என் மலர்
கோவில்கள்
பல்வேறு தனிச் சிறப்புகள் கொண்ட தலமாக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள, திருவாசி வடகரை தேவாரத் தலம் திகழ்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சோழ மன்னன் திருப்பணி செய்த திருக்கோவில், திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடிய திருத்தலம், அன்னை பார்வதி அன்னப் பறவையாய் இறைவனை வழிபட்ட தலம், சுந்தரருக்கு இறைவன் பொற்கிழி தந்த கோவில், கொண்டை சடையோடு அரவத்தை அழுத்திய படி ஆனந்தத் தாண்டவமாடும் அபூர்வ நடராஜர் அருளும் ஆலயம் என பல்வேறு தனிச் சிறப்புகள் கொண்ட தலமாக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள, திருவாசி வடகரை தேவாரத் தலம் திகழ்கிறது.
இந்த ஆலயத்திற்கு சோழன், பாண்டியன், விஜயநகர மன்னன், ஹொய்சால மன்னன் என பலரும் திருப்பணி செய்து மகிழ்ந்துள்ளனர். முதலாம் ராஜராஜன், ராஜராஜ விடங்கன் எனும் சிவலிங்க மூர்த்தம் நிறுவியதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இத்தலத்து இறைவன் சமீவனநாதன் என்றும், சமீவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படு கிறார். மேலும் பிரம்ம தேவன் வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர், மாற்றறிவரதர், மாற்றுரைவரதீஸ்வரர் போன்ற பெயர்களிலும் வழங்கப்படுகிறார்.
உமாதேவி ஒரு முறை சிவபெருமானிடம், “28 சிவாகமங்களில் விருப்பமான செயல் ஒன்றை அருள வேண்டும்” என்று கேட்டார்.
அதற்கு இறைவன், “நான் விரும்புவது பூசனையே. அதுவும் காவிரி வடகரையில், தேவர்கள், முனிவர்கள் தவம் செய்யும் திருப்பாச்சிலாச்சிராமம் தலமே என் விருப்பம்” என்றார்.
அதைக் கேட்டதும், பார்வதி தேவி யாரும் அறியாத வகையில், அன்னப் பறவை வடிவம் எடுத்து இத்தலம் வந்து இறைவனை வழிபட்டார். அன்னையின் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், “நீ வழிபட்ட இந்த தலத்தில் உள்ள தீர்த் தத்தில் நீராடி வணங்குவோரின் பிணிகள் நீங்கும். இந்த தீர்த்தமானது ‘அன்னமாம் பொய்கை’ என்று வழங்கப்படும்” என்று அருளினார் என்கிறது இந்த ஆலயத்தின் தல வரலாறு.

சுந்தரமூர்த்தி நாயனார், சிவபெருமானிடம் பொன் வேண்டி பதிகம் பாடினார். இதையடுத்து அவருக்கு இறைவன் பொற்கிழி வழங்கினார். ஆனால் அந்த பொன் அனைத்தும் மாற்று குறைவாக இருப்பதாக, இறைவனிடம் சுந்தரர் உரைத்துக் காட்டினார். இதனை அறிந்த இறைவன் அதை மாற்றி வழங்கினார். இதனால் இத்தல இறைவனுக்கு ‘மாற்றறிவரதர், மாற்றுரைவரதீஸ்வரர்’ என்று பெயர் வந்தது.
ஆலய அமைப்பு
ஐந்து நிலை ராஜகோபுரம், எதிரே நான்கு கால் கல் மண்டபம் என எழிலாக காட்சி தருகிறது, இந்த ஆலயம். ராஜகோபுரத்தைக் கடந்ததும், தென்பகுதியில் பாலாம்பிகை அம்மன் சன்னிதி இருக்கிறது. அம்மன் சன்னிதிக்கு எதிரே அன்னமாம் பொய்கை தீர்த்தம் மற்றும் வன்னி மரம் உள்ளது. முதல் கோபுரம் மற்றும் இரண்டாம் கோபுரத்தின் இடையே ‘ஆவுடையாப்பிள்ளை மண்டபம்’ எனும் பெயர் கொண்ட மகாமண்டபம் அமைந்துள்ளது. இதில் கொடிமரம், பலிபீடம், நந்தி சிலை உள்ளன.
முதல் கோபுர நுழைவு வாசலின் தெற்கே விநாயகர், வடக்கே அபூர்வ நடராஜர் சன்னிதிகள் உள்ளன. அதற்கு நேராக பிரமாண்ட கலைக்கோவிலாக சுவாமியின் கருவறை அமைந்துள்ளது. கருவறையில் மாற்றறிவரதர் எழிலாக காட்சி தருகிறார். கருவறைச் சுற்றில் அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுவரர் திருமேனிகள் உள்ளன.
சகஸ்ர மண்டபத்தில், 1008 லிங்கம் அமைந்துள்ளது. தென் மண்டபத்தில் அறுபத்து மூவர், கோடி விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், திருமால், கஜலட்சுமி, சந்திரசேகரர் மண்டபம் என ஒருங்கே அமைந்துள்ளன. இங்கு திருஞானசம்பந்தர் வலக்கை சுட்டுவிரல் நீட்டியபடி, இடக்கையில் கிண்ணம் தாங்கி நிற்கிறார். சுந்தரர் இரண்டு கைகளாலும் தாளங்களைக் கொண்டு நின்றகோலத்தில் காட்சியளிக்கிறார். இவை இரண்டுமே அபூர்வமானவை.

ஆண்டுதோறும் வைகாசி பவுர்ணமியை முடிவாகக் கொண்டு, புனர்பூச நட்சத்திரத்தில் கொடியேற்றி, 10 நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர மாதந்தோறும் சிவாலய விழாக்கள் எந்த வித குறைகளும் இன்றி நடத்தப்படுகின்றன. வன்னி மரம் இந்த ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது. தலத் தீர்த்தமாக அன்னமாம் பொய்கை விளங்குகிறது. இதற்கு பிரம்ம தீர்த்தம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் தான் சுந்தரர் தங்கத்தைத் தேய்த்து பார்த்து சோதனை செய்தார் என்று சொல்லப் படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சுவாமி தரி சனம் செய்யலாம்.
சமீவனநாதர் ஆலயம் அமைந்த திருவாசியைச் சுற்றிலும், அடைக்கலம் காத்தான், தேரடி கருப்பு, மதுரைவீரன், ஆச்சிராயி, விளக்கவந்தாள் என பல கோவில்கள் காணப்படுகின்றன.
அமைவிடம்
திருச்சி மாவட்டம், மண்ணச்ச நல்லூர் வட்டத்தில் திருவாசி அமைந்துள்ளது. இதன் பழங்காலப் பெயர் ‘திருப்பாச்சிலாச்சிராமம்’ என்பதாகும். திருச்சியில் இருந்து முக்கிய சாலை வழியாக சேலம் செல்லும் வழித்தடத்தில் சமயபுரம் டோல்கேட் உள்ளது. அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் திருவாசி இருக்கிறது.
பாம்பை மிதிக்கும் ஆடல்வல்லான்
இந்த ஆலயத்தில் உள்ள நடராஜப் பெருமான், விரிசடைக்கு பதிலாக தூக்கிய கொண்டையில் காட்சி தருகிறார். பொதுவாக நடராஜரின் காலில் முயலகன் இருப்பது தான் வழக்கம். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள நடராஜர், தனது காலடியில் பாம்பு ஒன்றை அழுத்தி பிடித்தபடி ஆனந்த நடனம் புரிகிறார். இது தனிச் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்தக் கலைநயம் ரசித்து மகிழும் விதமாக அமைந்துள்ளது.

நோய் தீர்த்த பதிகம்
கொல்லிமலையை எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான், கொல்லிமழவன் என்ற மன்னன். அவனது மகளுக்கு முயலக நோய் என்னும் வலிப்புடன் கூடிய உணர்வற்ற நிலை ஏற்பட்டது. பல மருத்துவர்களை வரவழைத்து வைத்தியம் பார்த்தும் நோய் தீரும் வழி பிறக்கவில்லை. இதையடுத்து மன்னன் இத்தலத்து இறைவனிடம் சரண்புகுந்தான். அப்போது இந்த ஆலயத்திற்கு வந்திருந்த திருஞானசம்பந்தர், மன்னனின் மகளுடைய நிலையை அறிந்து வருந்தினார். பின்னர் இறைவனை நினைத்து ‘துணிவளர் திங்கள்’ என்ற பதிகத்தைப் பாடினார். உடனடியாக மன்னனின் மகளது நோய் நீங்கியது.
தூணுக்குள் உருண்டைக் கல்
இத்தலம் சிற்பக் கலைக்கும் சிறப்பு பெற்ற ஆலயமாக அமைந்திருக்கிறது. இங்குள்ள மகாமண்டபத்தில் உள்ள கல்தூண் ஒன்றில், கல்லில் கம்பிகள் அமைத்து அதற்குள் பெரிய உருண்டைக் கல் ஒன்று, அங்கும் இங்கும் அசையும் விதமாக வடிவமைத்து வைத்திருக் கிறார்கள். அந்தக் கல்லை வெளியில் எடுக்க முடியாது. இந்த அமைப்பு சிற்பியின் திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தூணுக்குள் உருண்டைக் கல்
இத்தலம் சிற்பக் கலைக்கும் சிறப்பு பெற்ற ஆலயமாக அமைந்திருக்கிறது. இங்குள்ள மகாமண்டபத்தில் உள்ள கல்தூண் ஒன்றில், கல்லில் கம்பிகள் அமைத்து அதற்குள் பெரிய உருண்டைக் கல் ஒன்று, அங்கும் இங்கும் அசையும் விதமாக வடிவமைத்து வைத்திருக் கிறார்கள். அந்தக் கல்லை வெளியில் எடுக்க முடியாது. இந்த அமைப்பு சிற்பியின் திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த ஆலயத்திற்கு சோழன், பாண்டியன், விஜயநகர மன்னன், ஹொய்சால மன்னன் என பலரும் திருப்பணி செய்து மகிழ்ந்துள்ளனர். முதலாம் ராஜராஜன், ராஜராஜ விடங்கன் எனும் சிவலிங்க மூர்த்தம் நிறுவியதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இத்தலத்து இறைவன் சமீவனநாதன் என்றும், சமீவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படு கிறார். மேலும் பிரம்ம தேவன் வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர், மாற்றறிவரதர், மாற்றுரைவரதீஸ்வரர் போன்ற பெயர்களிலும் வழங்கப்படுகிறார்.
உமாதேவி ஒரு முறை சிவபெருமானிடம், “28 சிவாகமங்களில் விருப்பமான செயல் ஒன்றை அருள வேண்டும்” என்று கேட்டார்.
அதற்கு இறைவன், “நான் விரும்புவது பூசனையே. அதுவும் காவிரி வடகரையில், தேவர்கள், முனிவர்கள் தவம் செய்யும் திருப்பாச்சிலாச்சிராமம் தலமே என் விருப்பம்” என்றார்.
அதைக் கேட்டதும், பார்வதி தேவி யாரும் அறியாத வகையில், அன்னப் பறவை வடிவம் எடுத்து இத்தலம் வந்து இறைவனை வழிபட்டார். அன்னையின் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், “நீ வழிபட்ட இந்த தலத்தில் உள்ள தீர்த் தத்தில் நீராடி வணங்குவோரின் பிணிகள் நீங்கும். இந்த தீர்த்தமானது ‘அன்னமாம் பொய்கை’ என்று வழங்கப்படும்” என்று அருளினார் என்கிறது இந்த ஆலயத்தின் தல வரலாறு.

பாலாம்பிகை, தூணுக்குள் உருண்டைக் கல்
ஆலய அமைப்பு
ஐந்து நிலை ராஜகோபுரம், எதிரே நான்கு கால் கல் மண்டபம் என எழிலாக காட்சி தருகிறது, இந்த ஆலயம். ராஜகோபுரத்தைக் கடந்ததும், தென்பகுதியில் பாலாம்பிகை அம்மன் சன்னிதி இருக்கிறது. அம்மன் சன்னிதிக்கு எதிரே அன்னமாம் பொய்கை தீர்த்தம் மற்றும் வன்னி மரம் உள்ளது. முதல் கோபுரம் மற்றும் இரண்டாம் கோபுரத்தின் இடையே ‘ஆவுடையாப்பிள்ளை மண்டபம்’ எனும் பெயர் கொண்ட மகாமண்டபம் அமைந்துள்ளது. இதில் கொடிமரம், பலிபீடம், நந்தி சிலை உள்ளன.
முதல் கோபுர நுழைவு வாசலின் தெற்கே விநாயகர், வடக்கே அபூர்வ நடராஜர் சன்னிதிகள் உள்ளன. அதற்கு நேராக பிரமாண்ட கலைக்கோவிலாக சுவாமியின் கருவறை அமைந்துள்ளது. கருவறையில் மாற்றறிவரதர் எழிலாக காட்சி தருகிறார். கருவறைச் சுற்றில் அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுவரர் திருமேனிகள் உள்ளன.
சகஸ்ர மண்டபத்தில், 1008 லிங்கம் அமைந்துள்ளது. தென் மண்டபத்தில் அறுபத்து மூவர், கோடி விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், திருமால், கஜலட்சுமி, சந்திரசேகரர் மண்டபம் என ஒருங்கே அமைந்துள்ளன. இங்கு திருஞானசம்பந்தர் வலக்கை சுட்டுவிரல் நீட்டியபடி, இடக்கையில் கிண்ணம் தாங்கி நிற்கிறார். சுந்தரர் இரண்டு கைகளாலும் தாளங்களைக் கொண்டு நின்றகோலத்தில் காட்சியளிக்கிறார். இவை இரண்டுமே அபூர்வமானவை.

அபூர்வ நடராஜர்
ஆண்டுதோறும் வைகாசி பவுர்ணமியை முடிவாகக் கொண்டு, புனர்பூச நட்சத்திரத்தில் கொடியேற்றி, 10 நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர மாதந்தோறும் சிவாலய விழாக்கள் எந்த வித குறைகளும் இன்றி நடத்தப்படுகின்றன. வன்னி மரம் இந்த ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது. தலத் தீர்த்தமாக அன்னமாம் பொய்கை விளங்குகிறது. இதற்கு பிரம்ம தீர்த்தம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் தான் சுந்தரர் தங்கத்தைத் தேய்த்து பார்த்து சோதனை செய்தார் என்று சொல்லப் படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சுவாமி தரி சனம் செய்யலாம்.
சமீவனநாதர் ஆலயம் அமைந்த திருவாசியைச் சுற்றிலும், அடைக்கலம் காத்தான், தேரடி கருப்பு, மதுரைவீரன், ஆச்சிராயி, விளக்கவந்தாள் என பல கோவில்கள் காணப்படுகின்றன.
அமைவிடம்
திருச்சி மாவட்டம், மண்ணச்ச நல்லூர் வட்டத்தில் திருவாசி அமைந்துள்ளது. இதன் பழங்காலப் பெயர் ‘திருப்பாச்சிலாச்சிராமம்’ என்பதாகும். திருச்சியில் இருந்து முக்கிய சாலை வழியாக சேலம் செல்லும் வழித்தடத்தில் சமயபுரம் டோல்கேட் உள்ளது. அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் திருவாசி இருக்கிறது.
பாம்பை மிதிக்கும் ஆடல்வல்லான்
இந்த ஆலயத்தில் உள்ள நடராஜப் பெருமான், விரிசடைக்கு பதிலாக தூக்கிய கொண்டையில் காட்சி தருகிறார். பொதுவாக நடராஜரின் காலில் முயலகன் இருப்பது தான் வழக்கம். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள நடராஜர், தனது காலடியில் பாம்பு ஒன்றை அழுத்தி பிடித்தபடி ஆனந்த நடனம் புரிகிறார். இது தனிச் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்தக் கலைநயம் ரசித்து மகிழும் விதமாக அமைந்துள்ளது.

பாம்பை மிதிக்கும் ஆடல்வல்லான்
கொல்லிமலையை எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான், கொல்லிமழவன் என்ற மன்னன். அவனது மகளுக்கு முயலக நோய் என்னும் வலிப்புடன் கூடிய உணர்வற்ற நிலை ஏற்பட்டது. பல மருத்துவர்களை வரவழைத்து வைத்தியம் பார்த்தும் நோய் தீரும் வழி பிறக்கவில்லை. இதையடுத்து மன்னன் இத்தலத்து இறைவனிடம் சரண்புகுந்தான். அப்போது இந்த ஆலயத்திற்கு வந்திருந்த திருஞானசம்பந்தர், மன்னனின் மகளுடைய நிலையை அறிந்து வருந்தினார். பின்னர் இறைவனை நினைத்து ‘துணிவளர் திங்கள்’ என்ற பதிகத்தைப் பாடினார். உடனடியாக மன்னனின் மகளது நோய் நீங்கியது.
தூணுக்குள் உருண்டைக் கல்
இத்தலம் சிற்பக் கலைக்கும் சிறப்பு பெற்ற ஆலயமாக அமைந்திருக்கிறது. இங்குள்ள மகாமண்டபத்தில் உள்ள கல்தூண் ஒன்றில், கல்லில் கம்பிகள் அமைத்து அதற்குள் பெரிய உருண்டைக் கல் ஒன்று, அங்கும் இங்கும் அசையும் விதமாக வடிவமைத்து வைத்திருக் கிறார்கள். அந்தக் கல்லை வெளியில் எடுக்க முடியாது. இந்த அமைப்பு சிற்பியின் திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தூணுக்குள் உருண்டைக் கல்
இத்தலம் சிற்பக் கலைக்கும் சிறப்பு பெற்ற ஆலயமாக அமைந்திருக்கிறது. இங்குள்ள மகாமண்டபத்தில் உள்ள கல்தூண் ஒன்றில், கல்லில் கம்பிகள் அமைத்து அதற்குள் பெரிய உருண்டைக் கல் ஒன்று, அங்கும் இங்கும் அசையும் விதமாக வடிவமைத்து வைத்திருக் கிறார்கள். அந்தக் கல்லை வெளியில் எடுக்க முடியாது. இந்த அமைப்பு சிற்பியின் திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் தலையநல்லூரில் மிகவும் பழமையான பொன்காளியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஈரோடு மாவட்டம் தலையநல்லூரில் பொன்காளியம்மன் ஆலயம் உள்ளது. மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் அருளும் அம்மன், வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை கொடுத்து வளமான வாழ்க்கையை வழங்குபவளாக திகழ்கிறாள். இந்த ஆலயத்தில் சிற்ப சாஸ்த்திர முறைப்படி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், பூத மண்டபம், நிருத்த மண்டபம், ராஜ மண்டபம் அமைந்துள்ளன. மேலும் வானளாவிய விமானத்துடன் சக பரிவார தெய்வங்களாகிய விநாயகர், மாதேஸ்வரன், வண்ணார கருப்பணன் சாமி, பரிவார மூர்த்திகள், பாம்பாட்டி சித்தர் ஆகிய தெய்வங்களும் இங்கு அருளாட்சி செய்கிறார்கள்.
இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் பொன்காளி அம்மன் தன் தலையில் கிரீடமாக அக்னி ஜுவாலையையும், காதில் தோடாக ராகு-கேதுக்களையும் அணிந்திருக்கிறாள். மேலும் தன்னுடைய எட்டு கரங்களிலும் சூலம், டமருகம், கட்கம், கேடயம், பட்சி, கிண்ணம், கண்டம், அக்னியை தாங்கியிருக்கிறாள். அதோடு அசுரன் ஒருவனை காலில் மிதித்த கோலமாகவும், உதட்டில் புன்னகையுடன் அன்னையின் திருக்காட்சி இருக்கிறது.
கொங்குநாட்டில் உள்ள கூறைகுல, விளையன் குல, கொங்கு வேளாளர்களின் குலதெய்வமாக இந்த பொன்காளியம்மன் திகழ்கிறாள். இந்த ஆலயத்தில் வருடந்தோறும் பங்குனி மாதம், அமாவாசை முடிந்து வரும் முதல் செவ்வாய்க்கிழமையில் பூச்சாட்டு விழா நடைபெறுகிறது. பொன்காளி அம்மனின் உற்சவரை, சிவகிரி வேலாயுத சுவாமி திருக்கோவிலில் இருந்து அழைத்து வந்து, உற்சவத் திருவிழா நடத்துவார்கள்.
உற்சவக் காலங்களில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், கிராமத்தை அமைதிப்படுத்துவதே ‘கிராம சாந்தி’ ஆகும். விழா யாவும் மங்களகரமாக, நிறைவுடன் நடப்பதற்காகவும், தெய்வங்கள் கிராமத்தில் இருந்து அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டியும் தெய்வங்களுக்கும், ஆச்சாரியார்களுக்கும் குலகுரு காப்பு அணிவிப்பார்.
காவிரி தீர்த்தம் கொண்டு வருதல், பச்சை விரதம், அம்மனை அழைத்து வருதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். முப்பாட்டு பேழையை அலங்காரம் செய்து பச்சை மாவை விளக்காக வைத்து, பசுநெய் விட்டு திரிபோட்டு தீபம் ஏற்றுவார்கள். இத்தீபத்திற்கு ‘முப்பாட்டு மாவிளக்கு’ என்று பெயர். பேழை மூடியை சிவப்பு வண்ணத்துணி கொண்டு போர்த்தி, இதில் அம்மன் பூஜைக்குத் தேவையான தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, இளநீர், தென்னம்பாளை ஆகியவை வைத்து பூவில் அலங்காரம் செய்வார்கள். இதற்கு ‘படைக்களம்’ என்று பெயர்.

மதுரை பாளையக்காரர் ஆட்சிக்கு முன்பு இருந்தே, இத்திருக்கோவிலின் ஆகம கிரியா பாரம்பரிய மிராசுப்படி, சிவகிரி ஆதீனமாக இருப்பவர்கள் உற்சவ கிரியைகளை நடத்தி வருகிறார்கள். அம்மன் ஆலயத்தில் உள்ள இரட்டை சிம்ம வாகனத்தின் பின்புறம், இரண்டு குதிரை துள்ளல் பிடிப்பார்கள். ஒன்று கூறைகுலத்தாரும், மற்றொன்றை விளையன் குலத்தாரும் பிடிப்பார்கள். இரண்டு குதிரையும் தலை அசைத்ததும் தேர்த்திருவிழா தொடங்கும். ‘மூணே முக்கால் நாழிகையில் நாலே முக்கால் தேர்’ என்ற பழமொழியுடன் அமைந்தது தேர்த் திருவிழா. மூணே முக்கால் என்பது கால அளவையும், நாலே முக்கால் என்பது தேரின் உயர அளவையும் குறிக்கும்.
தேர் புறப்படும் முன்னர் லட்சக் கணக்கான பக்தர்கள், கையில் தீப்பந்தம் ஏந்தி தேருடன் பவனி வருவார்கள். தேரில் கூறைகுல, விளையன்குல குலகுரு சிவகிரி ஆதீனம், பொன்காளி அம்மனுடன் தேரில் அமர்ந்து வருவார். குல தெய்வத்தையும், குல குருவையும் ஒருங்கே தரிசனம் செய்யும் வாய்ப்பும் அருளாசியும் அனைத்து பக்தர்களுக்கும் கிடைக்கும். ஏந்தி செல்லும் தீப்பந்தங்கள், தேரின் முன்வடமாகவும், பின்வடமாகவும் காட்சி தரும். இந்த ஆயிரம் ஆயிரம் தீவட்டியுடன் அம்மன் செல்லும் அற்புதத்தைக் காண கண்கள் கோடி வேண்டும்.
தேர்த் திருவிழா முடிந்தவுடன், காவல்தெய்வம் வண்ணாரக் கருப் பணன் சுவாமிக்கு பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெறும். விழா யாவும் மங்கள நிறைவு பெற்றதை முன்னிட்டு பக்தர்கள் மஞ்சள் நீராடல் நடத்துவார்கள். திருவிழாவின் போது மட்டும் அம்மனுக்கு வெண்பட்டு ஆடையை அணிவிப்பார்கள். திருக்கோவிலின் முன்பு பாம்பாட்டி சித்தர் உருவம் உள்ளது. இதில் பல்லி சகுனம் சொல்லும். திருக்கோவிலில் பூச் சகுனம் பார்க்கும் வழக்கமும் இருக்கிறது. திருவிழா காலங்களில் இந்த சகுனங்கள் பார்ப்பது இல்லை.
பொன்காளியம்மனை ராகுகாலம், அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களில் வழிபாடு செய்தால், இல்வாழ்க்கையில் எல்லாவித சிறப்பும் ஏற்படும். மேலும், திரு மணம், குழந்தைபாக்கியம் மற்றும் சகல செல்வங்களையும் வாரி வழங்குவதில் இந்த அன்னைக்கு நிகர் அவள் தான்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம், சிவகிரி அருகே அமைந்திருக்கிறது தலையநல்லூர். ஈரோட்டில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் சிவகிரி அமைந்துள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் செல்லும் வழியில் உள்ளது வாரணபுரீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருச்சிக்கு அருகே உள்ள தலம் திருவானைக்காவல். இங்கு சிவபெருமான் வெண் நாவல் மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது நாவல் மரத்தின் இலைகள் காய்ந்து சருகுகளாய் அவர் மேல் விழுந்தன.
இதைக் கண்ட சிலந்தி ஒன்று பதறியது. ‘சிவபெருமான் மேல் சருகுகள் விழுவதா?’ என்று எண்ணிய சிலந்தி, அதை தடுக்க முயற்சி செய்தது. சிவபெருமானின் தலைக்கு மேல் தன் எச்சிலால் பந்தல் போல் வலை பின்னி, காய்ந்த இலைகள் அவர் மேல் விழாமல் தடுத்தது.
அங்கு யானை ஒன்று தினந்தோறும் காவிரி நீரை தன் துதிக்கையில் சுமந்து வந்து இறைவனை நீராட்டி வந்தது. சிலந்தி வலையைக் கண்ட யானைக்கு கோபம் வந்தது. வெகுண்ட அந்த யானை அந்த வலையை அறுத்து எறிந்தது. மீண்டும் மீண்டும் சிலந்தி வலை அமைக்க, யானை கோபங்கொண்டு மீண்டும் மீண்டும் அந்த வலையை அறுத்து எறிந்தது.
கோபம் கொண்ட சிலந்தி ஒரு நாள் நீரால் யானை வழிபடும் போது அதன் துதிக்கையினுள் புகுந்து கடித்தது. வலி தாங்காத யானை, துதிக்கையை தரையில் வேகமாக அடிக்க சிலந்தி இறந்தது; யானையும் இறந்தது. இருவரையும் ஆட்கொண்டார் இறைவன்.
இறைவன் அருளால் அந்த சிலந்தி மறுபிறவியில் சோழ மன்னராகிய சுபதேவருக்கும் கமலாவதிக்கும் மகனாகத் தோன்றியது. அந்த மகனே கோச்செங்கட் சோழன். இந்த மன்னன் தன் முற்பிறவியின் நினைவால் யானைகள் புக முடியாத யானைகள் தீங்கு செய்ய முடியாத மாடக் கோவில்களை கட்ட முடிவு செய்தான். யானை ஏற முடியாத கட்டுமலை போன்ற அமைப்புடைய உயரமான மாடக் கோவில்களை அமைத்தான். இத்திருப்பணி ‘யானை ஏறாதத் திருப்பணி’ என்று பெயர் பெற்றது. இந்தச் சோழன் 70-க்கும் மேற்பட்ட மாடக் கோவில்களைக் கட்டினான். தான் முற்பிறவியில் வழிபட்ட திருவானைக் கோவில் ஆலயத்தை முதலில் கட்டினான்.
இந்த மன்னன் கட்டிய மாடக் கோவில்களில் ஒன்று தான் பனமங்கலத்தில் உள்ள வாரணபுரீஸ்வரர் ஆலயம். இங்குள்ள இறைவன் வாரணபுரீஸ்வரர். இறைவி வடிவாம்பிகை. அன்னையின் இன்னொரு பெயர் வடிவுடையம்மன். கீழ்திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் இறைவனை தரிசிக்க, 12 படிகள் ஏறி வலது புறம் திரும்ப வேண்டும். அங்கு மகா மண்டபம் அடுத்த கருவறையில் கிழக்கு நோக்கி, வாரணபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
சுயம்புவான இந்த மூலவர் திருமேனி 3½ அடி அளவு ஆவுடையாரின் மேல் பகுதியில் பக்தர்கள் வழிபடும் வகையிலும், பூமிக்கு அடியில் 13 அடியும் உள்ளதாக சொல்லப்படுகிறது. சுமார் 19½ அடி உயர இறைவனின் இந்த திருமேனி, உளிபடாதது ஆகும். ருத்திராட்சத்தின் மேற்பரப்பு மேடும் பள்ளமாய் இருப்பது போல் இறைவனின் முழு மேனி அமைப்பு காணப்படுகிறது.
சித்திரை முதல் நாள் ஆண்டுப் பிறப்பு இறைவனுக்கு இங்கு மிகவும் விசேஷமான நாளாகும். அன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை இறைவனுக்கு மகா அபிஷேகம் நடைபெறும். அரிசி மாவு, திரவியப் பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி மற்றும் பழங்கள் என 21 வகை அபிஷேகங்கள் செய்யப்படும். இந்த அபிஷேக நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, கடன் நிவர்த்தி ஆகும் என்பதும், தொழிலில் அபிவிருத்தி உண்டாகும் என்பதும் நம்பிக்கை.

இறைவனின் தேவக் கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தில் மேற்கில் கணபதி, வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணியர், வடக்கில் சண்டிகேஸ்வரர், வட கிழக்கில் நவக்கிரக நாயகர்கள், கிழக்கில் காலபைரவர் சன்னிதி காணப்படுகின்றன.
இறைவனின் சன்னிதிக்கு இடது புறம் அன்னை வடிவுடையம்மன் தனி சன்னிதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு இங்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்கள் தாமரை மலரை தாங்கி நிற்க, கீழ் இருகரங்கள் அபய வரத முத்திரை காட்டுகின்றன. நவராத்திரியின் போது தினமும் அன்னையை வித விதமாக அலங்கரிப்பார்கள்.
ஆடி மற்றும் தை மாத அனைத்து வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆடிப் பூரம் அன்று அன்னையை வளையல்களால் அலங்கரிப்பார்கள். பின் அந்த வளையல்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அன்றைய தினம் முளை கட்டிய பாசிப்பயிறை அம்மன் மடியில் கட்டி, பின் அதை பிள்ளைப் பேறு வேண்டுபவர்களுக்கும், திருமணம் கைகூட வரம் கேட்கும் பெண்களுக்கும் பிரசாதமாகத் தருகின்றனர்.
பங்குனி உத்திரம் அன்று பால் காவடி, அலகு காவடி சுமந்து வரும் பக்தர்கள், அக்னி பிரவேசம் செய்து முருகனை வேண்டுகின்றனர். மறுநாள் முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் வீதியுலா வருவார். இங்குள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் ஹோமம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு எதிரிகள் பயம் விலகும்.
ஆலயத்தின் தல விருட்சம் வில்வம். இங்கு மணிவிழா, சதாபிஷேகம் போன்றவை செய்யப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயத்தில், தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
பித்ரு தோஷ பூஜை :
இந்த ஆலயத்தில் அனைத்து திங்கட் கிழமைகளிலும் இறைவனுக்கு பித்ரு தோஷ நிவர்த்தி ஆராதனை நடைபெறுகிறது. ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், நீராடி ஈர உடையுடன் இந்த பூஜையில் கொள்வதுடன், இறைவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பின் ஈர உடையை தானம் செய்து விட்டு, புது உடை அணிந்து கொள்ள அவர்கள் தோஷம் விலகும் என்பது ஐதீகம். இந்த பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சனை செய்பவர்கள், தட்டில் பூ, பழம், தேங்காய், திரிநூல், எண்ணெய், பச்சரிசி, வெல்லம், கருப்பு எள் ஆகியவற்றை வைக்க வேண்டியது அவசியம். பித்ரு தோஷ பூஜை செய்தவர்கள், வீடு திரும்பியதும், வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுக்க வேண்டும்.
அமைவிடம் :
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ தொலைவில் பனமங்கலம் உள்ளது.

இந்த ஆலயத்தில் கற்பூரம் ஏற்றுவது கிடையாது. தீபாரதனை மட்டுமே. இங்கு சிவராத்திரி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறும். மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, மாத சிவராத்திரிகளில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு ஆராதனை செய்யப்படுகிறது.

இறைவனின் தேவக் கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தில் மேற்கில் கணபதி, வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணியர், வடக்கில் சண்டிகேஸ்வரர், வட கிழக்கில் நவக்கிரக நாயகர்கள், கிழக்கில் காலபைரவர் சன்னிதி காணப்படுகின்றன.
இறைவனின் சன்னிதிக்கு இடது புறம் அன்னை வடிவுடையம்மன் தனி சன்னிதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு இங்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்கள் தாமரை மலரை தாங்கி நிற்க, கீழ் இருகரங்கள் அபய வரத முத்திரை காட்டுகின்றன. நவராத்திரியின் போது தினமும் அன்னையை வித விதமாக அலங்கரிப்பார்கள்.
ஆடி மற்றும் தை மாத அனைத்து வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆடிப் பூரம் அன்று அன்னையை வளையல்களால் அலங்கரிப்பார்கள். பின் அந்த வளையல்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அன்றைய தினம் முளை கட்டிய பாசிப்பயிறை அம்மன் மடியில் கட்டி, பின் அதை பிள்ளைப் பேறு வேண்டுபவர்களுக்கும், திருமணம் கைகூட வரம் கேட்கும் பெண்களுக்கும் பிரசாதமாகத் தருகின்றனர்.
பங்குனி உத்திரம் அன்று பால் காவடி, அலகு காவடி சுமந்து வரும் பக்தர்கள், அக்னி பிரவேசம் செய்து முருகனை வேண்டுகின்றனர். மறுநாள் முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் வீதியுலா வருவார். இங்குள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் ஹோமம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு எதிரிகள் பயம் விலகும்.
ஆலயத்தின் தல விருட்சம் வில்வம். இங்கு மணிவிழா, சதாபிஷேகம் போன்றவை செய்யப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயத்தில், தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
பித்ரு தோஷ பூஜை :
இந்த ஆலயத்தில் அனைத்து திங்கட் கிழமைகளிலும் இறைவனுக்கு பித்ரு தோஷ நிவர்த்தி ஆராதனை நடைபெறுகிறது. ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், நீராடி ஈர உடையுடன் இந்த பூஜையில் கொள்வதுடன், இறைவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பின் ஈர உடையை தானம் செய்து விட்டு, புது உடை அணிந்து கொள்ள அவர்கள் தோஷம் விலகும் என்பது ஐதீகம். இந்த பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சனை செய்பவர்கள், தட்டில் பூ, பழம், தேங்காய், திரிநூல், எண்ணெய், பச்சரிசி, வெல்லம், கருப்பு எள் ஆகியவற்றை வைக்க வேண்டியது அவசியம். பித்ரு தோஷ பூஜை செய்தவர்கள், வீடு திரும்பியதும், வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுக்க வேண்டும்.
அமைவிடம் :
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ தொலைவில் பனமங்கலம் உள்ளது.
பகவதி அம்மன் ஆலயங்களிலேயே திருவனந்தபுரம் ஆற்றுக்கால் என்ற இடத்தில் உள்ள ‘ஆற்றுக்கால் பகவதி அம்மன்’ கோவிலுக்கு தனிச் சிறப்பு உண்டு.
மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுபவர் பரசுராமர். இவர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக கூறப்படும் இடம் இன்றைய கேரளா. இப்படி இறைவனின் ஆட்சியும் இயற்கையின் ஆட்சியும் நடப்பதால் தான், கேரளாவிற்கு ‘கடவுளின் தேசம்’ என்றும் பெயர் வந்தது. கேரளாவில் உள்ள அம்மன் கோவில்களுக்கென்று தனியாக பெயர்கள் இல்லை. அனைத்து அம்மனுமே ஊரின் பெயரோடு இணைத்து ‘பகவதி அம்மன்’ என்றே அறியப்படுகிறார்கள்.
பகவதி அம்மன் ஆலயங்களிலேயே திருவனந்தபுரம் ஆற்றுக்கால் என்ற இடத்தில் உள்ள ‘ஆற்றுக்கால் பகவதி அம்மன்’ கோவிலுக்கு தனிச் சிறப்பு உண்டு. இங்கு ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் பொங்கல் திருவிழா, இந்த ஆலயத்தின் சிறப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு, திருவனந்தபுரம் நகரில் சாலை ஓரங்கள், வீட்டு வளாகங்கள், தெருக்கள் என்று பல இடங்களிலும் பெண்கள் கூடி பொங்கல் வைப்பார்கள்.
இந்த விழாவானது, பல லட்சம் பேர் அதுவும் பெண்களால் மட்டுமே வைக்கப்படும் பொங்கல் விழாவாகும். அதோடு இந்த பொங்கல் விழா கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்ததாக, இந்த கோவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. அதே போல் 2009-ம் ஆண்டு 30 லட்சம் பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்தது, முந்தைய சாதனையை முறியடித்தது. இப்படி ஆண்டு தோறும் இந்த ஆலயத்தில் பொங்கல் வைப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
மதுரையை எரித்த பிறகு, கண்ணகி கேரள தேசம் சென்றதாக சொல்லப்படுகிறது. அங்கு சென்ற கண்ணகி தேவியை, மன அமைதி அடையச் செய்வதற்காக பெண்கள் பலரும் அவளுக்கு பொங்கல் வைத்து நைவேத்தியம் படைப்பதாக ஐதீகம். மகிஷாசுரனை வதம் செய்த அம்பாள், பக்தர்களின் முன்பாக காட்சி தந்தாள். அவளை வரவேற்கும் விதமாக, பெண்கள் பலரும் பொங்கல் வைத்தனர். அதை நினைவுகூரும் விதமாகத்தான் இந்த பொங்கல் விழா நடைபெறுகிறது என்று மற்றொரு ஐதீகமும் சொல்லப்படுகிறது.
ஆலய வரலாறு :
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் தோன்றியதற்கான ஆதி கதையை தெரிந்து கொள்வோம். சிலப்பதிகாரத்தின் நாயகியும், கற்புக்கரசியுமான கண்ணகி தான், ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்படுகிறது. தன் கணவன் கள்வன் அல்ல என்பதை, பாண்டிய மன்னனிடம் நிரூபணம் செய்து விட்டு, மதுரையை தீக்கு இரையாக்கினாள் கண்ணகி. பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலத்தில் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்கு செல்லும் வழியில், ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினாள். அதன் நினைவாகவே இங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
தவிர ஆற்றுக்கால் பகவதி அம்மன் தோன்றியதற்கு மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. பராசக்தியின் பக்தர் ஒருவர், கிள்ளி என்ற ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய அழகுச் சிறுமி ஒருத்தி வந்தாள். அந்த சிறுமியைக் கண்ட பக்தர், அம்மனே சிறுமியின் உருவில் வந்திருப்பதாக எண்ணினார்.
அதே நேரம் பக்தரைப் பார்த்து அந்த சிறுமி, “ஐயா! என்னை இந்த ஆற்றின் மறுகரையில் கொண்டு போய் விட முடியுமா?” என்று கேட்டாள்.
ஆனால் அன்னையின் உருவமாக அந்த சிறுமியைக் கண்ட பக்தருக்கு அவளை பிரிய மனம் வரவில்லை. எனவே அவளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிக்க நினைத்தார். அதை அந்த சிறுமியிடம் அவர் சொல்ல முற்பட்டபோது, சிறுமி மறைந்தாள். சிறுமி வடிவில் வந்தது அம்பாள் தான் என்பதை எண்ணி, பக்தர் மனம் மகிழ்ந்தார்.
அன்று இரவு பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, “தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் மூன்று கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து என்னை குடியமர்த்துங்கள்” என்றாள்.
மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்கு சென்ற பக்தர், அங்கு மூன்று கோடுகள் இருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்தார். தொடர்ந்து அந்த இடத்தில் சிறிய கோவில் ஒன்றைக் கட்டி, அம்மனை வழிபட்டார். அதுவே நாளடைவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயமாக எழுச்சியுற்றதாக கோவில் வரலாறு சொல்கிறது.
கோவில் அமைப்பு:
ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவில் இருக்கும் ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவ பார்வதியின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றைக் கூறும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
ஆலய நுழைவு வாசலின் மேல் பகுதியில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் போன்றவற்றை தாங்கி, அரக்கியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் உள்ளன. மூல விக்ரகத்தில் ரத்தினங்கள் பதித்து, தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. அம்மனின் கருவறை ‘ஸ்ரீகோவில்’ என்று அழைக்கப்படுகிறது. ஆலய வளாகத்தைச் சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் உள்ளன.
சிறுமிகளின் ஊர்வலம்:
இந்த ஆலயத்தின் பொங்கல் விழா நடைபெறும் அன்று காலையில், சிறுமிகள் பலர் தங்களை அலங்கரித்த நிலையில் அம்மன் சன்னிதானத்திற்கு, குடும்பத்துடன் வந்து அம்மனை வழிபட்டு திரும்புவார்கள். இதை ‘தாலிப்பொலி’ என்று கூறுகிறார்கள். எல்லா சிறுமிகளும் புத்தாடை அணிந்து, தலையில் மலர் கிரீடம் சூடி, கையில் தாம்பாளம் ஏந்தி, அதில் அம்மனுக்குரிய பூஜை பொருட்களை வைத்து, தீபத்தையும் ஏற்றி வைத்து கொண்டு வருவார்கள். சிறுமிகளுடன் அவர்களது பெற்றோர், உறவினர்கள் வருவார்கள். இந்த வழிபாட்டால், சிறுமிகளுக்கு நோய் நொடி வராது. அவர்களது அழகும், செல்வமும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் நல்ல வரன்கள் அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
சிறுவர்களின் குத்தியோட்டம் :
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவில், சிறுவர்களின் குத்தியோட்டமும் சிறப்புமிக்கதாகும். அதாவது 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த வழிபாட்டை நடத்துகிறார்கள். அவர்கள் அனைவரும் மகிஷாசுரமர்த்தினியுடன் ேபாரில் கலந்துெகாண்டு காயமடைந்த படைவீரர்களாக கருதப்படுகிறார்கள். திருவிழா தொடங்கிய மூன்றாம் நாள் சிறுவர்கள் தலைமை அர்ச்சகரிடம் பிரசாதம் பெற்று, கோவிலில் தனி இடத்தில் 7 நாட்கள் தங்கியிருந்து விரதம் கடைப்பிடிப்பார்கள். அந்த 7 நாட்களில் தினமும் நீராடி அம்மனுக்கு சன்னிதியில் ஈர உடையுடன் நின்றபடி 1008 நாமங்களை சொல்லி வழிபட வேண்டும். இந்த விரதத்தை மேற்கொள்வதால், சிறுவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம்.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
திருவனந்தபுரத்தில் இருந்து கிழக்கு கோட்டை சிட்டி பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் ஆற்றுக்கால் திருத்தலம் அமைந்துள்ளது.

அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவிலில் ஆண்கள் மட்டுமே சென்று அடுப்பூதி பொங்கல் வைக்கின்றனர். நேர்த்திகடன் தீர்க்க ஆட்டுக்கிடா, கோழி பலியிட்டு, கறி சமைத்து சுவாமிக்கு படையல் வைத்து வழிபடுகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து 3 கி.மீ., தூரத்தில், கொட்டிப்பள்ளம் நீரோடை அருகே சிங்கிபுரம் ஊராட்சி பழனியாபுரம் காலனி எல்லையில், மிரட்டும் கண்கள், முறுக்கு மீசை, கையில் அரிவாள் சகிதமாக கம்பீரமாக காட்சியளிக்கும் பழமையான முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. ‘அஞ்சலான் குட்டை’ அருகே அமைந்ததால், இக்கோவில் ‘அஞ்சலான் குட்டை முனியப்பன் கோயில்’ என பெயர் பெற்றது.
இரு நூற்றாண்டுக்கு முன், சிங்கிபுரம் காலனி மலைக் குன்றுக்கு அருகில் ஒரு கிராமம் இருந்துள்ளது. தனியாக இருந்த அக்கிராமத்திற்கு அடிக்கடி கொள்ளையர்கள் சென்று, மக்களை தாக்கி பொருட்களை பறித்து சென்றுள்ளனர். கொள்ளையர்களின் அட்டகாசத்தால், அங்கு வசித்த மக்கள் வேறு பகுதியில் குடியேறியுள்ளனர். அதனால், அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவில் ஆள் நடமாட்டமில்லாத அடர்ந்த வனப்பகுதியில் தனிமையானது.
வனப்பகுதியில் அமைந்துள்ளதால் பெண்கள் சென்றால் ‘முனி’ தாக்குவதாகவும், இரவில் குறி சொல்லும் குடுகுடுப்பை வேட்டுவர்கள் கோவிலில் தங்கி சக்தி திரட்டுவதாகவும் கருதி, பெண்கள் சென்றால் தெய்வக்குற்றம் ஏற்படுமெனக் கூறி, பெண்கள் செல்லவும் வழிபடவும் முன்னோர்கள் தடை விதித்துள்ளனர். அதனால், இரு நூற்றாண்டுகள் கடந்தும் அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதில்லை.
ஆண்கள் மட்டுமே சென்று அடுப்பூதி பொங்கல் வைக்கின்றனர். நேர்த்திகடன் தீர்க்க ஆட்டுக்கிடா, கோழி பலியிட்டு, கறி சமைத்து சுவாமிக்கு படையல் வைத்து வழிபடுகின்றனர். சுவாமிக்கு வைத்த பொங்கல் மட்டுமின்றி, சமைத்த கறியையும் பெண்கள் சாப்பிடுவதில்லை. சக்தி வாய்ந்த காவல் தெய்வமாக கருதப்படும் அஞ்சலான்குட்டை முனியப்பன் கோவில் விபூதியை கூட, பெண்கள் வைத்து கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கற்சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ள மூலவருக்கு வட திசையில், சடாமுனி, வாயுமுனி, செம்முனி ஆகிய ராட்சத உருவம் கொண்ட மூன்று முனியப்பன் சுவாமி சிலைகள் நூற்றாண்டு கடந்து காணப்படுகிறது. அந்த சுவாமி சிலைகளுக்கு பக்தர்கள் அவ்வப்போது வர்ணம் தீட்டி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
ஆண்களே பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலிகொடுத்து கறி சமைத்து உண்டு மகிழ்ந்து வழிபடும் அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவிலுக்கு, வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆண்கள் மட்டுமின்றி, சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்களும் வாரந்தோறும் ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் குவிந்து வருவது குறிப்பிடதக்கதாகும்.
நல்ல மனைவி அமைய நண்பர்களுக்கு கிடா விருந்து
நல்ல மனைவி அமையவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், வீடு, மனை, தொழில் வளம் சேரவும், நோய் நீங்கி நலம் பெறவும் வரம் கேட்கும் ஆண் பக்தர்கள், சுவாமி அருளால் நினைத்த காரியம் தடையின்றி நிறைவேறினால், கேட்ட வரம் கொடுத்த முனியப்ப சுவாமிக்கு நேர்த்திகடன் தீர்க்க ‘கிடா’ வெட்டி , நண்பர்களுக்கு விருந்து வைப்பது அக்கோவிலின் சிறப்பாகும்.
நேர்த்தி கடனுக்காக குதிரை, மாடு, ஆடு, நாய் உள்ளிட்ட கால்நடை சிற்பங்கள் மட்டுமின்றி, குழந்தைகளின் சிற்பங்களையும் கோவில் வளாகத்தில் செய்து வைப்பதும், அந்த சிற்பங்களுக்கும் படையல் வைத்து பூஜை செய்து வழிபடுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கொங்கராயக்குறிச்சி.. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அழகிய கிராமத்தில் உள்ளது சட்டநாதர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கொங்கராயக்குறிச்சி.. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அழகிய கிராமம். இந்த ஊரில் உள்ள சட்டநாதர் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தப் பகுதியில் வாழ்ந்த கொங்கு ராயர் என்னும் மன்னரால், பழமையான இவ்வாலயம் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே தான் இவ்வூர் கொங்கராயக்குறிச்சி என்றழைக்கப்படுகிறது. புராணங்களிலும் சிறப்பு வாய்ந்தது இவ்வூர். இந்த ஆலயம் நவ லிங்கபுரத்தில் இரண்டாவது தலமாக விளங்குகிறது.
இந்த ஆலயத்தில் அஷ்ட பைரவர் தனி சன்னிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவர் 64 பைரவர்களுக்கு சமமானவர் என்று சொல்லப்படுகிறது. சீர்காழியை போலவே இவ்வூரில் பைரவர் இருக்கும் காரணத்தினால், இவ்வூர் ‘தென் சீர்காழி’ என அழைக்கப்படுகிறது.
பைரவர் அவதாரம், சிவபெருமானின் பயன் தரும் அவதாரமாகும். பயங்கரமான, உக்கிரம் நிறைந்த அவதாரமாகவும் இது திகழ்கிறது. அப்படிப்பட்ட பைரவர், பக்தர்களின் பயத்தை நீக்குவார். பக்தர்களின் எதிரிகளை விலகி ஓடச் செய்வார். பக்தர்களிடம் உள்ள பாவம், குரோதம், காமம் போன்றவற்றில் இருந்து அவர்களை விடுபட செய்வார். ‘பை’ என்றால் படைப்பு. ‘ர’ என்றால் வாழ்க்கை. ‘வா’ என்றால் அழித்தல். மூன்று தொழிலையும் செய்யக்கூடிய தன்மை கொண்டவர் பைரவர். இவர் தோன்றிய வரலாறு மிகச் சிறப்பானதாகும்.
பிரம்மனுக்கும் முன் காலத்தில் ஐந்து தலைகள் இருந்தது. இவர் படைப்பு தொழில் செய்து வந்ததால், சிவனை விட தானே திறமை மிக்கவர் என்று நினைத்துக் கொண்டார். அனைவரும் தன்னை வணங்க வேண்டும். சிவனை விட தன்னை ஒரு படி மேலே நினைக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டார். அதோடு சிவன் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் தலையிட்டு கெடுத்துக் கொண்டே வந்தார். அதன்மூலம் சிவனுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சித்தார்.
இதனால் கோபமடைந்த சிவபெருமான், தனது நகத்தினை பெயர்த்து தரையில் போட்டார். அதில் இருந்து கால பைரவர் தோன்றினார். அவர் வேகமாக சென்று பிரம்மாவின் தலைகளில் ஒன்றை கொய்தார். அதன் பிறகே பிரம்மா, நான்முகன் ஆனார். தனது அகந்தை அழித்து சிவபெருமானின் திருவடியை சரணடைந்தார் என சிவ மகாபுராணம் கூறுகிறது.
சக்தி பீடங்கள் தோறும் காலபைரவர் மிகச்சிறப்பாக போற்றப்படுகிறார். தகுராசுரன் என்பவன் பெண்களால் மட்டும் அழியும் வரத்தைப் பெற்றிருந்தான். இதையடுத்து அவன் தேவர்கள், மனிதர்கள் அனைவரையும் துன்புறுத்தி வந்தான். பார்வதிதேவி, காளியின் உருவம் கொண்டு அந்த அசுரனை அழித்தான். அதன் பிறகு அவளின் கோபத்தில் தான் காலபைரவர் தோன்றினார் என்றும் சொல்வதுண்டு. அவர்கள் இருவரையும் சிவபெருமான் ஆட்கொண்டார். சிவபெருமானுக்கு 64 வடிவங்கள் இருப்பது போலவே, பைரவருக்கு 64 வடிவங்கள் சிறப்பானதாக போற்றப்படுகிறது.

அதில் இந்த தலத்தில் இருக்கும் பைரவரை, ‘அஷ்ட பைரவர் மற்றும் சட்டநாதர்’ என்று போற்றுகின்றனர். அஷ்டமி தேய்பிறையில் அஷ்ட பைரவருக்கு பூஜை நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தீராத நோய் தீரும், வியாபாரம் செழிக்கும். எதிரிகள் விலகுவர். குழந்தை வரம் கிடைக்கும், திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
இந்த ஆலயம் 19-ம் நூற்றாண்டில் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி, மணலில் புதைந்து விட்டது. அதன் பிறகு கடந்த 25 வருடங்களுக்கு முன்பு, பக்தர்கள் ஒன்று கூடி ஆற்று மணலில் புதைந்து கிடந்த ஆலயத்தை வெளியே கொண்டு வந்தனர். இந்த ஆலயம் மேலும் மேலும் தோண்டப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஆலயம் வெளிக்கொண்டு வரப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இந்த ஆலயத்திற்குள் நாம் நுழையும் போது, சாலையில் இருந்து பூமிக்குள் இறங்கி தான் செல்ல வேண்டும். அதற்கும் தற்போது படிகள் கட்டி, பக்தர்கள் வசதியாக இறங்க வழி வகை செய்திருக்கிறார்கள். முதலில் கொடி மரம், நந்தியை தாண்டி கோவிலுக்குள் நுழைய வேண்டும். அங்கு வலது புறம் பைரவர், சட்டநாதராக தனி சன்னிதியில் காட்சி தருகிறார். ஆலய சுற்று பகுதியில் கன்னி விநாயகர், தட்சணாமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வர், சனீஸ்வரர் அருள்பாலிக்கிறார்கள். ஆலயத்தில் பொன்னுருதி அம்மாள் என்ற பெயரில் அம்பிகை தெற்கு நோக்கி வீற்றிருக்கிறாள். இந்த அன்னையிடம் வேண்டுபவர்களுக்கு, பொன்னும் பொருளும் கிடைப்பது உறுதி. கிழக்கு நோக்கி சிவபெருமான் வீரபாண்டீஸ்வரராக காட்சி தருகிறார்.
இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. தமிழ் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தோறும் விளக்கு பூஜையும் நடக்கிறது. மேலும் பிரதோஷம், மகா சிவராத்திரி, மாத சிவராத்திரி, சோமவாரம், திருக்கார்த்திகை, ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாணம், திருவாதிரை பூஜைகள் நடை பெறுகின்றன.
ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10.30 வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இந்த ஆலய இறைவனை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். தொழில் போட்டி விலகும். நிலுவையில் இருந்து வந்த வழக்குகள் சாதகமாக முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலயத்திற்கு விரைவில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதற்காக திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 20 கிலோமீட்டர் தொலைவில் கருங்குளம் உள்ளது. அங்கு இருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் கொங்கராயகுறிச்சி சட்டநாதர் ஆலயத்தை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு.

வீரபாண்டீஸ்வரர், பொன்னுருதி அம்மன்

பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களில் ஒன்று காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களில் ஒன்று காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவில். இது 108 திவ்ய தேசத் தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. மலை மீதுள்ள ஆலயத்தில் வரதராஜப் பெருமாள் வீற்றிருக்கிறார். கீழ் தளத்தில் பெருந்தேவி தாயார் அருள்பாலிக்கிறார்.
இந்தக் கோவிலுக்கு, ஹொய்சாள மன்னன் வீரபல்லாளன், காளிங்கராயன், பாண்டியன் 5-ம் சடையவர்மன், சோழ மன்னர்கள் கி.பி. (1018-1246), சேர மன்னர் (1291-1342) ஆகியோர் திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் (1447- 1642), இத்திருக்கோவிலில், பல புதிய கட்டிடங்கள் தோன்றின. அவற்றுள் முக்கியமானது ஒற்றைக்கல் தூண்களில் அழகிய சிற்ப வேலைபாடுகள் நிறைந்ததும், ராமாயணம், மகாபாரதத்தை பிரதிபலிக்கும் சிற்பங்களும் கொண்ட 100 கால் மண்டபம் ஆகும்.
இந்த ஆலயத்தில் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். பிரம்மா தன்னுடைய மனம் தூய்மை பெறுவதற்காக காஞ்சியில் யாகம் செய்தார். அப்போது அவர் தனது மனைவி சரஸ்வதியை விட்டு விட்டு, மற்றவர்களான சாவித்திரி, காயத்திரி ஆகியோரை வைத்து அந்த யாகத்தைச் செய்தார். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி, யாகத்தை அழிப்பதற்காக வேகவதி என்ற ஆறாக உருவெடுத்து, பாய்ந்தோடி வந்தாள். இதையடுத்து பிரம்ம தேவன், மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். பெருமாள், வெள்ளப்பெருக்கு வரும் வழியில் சயனித்து கிடந்தார். இதனால் அவரைத் தாண்டி ஆற்று நீர் செல்ல முடியவில்லை. இப்படி பிரம்மன் வேண்டியதும் வரம் தந்தவர் என்பதால் ‘வரதராஜர்’ என்று பெயர் பெற்றார்.
இந்த ஆலயத்தில் பெருமாளை, ஐராவதம் யானையே மலையாக நின்று தாங்குவதாக ஐதீகம். எனவே இந்த திருத்தலத்திற்கு ‘அத்திகிரி’ என்றும் பெயர் உண்டு. பெருமாளின் துணை கொண்டு யாகத்தை பூர்த்தி செய்த பிரம்மனுக்கு, யாக குண்டத்தில் இருந்து புண்ணிய கோடி விமானத்துடன் பெருமாள் தோன்றி அருள் செய்தார். பிறகு பிரம்ம தேவன், அத்தி மரத்தில் ஒரு சிலை வடித்து அதனை இங்கே பிரதிஷ்டை செய்தார்.
பிரம்மனின் யாகத்தில் இருந்து 16 கைகளுடன் சங்கு சக்கரம் தாங்கியபடி சுதர்சன ஆழ்வார் தோன்றினார். இவரே இந்த ஆலயத்தில் பிரதான மூர்த்தியாக இருக்கிறார். இவரை வழிபட்ட பிறகே மூலவரான வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.
ஸ்ரீ வேதாந்த தேசிகர், ஒரு ஏழையின் திருமணத்திற்காக இங்குள்ள பெருந்தேவி தாயாரை வணங்கினார். அப்போது தாயாரின் சன்னிதியில் ‘தங்க மழை’ கொட்டியது. இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஆலயமாக இது திகழ்கிறது.
ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் என்ற முனிவரின் இரண்டு மகன்கள், கவுதம முனிவரிடம் சீடர்களாக இருந்தனர். ஒரு முறை பூஜைக்கு அவர்கள் இருவரும் தீர்த்தம் கொண்டு வந்தனர். அந்த தீர்த்தத்தில் பல்லி கிடந்தது. இதனால் கோபம் கொண்ட கவுதமர், அவர்கள் இருவரையும் பல்லிகளாக மாறும்படி சபித்தார். பிறகு சீடர்களை காஞ்சி சென்று வழிபட்டால் மோட்சம் உண்டு என்று கூறினார். இதையடுத்து இவரும் இத்தலம் வந்து வழிபட்டனர். இறைவன் உங்கள் ஆத்மா வைகுண்டம் செல்லும். அதே நேரம் உங்களின் சரீரம் பஞ்சலோகங்களால் எனக்கு பின்புறம் இருக்கட்டும். என்னை தரிசிக்க வருபவர்கள், உங்களையும் தரிசித்து சகல தோஷங்களும் நீங்கப் பெறுவார்கள் என்று அருளினார். அதன் படி இந்த ஆலயத்தில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லிகளை பக்தர்கள் வணங்குகிறார்கள்.
வரதராஜப்பெருமாள் கோவிலில், அனந்தசரஸ் திருக்குளம், பொற்றாமறை திருக்குளம் ஆகிய 2 திருக்குளங்கள் அமைந்துள்ளன. மேற்கு ராஜகோபுரத்தில் வடகிழக்கிலும், 100 கால் மண்டபத்திற்கு வடக்கேயும் இருக்கிறது அனந்தசரஸ் திருக்குளம். இந்த குளத்தில் நீராவி மண்டபத்திற்கு தெற்கேயும், விமானத்துடன் கூடிய நான்கு கால் மண்டபத்தில் தான் அத்தி வரதர் அருள்கிறார். இவர் சுமார் 10 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டவர். முழுவதும் அத்தி மரத்தால் செய்யப்பட்டவர்.
இவர் திருக்குளத்தில் உள்ளே இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வெளியே வருவார். அப்போது கோவில் வளாகத்தில் அவரை பக்தர்கள் தரிசிக்கலாம். ஒரு மண்டல காலம் (48 நாட்கள்), அவர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 30 நாட்கள் சயன கோலத்திலும், 18 நாட்கள் நின்ற நிலையில் அருள்வார்.
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த நிகழ்வு கடந்த 2.7.1979-ம் ஆண்டு நடைபெற்றது. அதன்படி இந்த வருடத்தில் தான் மீண்டும் அந்த நிகழ்வு நடைபெற உள்ளது. இது பற்றி வரதராஜர் ஆலயத்தில் வைகாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

புராண காலத்தில் சூரிய பகவானுக்கு, காலவ முனிவரின் முயற்சியால் எழுப்பப்பட்ட ஆலயம் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த ஆலயம் கும்பகோணம்-மயிலாடுதுறை மாற்று சாலையில் உள்ள சூரியநாராயணர் கோவில் ஆகும்.
சூரியனின் ஒளியாலேயே உயிர்கள் வாழ்கின்றன என்பதால் சூரிய வழிபாடு, உலகளாவிய ஒன்றாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆறுவித சமய வழிபாட்டில் சூரியனை கடவுளாக வழிபடுவதற்கு ‘சவுரம்’ என்று பெயர். இந்தியாவில் சூரிய வழிபாடு ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு முறையில் செய்யப்பட்டு வருகிறது.
சூரியனை உலக முதல்வனாக ‘ஆதித்ய ஹிருதயம்’ நூல் கூறுகிறது. இது ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது. இதைத்தவிர மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய புராணம் ஆகியவையும் சூரிய வழிபாட்டைப் பற்றி விவரிக்கின்றன. சூரியன் காலையில் ரிக் வேதமாகவும், நண்பகலில் யஜுர் வேதமாகவும், மாலை நேரத்தில் சாம வேதமாகவும் திகழ்வதாக ‘சூரிய அஷ்டகம்’ சொல்கிறது.
காசியபர்- அதிதி தம்பதியருக்கு பிறந்த பன்னிரண்டு மக்களும் ‘பன்னிரு சூரியர்கள்’ எனப்பட்டனர். அதிதியின் பிள்ளைகள் என்பதால் ‘ஆதித்தியர்’ என்றும் அழைக்கப்பட்டனர். இந்த பன்னிருவர்களில் முதல்வனான விசுவான் தான், இப்போது உலகை பிரகாசிக்கச் செய்யும் சூரியன் என்று மற்றொரு புராண வரலாறு கூறுகிறது.
உலகெங்கும் சூரியனுக்கு பல ஆலயங்கள் இருந்தாலும், புராண காலத்தில் சூரிய பகவானுக்கு, காலவ முனிவரின் முயற்சியால் எழுப்பப்பட்ட ஆலயம் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த ஆலயம் கும்பகோணம்-மயிலாடுதுறை மாற்று சாலையில் உள்ள சூரியநாராயணர் கோவில் ஆகும். சிறிய ஆலயம், நவக்கிரகங்களை மட்டுமே தெய்வங்களாகக் கொண்ட கோவில், சூரியனை மூலவராகக் கொண்ட திருத்தலம் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குகிறது. தனது இரு தேவியருடன் சூரியன் நடுநாயகமாக வீற்றிருக்க, மற்ற எட்டு நவக்கிரகங்களும் எட்டு திசைகளில் இருந்து அருள்பாலிக்கிறார்கள்.
காலவ முனிவரை, ஒரு இளம் துறவி சந்தித்தார். அவரிடம் தன் எதிர்காலத்தைக் கேட்டறிந்தார். பின்னர் “அனைவரின் எதிர்காலத்தையும் சொல்லும் நீங்கள், உங்களின் எதிர்காலத்தை எப்போதாவது கணித்ததுண்டா?” என்று கேட்டார்.
திடுக்கிட்ட காலவ முனிவர், “நீ யார்?” என்று கேட்க, வந்தவர் “நான் காலதேவன்” என்று கூறி மறைந்தார். இதனால் தன்னுடைய எதிர்காலத்தை ஆராய்ந்தார் காலவ முனிவர். அதில் முன்வினைப் பயனால், அவருக்கு தொழுநோய் வரும் என்பது தெரிந்தது.
இதையடுத்து முன்வினைப்பயனை தருகின்ற நவக்கிரகங்களை காலவ முனிவர் சரணடைந்தார். விந்தியமலையில் பஞ்சாக்னி வளர்த்து, நவக்கிரகங்களை நோக்கி தவம் செய்தார். நவக்கிரகங்களும் அவரின் முன்பாக தோன்றின. காலவ முனிவர் கேட்ட, தொழுநோய் பீடிக்காத வரத்தையும் அளித்தனர்.
இதையறிந்த பிம்மன், நவக்கிரகங்களை வரவழைத்தார். “சிவபெருமானின் ஆணைப்படியும், காலதேவனின் துணை கொண்டும், அனைத்து ஜீவராசிகளுக்கும், அவரவர் செய்த வினைகளின் பயனை அளிக்கவே நீங்கள் என்னால் படைக்கப்பட்டீர்கள். உங்களுக்கு தனித்து இயங்கும் சுதந்திரம் இல்லை. அப்படியிருக்கையில் காலவ முனிவருக்கு நீங்கள் வரம் அருளியது தவறு. எனவே நீங்கள் அனைவரும் பூலோகத்தில் பிறந்து, காலவ முனிவர் தொழுநோயால் துன்பப்படவேண்டிய கால அளவு வரை, அதே நோயால் துன்பப்படுவீர்கள்” என்று கூறினார்.
அதைக் கேட்டு வருந்திய நவக்கிரகங்களும் பிரம்மனை பணிந்து, விமோசனம் அருள வேண்டி நின்றன. உடனே பிரம்மன், “காவிரி ஆற்றின் வடகரையில் உள்ள அர்க்க(எருக்கு)வனமான திருமங்கலக்குடி சென்று, கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைத் தொடங்கி பன்னிரண்டு ஞாயிற்றுக்கிழமை வரை, 78 நாட்கள் தவம் இயற்ற வேண்டும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் உதயத்துக்கு முன் எழுந்து, காவிரியில் நீராடி பிராணநாதரையும் மங்கலநாயகியையும் வழிபட வேண்டும். அன்றைய தினம் ஏழு நாழிகைக்குள் ஒரு எருக்கு இலையை எடுத்து, அதில் பிடி அளவு தயிர் அன்னம் வைத்து உண்ண வேண்டும். மற்ற நாட்களில் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்” என்றார்.
பிரம்மதேவன் சொன்னபடி, அகத்தியரின் வழிகாட்டு தலில், நவக்கிரகங்கள், இறைவன்- இறைவியோடு, விநாயகர் சிலை ஒன்றையும் நிறுவி அந்த வழிபாட்டைச் செய்தனர். 78 நாட்கள் முடிவில் சிவபெருமான் அவர்கள் முன்பாக தோன்றி, “இன்றோடு உங்களின் நோய் முழுவதுமாக குணமடையும். நீங்கள் தவம் இருந்த இடத்தில் உங்களுக்கு தனி ஆலயம் உருவாகும். அங்கு வந்து உங்களை வழிபடுபவர்களுக்கு நீங்கள் சுதந்திரமாக அனுக்கிரகம் செய்யும் வரத்தை தந்தோம்” என்று அருளினார்.
நவக்கிரகங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர், ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் ‘கோள்வினை தீர்த்த விநாயகர்’ என்ற பெயரில் அருள்கிறார். தென்னகத்திலேயே சூரியனுக்கென்று தனிக் கோவில் அமைந்த தலம் இது. கருவறை உள்ளே உஷாதேவி மற்றும் சாயாதேவியுடன் சிவசூரிய பெருமானாக நின்ற கோலத்தில் சூரிய பகவான் அருள்பாலிக்கிறார். அங்கிருந்தே குரு பகவானையும தரிசிக்கும் வகையில் சன்னிதி அமைந்துள்ளது. தவிர தென்மேற்கில் சனீஸ்வரன், தெற்கில் புதன், தென்கிழக்கில் அங்காரகன், கிழக்கில் சந்திரன், வடகிழக்கில் கேது, வடக்கில் சுக்ரன், வடமேற்கில் ராகு எழுந்தருளியுள்ளனர்.
திருவாவடுதுறை ஆதினத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ்வாலயம், தினமும் காலை 6 மணியில் இருந்து பகல் 1மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்
தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறை-கும்பகோணம் மாற்று மார்க்க சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-கும்பகோணம் வழியில் செல்வோர் ஆடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் வடக்கில் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

இந்தியாவில் நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. அவற்றில் முதன்மை இடத்தில் இருக்கும் கோவில்களில் ஒன்று அமர்நாத் பனிலிங்கம் கோவில்.
இந்தியாவில் நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. அவற்றில் முதன்மை இடத்தில் இருக்கும் கோவில்களில் ஒன்று அமர்நாத் பனிலிங்கம் கோவில். இந்த கோவில் காஷ்மீர் மாநிலத்தில் இமயமலை பகுதியில் அமைந்துள்ளது. காஷ்மீர் தலைநகரம் ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
கடல் மட்டத்தில் இருந்து 12 ஆயிரத்து 756 அடி உயரத்தில் மலை உச்சி பகுதியில் கோவில் அமைந்துள்ளது. இது, மனிதனால் உருவாக்கப்பட்ட கோவில் அல்ல, இயற்கையாகவே உருவானது. கோவில் அமைந்துள்ள இடத்தில் மலை முகடு ஒன்றில் 130 அடி உயரத்துக்கு ராட்சத குகை ஒன்று உள்ளது. அதில், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் உள்பகுதியில் லிங்கம் போன்ற வடிவத்தில் பனிக்கட்டி உருவாகி விடுகிறது. இதையே பனிலிங்கம் என்று அழைக்கின்றனர்.
குகையின் ஒரு பகுதியில் நீர் கசிவு ஏற்பட்டு கீழ்நோக்கி தண்ணீர் விழுகிறது. அதிக குளிர் ஏற்படும் நேரத்தில் இந்த தண்ணீர் கீழிருந்து மேலாக முற்றிலும் உறைந்து பனிக்கட்டியாக மாறி விடுகிறது. கீழ்பகுதியில் விரிந்து பின்னர் மேல் பகுதிக்கு செல்ல, செல்ல கொஞ்சம் குறுகியும், பனிக்கட்டி அமைகிறது. இதை பார்ப்பதற்கு அச்சு அசல் லிங்கம் போலவே இருக்கிறது.
இந்த லிங்கம் 12 அடி உயரத்துக்கு உருவாகிறது. இதனை ஒட்டி இடப்பக்கத்தில் ஒரு பனி வடிவமும், வலது பக்கத்தில் 2 பனி வடிவங்களும் உருவாகின்றன. இடது பக்கத்தில் உருவாகும் பனி வடிவம் விநாயகர் என்றும், வலது பக்கத்தில் உருவாகும் 2 பனி வடிவங்கள் பார்வதி மற்றும் பைரவர் என்றும் நம்புகின்றனர்.
இந்த பனி வடிவங்கள் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் உருவாகி பின்னர் தானாக உருகி விடுகிறது. அதாவது மே மாதம் வாக்கில் பனிலிங்கம் உருவாகி ஆகஸ்டு இறுதி வரை நீடிக்கிறது. பின்னர் உருகி விடுகிறது.
பனிலிங்கம் உருவாகி இருக்கும் நேரத்தில் மட்டும் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிபடும் பழக்கம் உள்ளது. இவ்வாறு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் சுமார் 45 நாட்கள் வரை பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர்.
இப்படி ஒரு பனிலிங்கம் குகைக்குள் இருப்பது எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? என்ற விவரங்கள் எதுவும் சரியாக தெரியவில்லை. ஆனால், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பனிலிங்கம் இருந்ததாகவும், அந்த கால கட்டத்திலேயே வழிபாடு நடந்ததாகவும் நம்புகின்றனர். ரிக் வேதத்திலும் இந்த பனிலிங்கம் கோவில் தொடர்பான சில குறிப்புகள் இருக்கின்றன.
11-ம் நூற்றாண்டில் அந்த பகுதியை ஆண்ட மன்னரின் மனைவி ராணி சூரியமதி திரிசூலத்தை தயாரித்து காணிக்கையாக வழங்கியதாக குறிப்பு உள்ளது. பரிகு முனி என்ற முனிவர்தான் இப்படி ஒரு பனிலிங்கம் இருந்ததை கண்டுபிடித்து கூறியதாகவும் இன்னொரு தகவல் சொல்கிறது. அந்த முனிவர் கோவிலை கண்டுபிடித்த கால கட்டத்தில் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து இருந்துள்ளது. பின்னர் அங்கிருந்த தண்ணீர் அனைத்தும் வற்றி குகை தென்பட்டது. அந்த குகையில் பனிலிங்கம் உருவாகி இருந்ததை அவர் கண்டதாகவும் கூறுகின்றனர்.

ஆடு மேய்க்கும் தொழிலாளி பனிலிங்கத்தை கண்டபிறகு அந்த பகுதி பழங்குடி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் குகைக்கு புனித யாத்திரை சென்று பனிலிங்கத்தை வழிபட்டதாகவும் கூறுகிறார்கள். முகலாய மன்னர் அவுரங்கசீப் 1663-ம் ஆண்டு காஷ்மீரில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவருடன் பிரான்சு நாட்டை சேர்ந்த டாக்டர் பிரான்காய்ஸ் பெர்னியர் என்பவரும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர், தனது பயண குறிப்புகளை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். அதில், அவர் அமர்நாத் குகையை பார்த்ததாகவும் எழுதி இருக்கிறார்.
இப்படி பல தகவல்கள் பனிலிங்கம் கோவிலை பற்றி இருந்தாலும், தெளிவான வரலாற்று குறிப்புகள் எதுவும் இல்லை. எனவே, எப்போது கோவில் கண்டுபிடிக்கப்பட்டது? பக்தர்கள் எந்த காலகட்டத்தில் இருந்து கோவிலுக்கு யாத்திரை செல்கிறார்கள் என்ற விவரம் சரியாக தெரியவில்லை. பல ஆண்டுக்கு முன்பெல்லாம் ஒவ்வொரு வருடமும் சில ஆயிரம் பேர் மட்டுமே யாத்திரை சென்று இருக்கிறார்கள். 1989-ம் ஆண்டுகூட 12 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே யாத்திரை சென்று இருக்கிறார்கள். ஆனால், இப்போது 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்நாத்துக்கு செல்கிறார்கள்.
இத்தனைக்கும் 45 நாட்கள் மட்டுமே யாத்திரை நடக்கிறது. ஆனாலும், பக்தர்கள் அளவுக்கு அதிகமாக குவிகின்றனர். அதிகபட்சமாக 2011-ம் ஆண்டு 6 லட்சத்து 34 ஆயிரம் பேர் யாத்திரை சென்றுள்ளனர். இத்தனைக்கும் இந்த கோவிலுக்கு செல்வது என்பது எளிதான காரியம் அல்ல. குறிப்பிட்ட தூரம் வரை மட்டும் தான் வாகனங் களில் செல்ல முடியும். அதன்பிறகு கால் நடையாக மட்டுமே கரடு முரடான மலை பாறைகளில் ஏறி கோவிலை சென்றடைய வேண்டும்.
கோவிலுக்கு செல்வதற்கு 2 பாதை கள் உள்ளன. ஒரு பாதை பகல்காம் என்ற இடத்தில் தொடங்குகிறது. இந்த பாதையின் தூரம் 41 கிலோ மீட்டர். மற்றொரு பாதை பல்டால் என்ற இடத்தில் இருந்து தொடங்குகிறது. இதன் மொத்த தூரமே 14 கிலோ மீட்டர்தான். ஆனால், பல்டால் பாதை மிக ஆபத்தானது. உயர்ந்த மலைகளிலும், பள்ளத்தாக்குகளிலும் ஏறி, இறங்கி செல்ல வேண்டும். மிகவும் திடகாத்திரமான நபர்களால் மட்டும்தான் இந்த பாதையில் பயணம் செய்ய முடியும்.
பகல்காம் பாதையில் பெரும்பாலான பக்தர்கள் பயணம் செய்வார்கள். மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து பகல்காம் வரை வருவதற்கு வாகன வசதி உள்ளது. இங்கு வந்ததும் கால்நடையாக செல்ல வேண்டும். குதிரைகளிலும் சவாரி செய் யலாம். ஹெலி காப்டர்களிலும் செல்ல வசதி உள்ளது. வழியில் ஆங்காங்கே தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தனியார்கள் கூடாரங்களை அமைத்து இருப்பார்கள். அவற்றுக்கு உரிய கட்டணம் செலுத்தி தங்கி கொள்ளலாம்.
இந்த பகுதியில் மைனஸ் 5 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும். அடிக்கடி மழையும் பெய்யும். உயரமான இடங்களை கடந்து பயணம் செய்ய வேண்டும். இதையெல்லாம் தாங்கக்கூடிய உடல்திறன் கொண்டவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

இந்த பகுதியில் கடாரியா என்ற பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் வேறு மாதிரி ஒரு கதை சொல்கின்றார்கள். ஒரு தடவை இந்த குகை அருகே புடா மாலிக் என்ற ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆடு மேய்த்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு சாமியார் அவரிடம் நிலக்கரிகள் கொண்ட பொட்டலம் ஒன்றை கொடுத்தார்.
அந்த பொட்டலத்தை தொழிலாளி பிரித்து பார்த்த போது, உள்ளே இருந்த நிலக் கரிகள் அனைத்தும் தங்கமாக மாறிவிட்டன. உடனே தொழிலாளி சாமியாரை திரும்பி பார்த்தார். ஆனால், சாமியார் மாயமாகி விட்டார். அவர் குகைக்குள் நுழைந்து மாயமாகியதாக கருதி அங்கு அவர் சென்று பார்த்தபோது, பனிலிங்கத்தை கண்டதாகவும் கூறுகின்றனர்.

ஆடு மேய்க்கும் தொழிலாளி பனிலிங்கத்தை கண்டபிறகு அந்த பகுதி பழங்குடி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் குகைக்கு புனித யாத்திரை சென்று பனிலிங்கத்தை வழிபட்டதாகவும் கூறுகிறார்கள். முகலாய மன்னர் அவுரங்கசீப் 1663-ம் ஆண்டு காஷ்மீரில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவருடன் பிரான்சு நாட்டை சேர்ந்த டாக்டர் பிரான்காய்ஸ் பெர்னியர் என்பவரும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர், தனது பயண குறிப்புகளை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். அதில், அவர் அமர்நாத் குகையை பார்த்ததாகவும் எழுதி இருக்கிறார்.
இப்படி பல தகவல்கள் பனிலிங்கம் கோவிலை பற்றி இருந்தாலும், தெளிவான வரலாற்று குறிப்புகள் எதுவும் இல்லை. எனவே, எப்போது கோவில் கண்டுபிடிக்கப்பட்டது? பக்தர்கள் எந்த காலகட்டத்தில் இருந்து கோவிலுக்கு யாத்திரை செல்கிறார்கள் என்ற விவரம் சரியாக தெரியவில்லை. பல ஆண்டுக்கு முன்பெல்லாம் ஒவ்வொரு வருடமும் சில ஆயிரம் பேர் மட்டுமே யாத்திரை சென்று இருக்கிறார்கள். 1989-ம் ஆண்டுகூட 12 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே யாத்திரை சென்று இருக்கிறார்கள். ஆனால், இப்போது 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்நாத்துக்கு செல்கிறார்கள்.
இத்தனைக்கும் 45 நாட்கள் மட்டுமே யாத்திரை நடக்கிறது. ஆனாலும், பக்தர்கள் அளவுக்கு அதிகமாக குவிகின்றனர். அதிகபட்சமாக 2011-ம் ஆண்டு 6 லட்சத்து 34 ஆயிரம் பேர் யாத்திரை சென்றுள்ளனர். இத்தனைக்கும் இந்த கோவிலுக்கு செல்வது என்பது எளிதான காரியம் அல்ல. குறிப்பிட்ட தூரம் வரை மட்டும் தான் வாகனங் களில் செல்ல முடியும். அதன்பிறகு கால் நடையாக மட்டுமே கரடு முரடான மலை பாறைகளில் ஏறி கோவிலை சென்றடைய வேண்டும்.
கோவிலுக்கு செல்வதற்கு 2 பாதை கள் உள்ளன. ஒரு பாதை பகல்காம் என்ற இடத்தில் தொடங்குகிறது. இந்த பாதையின் தூரம் 41 கிலோ மீட்டர். மற்றொரு பாதை பல்டால் என்ற இடத்தில் இருந்து தொடங்குகிறது. இதன் மொத்த தூரமே 14 கிலோ மீட்டர்தான். ஆனால், பல்டால் பாதை மிக ஆபத்தானது. உயர்ந்த மலைகளிலும், பள்ளத்தாக்குகளிலும் ஏறி, இறங்கி செல்ல வேண்டும். மிகவும் திடகாத்திரமான நபர்களால் மட்டும்தான் இந்த பாதையில் பயணம் செய்ய முடியும்.
பகல்காம் பாதையில் பெரும்பாலான பக்தர்கள் பயணம் செய்வார்கள். மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து பகல்காம் வரை வருவதற்கு வாகன வசதி உள்ளது. இங்கு வந்ததும் கால்நடையாக செல்ல வேண்டும். குதிரைகளிலும் சவாரி செய் யலாம். ஹெலி காப்டர்களிலும் செல்ல வசதி உள்ளது. வழியில் ஆங்காங்கே தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தனியார்கள் கூடாரங்களை அமைத்து இருப்பார்கள். அவற்றுக்கு உரிய கட்டணம் செலுத்தி தங்கி கொள்ளலாம்.
இந்த பகுதியில் மைனஸ் 5 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும். அடிக்கடி மழையும் பெய்யும். உயரமான இடங்களை கடந்து பயணம் செய்ய வேண்டும். இதையெல்லாம் தாங்கக்கூடிய உடல்திறன் கொண்டவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
சிரவணபெலகொலா என்னு மிடத்தில் அமைந்துள்ளது கோமதீஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சிரவணபெலகொலா என்னு மிடத்தில் அமைந்துள்ளது கோமதீஸ்வரர் கோவில். இந்த இடம் மைசூரிலிருந்து 93 கிலோமீட்டர் தொலைவிலும்; பெங்களூரிலிருந்து 153 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கு காணப்படும் கோமதீஸ்வரர் திருவுருவம் உலகப் புகழ் வாய்ந்தது. ஒற்றைக் கல்லாலான இதன் உயரம் 50 அடி. சிலையின் பாதத்தை அருகில் சென்று காணவேண்டுமென்றால், 500 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும்.
தரை மட்டத்திலிருந்து 3,000 அடி உயரத்தில் இந்தச் சிலை இருக்கிறது. இந்தச் சிலை இருக்கும் குன்றுக்கு சந்திரகிரி என்று பெயர். அதற்கு எதிரிலேயே விந்தியகிரி குன்று உள்ளது. இது சந்திரகிரி குன்றைவிட உயரம் குறைந்தது.
கோமதீஸ்வரர் சமணர்கள் வணங்கும் தெய்வம். இரண்டு குன்றுகளிலும் பல சமண முனிவர்கள் அடக்கம் செய்யப்பட்ட சமாதிகளும் வேறு பல நினைவுச் சின்னங்களும் காணப்படுகின்றன. சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இரண்டு இடங்களையும் மிகவும் புனிதமான இடங்களாகக் கருதி வழிபட்டு வருகின்றனர்.
கோமதீஸ்வரர் சிலை ஆயிரம் வருடங்களுக்குமேல் பழமையானது. சமுத்திராயா என்னும் வம்சத்தினர் இப்பகுதியை ஆண்ட காலகட்டத்தில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டது. சிலையின் உருவாக்கத்தில் சமண முனிவரான அரிஷ்டநேமி என்பவர் பெரும் பங்கு வகித்தார். அவரது மேற்பார்வையில்தான் இந்தச் சிலை உருவாக் கப்பட்டது.
கோமதீஸ்வரர் சிலை நிர்வாணக் கோலத்தில் அமைந்துள்ளது. அதாவது முற்றும் துறந்த நிலையின் வெளிப்பாடு. (சமண முனிவர்கள் நிர்வாண கோலத்திலேயே பக்தர்களுக்குத் தரிசனம் தருவார்கள்.) அந்தத் திருவுருவத்தைக் காணும்போது அலாதியான மன அமைதி நம்மிடம் உண்டாகிறது. சிலையின் அழகு நம்மைக் கவருகிறது. பிரம்மாண்டம் நம்மை வியக்க வைக்கிறது. கண்களில் காணப்படும் கருணை நம்மை ஈர்க்கிறது.
சிலையின் திருமுடியின்மேல் ஆயிரக்கணக்கான எறும்புகள் கூடுகட்டி ஊர்ந்துகொண்டிருப்பதுபோலத் தோன்றுகிறது. உடலின் பல பாகங்களில் வல்லிக்கொடி படர்ந்திருப்பது போல் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவரது இன்னொரு பெயர் பகுபலி சுவாமி. இவர் சமண மதத்தைச் சேர்ந்த தீர்த்தங்கரர்களில் ஒருவர்.
தங்கரர்களில் பலரும் ராஜவம்சத்தில் பிறந்து, ஒரு காலகட்டத்தில் எல்லாவற்றையும் துறந்து கடுந்தவம் இயற்றி முனிவராக ஆனவர்கள். அதைப்போல கோமதீஸ்வரரும் ஒரு தீர்த்தங்கரரே. அவர் கடுந்தவம் செய்த போது அவரைச் சுற்றி எறும்புப் புற்று தோன்றி தலைப்பாகம் வரை மறைத்திருந்ததாகவும், உடலில் கொடிகள் படர்ந்து சுற்றிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த கோலத்தில் வடிவமைக்கப்பட்ட சிலையே இது.
கோமதீஸ்வரருக்கு நடக்கும் விழாக்களில் மிகவும் முக்கியமானது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும், "மகாமஸ்தக அபிஷேகம்'. அந்த சமயத்தில், அவ்வளவு உயரமான சிலையின் திருமுடிக்கு அருகில் பக்தர்கள் நின்று அபிஷேகம் செய்ய மிகவும் பாதுகாப்பான முறையில் சாரம் கட்டி வசதி செய்து தருகின்றனர். அன்றைய தினத்தில் சிலைக்கு விசேஷ அபிஷேகங்கள் சமண முனிவர்களாலும், பக்தர்களாலும், முக்கிய பிரமுகர்களாலும் செய்யப்படுகின்றன.
ஒரு முக்கிய சமண முனிவர் தலைமைப் பொறுப்பேற்று, வழிகாட்டி அர்ச்சகர்களையும் மற்றவர்களையும் அபிஷேகம் செய்யச் சொல்கிறார்.

முதலில் 1,008 குடங்களில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பிறகு பால், தயிர், நெய், சர்க்கரை, பாதாம் பருப்பு போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அதன்பிறகு வெள்ளி, தங்கத்தினால் செய்யப்பட்ட மலர்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
ஆயிரக்கணக்கான சமண முனிவர்களும் லட்சக்கணக்கான பொதுமக்களும் இந்த வழிபாட்டில் கலந்துகொள்ள- வழிபாட்டைத் தரிசிக்க வருகின்றனர்.
மிகவும் புனிதமான நாள் இது. நேரில் சென்று அபிஷேகத்தைப் பார்ப்பவர்களுக்கு உடல் சிலிர்க்கும். இந்த அபிஷேகம் உலக நன்மைக்காகவும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் செய்யப்படும் அபிஷேகம் ஆகும்.
எல்லாரும் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன், ஐஸ்வரியத்துடன் வாழவும், மன அமைதி பெறவும், நாட்டில் அமைதி நிலவவும், மனித உயிர்களையும், பிராணிகளையும், மரம், செடி, கொடிகளை நேசிக்கவும் செய்யப்படும் அபிஷேகம்.
பக்தர்களது எல்லா கோரிக்கைகளுக்கும் சமணர்களால் கடவுளாகக் கருதப்படும் சமண முனிவரான கோமதீஸ்வரர் (பகுபலி சுவாமி) அருள்புரிகிறார்.
அபிஷேகம் முடிந்ததும் கோமதீஸ்வரரை வணங்கும் உரிமை மைசூர் மகாராஜாவுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த வம்சத்த வர்களுக்கு ராஜ்ஜியம் இல்லாவிட்டாலும் இன்றும் அந்த வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மகாமஸ்தக அபிஷேகம் இறுதியாக 2006-ஆம் ஆண்டில் நடந்தது. அடுத்து 2018-ஆம் ஆண்டில் நடைபெறும்.
இந்தச் சிலையைப் பழுதுபடாமல் பாதுகாக்க கர்நாடக அரசாங்கம் ஒரு அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட இந்தச் சிலை இன்றும் பழுதுபடாமல் அப்படியே உள்ளது!
மத்திய அரசாங்கம் இந்தச் சிலையையும், சுற்றியுள்ள இடங்களையும் தொல்பொருள் பாதுகாப்பு அமைப்பின் பொறுப்பில் கொடுத்துள்ளது.
கர்நாடக அரசாங்கம், சிரவணபெலகொலா, பேளூர், ஹளபேடு ஆகிய இடங்களை ஒரே நாளில் சென்று பார்த்துவர, பல விசேஷ பேருந்துகளை மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் இயக்குகிறார்கள்.
சிரவணபெலகொலா.---வெள்ளை குளத்து முனிவர் (பெல கொளத்து சிராவணர்!) என்று பொருளாம்.சந்திரகுப்த மௌரியர் பரந்த பேரரசை துறந்து தனது சமண சமய குருவுடன்(பகவான் பத்ரபாகு) இதில் தெரியும் மலையில்தான் தனது இறுதி காலத்தைக் கழித்தார். அதனால் இந்த குன்று சந்திரகிரி என்று அழைக்கப் படுகிறது.தென்னிந்தியாவில் சமணத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்ட இடம்.
மலையுச்சியில் நிற்கும்போது தென்றல் உடலை வருட, 2500 ஆண்டுகால வரலாறு மனதில் உருண்டது. உணர்வலைகள் அதிர்ந்தன. சலனம் குறைந்து மௌனம் நிறைந்தது. வாழ்வில் பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்று.
ஆன்மிக நாட்டமுள்ளவர்கள் அவசியம் காணவேண்டிய தலம் இது!

பல்லவர்களின் முதல் கருங்கற்கோவில் என்ற சிறப்பை, பெருமையை கொண்டு கம்பீரமாக நிற்கிறது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிற்றம்பாக்கம் கும்பேஸ்வரர் ஆலயம்.
பாறைகளைக் குடைந்தும், கருங்கற்களைக் கொண்டும் திருக்கோவில் எழுப்பியதற்கு மூல காரணமாக விளங்கியவர்கள், பல்லவ மன்னர்கள். இவர்கள் காலத்தில் தான் பாறைகளும், மலைகளும் கற்களாக அல்லாமல், கோவில்களாகவும், தெய்வ வடிவங்களாகவும் பார்க்கப்பட்டன. பாறைகளுக்குள் மறைந்திருக்கும் உருவங்களை பல்லவர்கள் கற்பனை செய்ததே, பல குடவரைக் கோவில்கள் உருவானதற்கு காரணம். இதற்கு சான்றாக, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள முதல் குடவரைக் கோவிலான மண்டகப்பட்டு விளங்குகின்றது. அதே போல, மலையும் பாறையும் சிற்பங்களாக மாறியதற்கு, மாமல்லபுரம் சான்றாகத் திகழ்கின்றது.
பல்லவர்களின் குடவரைக் கோவிலுக்கு அடுத்த நிலையில் இருப்பது அவர்களின் கலைப்பணியில் உருவான கருங்கற் கோவில்கள். அப்படி உருவாக்கப்பட்ட பல்லவர்களின் முதல் கருங்கற்கோவில் என்ற சிறப்பை, பெருமையை கொண்டு கம்பீரமாக நிற்கிறது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிற்றம்பாக்கம் கும்பேஸ்வரர் ஆலயம். இந்த செய்தியை அந்த ஆலயத்தில் கிடைத்திருக்கும் கல்வெட்டுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
இனி ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி பார்ப்போம். தற்போது இந்த ஆலயம் பார்ப்பதற்கு, சிமெண்டு மற்றும் செங்கற்களால் உருவான புதிய கோவில் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. ஆனால் ஆலயத்தின் கருவறைக்குள் அமைந்துள்ள விநாயகர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர், நந்தி போன்றவை பல்லவர் கால படைப்புகள் ஆகும். இந்தக் கோவிலில் உள்ள கருங்கல்லும், அதில் உள்ள கல்வெட்டு வரிகளுமே, இந்த ஆலயத்தின் தொன்மைக்குச் சான்றாக அமைந்துள்ளன. இந்தக் கல்வெட்டு பற்றி, கி.பி. 1947-48-ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தில் இருக்கும் கல்வெட்டு கி.பி. 669- 670-ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டாகும். இந்தக் கல்வெட்டு கிரந்த மொழியில் 6 வரிகளில் அமைந்திருக்கிறது. இதில் மகாராஜா பரமேஸ்வர வர்மன் என்னும் முதலாம் பரமேஸ்வரவர்மன் காலத்தில், தமிழகத்தில் எழுப்பப்பட்ட முதல் கற்றளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆலயம் தான் தமிழ்நாட்டின் முதல் கற்றளி என்பது ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.
இந்தக் கல்வெட்டு சிவாலயத்தின் அருகில் உள்ள செல்லியம்மன் ஆலயத்தின் படிக்கட்டாக அமைந்திருக்கிறது. அந்த செல்லியம்மன் கோவிலின் தொன்மை சுமார் முந்நூறு ஆண்டுகள் மட்டுமே என்று சொல்லப்படுகிறது. அதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, கல்வெட்டானது, அருகே உள்ள சிவன் கோவிலுக்கு தொடர்புடையதாகவே கருத முடிகிறது. இந்த பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
கும்பேஸ்வரர், குழந்தை வல்லி
தமிழகத்திலேயே முதன் முதலில் எழுப்பப்பட்ட கற்றளியாக, சிற்றம்பாக்கம் சிவன் கோவில் இருப்பது, இன்னும் பலருக்கு அறியப்படாமல் இருக்கிறது. இந்த ஆலயத்தை ஆய்வு செய்தால், மேலும் பல புதிய தகவல்கள் நமக்கு தெரியவரலாம்.
இந்த ஆலயத்தில் உள்ள இறைவனின் பெயர் ‘கும்பேஸ்வரர்’ என்பதாகும். கும்பத்தில் இருந்த அமுதத்தில் இருந்து வெளிப்பட்டவர் என்பதால், இத்தல இறைவனுக்கு இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த ஐதீகத்தில் உருவானதே கும்ப கோணம் கும்பேஸ்வரர் திருக்கோவில். அதே ஐதீகத்தில் வட தமிழ்நாட்டில், பல்லவ மன்னன் காலத்தில் எழுப்பப்பட்ட முதல் கற்கோவிலாக, சிற்றம்பாக்கம் கும்பேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. என்றாலும், கால வெள்ளத்தால் சிதையுண்ட இந்தக் கோவில், ஊர்மக்கள் ஒத்துழைப்பால் இன்று பழைய மூலவரை தாங்கி, புதியக் கோவிலாகக் காட்சி தருகிறது.
இறைவன் கும்பேஸ்வரர் சதுர வடிவ ஆவுடையாராக, பிரம்மாண்ட வடிவில் சுயம்புலிங்கத் திருமேனி கொண்டு, எழிலாக காட்சி தருகிறார். லிங்க வடிவம் கூட கும்பத்தை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் அன்னையின் பெயர் குழந்தைவல்லி. இவள் தன் பெயருக்கு ஏற்றவாறு சிறிய வடிவில், ஆனால் கலைநயத்தோடு தெற்கு முகமாய் நான்கு கரங்கள் கொண்டு அருளாசி வழங்குகின்றாள்.
ஆலய அமைப்பு :
இவ்வாலயம் ஈசான்ய பகுதியில், கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. எதிரே பழமையான திருக்குளம் உள்ளது. இது சீரமைப்பு இல்லாமல் காணப்படுகிறது. ஆலயத்தின் திருச்சுற்றில் வடமேற்கு பகுதியில் விநாயகர், லட்சுமி நரசிம்மர், வள்ளி- தெய்வானை சமேத சப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். ஆலயத்தின் தல விருட்சம் கொன்றை மரம். அந்த மரத்தின் அடியில் காசிலிங்கம், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோரது சன்னிதிகள் உள்ளன.
நடுநாயகமாக கும்பேஸ்வரர் சன்னிதி, எதிரே கொடிமரம், பலிபீடம், நந்திதேவர், தெற்குப் பார்த்தபடி அன்னை குழந்தைவல்லி காட்சி தருகிறாள். கருவறைச் சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் வீற்றிருக்கின்றனர்.
செல்லியம்மன் கருவறை
இந்த ஆலயத்தில் பிரதோஷம், கிருத்திகை, திருவாதிரை உள்ளிட்ட சிவபெருமானுக்குரிய விசேஷங்கள் அனைத்தும் எளிமையாக கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
வரம் தரும் தலம் :
இந்த ஆலயம் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் திருத்தலமாகத் திகழ்கின்றது. வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள், இத்தலத்து இறைவனை மனமுருக நம்பிக்கையோடு வழிபாடு செய்தால், நம்பிக்கையும், துணிவும் பெற்று மீண்டும் முயற்சிக்கும் மன உறுதியைப் பெறுவார்கள். வாழ்விலும் பல்வேறு வெற்றிகளைப் பெறுவார்கள் என இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். மேலும், அன்னை குழந்தைவல்லியை வழி படுவோருக்கு நிச்சயம் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
அமைவிடம் :
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், பேரம்பாக்கத்தை அடுத்து சிற்றம்பாக்கம் திருத்தலம் அமைந்திருக்கிறது. சென்னையில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவிலும், பூந்தமல்லியில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும், பேரம்பாக்கத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் சிற்றம் பாக்கம் உள்ளது. பேரம்பாக்கத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது. அதே நேரம் ரெயில் மூலமாக இந்த ஆலயத்தை தரிசிக்க விரும்புவோர், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள திருவள்ளூர் அடுத்து வரும் மணவூர் ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரம் சென்றால் சிற்றம்பாக்கம் திருத்தலத்தை அடையலாம்.
சுற்றியுள்ள கோவில்கள் :
சிற்றம்பாக்கத்தில் கும்பேஸ்வரர் ஆலயம் தவிர, செல்லியம்மன் கோவில், பச்சையம்மன் கோவில், கங்கையம்மன் கோவில் ஆகிய பழமையான மற்ற ஆலயங்களும் இருக்கின்றன. அதே போல் இத்தலத்தின் அருகில் உள்ள பேரம்பாக்கம், திருவாலங்காடு, கூம், இலம்பையங்கோட்டூர் ஆகிய இடங்களிலும் பழமையான பல ஆலயங்கள் உள்ளன.

செல்லியம்மன் கருவறைஇந்த ஆலயத்தில் பிரதோஷம், கிருத்திகை, திருவாதிரை உள்ளிட்ட சிவபெருமானுக்குரிய விசேஷங்கள் அனைத்தும் எளிமையாக கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
வரம் தரும் தலம் :
இந்த ஆலயம் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் திருத்தலமாகத் திகழ்கின்றது. வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள், இத்தலத்து இறைவனை மனமுருக நம்பிக்கையோடு வழிபாடு செய்தால், நம்பிக்கையும், துணிவும் பெற்று மீண்டும் முயற்சிக்கும் மன உறுதியைப் பெறுவார்கள். வாழ்விலும் பல்வேறு வெற்றிகளைப் பெறுவார்கள் என இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். மேலும், அன்னை குழந்தைவல்லியை வழி படுவோருக்கு நிச்சயம் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
அமைவிடம் :
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், பேரம்பாக்கத்தை அடுத்து சிற்றம்பாக்கம் திருத்தலம் அமைந்திருக்கிறது. சென்னையில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவிலும், பூந்தமல்லியில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும், பேரம்பாக்கத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் சிற்றம் பாக்கம் உள்ளது. பேரம்பாக்கத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது. அதே நேரம் ரெயில் மூலமாக இந்த ஆலயத்தை தரிசிக்க விரும்புவோர், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள திருவள்ளூர் அடுத்து வரும் மணவூர் ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரம் சென்றால் சிற்றம்பாக்கம் திருத்தலத்தை அடையலாம்.
சுற்றியுள்ள கோவில்கள் :
சிற்றம்பாக்கத்தில் கும்பேஸ்வரர் ஆலயம் தவிர, செல்லியம்மன் கோவில், பச்சையம்மன் கோவில், கங்கையம்மன் கோவில் ஆகிய பழமையான மற்ற ஆலயங்களும் இருக்கின்றன. அதே போல் இத்தலத்தின் அருகில் உள்ள பேரம்பாக்கம், திருவாலங்காடு, கூம், இலம்பையங்கோட்டூர் ஆகிய இடங்களிலும் பழமையான பல ஆலயங்கள் உள்ளன.
பூலோக வைகுண்டம் என வர்ணிக்கப்படும் திருப்பதி உலக அளவில் மிகப் பிரசித்திப் பெற்றது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
காக்கும் கடவுளான மகா விஷ்ணுவின் அம்சமான திருப்பதி ஏழுமலையானை காண கண் கோடி வேண்டும். பூலோக வைகுண்டம் என வர்ணிக்கப்படும் திருப்பதி உலக அளவில் மிகப் பிரசித்திப் பெற்றது. அதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் “கலியுக வைகுண்டம்” ஆக கன்னியாகுமரியில் ஏழுமலையான் ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது.
சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், சாத்தனார் மணிமேகலை போன்ற இலக்கியங்களிலேயே திருப்பதி பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றில் திருப்பதியின் அப்போதைய பெயரான ‘திருவேங்கடம்’ என குறிப்பிடப்பட்டிருக்கும்.
இன்று எத்தனையோ திருக்கோயில்கள் இருக்கும் போது திருப்பதியில் மட்டும் ஏன் பக்தர்கள் கூட்டம் இப்படி அலைமோதுகிறது? காரணம் இல்லாமல் இல்லை. இந்த சேஷத்திரத்தில் மகாவிஷ்ணு நடத்திக் காட்டிய மகிமைகள் பல. ஒருநாள் இருநாளில் அல்ல. பல ஜென்மங்கள் எடுத்துக் கொண்டு நடத்திய ‘நாடகம்’ தான் திருப்பதியில் வெங்கடேஸ்வர பெருமாள் குடிக்கொள்ள காரணமாயிற்று,
கங்கை நதிக்கரையில் காஸ்யப முனிவரின் தலைமையில் முனிவர்கள் சிலர் யாகம் செய்துக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நாரதர் இந்த யாகம் யாருடைய நன்மைக்காக நடத்தப்படுகிறது என கேட்டார். ஆனால் அங்கிருந்த முனிவர்களால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை. அதனால் பிருகு முனிவரிடம் உதவி கேட்டு சென்றனர்.
பிருகு முனிவரின் உள்ளங்காலில் ஒரு கண் இருந்ததால் அவருக்கு மற்ற முனிவர்களை விட ஞானம் சற்று அதிகம் இருந்தது. அவர் இதற்கு ஒரு தீர்வு காண நினைத்து பிரம்மனை தரிசிக்க சத்யலோகத்திற்கு சென்றார். அங்கே பிரம்மதேவர் சரஸ்வதி தேவியின் துணையுடன் தனது நான்கு முகங்களாலும் ஸ்ரீமன் நாராயணைப் போற்றி நான்கு வேதங்கள் ஓதிக் கொண்டிருந்தார்.
அவர் பிருகு முனிவர் வந்ததை கவனிக்கவே இல்லை. சற்று நேரம் பொறுத்துப் பார்த்த முனிவர் இவர் வழிபாட்டிற்கு உகந்தவர் இல்லை என முடிவு செய்து சிவப்பெருமானை தரிசிக்க கைலாசம் சென்றார். ஆனால் சிவன் பார்வதிதேவியுடன் ஏதோ முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்ததால் அவரும் முனிவரை கண்டுக் கொள்ளவில்லை. முனிவரைக் கண்ட பார்வதிதேவி சிவனிடம் கூற அவரோ தனது முக்கிய ஆலோசனையின் போது முனிவர் குறுக்கிட்டதைக் விரும்பாததால் அவரை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலானார். அதனால் ஆத்திரமுற்ற பிருகு முனிவர் சிவப்பெருமானுக்கு சாபமிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
பின்னர் மகாவிஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் வந்தார். ஆனால் ஆதிசேஷன் குடை விரிக்க, மகாலட்சுமி காலடியில் அமர்ந்து பணிவிடை செய்ய ஆனந்த சயனத்தில் இருந்ததால் அவரும் முனிவர் வந்ததை கவனிக்கவில்லை. அதனால் ஆத்திரத்தில் மதியிழந்த பிருகு முனிவர் மகாலட்சுமியின் உறைவிடமான மகாவிஷ்ணுவின் நெஞ்சில் எட்டி உதைத்தார்.
முனிவரின் கோபத்தை தணிக்க நினைத்த பெருமாள் எட்டி உதைத்த காலை சட்டென பிடித்து பாதங்களை மென்மையாக அழுத்திவிட்டார். அந்த இதத்தில் முனிவரின் கோபம் தணிந்தது. அதே சமயம் மகாவிஷ்ணு பிருகு முனிவரின் காலில் இருந்த கண்ணை பறித்துவிட்டார். பாதத்தில் இருந்த கண் தான் அவருக்கு இத்தனை அகங்காரத்தை தந்தது. தனது தவற்றை உணர்ந்த முனிவர் விஷ்ணுவிடம் மன்னிப்புக் கோரிவிட்டு மும்மூர்த்திகளில் சிறந்தவர் இவரே என முடிவு செய்தார்.
இருப்பினும், தனது மணவாளன் தன்னை எட்டி உதைத்த முனிவரின் காலைப் பிடித்து மன்னிப்புக் கேட்டதை விரும்பாத ஸ்ரீதேவி அவரிடம் கோபித்துக் கொண்டு சென்று இன்று மகாராஷ்டிராவில் உள்ள கோலாபூர் எனும் இடத்திற்கு சென்றுவிட்டார். அவரைத் தேடிப் பிடித்து வருவதற்காக பூலோகம் வந்த மகாவிஷ்ணு வேங்கடமலையில் உள்ள புஷ்கரணியின் தெற்கு கரையில் ஒரு புளிய மரத்தடியில் எறும்பு புற்றின் மேல் அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார்.
இதில் மனமுருகிய பிரம்மரும், ஈசனும் பெருமாளுக்கு உதவும் நோக்கோடு பசு மற்றும் கன்றுக் குட்டியின் வடிவெடுத்து அவர்களும் பூலோகம் வந்தனர். இத்தனை சங்கதிகளையும் சூர்ய பகவான் மூலம் அறிந்த மகாலட்சுமி அவரது அறிவுரைப்படி மாடு மேய்க்கும் பெண்ணாக உருக்கொண்டு வந்து பசுவையும் கன்றையும் சோழ மன்னனுக்கு விற்றார். அவற்றை வாங்கிய சோழ மன்னனின் பணியாட்கள் அவற்றை வேங்கடமலைக்கு மேய அனுப்புவார்கள்.
அங்கே ஒரு எறும்பு புற்றில் மகாவிஷ்ணுவை கண்ட பசு தாமாகவே அங்கே பால்சுரக்க ஆரம்பித்தது. அதை ஏற்று மகாவிஷ்ணுவும் பசியாறி வந்தார். இதற்கிடையே அரண்மனையில் பசுக்கள் பால் தருவது இல்லை என்பதை கவனித்த மன்னனின் வேலையாள் பசுவை பின் தொடர்ந்து வந்தான். அது ஒரு இடத்தில் தானாகவே பால் சுரந்து பாலை வீணடிப்பதை கவனித்த அவன் பசுவின் மீது தன் கோடாலியை வீசியெறிய அது பசு மீது பட்டுவிடக் கூடாது என மகாவிஷ்ணு குறுக்கேத் தோன்றி அடியை தான் வாங்கினார். தான் வீசிய ஆயுதம் மகாவிஷ்ணுவை தாக்கி அதனால் ரத்தம் வருவதைக் கண்ட வேலையாள் அதிர்ச்சியில் உயிரிழந்தான்.
ரத்தக் கறையுடன் பசு மாடு வருவதைக் கண்ட சோழ ராஜா என்ன நடந்தது என அறிய அதை பின் தொடர்ந்தான். அஙகே எறும்பு புற்று ஒன்றின் அருகே தனது வேலையாள் இறந்து கிடப்பதைக் கண்டு எதுமறியாமல் விழித்தான். அப்பொழுது அவனுக்கு காட்சியளித்த விஷ்ணு அவனது வேலைக்காரன் செய்த குற்றத்திற்கு மன்னனுக்கு சாபமிட்டார். ஆனால் மன்னன் மீது தவறேதுமில்லாக் காரணத்தால் அவன் அடுத்த ஜென்மத்தில் ஆகாய ராஜாவாக பிறப்பானென்றும் தனக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடக்கும் சமயம் அவனது சாபம் தீரும் எனவும் ஆசி வழங்கினார்.
ஸ்ரீ வராகசுவாமி ஆலயம் : இந்த சம்பவங்கள் நடந்த காலக்கட்டத்தில் திருப்பதி மலை வராகசுவாமியின் இருப்பிடமாக ஆதி வராக ஷேத்திரமாக இருந்தது. சோழ ராஜாவிற்கு ஆசி வழங்கி அனுப்பிய மகாவிஷ்ணு ஸ்ரீனிவாசன் என்ற பெயருடன் தனக்கு ஒரு இருப்பிடம் வேண்டி வராக சுவாமியை சந்தித்தார். அவரும் மகிழ்ந்து இடமளித்தார். அதற்கு நன்றிக் கூறும் விதமாகத் தான் இன்றும் திருப்பதிக்கு செல்பவர்கள் முதலில் புஷ்கரணியில் குளித்து வராக சுவாமியை தரிசித்து பூஜை, நைவேத்தியங்களை முதலில் அவருக்கு செய்துவிட்டு பிறகு வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க வேண்டும் என ஒரு ஐதீகம் உள்ளது.
பத்மாவதி தாயார் : இது அனைத்தும் ஒரு ஜென்மத்து கதை. இக்கதை சோழ மன்னனின் அடுத்த ஜென்மத்திலும் தொடர்கிறது. அடுத்த பிறவியில் அச்சோழ மன்னன் ஆகாச ராஜாவாக பிறந்தான். பிறந்து வளர்ந்து அனைத்து வளங்களும் பெற்று திகழ்ந்த அவனுக்கு பிள்ளைப் «பறு இல்லை அதனால் யாகம் செய்ய எண்ணிய அவன் நிலத்தை உழுதப் பொழுது அழகிய தாமரை மலர் ஒன்று தோன்றியது. அதை அருகில் சென்று பார்த்தப்போது அதில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரிந்தது. அப்போது அதை எடுத்து வளர்த்தால் சகல சவுபாக்கியம் உண்டாகும் என அசரீரிக் கேட்டது. தாமரை மலரில் தோன்றியதால் பத்மாவதி எனப் பெயரிட்டு சீரும் சிறப்புடனும் வளர்த்து வந்தான்.
இதனிடையே சீனிவாசன் என்ற பெயரோடு வாழ்ந்து வந்த மகாவிஷ்ணு பத்மாவதியைக் கண்டார். உடனே பெற்ற தாய் போல தன்னை கவனித்து வந்த வகுலாதேவியிடம் சென்று பூர்வஜென்ம கதைகளைக் கூறி பத்மாவதியை தான் மணக்க வேண்டிய அவசியத்தைக் கூறுகிறார். அதே சமயம் ஆகாச ராஜாவும் அவனது மனைவியும் கூட தங்களது மகள் வேங்கட மலையில் வசித்து வரும் சீனிவாசனை மணக்க விரும்புவதை அறிகிறார்கள். செல்வங்களுக்கு அதிபதியான கு«பரன் இத்திருமணச் செலவுகளுக்காக சீனிவாசனுக்கு கடன் தருகிறார்.
இரு வீட்டார் சம்மதத்துடன் தேவர்களும், சிவன், பிரம்மா புடைசூழ சீனிவாசன், பத்மாவதி திருமணம் நடைபெறுகிறது. இக்கதையும், இத்திருமணமும் நடைபெற்ற இடம் தான் திருவேங்கடமலை (திருப்பதி திருமலை). அதனால் இன்றும் திருமலையில் தினமும் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி இப்போதும் பிரம்மோற்சவம் நடக்கும் 9 நாட்களும், மஞ்சள், குங்குமம் மற்றும் சேலை திருப்பதியில் இருந்து திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாருக்கு எடுத்து செல்லப்படுகிறது.
கோவில் வரலாறு : தொண்டைமான் எனும் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் முதன் முதலாக கோவில், பிரகாரம் கட்டி தினசரி வழிபாட்டிற்கு வழிசெய்தான் எனக் கூறப்படுகிறது. அவனைத் தொடர்ந்து பல சோழ மன்னர்கள் பல சேவைகளை செய்துள்ளனர். ஆனால் இன்றுள்ள வளங்களில் பெரும்பாலானவை விஜயநகர பேரரசுக் காலத்தில் வந்தவை. கிருஷ்ணதேவராயர் இக்கோவிலுக்கு பலவசதிகளை செய்து கொடுத்து எக்கச்சக்கமான தங்க வைர ஆபரணங்களையும் பரிசளித்தார்.
1843லிருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது. 1932-ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது. 1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது.