என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமல் ஹாசன்"

    • சிவகார்த்திகேயனுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • சிவகார்த்திகேயன் நடிக்கும் "சேயோன்" படத்தை கமல் தயாரிக்கிறார்.

    கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் "சேயோன்" படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. "சேயோன்" திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இந்த நிலையில், சேயோன் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சேயோன் திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "என் அன்புத் தம்பி சிவகார்த்திகேயன் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் திறமையும் நேர்மையும் உழைப்பும் இன்னும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • சேயோன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
    • சேயோன் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

    கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் "சேயோன்" படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. "சேயோன்" திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இந்த நிலையில், சேயோன் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சேயோன் திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை ஒட்டி வெளியாகி இருக்கும் புதிய வீடியோ படம் கிராம பின்னணியில் நடைபெறும் கதையம்சம் கொண்டிருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இருக்கிறது. ப்ரோமோ வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

    • சிவகார்த்திகேயனின் 26வது படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு.
    • சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதன்படி இந்தப் படத்திற்கு "சேயோன்" என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் "சேயோன்" படத்தின் கொண்டாட்டம் நாளை (பிப். 17) காலை 10 மணிக்கு தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    சேயோன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் கையில் அரிவாளுடன் மயில்களுக்கு மத்தியில் உட்கார்ந்து இருக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

    • சிவகார்த்திகேயனின் 26வது படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு.
    • சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (பிப். 16) மாலை வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு தொடர்பான புதிய வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    வீடியோவில் கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 5.02 மணிக்கு வெளயாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.


    • கமல் ஹாசன் பேச்சு குறித்த வீடியோ ஒன்றை என்னைக்காவது போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
    • கமல் பேச்சு ரைட்டு என்று அவர்கள் சொல்கிறார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு அந்த பேச்சு புரியல.

    மாநிலங்களவையில் கமல் ஹாசன் பேசியதற்கு திமுக தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் கமல் ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்தது குறித்து கேள்விக்கு கஸ்தூரி அளித்த பதில் பின்வருமாறு:-

    கமல் ஹாசன் பேச்சு குறித்த வீடியோ ஒன்றை என்னைக்காவது போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

    கமல் பேச்சு ரைட்டு என்று அவர்கள் சொல்கிறார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு அந்த பேச்சு புரியல. புரிஞ்சிருந்தால் வரவேற்று சரி என சொல்லமாட்டாங்க. அவர்களுக்கு பெரியாரையும் தெரியல. கமலையும் தெரியல. என்ன பேசினார் என்றும் தெரியல. குருட்டுப்போக்குல எதுக்கும் இருக்கட்டும் என சொம்பு மட்டும் தூக்கி முட்டு கொடுத்துட்டு இருக்காங்க. அதுதான் உண்மை.

    தெலுங்கில் பிச்சை எடுத்த தியாகராஜர் எனச் சொல்லி தெலுங்கு பாசையையும், தெலுங்கு மொழியை அவமானப்படுத்திதான் பேச்சை ஆரம்பித்தார் கமல்.

    தெலுங்கு மக்களை பேசியதாக பொய்யா கஸ்தூரி மேல இந்த அரசுக்கு வழக்குப் போடத் தெரியுது. தியாகராஜர் தெலுங்கில் பிச்சை எடுத்தார் என்ற கமலை பாராட்ட தெரியுது.

    இவ்வாறு கஸ்தூரி தெரிவித்தார்.

    முன்னதாக,

    மாநிலங்களவை எம்.பி.யான கமல் ஹாசன், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தனது முதல் உரையை கடந்த 4-ந்தேதி தொடங்கினார். தமிழில் உரையைத் தொடங்கிய கமல்ஹாசன், "நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றம் பெற்றது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்லுகிறீர்கள். தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதா? ஒரு தர்க்கத்திய அறிவுரை தந்தாய். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது.

    தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். தங்கச்சி, ஓட்டையும், நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர்" என்று தெரிவித்தார்.

    கடந்த ஆண்டு தேசிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெரியார் பேசியதை குறிப்பிட்டு, "தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதை தவிர உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை. இதற்காக செலவிட்ட காலத்தை வேறு துறையில் செலவிட்டிருந்தால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும்" என்று தெரிவித்தார். இதற்கு அப்போது பெரும் கண்டனங்கள் எழுந்தது. இதனை தான் தங்கச்சி என நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு கமல்ஹாசன் பேசியதாக கூறப்படுகிறது.

    • இதற்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.
    • நிறுவனங்களுடன் இணைந்து அரசு விரிவான ஆய்வுகளை நடத்தியுள்ளது.

    கமல் ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் கமல் ஹாசன் அக்கூட்டணியால் மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது.

    இந்நிலையில் கமல் ஹாசன் எம்.பியாக தான் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய முதல் கேள்வி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    பெட்ரோலுடன் வழக்கமான 10 சதவீதத்திற்கு பதிலாக 20 சதவீதம் எத்தனால் கலக்கும் மத்திய அரசின் E20 திட்டம் குறித்து கமல் ஹாசன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதற்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.  

    கமல் ஹாசனின் கேள்விகள்:

    1)E20 எரிபொருளால் வாகனத்தின் மைலேஜ் மற்றும் எஞ்சின் பாகங்கள் பாதிக்கப்படுமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளதா?

    2) பழைய வாகனங்களுக்கு ஏற்ற E10 பெட்ரோல் நாடு முழுவதும் கிடைப்பது நிறுத்தப்பட்டது ஏன்? அதனை மீண்டும் கொண்டுவரும் திட்டம் உள்ளதா?

    3) E20 பயன்பாட்டால் எஞ்சின் சேதமடைந்தால் அதற்கான உத்தரவாதம் அல்லது காப்பீடு குறித்து வழிகாட்டுதல்கள் உள்ளனவா?

    நிதின் கட்கரி எழுத்துபூர்வமாக அளித்த பதில்:

    நிறுவனங்களுடன் இணைந்து அரசு விரிவான ஆய்வுகளை நடத்தியுள்ளது. E20 எரிபொருள் குறித்து நடத்தப்பட்ட கள சோதனைகளில் வாகனங்களின் செயல்பாட்டில் எந்தப் பாதிப்பும் கண்டறியப்படவில்லை.

    பழைய வாகனங்களில் கூட, E20 எரிபொருளைப் பயன்படுத்துவதால் எஞ்சின் தேய்மானமோ அல்லது செயல்திறன் குறைவோ ஏற்படவில்லை என்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வாகனத்தின் மைலேஜ் என்பது எரிபொருளை மட்டும் சார்ந்தது அல்ல. முறையான பராமரிப்பு, டயர் காற்றழுத்தம் மற்றும் ஏசி பயன்பாடு போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தே அமைகிறது.

    எத்தனால் கலப்பு அதிகரிப்பது நாட்டின் இறக்குமதிச் செலவைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் எம்.பி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
    • ஏவிஎம் சரவணன் 1958ஆம் ஆண்டு முதல் தலைமையேற்று பல வெற்றித் தமிழ் படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நேற்று காலை வயது மூப்பின் காரணமாக பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

    ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் எம்.பி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஏவிஎம் என்ற தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு மரம் நான் என்று கமல் பேசியிருந்தார்.

    இந்நிலையில் ஏவிஎம் சரவணன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் கூறி உள்ளார்.

    ஏ.வி. மெய்யப்பன் தொடங்கிய பழம்பெரும் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தை அவரது மகனான ஏவிஎம் சரவணன் 1958ஆம் ஆண்டு முதல் தலைமையேற்று பல வெற்றித் தமிழ் படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

    கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.

    கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இரண்டாம் பாகத்தை நோக்கி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாகம் கமல்ஹாசனின் யாஸ்கின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் படக்குழு நேற்று கல்கி இரண்டாம் பாகத்திலிருந்து நடிகை தீபிகா படுகோனை நீக்கினர். இது பெரும் பேசும் பொருளாக மாறியது. தீபிகா போட்ட கண்டிஷன்களே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. அப்படி தீபிக என்ன கண்டிஷன்களை முன்வைத்தார் பார்க்கலாம் வாங்க.

    - கடந்த பாகத்தை விட இந்த பாகத்தில் 25 சதவீத ஊதிய உயர்வு

    - 7 மணி நேர வேலை நேரம் அதற்கு மேல் நடிக்க மாட்டேன்.

    - அவரது குழு ஆட்களான 25 நபருக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கும் இடம் மற்றும் படப்பிடிப்பு முடியும் வரை அவர்களுக்கான ஊதியம் மற்றும் உணவு கொடுக்க வேண்டும்.

    - நீண்ட நேரம் படப்பிடிப்பில் ஈடுப்பட முடியாது.

    - படத்தின் லாபத்திலிருந்து பங்கு .

    இதனால் தயாரிப்பு நிறுவனம் தீபிகாவை படத்தில் இருந்து நீக்கியுள்ளது. இதேப்போல் பிரபாஸின் ஸ்பிர்ட் படத்திலிருந்து நீக்கப்பட்டார். பிரபாச் நடிக்கும் இரண்டாவது படத்திலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

    சிலர் படத்தின் கதையை மாற்றிவிட்டார்கள், தீபிகாவை விட கமலுக்கு அடுத்த பாகத்தில் முக்கியத்துவம் இருப்பதால் அவர் விலகியுள்ளார் எனவும் கூறிவருகின்றனர்.

    இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    நடிகர் கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருக்கின்றனர். அப்படத்தை கமலின் RKFL இண்டெர்னேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் இரு வயதான கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்களை அடிப்படையாக கொண்டதாகும் என்ற தகவல் அண்மையில் வெளியானது.

    சமீபத்தில் நடந்த சைமா விருது விழாவில் நடிகர் கமல்ஹாசன் இதனை உறுதி செய்துள்ளார். மேலும் திரிஷா நடிகர் கமல்ஹாசனை பற்றி கூறீயது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் கமலை பார்த்து " எப்படி சார் இத்தனை வருடங்களும் அதே ஹாட்டாக கவர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கிங்க?" என கேட்டார். அதற்கு நன்றி தெரிவித்து கமல் கொடுத்த ரியாக்ஷன் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் கூலி.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி யில் வெளியாகிறது.

    இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருக்கின்றனர். அப்படத்தை கமலின் RKFL இண்டெர்னேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் இரு வயதான கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்களை அடிப்படையாக கொண்டதாகும் என்ற தகவல் அண்மையில் வெளியானது.

    சமீபத்தில் நடந்த சைமா விருது விழாவில் நடிகர் கமல்ஹாசன் இதனை உறுதி செய்துள்ளார். அவர் அதில் கூறியதாவது "நாங்கள் இருவரும் இணைந்து எப்பவோ நடித்திருக்க வேண்டும். வியாபாரம் ரீதியாக நாங்கள் சேராமல் இருந்தோம். இப்பொழுது அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என கூறினார்.

    • கூலி திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
    • கூலி உலக அளவில் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன் என கமல் கூறினார்.

    நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் என் அன்பு நண்பர் ரஜினிகாந்தின் சினிமா பயணத்தை நான் கொண்டாடுகிறேன். நம் சூப்பர் ஸ்டார் மீது நான் வைத்திருக்கும் பாசத்தையும், பெருமையையும் தெரிவித்து, அவரது பொன்விழாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில், கூலி உலக அளவில் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன் என்று கமல்ஹாசன் கூறினார்.

    கமல்ஹாசனின் பதிவிற்கு கூலி படத்தின் இயக்குனநர் லோகேஷ் கனகராஜ் Love you ஆண்டவரே என பதிவிட்டுள்ளார்.

    • என் அன்பு நண்பர் ரஜினிகாந்தின் சினிமா பயணத்தை நான் கொண்டாடுகிறேன்.
    • கூலி உலக அளவில் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.

    நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் என் அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது:-

    சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் என் அன்பு நண்பர் ரஜினிகாந்தின் சினிமா பயணத்தை நான் கொண்டாடுகிறேன். நம் சூப்பர் ஸ்டார் மீது நான் வைத்திருக்கும் பாசத்தையும், பெருமையையும் தெரிவித்து, அவரது பொன்விழாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில், கூலி உலக அளவில் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.

    அசுர பலம் கொண்ட லோகேஷ் கனகராஜ் இயக்கி, நம் திரையுலகின் தூணாக விளங்கும் கலாநிதி மாறன் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், என்றும் புதுமைகளை புகுத்தும் அனிருத் இசையில், எனது நீண்ட நாள் நண்பர்களான சத்தியராஜ், நாக அர்ஜூனா, அமீர்கான், உபேந்திரா, மற்றும் சௌபின் சாகிர் நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கு எனது வாழ்த்துக்கள். எனது அன்பான மகள் சுருதி ஹாசனுக்கும் எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து பிரகாசமாக ஜொலிப்பாய்.

    என்று கமல்ஹாசன் கூறினார்.

    ×