என் மலர்
வழிபாடு
- நாளை ஆடிப்பூரம்.
- 9-ந்தேதி இருக்கன்குடி மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்.
6-ந்தேதி (செவ்வாய்)
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புஷ்ப பல்லக்கில் உலா.
* மதுரை மீனாட்சியம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் பவனி.
* நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
7-ந்தேதி (புதன்)
* ஆடிப்பூரம்
* அங்கமங்களம் அன்னபூரணி அம்பாள் வளைகாப்பு உற்சவம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பார்வதி அம்மன் முளைக்கட்டு ஊஞ்சல்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப் பல்லக்கில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
8-ந்தேதி (வியாழன்)
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் வெட்டிவேர் சப்பரத்தில் வீதி உலா.
* சேலம் செவ்வாய் பேட்டை மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் .
* நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் ஊஞ்சல் காட்சி.
* மேல்நோக்கு நாள்.
9-ந்தேதி (வெள்ளி)
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சிநேக வள்ளி அம்மன் தலங்களில் திருக்கல்யாணம்.
* இருக்கன்குடி மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் இரட்டை தோளுக்கினியானில் தீர்த்தவாரி.
* சமநோக்கு நாள்.
10-ந்தேதி (சனி)
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாணிக்கம் விற்ற திருவிளையாடல்.
* இருக்கன்குடி மாரியம்மன் புறப்பாடு.
* குறுக்குத்துறை முருகப்பெருமான் திருவீதி உலா.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.
11-ந்தேதி (ஞாயிறு)
* சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சேரமான் பெருமாள் கயிலாயம் செல்லுதல்.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி விமானத்தில் பவனி.
* நயினார்கோவில் சவுந்திரநாயகி மஞ்சள் நீராட்டு விழா.
* சமநோக்கு நாள்.
12-ந்தேதி (திங்கள்)
* மதுரை மீனாட்சியம்மன் தங்க குதிரையில் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
- அனைத்து முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்.
- சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் சக்தியழைப்பு விழா.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-21 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவிதியை இரவு 8.04 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: மகம் இரவு 6.41 மணி வரை பிறகு பூரம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சந்திர தரிசனம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் சக்தியழைப்பு விழா. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புஷ்பப்பல்லக்கிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் பவனி. நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயுதாட்சியம்மன் கண்ணாடி பல்லக்கில் பவனி. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன், நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகியம்மன் தேரோட்டம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர் முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதாயம்
ரிஷபம்-வரவு
மிதுனம்-உயர்வு
கடகம்-நன்மை
சிம்மம்-சுகம்
கன்னி-பொறுப்பு
துலாம்- நலம்
விருச்சிகம்-கீர்த்தி
தனுசு- பெருமை
மகரம்-உழைப்பு
கும்பம்-உதவி
மீனம்-அன்பு
- திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- இன்று காலை பிஷப் ஸ்டீபன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந்தேதி தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலியுடன் பேராலயம் முன்பு உள்ள அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட கொடி மரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
பின்னர் முன்னாள் பங்கு தந்தை குமார் ராஜா தலைமையில் பனிமய அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தூய பனிமய மாதா பேராலய தேர்பவனி இன்று மாலை நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு தூத்துக் குடி மாநகர பகுதிகள் ஒளி விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டு, பொருட் காட்சிகள் அமைக்கப்பட்டு, வரவேற்பு பதாகைகளுடன், விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு 2-ம் திருப்பலியும், 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பேராலய பங்குத் தந்தை ஸ்டார்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பெருவிழா கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடை பெற்றது.
தொடர்ந்து 9 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்காக மாவட்ட முதன்மை குரு ரவி பாலன் தலைமையிலும், 10 மணிக்கு முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்காக திருப்பலி யும், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு நன்றித் திருப்பலி நகரின் அனைத்து மண்ணின் மைந்தர் குருக்கள் துறவியர், அருட் சகோதர சகோதரி களுக்காக நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் நடைபெறுகிறது.
இதன் பின்னர் இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் தூய பணிமய மாதா அன்னையின் திருஉருவ பவனி நடைபெறுகிறது, தொடர்ந்து இரவு 10 மணிக்கு தூய பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல், நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருவிழாவில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவில் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
- மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் முளைக்கொட்டு உற்சவம் ஆரம்பம்.
- சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-20 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பிரதமை இரவு 6.36 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: ஆயில்யம் மாலை 4.36 மணி வரை பிறகு மகம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் முளைக்கொட்டு உற்சவம் ஆரம்பம். சிம்ம வாகனத்தில் பவனி. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் காலை தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடை மருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆர்வம்
ரிஷபம்-முயற்சி
மிதுனம்-நிறைவு
கடகம்-பரிவு
சிம்மம்-பணிவு
கன்னி-ஓய்வு
துலாம்- நன்மை
விருச்சிகம்-வெற்றி
தனுசு- சிந்தனை
மகரம்-செலவு
கும்பம்-அமைதி
மீனம்-வரவு
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
- பக்தர்கள் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழுகிறது.
ஆண்டு தோறும் ஆடி அமாவாசை மற்றும் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் மகாளய அமாவாசை தினத்தில் திரளான பக்தர்கள் கோவில் குளக் கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து பெருமாளை வழிபடுவது வழக்கம்.

இன்று ஆடி அமாவாசை நாள் என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருவள்ளூர் வீரராகவர் கோவிலுக்கு நேற்று நள்ளிரவு முதலே சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப் பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.
பக்தர்கள் தங்கும் இடம், விடுதிகள் அனைத்தும் நிரம்பியதால் ஏராளமா னோர் கோவில் நுழைவு வாயில், வெளியே உள்ள சிமெண்ட் சாலை, பஸ் நிலையம், ரெயில் நிலையம், பெட்ரோல் பங்க் மற்றும் நடைபாதைகளிலும் தூங்கினர். இரவில் திடீரென சிறிது நேரம் மழை பெய்ததால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

ஆடிஅமாவாசையை முன்னிட்டு இன்று அதி காலை வீரராகவர் கோயில் அருகில் உள்ள ஹிருத்தா பநாசினி குளம் மற்றும் காக்களூர் பாதாள விநாயகர் கோயில் அருகே உள்ள ஏரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் அவர்கள் அங்கு தயாராக இருந்த புரோகிதர்களிடம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து பக்தர்கள் மூலவர் வீரராகவப் பெருமாளை வழி பட வந்தனர். ஒரே நேரத்தில் திரளான பக்தர்கள் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் பெரு மாளை வழிபட்டனர். பக்தர்கள் கூட்டம் காரண மாக திருவள்ளூர் நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- 18 நாட்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன்.
- 15 க்கும் மேற்பட்வர்களுக்கு தலையில் காயம்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரத்தில் ஸ்ரீ மஹாலட்சுமி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகரப் பேரரசின் மன்னரான கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் கட்டப்பட்டதாகும்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு மாறுநாள் ஆடி 19-ம்நாள் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக பக்தர்கள் ஆடி மாதம் 1-ந் தேதியில் இருந்து 18 நாட்கள் விரதம் இருப்பார்கள். பின்னர் ஆடி 19-ல் நேர்த்தி க்கடன் செலுத்துவார்கள்.
அதன்படி இன்று நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் விரதம் இருந்த ஆண்கள், பெண்கள் என 600-க்கும் மேற்பட்டோர் காலை 7 மணியில் இருந்து கோவில் முன்பு வரிசையாக அமர்ந்து காத்திருந்தனர்.
தொடர்ந்து கோவில் பாரம்பரிய பூசாரி மகாலட்சுமிக்கு அலங்கார அபிஷேகம் செய்தார். இதையடுத்து மேள தாளம் முழங்க ஆணிகள் பொருத்தப்பட்ட பாதணி மீது நின்று பூசாரி கொடிக்கம்பம் மீது தீபம் ஏற்றப்பட்டது.
இதை தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்த அமர்ந்து இருந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார், இதை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கண்டு தரிசித்தனர், இந்த தேங்காய் உடைக்கும் போது 15 க்கும் மேற்பட்வர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் குடிபாட்டு மக்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் டி.எஸ்.பி.க்கள் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்,
கரூர் மாவட்டத்தில் இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்பு பெற்றது என்பதால் இதை காண சென்னை, கோவை, திருச்சி, பெங்க ளூரு, தேனி, மதுரை, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
- ஆடி அமாவாசையும் ஆடி பெருக்கும் பூச நட்சத்திர தினத்தன்று வந்ததால், வழக்கத்தை விட திரளான பக்தர்கள் ஜோதி தரிசனத்தில் பங்கேற்றனர்.
- வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், மவுன தியானமும் நடைபெற்றது.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆடி மாத பூச நட்சத்திர தினத்தையொட்டி நேற்று இரவு 7.45 மணிக்கு 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் மகாமந்திரத்தை உச்சரித்தவாறு ஜோதி தரிசனம் மேற்கொண்டனர்.
ஆடி அமாவாசையும் ஆடி பெருக்கும் பூச நட்சத்திர தினத்தன்று வந்ததால், வழக்கத்தை விட திரளான பக்தர்கள் ஜோதி தரிசனத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், மவுன தியானமும் நடைபெற்றது.
- இன்று ஆடி அமாவாசை.
- சதுரகிரி ஸ்ரீ சுந்தரமகாலிங்க சுவாமி பெருந்திருவிழா.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-19 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அமாவாசை மாலை 5.32 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: பூசம் பிற்பகல் 2.55 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று ஆடி அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. வத்ராயிருப்பு சமீபம் சதுரகிரி ஸ்ரீ சுந்தரமகாலிங்க சுவாமி பெருந்திருவிழா. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிறைவு
ரிஷபம்-ஆர்வம்
மிதுனம்-முயற்சி
கடகம்-பரிவு
சிம்மம்-பரிசு
கன்னி-ஓய்வு
துலாம்- வெற்றி
விருச்சிகம்-நன்மை
தனுசு- செலவு
மகரம்-அமைதி
கும்பம்-வரவு
மீனம்-சாதனை
- குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.
- தமிழகத்தின் முக்கிய சனிபகவான் பரிகாரத்தலமாக விளங்குகிறது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில் தமிழகத்தின் முக்கிய சனிபகவான் பரிகாரத்தலமாக விளங்குகிறது. இந்தக் கோவில் இந்து அறநிலையத் துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவிலில் தமிழகம் மட்டுமன்றி தென் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தங்கள் குடும்பத்தில் உள்ள சனி தோஷம் நீங்கவும், திருமணத் தடைகள் காரியத் தடைகள் விலகவும் இங்கு வந்து பரிகாரம் செய்து சனீஸ்வரனை வழிபட்டு செல்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வருகின்ற 5 சனிக்கிழமைகளில் குச்சனூர் சனீஸ்வரர் பெருமான் கோவிலில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று ஆடி 3-வது சனிக்கிழமை மற்றும் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு அதிகாலையிலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
தங்கள் தோஷம் விலக அருகில் உள்ள சுரபி நதிக்கரையில் நீராடி காகத்திற்கு எள் சாதம் வைத்து நல்லெண்ணெய் மற்றும் எள் தீபங்கள் ஏற்றி காக வாகனம் வாங்கி தலையை சுற்றி வைத்து பரிகாரங்கள் செய்தனர்.
- நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- ஆடி பெருக்கை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
இன்று ஆடி 18, ஆடி பெருக்கை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
ஆடி மாதம் 18ம் தேதி ஆடி பெருக்கு என்று நம் முன்னோர்கள் கருதி இந்த நாளை புனித நாளாக கருதி விவசாய பணிகள் தொடங்குவது, வீடுகள் கட்டுமான பணிக்கு நாள் செய்வது என செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி பெருக்கை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30க்கு விஸ்வரூப தரிசனம், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
- இன்று ஆடிப்பெருக்கு.
- திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் சிறப்பு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-18 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி மாலை 4.55 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம்: புனர்பூசம் நண்பகல் 1.42 மணி வரை பிறகு பூசம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று போதாயன அமாவாசை. ஆடிப்பதினெட்டு. திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியில் ஐந்து கருட சேவை. நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் அன்ன வாகனத்திலும், இரவு பாலகுதிரை வாகனத்திலும் திருவீதி உலா. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் சிறப்பு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-பக்தி
மிதுனம்-உண்மை
கடகம்-சுகம்
சிம்மம்-பாராட்டு
கன்னி-உழைப்பு
துலாம்- தாமதம்
விருச்சிகம்-பரிவு
தனுசு- அமைதி
மகரம்-ஆதரவு
கும்பம்-விவேகம்
மீனம்-அன்பு
- படையல் உணவை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.
- ஐந்து பேருக்கு தானம் கொடுக்க வேண்டும்.
* ஆடி அமாவாசை அன்று வாசலில் கோலமிடக் கூடாது.
* ஆடி அமாவாசை அன்று காலையில் வீட்டை சுத்தம் செய்யவோ, சமையல் அறையை மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்யவோ கூடாது.
* காலையில் நீண்ட நேரம் தூங்கக் கூடாது. காலை 5 முதல் 6 மணிக்குள்ளாக எழுந்து, வீட்டில் உள்ள அனைவரும் குளித்து விட வேண்டும்.
* நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்தாலும், வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு விளக்கேற்றாமல் இருக்கக் கூடாது. பூஜை அறையில் விளக்கேற்றுவதுடன், தனியாக முன்னோர்கள் படத்திற்கு முன் ஒரு அகல் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.
* முன்னோர்களுக்கு படையல் போட்ட உணவை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது.
* வெளி ஆட்களை வீட்டிற்கு அழைத்து உணவளிக்கக் கூடாது. அப்படி உணவளிப்பதாக இருந்தால் பகல் 12 மணிக்கு பிறகு தான் உணவளிக்க வேண்டும்.

* முன்னோர்களுக்கு படையல் போடும் போது ஒற்றை இலையாக போடக் கூடாது. இரண்டு இலைகள் போட்டு தான் படையல் இட வேண்டும்.
* பித்ருக்கள் போட்டோக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக வைக்கக் கூடாது. ஒரே இடத்தில் வைத்தே படையல் போட வேண்டும்.
* காகத்திற்கு சாதம் வைத்த பிறகு தான் பித்ருக்களுக்கு படையில் இட வேண்டும். அதற்கு முன்பாக படையல் இட கூடாது.
* ஆடி அமாவாசை அன்று நகம் வெட்டக் கூடாது.
* பெண்கள் தலையை விரித்து போட்டபடி இருக்கக் கூடாது.
* நெற்றியில் குங்குமம், திருநீறு இல்லாமல் இருக்கக் கூடாது.
* பெண்கள் குளித்து விட்டு தான் சமையல் செய்ய வேண்டும். குளிக்காமல் சமையல் அறைக்குள் செல்லக் கூடாது.
* ஆடி அமாவாசை படையல் என்பது நம்முடைய முன்னோர்களின் ஆசியை பெறுவதற்காக செய்யக் கூடியது என்பதால் நைட்டி நோன்ற உடைகள் அணிந்து சமைக்கக் கூடாது. புடவை போன்ற பாரம்பரிய உடைகள் அணிந்து சமைப்பதும், விளக்கேற்றுவதும் நல்லது.

தானம் செய்ய வேண்டியவை :
ஆடி அமாவாசை அன்று 5 பேருக்கு, 5 விதமான பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும். ஒரு கிலோ அரிசி ஒருவருக்கு, ஒரு கிலோ பாசிப்பருப்பு ஒருவருக்கு , ஒரு கிலோ வெல்லம் ஒருவருக்கு , அரை கிலோ நெய் ஒருவருக்கு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஒருவருக்கு என ஐந்து பேருக்கு அன்றைய தினம் தானம் கொடுக்க வேண்டும்.
இந்த ஐந்து தானங்களை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். வருடம் முழுவதும் வரும் அமாவாசையில் பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுக்க தவறினாலும், அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் போதும் ஏதாவது குறை ஏற்பட்டிருந்தாலும் அதனால் ஏற்படும் பித்ருதோஷமானது ஆடி அமாவாசையில் இந்த ஐந்து தானங்களை கொடுப்பதால் நீங்கி விடும் என்பது ஐதீகம்.






