என் மலர்tooltip icon

    வழிபாடு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகலாம். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோக மாற்றத்திற்காக முக்கியப் புள்ளியைச் சந்திப்பீர்கள்.

    ரிஷபம்

    உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். வரவு திருப்தி தரும். ஊக்கத்தோடும். உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். வீட்டைப் பராமரிப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.

    மிதுனம்

    நிதிநிலை உயர்ந்து நிலைமை சீராகும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மதிய நேரத்தில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறும்.

    கடகம்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். பயணங்களை மாற்றியமைக்க நேரிடும்.

    சிம்மம்

    சலுகைகள் கிடைத்து சந்தோஷம் அடையும் நாள். தனவரவு திருப்தி தரும். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு உண்டு.

    கன்னி

    வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். வெளியூர் பயணமொன்றால் கையிருப்புக் கரையும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    துலாம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. எதிர்பாராத விரயம் உண்டு. எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த .காரியம் முடியடையாமல் போகலாம்.

    விருச்சிகம்

    அதிகாலையிலேயே நல்ல தகவல் வந்து சேரும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் உயரும். திடீர் பயணமொன்று ஏற்படலாம்.

    தனுசு

    பற்றாக்குறை அகலும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். சிநேகிதர்கள் செல்வ நிலை உயர வழிகாட்டுவர்.

    மகரம்

    எந்த முக்கிய முடிவும் குடும்பத்தினர்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்களுக்குரிய மரியாதை குறையாமல் பார்த்துக் கொள்ளவும்.

    கும்பம்

    களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபடும் நாள். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். உடல்நலத்தில் கவனம் தேவை.

    மீனம்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணை புரியும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

    • திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும்.
    • பஞ்சமி திதி அன்று விரதமிருந்து ஐந்து எண்ணெய் கலந்து குத்து விளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி வழிபட வேண்டும்.

    பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி. பஞ்சமி சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். இந்த விரதத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.

    அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம்நாள் பஞ்சிமி திதி வரும். பஞ்ச என்றால் ஐந்து எனப் பொருள். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும்.

    பஞ்சமி திதி அன்று விரதமிருந்து ஐந்து எண்ணெய் கலந்து குத்து விளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி வழிபட வேண்டும். தீபத்தின் ஓர் முகத்தை உற்றுப் பார்த்தபடி நம்முடைய வேண்டுதல்களை மனத்திற்குள் நினைத்துக் கொண்டே 108 முறை சொல்லி கற்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்ய வேண்டும். சொல்ல வேண்டிய மந்திரம் 'ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ'. இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகப் பெருமான் கோவில்களில் காலையில் ஹோமம், அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-30 (திங்கட்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சதுர்த்தி நள்ளிரவு 12.30 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம் : அவிட்டம் காலை 7.58 மணி வரை பிறகு சதயம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சுபமுகூர்த்த தினம், சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் கோவில்களில் ஹோமம், அபிஷேகம்

    இன்று சுபமுகூர்த்த தினம். சங்கடஹர சதுர்த்தி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சோமவார அபிஷேகம்.

    நத்தம் வர குணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப்பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார், ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகப் பெருமான் கோவில்களில் காலையில் ஹோமம், அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-சாதனை

    மிதுனம்-தெளிவு

    கடகம்-கடமை

    சிம்மம்-போட்டி

    கன்னி-லாபம்

    துலாம்- ஆர்வம்

    விருச்சிகம்-வரவு

    தனுசு- பக்தி

    மகரம்-நலம்

    கும்பம்-சுகம்

    மீனம்-நட்பு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட பிரச்சனை இன்று முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

    ரிஷபம்

    நன்மைகள் நடைபெறும் நாள். வியாபார முயற்சி வெற்றி தரும். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். எண்ணங்கள் எளிதில் நிறைவேற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

    மிதுனம்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

    கடகம்

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வரவைவிடச் செலவு கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளைக் கொடுப்பர். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

    சிம்மம்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் நிரந்தர பணிகளுக்காக எடுத்த முயற்சி பலன் தரும்.

    கன்னி

    பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.

    துலாம்

    முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். நிதிநிலை உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும்.

    விருச்சிகம்

    சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். வரவு போதுமானதாக இருக்கும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    தனுசு

    விடிகாலையிலேயே விரயம் ஏற்படும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் தொல்லையுண்டு.

    மகரம்

    சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தொழில் மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்பு மாறும்.

    கும்பம்

    நிம்மதி கிடைக்க நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.

    மீனம்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள ஆன்மிக வழிபாடுகளை மேற்கொள்வீர்கள்.

    • சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்
    • . ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-29 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : திருதியை நள்ளிரவு 1.50 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : திருவோணம் காலை 8.14 மணி வரை பிறகு அவிட்டம்

    யோகம் : அமிர்த, மரணயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம், திருவல்லிக்கேணி ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்

    இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம். திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் ஸப்தாவர்ணம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.

    சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. காஞ்சி காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தனம்

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-விருத்தி

    கடகம்-துணிவு

    சிம்மம்-போட்டி

    கன்னி-லாபம்

    துலாம்- மேன்மை

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- பரிவு

    மகரம்-மகிழ்ச்சி

    கும்பம்-ஆதரவு

    மீனம்-கடமை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

    ரிஷபம்

    சிக்கல்கள் விலகி சிகரத்தைத் தொடும் நாள். சாமர்த்தியமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கும் சூழ்நிலை உண்டு.

    மிதுனம்

    வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். வரவைக் காட்டி லும் செலவு கூடும். ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள்.

    கடகம்

    யோகமான நாள். எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.

    சிம்மம்

    பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் வளர்ச்சி உண்டு.

    கன்னி

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வழக்குகள் சாதகமாகும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பிறரின் விமர்சனங்களைத் தாண்டி முன்னேற்றம் காண்பீர்கள்.

    துலாம்

    உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    விருச்சிகம்

    மகிழ்ச்சி கூடும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடன்பிறப்புகள் வழியில் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களின் மனதை வாட்டும்.

    தனுசு

    புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார நலன் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும்.

    மகரம்

    வரவு திருப்தி தரும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் இழந்த பதவியை மீண்டும் பெறும் வாய்ப்பு உண்டு.

    கும்பம்

    பணத்தேவைகள் உட னுக்குடன் பூர்த்தியாகும் நாள். நிச்சயித்த காரியம் நிச்சயித்த படி நடைபெறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களைத் தேடி வரும்.

    மீனம்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். முன்னோர் சொத்துகளில் முறையான பங்கீடு உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களால் நன்மை உண்டு.

    • திருநள்ளாறு ஸ்ரீ சனி பகவான் அலங்காரம்.
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-28 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவிதியை நள்ளிரவு 2.47 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம் : உத்திராடம் காலை 8.04 மணி வரை பிறகு திருவோணம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    காஞ்சி வரதராஜப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம், திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

    இன்று திருவோணம் விரதம். திருநள்ளாறு ஸ்ரீ சனி பகவான் அலங்காரம். காஞ்சி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம். திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் ரதோற்சவம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜ பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-பெருமை

    மிதுனம்-தெளிவு

    கடகம்-மாற்றம்

    சிம்மம்-பணிவு

    கன்னி-நன்மை

    துலாம்- நலம்

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- உயர்வு

    மகரம்-நிறைவு

    கும்பம்-மகிழ்ச்சி

    மீனம்-சிறப்பு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    குழப்பங்கள் அகலும் நாள். கூடுதல் வருமானம் உண்டு. குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு பற்றிய நல்ல தகவல் வரலாம்.

    ரிஷபம்

    பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வருமானம் திருப்தி தரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

    மிதுனம்

    மனக்கலக்கம் ஏற்படும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாகனம் பழுதுகளால் வாட்டம் காண்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும்.

    கடகம்

    இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் வழியில் வருமானங்கள் உண்டு. இடம், பூமி வாங்கும் யோகம் ஏற்படும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    சிம்மம்

    ஆதாயம் தரும் தகவல் அலைபேசி வழியில் வரும் நாள். வசதியான வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள்.

    கன்னி

    சேமிப்பு உயரும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதையும் உடனடியாக செய்து முடிப்பீர்கள். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

    துலாம்

    வாங்கிய கடனைக் கொடுத்து மகிழும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள்.

    விருச்சிகம்

    பணவரவு திருப்தி தரும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.

    தனுசு

    செல்வாக்கு அதிகரிக்கும் நாள். திடீர் பயணம் திகைக்க வைக்கும். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். மாலை நேரம் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரலாம்.

    மகரம்

    தீட்டிய திட்டம் வெற்றி பெறும் நாள். திறமை பளிச்சிடும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழிலை விரிவுபடுத்தலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

    கும்பம்

    நட்பு வட்டம் விரிவடை யும் நாள். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். எடுத்தோம், முடித்தோம் என்று எந்தச் செயலையும் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு.

    மீனம்

    இடமாற்றத்தால் இனிமை ஏற்படும் நாள். தொழில் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர் பகையால் உள்ளம் கவலை கொள்ளும். எதிர்பாராத செலவு உண்டு.

    • பூஜைகளை முடித்த பிறகு சுமங்கலி பெண்களுக்கு மதிய உணவு பரிமாறலாம்.
    • அம்பிகையின் சிலையோ அல்லது திருவுருவப்படத்தையோ வைத்து மலர் தூவி, தூபமேற்றி வழிபடலாம்.

    ஆடி முதல் ஞாயிறு நெருங்கிவிட்டது. இப்போதே திருமணமான பெண்கள் கணவன் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்றும் கன்னிப்பெண்கள் வருங்கால கணவர் நல்லவராகவும், மனதிற்கு பிடித்தவராகவும் எந்தவித தோஷங்களும் இருக்கக் கூடாது என்றும் விரதமிருந்து வேண்டிக்கொள்வதற்காக சுமங்கலி பூஜைக்கு ஆயத்தமாகி இருப்பர்.

    பெரும்பாலான பெண்கள் சுமங்கலி பூஜை எப்படி செய்ய வேண்டும், அம்பிகையை விரதமிருந்து வழிபடும் முறை முதலானவற்றை தெரிந்து வைத்திருப்பர். ஆனால், சுமங்கலி பூஜையின் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன? எந்த நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்று அறிந்திருக்கமாட்டார்கள். அதைப்பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்...

    சுமங்கலி பூஜையின் போதும் சரி, பொதுவாக அன்றாடம் திருமாங்கல்யத்திற்கு குங்குமம் வைக்கும் போதும் சரி "ஓம் தீர்க்க சுமங்கலி தேவியை, இரட்சிப்பாய் இரட்சிப்பாய்" என்ற இந்த மந்திரத்தை மனதார சொன்னாலே போதும்.

    நெற்றி பொட்டில் குங்குமம் வைக்கும் போது, "ஓம் மஹிமா சக்தியை திலக தேவியை பூரண சக்திதா நமோ நமஹ" என்ற மந்திரத்தையும்,

    நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கும் போது, " ஓம் யாதேவி சர்வ பூதேஷூ ஸ்ரீம் ஐம் க்லீம் சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை யோகம் இரட்சிப்பாய் இரட்சியப்பாய் நமோ நமஹ"என உச்சரிக்க கணவரின் ஆயுள் கூடும் என்பது ஐதீகம்.

    சுமங்கலி பூஜை செய்வதற்கு உகந்த நேரம்:

    காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை சுமங்கலி பூஜை செய்யலாம். பூஜைகளை முடித்த பிறகு சுமங்கலி பெண்களுக்கு மதிய உணவு பரிமாறலாம். காலையில் சுமங்கலி பூஜை செய்ய முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்து, சுமங்கலி பெண்களுக்கு இரவு உணவு பரிமாறலாம். சுமங்கலி பூஜையை ஆடி ஞாயிற்றுக்கிழமை அன்று செய்ய முடியாதவர்கள் ஆடி வெள்ளி நாளிலும் செய்து பலன் பெறலாம்.

    சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து சுமங்கலி பூஜை செய்ய முடியாதவர்கள், பூஜையறையில் ஒரு மனை போட்டு, மாக்கோலமிட்டு, அந்த மனையில் அம்பிகையின் சிலையோ அல்லது திருவுருவப்படத்தையோ வைத்து மலர் தூவி, தூபமேற்றி வழிபடலாம். அவ்வாறு வழிபடும் போது நித்திய சுமங்கலியான தாயே, உன் மகளான எனக்கும் நித்திய சுமங்கலி வரத்தை தந்தருள வேண்டும் என்று மனமுருகி வேண்டிக்கொள்ளுங்கள். அந்த அன்னையின் அருள் என்றென்றும் உங்களோடு நிலைத்திருக்கும்.

    • சாப்பிடாமல் இருக்க இயலாது என்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் மதியம் சாப்பாடு சாப்பிட்டாலும் இந்த வழிபாட்டை செய்யலாம்.
    • பச்சை கற்பூரத்தை பெருமாள் பாதத்தில் வைத்து மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

    பெருமாளுக்கு உகந்த இரண்டு மிக முக்கியமான விரதங்கள் ஏகாதசியும், திருவோணமும். இவற்றில் ஏகாதசி விரதம் மாதத்திற்கு இரு முறையும், திருவோணம் ஒரு முறையும் வரும். ஏகாதசி விரதம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் திருவோண விரதம் பற்றி பலருக்கும் தெரியாது. இதனால் மிக சிலர் மட்டும் திருவோணம் நட்சத்திரம் வரும் நாட்களில் விரதம் இருப்பது உண்டு.

    முருகப் பெருமானுக்கு எப்படி திதிகளில் சஷ்டி திதியும், நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரமும் விரத நாட்களாக கருதப்படுகிறதோ, அதே போல் பெருமாளுக்குரிய நட்சத்திர விரதம் தான் திருவோணம். இது பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் விரதம் ஆகும்.

    மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரத்தை அவர் எடுத்தது திருவோணம் நட்சத்திர நாளில் தான். நட்சத்திரங்களில் "திரு" என பெருமைப்படுத்தி சொல்லப்படும் இரண்டு நட்சத்திரங்களில் ஒன்று பெருமாளுக்குரிய திருவோணமும், சிவ பெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரமும் தான்.

    வாமனராகவும், திரிவிக்ரமனாகவும் அவதாரம் எடுத்தது திருவோண நட்சத்திர நாளில் தான் வாழ்வில் வளர்ச்சியையும், சகலவிதமான நலன்களையும் தரக்கூடியது திருவோண விரதம் ஆகும். பெருமாளுக்கு நெருக்கமானவராகவும், பிரியமானவராகவும் ஆக வேண்டும் என்றால் திருவோண விரதம் இருக்கலாம்.

    ஏகாதசியை போல் திருவோண நட்சத்திரம் வரும் நாட்களிலும், நாள் முழுவதும் கடுமையான விரதத்தை பக்தர்கள் மேற்கொள்வார்கள். பெருமாளின் அருளை வேண்டி இருக்கப்படும் இந்த விரதம் மகிழ்ச்சி, செல்வ வளம், முன்னேற்றம், மோட்சம் ஆகியவற்றை தரக் கூடியதாகும்.



    அது மட்டுமல்ல வைகுண்டத்திற்கு சென்று ஸ்ரீமன் நாராயணனை நேரில் தரிசிக்கும் பாக்கியத்தை தரக் கூடியது திருவோணம் விரதம் ஆகும். பெருமாளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கும், கடந்த கால பாவங்கள், தவறுகளில் இருந்து மன்னிப்பு கிடைப்பதற்கும், ஆன்மிகம் ஞானம் பெறுவதற்கும், தன்னை தானே உணர்ந்து கொள்வதற்கும் வழியை ஏற்படுத்தக் கூடியது திருவோணம் விரத நாளாகும்.

    நாளை திருவோண விரதம் அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சுத்தமான ஆடைகளை உடுத்திக் கொண்டு, தீர்த்தம், பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். வாசனை மிகுந்த மலர்களை பெருமாளுக்கு சூட்டி வழிபட வேண்டும். ஏகாதசி விரதத்திற்கு கடைபிடிக்கும் விரத முறைகளை இதற்கும் கடைபிடிக்க வேண்டும்.

    உணவை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும். தியானம், வழிபாடு, மந்திர ஜபம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

    மாலையில் சூரியன் மறைந்த பிறகு பெருமாளுக்கு பூஜைகள் செய்து வழிபட்ட பிறகு, பெருமாளுக்கு படைத்த நைவேத்தியத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டையும் ஒருசேர பெறுவதற்கு இந்த திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளை வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். திருவோண நட்சத்திரம் பெருமாளின் நட்சத்திரம். நீங்கள் இந்த திருவோண நட்சத்திரத்திற்கு விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்வது நல்லது.

    சாப்பிடாமல் இருக்க இயலாது என்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் மதியம் சாப்பாடு சாப்பிட்டாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். மாலை வீட்டில் இருந்தபடியே பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பெருமாளுக்கு அப்பம் செய்து நெய்வேத்தியம் செய்து வைத்து, வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

    பெருமாளுக்கு துளசி இலைகளை வாங்கி போட்டு விளக்கு ஏற்றி உங்களுடைய பிரச்சனைகள் தீர பிரார்த்தனை செய்தால் வேண்டிய வேண்டுதல் அப்படியே நடக்கும். உங்கள் வீட்டு பக்கத்தில் பெருமாள் கோவில் இருக்கிறதா. அங்கு செல்லுங்கள். பெருமாளுக்கு 12 வாழைப்பழம் வாங்கிக் கொள்ளுங்கள்.

    கொஞ்சமாக துளசி இலைகள், கொஞ்சமாக பச்சை கற்பூரம் வாங்கிக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தை பெருமாள் பாதத்தில் வைத்து எடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எல்லாம் ஒவ்வொரு பழத்தை தானம் செய்து விடுங்கள். உங்களுடைய தீராத நோய்நொடி தீர இந்த தானம் செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.

    துளசி இலைகளை பெருமாளுக்கு சாத்தி விடுவார்கள். பிரசாதமாக இரண்டு இலைகளை மட்டும் திரும்பவும் வாங்கிக் கொள்ளுங்கள். பச்சை கற்பூரத்தை பெருமாள் பாதத்தில் வைத்து மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

    அந்த பச்சை கற்பூரத்தை வீட்டிற்கு கொண்டு வந்து கொஞ்சம் பணம் வைக்கும் பெட்டியில், பூஜை அறையில், சமையலறையில் மசாலா டப்பாவுக்கு பக்கத்தில், ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு வையுங்கள்.

    இப்படி வீட்டில் எல்லா இடத்திலும் பெருமாள் கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்ட பச்சைக் கற்பூரத்தை வைத்தால் வீட்டில் இருக்கும் தரித்திரம் விலகி வீட்டில் செல்வ கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை. இது எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா. நாளை (சனிக்கிழமை) கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா! என்ற நாமத்தை சொல்லிக்கொண்டே இருங்கள். கணக்கே கிடையாது.

    நாளை நேரம் கிடைக்கும்போது, ஓய்வு கிடைக்கும் போது, படுக்கும் போது, தூங்கும் போது, இந்த நாமத்தை சொல்லிவிட்டு பிறகு உங்களுடைய வேலையை பாருங்கள். அந்த வைகுண்டத்தில் பெருமாளின் பாதத்தில் இடம் கிடைக்க இந்த ஒரு வார்த்தை மட்டுமே போதும்.

    • சுமங்கலி பூஜையை நாம் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்.
    • பூஜையில் கலந்துகொள்ளும் பெண்களை சக்தியின் வடிவமாக கருதி, அவர்களை மரியாதையுடன் வரவேற்க வேண்டும்

    'சுமங்கலி' என்றால் `மங்கலம் நிறைந்தவள்' என்று பொருள். திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும், திருமணமாகாத பெண்கள் திருமணத் தடை, தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும் நடத்தப்படும் பூஜையே, சுமங்கலி பூஜையாகும்.

    சுமங்கலி பெண்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நடத்துவதால் இது சக்தி வழிபாடாக பார்க்கப்படுகிறது. இந்த சுமங்கலி பூஜையை ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் ராகு காலம் இல்லாத நேரத்தில் நடத்தலாம். அன்றைய தினம் யோகம், திதி போன்றவையும் நல்லதாக இருக்க வேண்டும். கரிநாளாக இருக்கக்கூடாது. ஆடி மாதம், நவராத்திரி நாட்கள் ஆகியவை இந்த பூஜை நடத்த விசேஷமாகும். அதிலும் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் சுமங்கலி பூஜை செய்வது மிகவும் சிறப்பானதாகும்.

    இந்த சுமங்கலி பூஜையை நாம் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம். சுமங்கலி பூஜை செய்பவர், தமது வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வாசலில் தோரணங்கள் கட்டி, மாக்கோலம் இட்டு வீட்டை அழகுப்படுத்த வேண்டும். பூஜை செய்பவர்கள், தங்களால் எத்தனை சுமங்கலி பெண்களை அழைக்க முடியுமோ அத்தனை பேரையும் அழைக்கலாம். முக்கியமாக வயதான பெரியவர்களை அழைப்பது அவசியம். ஏனென்றால் அவர்களது ஆசீர்வாதம் நமக்கு மிகுந்த பலனை தரும்.

    பூஜையில் கலந்துகொள்ளும் பெண்களை சக்தியின் வடிவமாக கருதி, அவர்களை மரியாதையுடன் வரவேற்க வேண்டும். பூஜை நடத்துபவர் முதலில், சுமங்கலி பெண்களை நாற்காலியில் உட்கார வைத்து அவர்களது பாதங்களை தாம்பூலத் தட்டில் வைத்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். பிறகு பாதத்துக்கு குங்குமம், சந்தனம் வைத்து மலர் தூவி வழிபட வேண்டும்.

    அதன்பிறகு அவர்களின் கை, கால், முகங்களில் சந்தனம், குங்குமம் பூசி, தலையில் சூடிக்கொள்ள பூ கொடுக்க வேண்டும். மேலும் தங்கள் வசதிகேற்ப, தாம்பூலத் தட்டில் மஞ்சள், குங்குமம், மருதாணி, தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழங்கள், புடவை, வளையல் போன்றவற்றை வைத்து கொடுக்கலாம். தொடர்ந்து அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து, தீபாராதனை காட்டி சுமங்கலி பெண்களுக்கும் காட்ட வேண்டும். பின்பு, அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். பூஜையின் முடிவில், சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் கொடுத்து, மகிழ்ச்சியோடு அவர்களை வழி அனுப்பி வைக்க வேண்டும்.

    இந்த சுமங்கலி பூஜையை கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து செய்வதே சிறப்பானதாகும். குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு, நம்பிக்கையுடனும், பய பக்தியுடனும் செய்ய வேண்டும். சுமங்கலி பூஜை செய்வதால் இல்லத்தில் செல்வம் பெருகும். துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும். தோஷங்கள் விலகும், குலவிருத்தி உண்டாகும்.

    இந்த பூஜையை மிகவும் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றில்லை. நமது வசதிகேற்ப எளிமையாக நடத்தலாம். மிகுந்த இறைபக்தியோடு நடத்தினாலே போதுமானது.

    • ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.
    • 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் தேவஅருள்வாக்கில் கூறப்பட்டதன் அடிப்படையில் மாளிகப்புரத்தம்மன் கோவிலில் புதிய நவக்கிரக கோவில் கட்டப்பட்டது. அதன் பிரதிஷ்டை நாளை மறுநாள் நடக்கிறது.

    இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். கோவிலில் நாளை சுத்தி கலச பூஜை வழிபாடுகள் நடைபெறும். நாளை மறுநாள் காலை 11 மணிக்கு நவக்கிரக கோவில் பிரதிஷ்டை நடக்கிறது. அன்றைய தினம் இரவு 10 மணிக்கு வழக்கமான பூஜைகளுக்கு பின் நடை அடைக்கப்படும்.

    தொடர்ந்து ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    இந்தநாட்களில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    ×