என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வராகி"

    • வராக நாதருக்கு வராக ரூபம் கொண்டு அன்னை காட்சி அளித்ததால் வராகி என்று அழைக்கப்படுகிறாள்.
    • வராகியை வழிபட சுக்கிரதோஷம் நிவர்த்தியாகும்.

    நவராத்திரி மூன்றாம் நாளன்று அன்னை பராசக்கதி, வராகியாக வழிபாடு செய்யப்படுகிறாள். அம்பிகையின் படைத்தளபதியாக இருப்பவள். மங்கலமய நாராயணி என்றும் அழைக்கப்படுபவள். வராக நாதருக்கு வராக ரூபம் கொண்டு அன்னை காட்சி அளித்ததால் வராகி என்று அழைக்கப்படுகிறாள்.

    அன்னை வராகியை வழிபாடு செய்ய அரிசி மாவைக் கொண்டு மலர்கள் உருவத்தில் கோலம் போட வேண்டும். 20 அகல் தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் பயன்படுத்த வேண்டும். பலாப்பழம் மற்றும் கற்கண்டு சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். சம்பங்கி, மருக்கொழுந்து கொண்டு பூஜிக்க வேண்டும்.

    "வீற்றிருப்பாள்நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று காத்திருப்பாள் கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம் பார்த்திருப்பாள் அல்லள் எங்கே என்றங்குச பாசம் கையில் கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே" என பாடி துதித்தால் வேண்டும் வரம் அருளுவாள்.

    அன்னை வராகி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் சுக்கிரன். எனவே வராகியை வழிபட சுக்கிரதோஷம் நிவர்த்தியாகும். வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கி, வெற்றி, செல்வம், செழிப்பை தருவாள். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள், சண்டைகள் விலகி, அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும், கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் எந்த ஒரு காரியத்திலும் இறங்கினாலும் அந்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

    • திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும்.
    • பஞ்சமி திதி அன்று விரதமிருந்து ஐந்து எண்ணெய் கலந்து குத்து விளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி வழிபட வேண்டும்.

    பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி. பஞ்சமி சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். இந்த விரதத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.

    அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம்நாள் பஞ்சிமி திதி வரும். பஞ்ச என்றால் ஐந்து எனப் பொருள். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும்.

    பஞ்சமி திதி அன்று விரதமிருந்து ஐந்து எண்ணெய் கலந்து குத்து விளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி வழிபட வேண்டும். தீபத்தின் ஓர் முகத்தை உற்றுப் பார்த்தபடி நம்முடைய வேண்டுதல்களை மனத்திற்குள் நினைத்துக் கொண்டே 108 முறை சொல்லி கற்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்ய வேண்டும். சொல்ல வேண்டிய மந்திரம் 'ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ'. இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

    • முடிந்து போன உங்களுடைய வாழ்க்கை மீண்டும் நல்லபடியாக தொடர ஆரம்பிக்கும்.
    • ஒரு சில வாரங்களில் உங்களுடைய பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.

    வராகி அம்மனை அனைத்து தினங்களிலும் வழிபடுவது சிறப்பு தான் என்றாலும் சனி ஹோரையில் பஞ்சமி தினமான இன்று வழிபடுவது உங்கள் குடும்பத்திற்கே நன்மையை கொடுக்கும்.

    சனிக்கிழமை வராகி வழிபாடு ஏன் சிறந்தது என்று தெரியுமா?

    சனிக்கிழமை பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபாடு செய்து வந்தால் நிச்சயமாக நம்முடைய கஷ்டங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். முடிந்து போன உங்களுடைய வாழ்க்கை மீண்டும் நல்லபடியாக தொடர ஆரம்பிக்கும். வீட்டில் இருப்பவர்கள் யாருக்காவது தீராத நோய் பிரச்சனை இருக்கலாம். அல்லது வருமானத்திற்கே வழி இல்லாமல் வாழ வழி இல்லாமல் நடுவீதியில் நிற்கக்கூடிய நிலைமை இருந்தாலும் கூட நம்பிக்கையோடு ஒரு கைப்பிடி மண்ணை பிடித்து வைத்து அதை வராகி என்று நினைத்து வழிபாடு செய்தால், இந்த உலகத்தில் வாழ்வதற்கு உண்டான தகுதி அனைத்தும் உங்களைத் தேடி வரும்.

    சனிக்கிழமைகளில் வாராகி அம்மனை எப்படி வழிபாடு செய்வது?

    சனிக்கிழமை சனி ஹோரை நேரத்தில் வாராகி அம்மன் படத்தை துடைத்து பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். வராகி அம்மனின் திருவுருவப் படம் இல்லை என்று கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் திருவுருவப்படம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. சிறிது மஞ்சளில் பன்னீர் ஊற்றி குழைத்து, மஞ்சள் பிள்ளையார் போல பிடித்து வைத்து அதை வராகித் தாயாக நினைத்துக் கொண்டு வழிபட நற்பலன் கிடைக்கும். ஒரு செம்பருத்திப்பூ இல்லை என்றால், நீல நிற சங்குப்பூ, சிவப்பு நிற அரளிப்பூ வைத்து கூட அலங்காரம் செய்து கொள்ளலாம்.

    மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் பத்து வெண் கடுகுகளை போட்டு, தீபம் ஏற்றி பூஜையறையில் வைத்து விடுங்கள். நைவேதியமாக ஒரு டம்ளர் பானகம் வைத்தால் கூட போதும். பூஜை அறையில் ஏற்றி வைத்த தீபத்திற்கு முன்பு அமர்ந்து வராகி அம்மனை மனம் உருகி வேண்டிக் கொள்ள வேண்டும். உங்கள் கஷ்டங்களை சொல்லி, அந்த கஷ்டம் சரியாக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் ஒரு சில வாரங்களில் உங்களுடைய பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.

    இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வர சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்கும்.

    கடன் தொல்லை, வறுமை, பண பிரச்சனை போன்றவைகள் நீங்கும்.

    எதிர்பாராத ஆபத்துகளும், விபத்துக்களும் விலகி ஓடும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    வாக்கு பலிதம் ஏற்படும், நீண்ட நாள் நோய்கள் குணமாகும். தீவினை கோளாறுகள் நீங்கும்.

    சுபகாரியங்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கி குடும்பத்தில் மங்கல காரியங்கள் நடைபெறும்.

    உங்கள் வாழ்க்கையில் ஒளி வீச வாரம் தோறும் வரும் சனிக்கிழமை அன்று சனி ஹோரையில் இந்த தீபத்தை ஏற்றி வராகி அம்மனுக்கு முன்பு அமர்ந்து கொள்ளுங்கள்.

    • சுயம்பு வடிவான அன்னை முண்டகக் கண்ணி அம்மன்.
    • கருவறை மேற்கூரை தென்னங்கீற்றால் வேயப்பட்டது.

    இத்திருகோவில் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரம் பொலிவுடன் விளங்குகிறது.

    ராஜகோபுரம் வாயிலில் நின்றாலே கருவறையில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு வடிவான அன்னை முண்டகக் கண்ணியைத் தரிசிக்கலாம்.

    ராஜகோபுர வாயிலையொட்டி இருபுறமும் நுழைவாயில்களும், வாயில்களுக்கு மேலே மகிஷாசுரமர்த்தினி, ராஜராஜேஸ்வரி சுதை வடிவங்கள் கொண்ட விமானங்கள் உள்ளன.

    கருவறையை அடுத்து முதல் சுற்றுப் பிரகாரம் அமைந்துள்ளது. பக்தர்கள் வலம் வரவும், அங்கப்பிரதட்ணம் செய்யவும் வசதியாக பிரகாரம் முழுவதும் கருங்கல் தள வரிசையால் அமைக்கப்பெற்றுள்ளது.

    கருவறையின் முன்புறம் மகா மண்டபமும், பின்புறம் பொங்கல் மண்டபமும் அமைத்து திருக்கோவில் பிரகாரம் முழுவதும் மண்டபத்தால் மூடப்பெற்றுள்ளது.

    திருக்கோவிலின் தென்மேற்கு மூலையில் திருக்கோவில் அலுவலகமும் வடக்கு பக்கத்தில் மடப்பள்ளி, வாகன மண்டபம் முதலானவை உள்ளன.

    அன்னையின் சன்னதி:

    கிழக்கு நோக்கிய கருவறையில் அன்னை சுயம்பு வடிவாய் எழுந்தருளி இருக்கிறாள். சூல வடிவாய் பொலியும் சிலா ரூபம், சிலா ரூபத்துள் திரிசூலம் அன்னைக்குப் பின்புறமும் திரிசூல வடிவம் அன்னைக்கு நேர்மேலே கர்ப்பக்கிரக விமானம் அமைந்துள்ளது.

    ஐந்து கலசங்கள் கொண்ட விமானத்தின் மத்தியில் மலர்ந்த தாமரையாய் அன்னையின் முகம் புன்சிரிப்புடன் பக்தர்களுக்குக் கருணை மழை பொழிய சுதை வடிவில் காட்சியளிக்கிறாள். ஐந்து தலை நாகம் அன்னையைக் குடைபிடிப்பது போல் உள்ளது. விமானத்தின் இருபுறமும் தேவகன்னியர் வெஞ்சாமரம் வீச நிற்கின்றனர். பூமாலை ஏந்தியும் நிற்கின்றனர்.

    அம்பிகையின் கருவறை விமானம் முழுவதும் வெள்ளிக்கவசத்தால் போர்த்தப்பட்டு எழிலுடன் காட்சியளிக்கிறது. வாயிலின் இருபுறமும் துவாரபாலகியர் சுதை வடிவில் நிற்கின்றனர்.

    இங்குள்ள கருவறை மேற்கூரை தென்னங்கீற்றால் வேயப்பட்டது. அம்பிகை-மாரி என்றாலே குளிர்ச்சியானவள். அன்னை சீதளதேவி எப்போதும் குளிர்ச்சியான இடத்திலேயே இருக்க விரும்புவதால், அன்னையின் மூலஸ்தானம் வெகுகாலமாகவே தென்னங்கீற்றுக் கூரையோடு, வெட்டிவேர் தட்டிகளால் உள்ளே சூழப்பெற்று பராமரிக்கப்பட்டு வருகிறது.

    நாக சன்னதி:

    கோவிலின் மேற்குப் புறத்தில் கருவறையின் பின்புறத்தில் நாகசன்னதியும், புற்றோடு கூடிய தல விருட்சமான ஆலமரமும் உள்ளன.

    மாரியம்மன் கோவில்களில் நாக வழிபாடு உண்டு. இத்திருக்கோவிலின் தலவிருட்சமான ஆலமரத்தடியில் உள்ள புற்றில் இருக்கும் நாகம், தினம் இறைவியைப் பூஜிப்பதாக மரபு, இரவு பூஜை முடிந்து, திருக்கோவில் சாத்திய பின்னர், புற்றில் இருக்கும் நாகப்பாம்பு கருவறைக்கும் வந்து அன்னையை பூஜிப்பது வழக்கம். பலர் கோவிலில் இரவு நேரத்தில் நாகத்தைப் பார்த்ததாகக் கூறுகின்றனர்.

    கருவறையின் பின்னே நாக சன்னிதி தனியே உள்ளது. நாகதோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல் போன்றவற்றிற்கு இங்குள்ள புற்றில் பால், முட்டை வைத்து நாக சன்னிதியில் வழிபாடு செய்வோர் குறைகள் நீங்க பெற்றுள்ளனர். அவ்வாறு நலன் அடைந்தோர் இக்கோவிலின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள அரச மரத்தடியில் நிறைய நாக பிரதிஷ்டைகள் செய்துள்ளனர்.

    உற்சவர்தேவி சன்னிதி:

    கருவறையில் இடப்புறத்தில் அழகிய விமானத்துடன் கூடிய உற்சவ சன்னிதி உள்ளது. அன்னையின் சன்னிதி சதுர வடிவில் அமைந்துள்ளது. சன்னிதியின் வாயிலின் இருபுறமும் துவார பாலகிகள் வடிவமும், பின்புறம் மாரியம்மன் வடிவமும் சித்திரத்தால் வரையப் பெற்றுள்ளன.

    அன்னை முண்டகக் கண்ணி கனிவான பார்வையுடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறாள். நான்கு கைகளுடனும் மூன்று கண்களுடனும் சாந்தம் தவழ விளங்கும் அன்னை தலையில் கரந்த மகுடமும், ஏனைய அணிகலன்களும் அணிந்து பின்னிரு கைகளில் உடுக்கையும், சூலமும், முன்னிரு கைகளில் கத்தியும், அபய முத்திரையிலும் காட்சியளிக்கின்றாள்.

    விழா காலங்களில் வெள்ளி சிம்மவாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்குக் கருணை மழை பொழிகிறாள்.

    சப்த மாதர்கள் - ஏழு கன்னியர்:

    ஒரே சக்தி, பல வடிவங்களாகத் தன்னைத் தானே பிரித்துக் கொண்டும், மாற்றிக் கொண்டும் மாயை புரியும் தன்மை உடையது. இவ்விதம் எழுந்ததே `சப்த மாதர்கள்' எனப்படும் ஏழு கன்னியர் வழிபாடு.

    வாரத்தின் நாட்களை ஏழாகவும், இசையின் அடிப்படை ஸ்வரங்களை ஏழாகவும் வகுத்த நம் முன்னோர்கள் ஒன்றேயான சக்தியையும் ஏழு வடிவங்களாகக் கண்டு வணங்கியிருக்கிறார்கள்.

    பழமையான சிவாலயங்களிலும், சக்தி தலங்களிலும் ஏழு கன்னியர்களும் அவர்களுக்கு இருபுறமும் வீரபத்திரரும் விநாயகரும் காணப்படுகின்றனர்.

    கிராமங்களில் `கன்னிமார்' வழிபாடு செய்வதை இன்றும் காணலாம். எளிமையாக ஏழு செங்கற்களை வைத்து `ஏழு கன்னி'யரை வழிபடுவதையும் காணலாம்.

    ஏழு கன்னியர் பிரம்மி, மகேசுவரி, வைணவி, வராகி, கவுமாரி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர்.

    சிவபெருமான், அந்தகாசூரனுடன் நடத்திய போரிலே சிவபெருமானுக்கு உதவும் பொருட்டு நான்முகன், மகேசுவரன், திருமால் வராகமூர்த்தி, முருகன், இந்திரன் யமன் ஆகிய ஏழு தெய்வங்கள் அனுப்பிய தங்கள் சக்தியின் வடிவங்களே ஏழு கன்னியர்.

    கோவிலின் வடபாகத்தில் ஏழு கன்னியர் சன்னதி அமைந்துள்ளது. ஏழு கன்னியர் ரூபமற்ற சிலை வடிவில் உள்ளனர். அவர்களுக்கு இருபுறமும் ஐயனார் சிலையும், முனீஸ்வரர் சிலையும் உள்ளன. சிலர் இதனை பரசுராமர், ஜமதக்னி முனிவர் என்றும் கூறுகின்றனர்.

    கருவறையின் முகப்பிற்கு மேலாக சுதை வடிவில் சப்த மாதர்கள் எழில் வடிவொடு அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கின்றனர். இடக்கால் மடித்தும், வலக்கால் தொங்கிய நிலையில் வாகனங்களில் அமர்ந்துள்ளனர். நான்கு கைகள், முன்னிரு கைகள் அபயவரத முத்திரைகளில் காணப்படும் பின்னிரு கைகளிலே படைக்கலங்கள் இருக்கும்.

    மகேசுவரி சினத்தையும், வைணவி பேராசையும், பிரம்மி ஆணவத்தையும், கவுமாரி மாயையும், இந்திராணி குற்றம் கண்டு பிடித்தலையும், சாமுண்டி கோள் சொல்லுவதையும், வராகி பொறாமையையும் குறிப்பனவாம். ஏழு கன்னியரை வழிபடுவோர் மேற்குறித்த கெட்ட குணங்கள் கெட, அறியாமை அகன்று நன்னிலை எய்துவர்.

    ×