் போட்டிகள் மீண்டும் நடைபெற உள்ளன.

    • ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது.
    • தகுதிச் சுற்றில் கிரீஸ் வீராங்கனை தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    பெண்கள் மட்டும் பங்கேற்கும் ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, சுவிட்சர்லாந்தின் ரெபேகா மசரோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரெபேகா மசரோவா 7-6 (7-1), 7-5 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள மரியா சக்காரி அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது.
    • 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் சினெர்-அர்ஜென்டினாவின் மரியானோ நவோன் மோதினர்.

    களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் சினெர்-அர்ஜென்டினாவின் மரியானோ நவோன் ஆகியோர் மோதினர்.

    இதில் நம்பர் ஒன் வீரரான சினெர் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் முனார் (ஸ்பெயின்), அலெக்ஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    • கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபனில் 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
    • விம்பிள்டனில் 7 முறை, அமெரிக்க ஓபனில் 4 முறை, பிரெஞ்சு ஓபனில் 3 முறை சாம்பியன் பட்டம் பெற்றார்.

    பெல்கிரேட்:

    செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2003-ம் ஆண்டு 15 வயதில் தொழில்முறை வீரராக மாறியதிலிருந்து டென்னிசில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபனில் 10 முறையும், விம்பிள்டன் தொடரில் 7 முறையும், அமெரிக்க ஓபனில் 4 முறையும், பிரெஞ்சு ஓபனில் 3 முறையும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

    ஜோகோவிச் கடந்த ஆண்டு பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். அதன்பின் கடந்த ஆண்டு முதல் தான் பங்கேற்ற போட்டிகளில் தொடர் தோல்விகளால் தடுமாறு வருகிறார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    மாண்டோ-கார்லோ மாஸ்டர்ஸ் தொடரில் அரையிறுதியில் தோல்வி

    இத்தாலி ஓபன் தொடரின் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி

    ஜெனீவா ஓபன் தொடரின் அரையிறுதியில் தோல்வி

    பிரெஞ்சு ஓபன் காலிறுதியில் காயம் காரணமாக பாதியில் விலகல்

    விம்பிள்டன் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வி

    அமெரிக்க ஓபனில் 3வது சுற்றில் போராடி தோல்வி

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டியில் தோல்வி

    பிரிஸ்பேன் ஓபன் தொடரின் காலிறுதியில் தோல்வி

    ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் காயம் காரணமாக பாதியில் இருந்து விலகல்.

    கத்தார் ஓபனில் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

    சமீபத்தில் நடைபெற்று வரும் இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    இப்படி, கடந்த ஆண்டில் நடைபெற்ற முன்னணி தொடர்களில் தோல்வியைச் சந்தித்து வரும் ஜோகோவிச் விரைவில் பார்முக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளியில் தென்னிந்திய அளவிலான பள்ளியில் டென்னிஸ் போட்டி தொடங்கியது.
    • 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்தனர்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், ஆலக்குடி- வல்லம் சாலையில் செயல்பட்டு வரும் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளியில் தென்னிந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையிலான டென்னிஸ் போட்டி தொடங்கியது.

    இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 1000 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

    தொடக்க விழாவிற்கு ரம்யா சத்தியநாதன் கல்வி குழும தலைவர் பொறியாளர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். ரம்யா சத்தியநாதன் கல்வி குழும செயலாளர் ஜெனட் ரம்யா முன்னிலை வகித்தார்.

    தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் லோகநாதன், தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்தனர்.

    ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ஜோன் ஃபெர்னாண்டஸ், துணை முதல்வர் அம்பேத்கர் போட்டியை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.

    பள்ளி டென்னிஸ் பயிற்சியாளர் சிலம்பரசன் மற்றும் குழுவினர் விளையாட்டு போட்டி பணிகளை செய்து வருகின்றனர்.

    ×