என் மலர்
கோவில்கள்
கேரளாவின், ஆலப்புழா செங்கன்னூரில் அமைந்திருக்கும் பகவதியம்மன் கோவில் குறித்து மூன்று விதமான தல வரலாறுகள் சொல்லப்படுகின்றன. அவற்றில். முதல் தல வரலாற்றைப் பார்ப்போம்.
பொதுவாக கோவில்களுக்கு தலபுராணம் என்பது ஒன்றுதான் இருக்கும். ஆனால், கேரளாவின், ஆலப்புழா செங்கன்னூரில் அமைந்திருக்கும் பகவதியம்மன் கோவில் குறித்து மூன்று விதமான தல வரலாறுகள் சொல்லப்படுகின்றன. அவற்றில். முதல் தல வரலாற்றைப் பார்ப்போம்.
பார்வதி தேவியான தாட்சாயிணியின் தந்தை தட்சன், பெரும் வேள்வி ஒன்றை நடத்தத் தொடங்கினான். தாட்சாயிணி அந்த வேள்விக்கு அழைத்துச் செல்லும்படி சிவனிடம் வேண்டினார். அழைப்பில்லாமல் சென்றால் அவமானம் நேரிடும் என்று சிவன் அறிவுரை சொன்னார். ஆனால், தாட்சாயிணி தனியாக அந்த வேள்விக்குச் சென்று, தட்சனால் அவ மதிக்கப்பட்ட நிலையில் வேள்வி அழியும்படி சபித்து விட்டு, வேள்வித் தீயில் குதித்து விட்டாள்.
அதனை அறிந்த சிவன், வேள்வியை அழித்த பின்னர் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு, ஊழித்தாண்டவம் ஆடினார். அவரை அமைதிப்படுத்த நினைத்த மகாவிஷ்ணு, சக்கராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை துண்டு துண்டாக வெட்டினார். தாட்சாயிணியின் உடல் பகுதிகள் பூலோகத்தில் 51 இடங்களில் விழுந்து, அவை அம்பிகையின் 51 சக்தி பீடங்களாக தோற்றம் பெற்றன. அம்பிகை உடலின், இடையின் கீழ்ப்பகுதி விழுந்த இடத்தில் இக்கோவில் அமைந்திருப்பதாக கோவில் தல வரலாறு சொல்கிறது.
இக்கோவில் செங்கன்னூர் மகாதேவர் கோவில் என்றும், செங்கன்னூர் பகவதி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கிய மகாதேவர் சன்னிதியும், சன்னிதியின் பின்புறம் மேற்கு நோக்கிய பகவதியம்மன் சன்னிதியும் உள்ளன. பரிவார தேவதை சன்னிதிகளாக கணபதி, ஐயப்பன், கிருஷ்ணர், நீலக்கிரீவன், சண்டிகேஸ்வரன், நாகர் மற்றும் கங்கா ஆகியவை உள்ளன.
வழிபாட்டு காலம் :
காலை 4 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இறைவன் மகாதேவருக்கு மூன்று வேளைகள், இறைவி பகவதியம்மனுக்கு இரண்டு வேளைகள் என்று தினமும் ஐந்து வேளை பூஜைகள் செய்யப்படுகின்றன. விஷேச தினங்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு.
திருப்பூத்து :
கோவில் அமைவிடம் :
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செங்கன்னூர் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கோவில் அமைந்துள்ளது.

இரண்டாவது தல வரலாறு:- அகத்திய முனிவருக்குத் தங்களது திருமணக் காட்சியைக் காண்பிக்க சிவபெருமானும், பார்வதி தேவியும் தென்பகுதிக்கு வந்திருந்தனர். அவ்வேளையில், இங்கு பார்வதி தேவி வயதுக்கு வந்ததற்கான அடையாளமாக ருது என்ற பூப்பு நிகழ்வு நடந்தது என்பதன் அடிப்படையில், அம்மனுக்கு இங்கு பூப்புனித நீராட்டு விழா என்ற ருது சாந்தி கல்யாணம் நடைபெற்றது. அம்மன் வயதுக்கு வந்த நிகழ்வு நடைபெற்ற இந்த மலைப்பகுதி செந்நிறமாகிப் போனது என்றும், அதனால் இந்த இடம், மலையாளத்தில் செங்குன்னூர் என்று அழைக்கப் பெற்று, பிற்காலத்தில் செங்கன்னூர் என்று மாறி விட்டதாக சொல்லப்படுகிறது.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு போன்று அம்மனுக்கும், மாதவிடாய் ஏற்படும் நாட்களில் அம்மன் சன்னிதி அடைக்கப்பட்டு, உற்சவர் சிலை, கோவிலின் ஒரு பகுதியில் தனியாக வைக்கப்படும். மூன்று நாட்கள் கடந்த பின்னர், நான்காவது நாளில் சிலை மித்ரபுழை கடவு நதிக்குக் கொண்டு சென்று நீராட்டிய பின்னர் அலங்காரத்துடன் ஊர்வலமாக கோவிலுக்குக் கொண்டு வரப்படும்.
மூன்றாவது தல வரலாறு:- பகவதியின் மற்றொரு தோற்றமாகக் கருதப்படும் கண்ணகி, தனது கணவன் கோவலனுடன் மதுரைக்குச் சென்றார். கோவலன், தான் செய்து வந்த வணிகத்தை தொடங்குவதற்காகக் கண்ணகியின் காற்சிலம்பு ஒன்றை விற்க சென்ற நிலையில், அரசியின் சிலம்பைத் திருடிய பொற்கொல்லன், கோவலனைத் திருடனாகக் குற்றம் சுமத்தி அரசவைக்குக் கொண்டு சென்றான். அங்கு, கோவலனுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு கோவலன் கொல்லப்பட்டான்.
செய்தியறிந்த கண்ணகி, அரசவைக்குச் சென்று வழக்குரைத்தாள். வழக்கின் முடிவில், தனது தவறான தீர்ப்பை அறிந்த மன்னன் உயிர் துறந்தான். அதனைக் கண்டும் கோபம் குறையாத கண்ணகி, தன் கற்பின் வலிமையால் மதுரை நகரை தீக்கிரையாக்கினாள். அதன் பிறகு, கண்ணகி இத்தலம் அமைந்திருக்கும் பகுதிக்கு வந்து, தவமிருந்து, கோவலனுடன் சேர்ந்து தேவலோகம் சென்றதாக ஐதீகம். சேரன் செங்குட்டுவன், அங்கு கோவில் அமைத்து அம்மன் சிலையை நிறுவி, ‘செங்கமலவல்லி’ எனும் பெயரிட்டு வழிபட்டு வந்ததாக வரலாறு.
இக்கோவில் செங்கன்னூர் மகாதேவர் கோவில் என்றும், செங்கன்னூர் பகவதி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கிய மகாதேவர் சன்னிதியும், சன்னிதியின் பின்புறம் மேற்கு நோக்கிய பகவதியம்மன் சன்னிதியும் உள்ளன. பரிவார தேவதை சன்னிதிகளாக கணபதி, ஐயப்பன், கிருஷ்ணர், நீலக்கிரீவன், சண்டிகேஸ்வரன், நாகர் மற்றும் கங்கா ஆகியவை உள்ளன.
வழிபாட்டு காலம் :
காலை 4 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இறைவன் மகாதேவருக்கு மூன்று வேளைகள், இறைவி பகவதியம்மனுக்கு இரண்டு வேளைகள் என்று தினமும் ஐந்து வேளை பூஜைகள் செய்யப்படுகின்றன. விஷேச தினங்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு.
திருப்பூத்து :
அம்மனுக்கு மாதவிடாய் ஏற்படும், மூன்று நாட்களில் அம்மனின் சன்னிதி அடைக்கப்பட்டு, அம்மனின் உற்சவ சிலை வடக்கு மூலையில் தனியாக ஒரு அறையில் வைக்கப்படுகிறது. இந்நிகழ்வை ‘திருப்பூத்து’ என்றழைக்கின்றனர். மூன்று நாட் களுக்குப் பிறகு, நான்காவது நாளில் அம்மன் சிலை ‘ஆராட்டு’ செய்யப்பெற்று, மீண்டும் கோவிலுக்குள் கொண்டு வரப்படுகிறது. இவ்விழாவினை ‘திருப்பூத்தாராட்டு விழா’ என்கின்றனர்.
இருநூறு வருடங்களுக்கு முன்பு, கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் அம்மன் சிலை பாதிப்படைந்த நிலையில் புதிய ஐம்பொன்சிலை நிறுவப்பட்டது. அதன் பிறகு, வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் மாதவிலக்கு ஏற்பட்டு, திருப்பூத்து விழா நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இக்கோவில் கேரளாவின் தட்சிண கயிலாசமாக குறிப்பிடப்படுகிறது. காக்கை வலிப்பு போன்ற நோய் உடையவர்கள், இக்கோவிலில் வழிபாடு செய்தால், நலம் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், திருமணத் தடைகள் நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் பகவதியை வழிபடுவதும் வழக்கமாக உள்ளது.
கோவில் அமைவிடம் :
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செங்கன்னூர் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கோவில் அமைந்துள்ளது.
திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது திருவெறும்பூர். இந்த ஊரில் உள்ளது, எறும்பீஸ்வரர் ஆலயம். சுமார் 250 அடி உயரமுள்ள குன்றின் மீது கோவில் அமைந்துள்ளது. மேலே செல்ல 125 படிக்கட்டுகள். இடையே இளைப்பாற மண்டபங்கள் உள்ளன. குன்றின் கிழக்கு நுழைவு வாசலின் இடதுபுறம் செல்வ விநாயகரும், வலப்புறம் ஆஞ்சநேயரும் வீற்றிருக்கின்றனர்.
தெற்கு நோக்கிய சன்னிதியில் உள்ள அம்மன், நறுங்குழல் நாயகி, சவுந்திர நாயகி, ரத்தினம்பாள் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறாள். கோவிலுக்கு முன்னே கொடிமரம், பலிபீடம், நந்திமண்டபம் உள்ளன. கருவறைக்கு முன் முக மண்டபமும், அதனையொட்டி திருச்சுற்றும் உள்ளன. திருச்சுற்றில் முருகன், சப்த கன்னியர், விநாயகர், காசி விஸ்வநாதர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், ஆடவல்லான், சூரியன் ஆகிய தெய்வங்களை தரிசிக்கலாம்.
கருவறையின் வெளிப்புற சுவரில் நர்த்தன விநாயகர், தட்சிணா மூர்த்தி, நான்முகன், துர்க்கை ஆகியோரது திருமேனிகளைக் காணலாம்.
தாருகாசூரன் எனும் அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்களாலும் இந்திரனாலும் அவனை எதிர்த்துப் போரிட முடியவில்லை. எனவே தாருகன் அவர்களை தோற்கடித்து தேவலோகத்தைக் கைப்பற்றினான். தேவர்கள் அஞ்சி பிரம்மனிடம் போய் முறையிட்டனர். பிரம்மன் அவர்களை பூலோகத்தில் உள்ள தென் கயிலாயமாகிய திருவெறும்பூருக்குச் சென்று இறைவனைப் பூஜிக்கும்படி சொன்னார்.
தேவர்களும் தாருகனுக்குப் பயந்து எறும்பு உருவம் கொண்டு, இத்தலத்தை அடைந்து இறைவனைக் கண்டு தங்கள் குறைகளைக் கூறினர். இறைவன் உமா தேவியுடன் காட்சி தந்து, தேவர்களை அங்கேயே சில காலம் தங்கியிருக்கும்படி பணித்தார். தேவர்களின் தலைவனான இந்திரன் பிற தேவர்களுடன் வந்திருந்து, தினசரி ஆயிரம் கரு நெய்தல் மலர்களால் இறைவனை பூசித்து வந்தான்.
தேவர்களும் இந்திரனும் எறும்பு வடிவம் எடுத்து சிவலிங்கத்தின் மீது ஊர்ந்து ஏறும்போது, ஏற முடியாமல் தவித்தனர். உடனே இறைவன் சற்றே தலை சாய்த்து சரிந்து கொடுத்தார் என்பது தல வரலாறு.

இங்குள்ள பெருமானுக்கும், பிற மூர்த்திகளுக்கும் தினசரி காலை, உச்சி, மாலை, இரவு என நான்கு கால ஆராதனைகள் நடைபெறுகின்றன. மூலவர் மண்புற்றாய் இருப்பதால், தண்ணீர் படாமல் புற்றுலிங்கம் மீது பாணம் சாத்தப்பட்டு, பாணத்தின் மீது அபிஷேகம் நடைபெறுகிறது.
மாதம் இருமுறை திரயோதசி திதியில் மிகச் சிறப்பாக பிரதோஷ வழிபாடு இங்கு நடைபெறுகிறது. ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் விசாகப் பெருந்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். புனர்பூச நாளில் விழா தொடங்கி தெப்ப உற்சவம் என சிறப்புடன் நிறைவு பெறும். இத்தலத்தின் தலமரம் வில்வம்.
இந்திரனும், தேவர்களும் பூரித்து வணங்கி அருள் பெற்ற எறும்பீஸ்வரரை தரிசித்து நாமும் அருள் பெறலாமே.
திருச்சி- தஞ்சை பாதையில் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து அரை கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம்.

தலை வணங்கிப் போற்றும் அடியாருக்கு இறைவனும் தலை வணங்கி அருள் செய்கிறான் என்பதை உணர்த்தவே இங்கு பெருமான் இன்றும் திருமுடி சாய்த்த, தலைவணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார்.

இங்குள்ள பெருமானுக்கும், பிற மூர்த்திகளுக்கும் தினசரி காலை, உச்சி, மாலை, இரவு என நான்கு கால ஆராதனைகள் நடைபெறுகின்றன. மூலவர் மண்புற்றாய் இருப்பதால், தண்ணீர் படாமல் புற்றுலிங்கம் மீது பாணம் சாத்தப்பட்டு, பாணத்தின் மீது அபிஷேகம் நடைபெறுகிறது.
மாதம் இருமுறை திரயோதசி திதியில் மிகச் சிறப்பாக பிரதோஷ வழிபாடு இங்கு நடைபெறுகிறது. ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் விசாகப் பெருந்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். புனர்பூச நாளில் விழா தொடங்கி தெப்ப உற்சவம் என சிறப்புடன் நிறைவு பெறும். இத்தலத்தின் தலமரம் வில்வம்.
இந்திரனும், தேவர்களும் பூரித்து வணங்கி அருள் பெற்ற எறும்பீஸ்வரரை தரிசித்து நாமும் அருள் பெறலாமே.
திருச்சி- தஞ்சை பாதையில் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து அரை கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம்.
முதலாம் ராஜேந்திரனின் பேரன் குலோத்துங்கன் கட்டிய ஆலயம் வடபுறம் வரதராஜ பெருமாள் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
முதலாம் குலோத்துங்கச் சோழன், சோழ நாட்டை ஆண்ட காலத்தில் கி.பி 1080-ம் ஆண்டு அழகாய் கட்டிய ஆலயம் ஒன்று புள்ளம்பாடி கிராமத்தில் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் பல தகவல்களை நாம் அறியலாம். கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் ‘புள்ளம்பாடி’ என்றும், இது கானக்கிளியூர் நாட்டுப் பிரிவின் கீழ் இருந்த ஊர் என்றும், இந்த ஊரில் உள்ள சிவாலயத்தின் பெயர் ‘மதுராந்தக ஈஸ்வரம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுராந்தகன் என்பது முதலாம் ராஜேந்திரனின் பெயர் ஆகும். எனவே இவர் பெயரால் இவரது பேரன் குலோத்துங்கன் கட்டிய ஆலயம் இது என்பதை அறிய முடிகிறது. இந்த ஆலயத்தின் வடபுறம் உள்ளது வரதராஜ பெருமாள் கோவில்.
அழகிய முன் முகப்பைக் கடந்ததும், அகன்ற பிரகாரம் தென்படும். அதை அடுத்து மகா மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்தின் நடுவே ஒரு பெரிய ஸ்தூபி உள்ளது. இந்த ஸ்தூபிதான் ஆதியில் சஞ்சீவி ராய பெருமாள் என்ற திருநாமத்தில் மூலவராய் அருள்பாலித்துக் கொண்டிருந்ததாக தல வரலாறு சொல்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் இந்த ஸ்தூபியை மகா மண்டபத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு, புதியதாக வரதராஜப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூ தேவி விக்கிரகங்களை செய்து, கருவறையில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.
இந்த ஸ்தூபியின் நான்கு புறமும் சங்கு, சக்கரம், ஆஞ்சநேயர், இறைவனின் திருநாமம் காணப்படுகிறது. ஸ்தூபியானது நெடிந்துயர்ந்து, மகா மண்டபத்தின் உச்சி வரை உள்ளது. இந்த ஸ்தூபியின் அருகே மூலவரை தரிசித்தபடி சக்கரத்தாழ்வார் அருள்பாலிக்கிறார். அடுத்து அர்த்த மண்டபத்தைக் கடந்து சென்றால், கருவறையில் வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சேவை சாதிக்கிறார். ஆலயத்தின் தென்திசையிலும் வடதிசையிலும் மூன்று நிலை ராஜ கோபுரங்கள் அழகாக அமைந்துள்ளன.
இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் இறைவன், இறைவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அனுமன் ஜெயந்தி விழாவும் மிகச்சிறப்பாக நடக்கிறது. விரைந்து திருமணம் ஆக வேண்டியும், குழந்தை பேறு வேண்டியும் ஆஞ்சநேயரிடம் பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள், மீண்டும் கோவிலுக்கு வந்து ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனை செய்து, வெண்ணெய் காப்பிட்டு, வெற்றிலை மாலை சூட்டி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
தினசரி இரண்டு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயத்தில், மார்கழி மாதத்தில் 30 நாட்களும் சிறப்பு பூஜைகள் வெகுவிமரிசையாக நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ந் தேதி இந்த ஆலயம் விழாக் கோலம் பூண்டிருக்கும். அன்றைய தினம் மகா மண்டபத்தில் உள்ள மேடையில் பெரிய அளவிலான ஐயப்பன் படத்தை அலங்காரம் செய்து வைத்திருப்பார்கள். ஐய்யப்பன் விரதம் இருப்பவர்களும், பிற பக்தர்களுமாக பங்கேற்கும் இந்த நிகழ்வில் ஐய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடை பெறும். ஆலயத்தின் எதிரே பெரிய திருக்குளம் உள்ளது. இரவு இந்த தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கும்.
தினமும் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
வேண்டிய வரம் அருள்வதில் வரதராஜ பெருமாளுக்கு நிகரில்லை என்பது பக்தர் களின் நம்பிக்கை. நாமும் ஒருமுறை பெருமாளையும் தாயாரையும் சென்று சேவித்து வரலாமே!
திருச்சி மாவட்டம் திருச்சி - அரியலூர் சாலையில் திருச்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புள்ளம்பாடி கிராமம். திருச்சி மற்றும் அரியலூரில் இருந்து பஸ் மற்றும் ரெயில் வசதி உள்ளது.

சிவராத்திரியோடு தொடர்புடைய தலங்கள் பல உள்ளன. வசதி படைத்தோர் கீழ்க்கண்ட தலங்களுக்கு சென்று வழிபட்டால் மேலும் மேலும் தம் வாழ்க்கையில் உயர்வார்கள் என்பது முக்காலமும் உண்மை.
சிவராத்திரி தினத்தன்று விரதம் இருந்து அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று தரிசிப்பது நல்லது. அப்பொழுது சிவபெருமானுடைய நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவது சிறந்தது. சிவராத்திரியோடு தொடர்புடைய தலங்கள் பல உள்ளன. வசதி படைத்தோர் கீழ்க்கண்ட தலங்களுக்கு சென்று வழிபட்டால் மேலும் மேலும் தம் வாழ்க்கையில் உயர்வார்கள் என்பது முக்காலமும் உண்மை.
காஞ்சீபுரம்:- பார்வதி தேவியார் விளையாட்டாக சிவபெரு மானின் கண்களைப் பொத்தியதால் சிவபெரு மானால் சாபம் பெற்று தவம் முழுமை அடையாததால் திருவண்ணாமலையில் தவம் செய்து இடப்பாகம் பெற்றார். இவ்வரலாற்றை காஞ்சிபுராணம் மிக விரிவாகக் கூறுகிறது. இந்நிகழ்வு சிவராத்திரி அன்று நடந்தது. காஞ்சியின் ஒரு பகுதி உருத்திரச் சோலை எனப்பட்டதாகவும் காஞ்சிபுராணம் கூறுகிறது. காஞ்சியில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரேஸ்வரரைச் சிவராத்திரி அன்று வழிபட்டு அருளை பெறுவோமாக.
ஸ்ரீசைலம்:- சிவ மகா புராணத் தில் கூறப்பட்ட வேடன் கதை நடந்த இடம் ஸ்ரீசைலம் ஆகும். இங்கே நந்திதேவர் மலை உருவில் வீற்றிருக்கின்றார். காஞ்சியில் மர உருவிலும் திருவண்ணாமலையில் மலை உருவிலும் சிவபெருமான் எழுந்தருளி இருப்பது போல ஸ்ரீசைலத்தில் மலை உருவில் நந்திதேவர் எழுந் தருளியுள்ளார். இத்தலத்தை திருப்பருப்பதம் என்றும் மல்லிகார்ஜுனம் என்றும் சொல்வார்கள். இது 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்று. சிவராத்தி யன்று இங்குள்ள பாதாளகங்கை என்ற தீர்த்தத்தில் நீராடி இறைவனைத் தரிசித்தால் எல்லா நலன்களும் பெற்று இன்பம் அடையலாம்.
ஓமாம்புலியூர்:- சிவபெருமான் பார்வதி தேவிக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத் தின் உட்பொருளை உபதேசித்த தலம் ஓமாம் புலியூராகும். சிவமகா புராணத்தில் சொல்லப்பட்ட வேடன் கதை போன்ற ஒரு கதை இங்கும் உண்டு. சிவராத்திரியின் பெருமையை விளக்குகிறது. இந்த ஊரினை பிரணவ வியாக்ரபுரம் என்றும் கூறுவர். சிதம்பரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது.
திருக்கழுக்குன்றம்:- செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள ஊர் திருக்கழுக்குன்றமாகும். இவ்வூரை உருத்திரகோடி என்பார்கள். கோடி உருத்திரர்கள் சிவராத்திரி அன்று சிவபூஜை செய்து அருள் பெற்றதால் இது உருத்திரகோடி எனப் பெயர் பெற்றதாம். இக்கோவிலில் சிவராத்திரி தினத்தன்று பூஜை செய்தால் கோடிருந்திரர்கள் பெற்ற அருள் நமக்கு கிடைக்கும்.
திருக்காளத்தி:- இங்குள்ள மலைக் கோவிலில் சிவராத்திரி நாளில் தேரில் காளத்திநாதர் பவனி வருகிறார். தேரோட்டம் திருக்கல்யாணம், கிரிவலம், ரிஷப வாகன சேவை முதலிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கோகர்ணம், தேவிகாபுரம் ஆகிய சிவத்தலங்களிலும் சிவ ராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. காவிரி கரையில் திருவிசலூர் என்னும் தலம் ஒன்று உள்ளது. இத்தலத்தில் மகா சிவராத்திரி இரவில் அகத்தியர் சுவாமியை பூசித்தார் என்று டாக்டர் உ.வே.சுவாமிநாதய்யர் கூறியுள்ளார். சிவராத்திரி அன்று கண் விழித்து சிவபுராணம், தேவாரம் முதலிய நூல்களை முற்றோதி எல்லா நலன்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்வோமாக.
ஹரித்துவாரமங்கலம்:- இங்கு ஸ்ரீபாதாளேஸ்வரர் ஆலயம் உள்ளது. தஞ்சைக்கு கிழக்கே அம்மாப்பேட்டை வழியில் 22 கி.மீட்டர் செல்ல வேண்டும். திருமால் வராக அவதாரத்தில் பாதாளம் செல்லும் பொருட்டு பள்ளம் பறித்த இடமாகும். செருக்கு மிக்கவராகிய வராக மூர்த்தியின் கொம்பை முறித்து சிவபெருமான் ஆபரணமாக தரித்த தலம். சிவஅருள் கிடைக்கும்.
ஸ்ரீபட்டீஸ்வரம்:- ஆலயம் கும்பகோணத்துக்கு தென்மேற்கே ஆவூர் சாலையில் 6 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. காமதேனு வின் புதல்வி வழிபட்டதலம் துர்க்கை வெகு பிரசித்தம். விசுவாமித்ரர் பிரம்மரிஷி பட்டம் பெற்ற பதி, சிறு வயதினரான ஞானசம்பந்தரை சிவபெருமான் முத்துப்பந்தல் அமைத்து வரவேற்ற தலம். ஞானசம்பந்தர் தரிசனம் செய்ய நந்திகள் விலகியிருந்த பதி. இத்தலத்தில் வழிபட்டால் தோஷம் நீங்கப்பெறலாம்.
கும்பகோணம்:- இங்கு ஸ்ரீகும்பேஸ்வரர் ஆலயம் உள்ளது. கும்பகோணம் கோயில் குளம் கொண்டது. கோவிந்த தீட்சிதர் திருப்பணி செய்த பெருமை பெற்ற பதி. பிரளயக் காலத் துக்குப்பின் அமுத குடத்தின் மூக்கு விழுந்த இடமாகும். சிவனிடம் கேட்ட வரம் இங்கு கிடைக்கும்.
திருப்புறம்பியம்:- ஸ்ரீசாட்சிநாதேஸ்வரர் ஆலயம், கும்பகோணத்திற்கு வடமேற்கு 10-வது கி.மீட்டரில் அமைந்துள்ளது. பாம்பு கடித்து இறந்து போனவனை ஞானசம்பந்தர், உயிர்ப்பித்த தலமாகும். சிவபெருமான் ஓர் செட்டிப்பெண்ணை அவள் மணக்க இருந்த மாமனை உயர்ப்பித்து அவர்கள் திருமணத்திற்கு சாட்சியாக இருந்த தலம். மதுரை திருவிளையாடல் 64 உடன் தொடர்புடையது.
சாக்கோட்டை:- குடந்தையில் இருந்து தென்கிழக்கே 4 கி.மீட்டர் தூரத்தில் சாக்கோட்டை ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயம் உள்ளது. இது கோட்டை சிவன் கோவில் எனப்படும். பிரளயத்தின்போது உயிர்கள் பாதுகாப்பாக இருந்த கலயம் தங்கிய பதியாகும். இங்கு வழிபட்டால் உடல்நல கோளாறுகள் விலகும்.
திருவிடைமருதூர்:- கும்பகோணத்துக்கு வ டகிழக்கே 8-வது கி.மீட்டரில் திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங் கேஸ்வரர் ஆலயம் உள்ளது. வரகுண பாண்டியன் பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய பதி (மதுரை திரு விளையாடலோடு தொடர்பு கொண்ட தலம்) பேய், பைத்தியம், நீங்கும் தலம், மவுனமாக தவம் செய்த மூகாம்பிகை உள்ள பதி. சிவபெருமான் தன்னையே அர்ச்சனை செய்து கொண்ட திருத்தலமாகும்.
திருப்பனந்தாள்:- கும்பகோணத்துக்கு வடகிழக்கே 16-வது கி.மீட்டரில் ஸ்ரீதாலவரனேஸ்வரர் ஆலயம் உள்ளது. ஒரு பக்தரின் நிலைக்கு இரக்கப்பட்டு சிவ பெருமானே முடி சாய்த்து மாலை ஏற்ற பதியாகும். சாய்ந்த லிங்கமானது பிற்பாடு குங்கிலியக் கலிய நாயனரால் நிமிர்த்தப்பட்டது. சரிந்த வாழ்வை இத்தல வழிபாடு நிமிரச் செய்யும்.

பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் உள்ள சென்னப்பமலையில் நடந்த ஜோதிர்லிங்க உத்பவம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
மகா சிவராத்திரி என்பது ஆண்டுக்கு ஒருமுறை வரும் தெய்வீக நிகழ்வாகும். அன்று இறைவனே மனித உருவில் பூலோகம் வந்து, அனைத்து ஜீவராசிகளுக்கும் முக்தியை அளிக்கிறார். அதனால், சகல தோஷ நிவர்த்தியும், ஜென்ம சாபல்யமும் அன்றைய தினம் அனைவரும் பெறலாம் என்பது நம்பிக்கை. மகா சிவராத்திரிக்கு மெருகூட்டும் வகையில் பூமியைப் பிளந்துகொண்டு உருவானவை ஜோதிர்லிங்கங்கள் ஆகும். இந்த நாளில்தான் உலகில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களும் உத்பவம் ஆகி உள்ளன. அதாவது, பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தபோது வெளிவந்த அமிர்தத்தை அசுரர்கள் பறித்து செல்லும்போது பூமியில் சிதறிய அமிர்த துளிகளே ஜோதிர்லிங்கங்களாக வெவ்வேறு இடங்களில் உத்பவம் ஆயின என்று புராணங்கள் கூறுகின்றன. மகா சிவராத்திரி நாளில் ஞான மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு தக்க விடை கிடைத்து, ஆன்மிக உயர்வு பெறுகிறார்கள் என்பது சான்றோர்களின் கருத்தாகும்.
ஜோதிர்லிங்கங்கள் இயற்கையாக மகாசிவராத்திரி அன்று மட்டுமே தோன்றுகின்றன. இப்படித் தானாக உதயம் ஆவது ‘உத்பவம்’ எனப்படும். உத்பவம் என்பதும், சுயம்பு என்பதும் வெவ்வேறானவை ஆகும். அந்த வகையில் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் உள்ள சென்னப்பமலையில் நடந்த ஜோதிர்லிங்க உத்பவம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
இந்த தலம் ஜோதிர்லிங்கங்களின் வரிசையில் பதின்மூன்றாவதாக குறிப்பிடப்படுகிறது. பல புராண, சரித்திர நிகழ்ச்சிகளுடன் தொடர்பு பெற்ற தலமாகவும் உள்ளது. இந்த இடம் கடம்பூர் மலைக்கு அருகில் பாட்டூர் என்ற பெயரில் ஒரு காலத்தில் பனங்காடாக இருந்துள்ளது. கடம்பூர் (தற்போது கடாம்பூர்) மலையும் இந்த இடத்துக்கு மிக அருகாமையில் உள்ளது. இந்த தலத்தில் சித்தர் கோடித்தாத்தா பிரம்ம குருவாக முன்னின்று உத்பவ நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்.
ஸ்தல புராணங்கள் படி, முன்னொரு காலத்தில் பரமேஸ்வரனின் உடலில் அங்கம் வகிக்கும் அகிலாண்டேஸ்வரி தென் கயிலாயம் என்று போற்றப்படும் பனங்காட்டுப் பிரதேசமாக உள்ள சென்னப்பமலைத் தலத்தில் கடும் தவமிருந்தாள். பூவுலகில் உள்ள 84 லட்சம் ஜீவராசிகளுக்கு மட்டுமல்லாமல், சூரியன், சந்திரன், தேவேந்திரன், குபேரன் ஆகிய தேவர் களுக்கும் சாப விமோசனம் அளிக்கும் வகையில் சென்னப்பமலைத் திருத்தலத்தில் அருள் பாலிக்க பரமேஸ்வரனிடம் வேண்டினாள். தவத்தை மெச்சிய பரமேஸ்வரன், இதே தலத்தில் பின்னொரு காலத்தில் பிரம்ம குரு ஒருவரால் மகாசிவராத்திரி அன்று ‘தானே ஜோதிர்லிங்கமாக இங்கே உத்பவமாகி, வழிபடும் அனைத்து ஜீவராசிகளும் ஜென்ம சாப விமோசனம் பெறலாம்’ என்று வரம் அருளினார்.
அந்த அதிசய நிகழ்வை நடத்திக்காட்ட தெய்வ அம்சங்கள் பொருந்தியவர் தேவை என்று எண்ணிய அம்பிகை, இதே பனங்காடு பிரதேசமான, தற்போது வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாட்டூர் கிராமத்தில் வசித்து வந்த ராமநாதன் என்ற சாதாரணமான ஆனால் தெய்வ அம்சங்கள் பொருந்திய இளைஞரை தேர்வு செய்தாள். அவருக்கு குருவாக இருந்து தீட்சை அளிக்க கோடித்தாத்தாவை அனுப்பி வைத்தாள். அவர் 1994 வரை கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே புரவிப்பாளையம் ஜமீன் அரண்மனையில் ஜீவ உடலுடன் வாழ்ந்து வந்தவர் ஆவார்.
முக்காலமும் உணர்ந்த, கோடிதாத்தா (கோடிசாமி) என்ற ஞான குரு மூலம் தான் தேர்வு செய்த சீடருக்கு தீட்சை அளிக்க அம்பிகை அவரிடம் முன்மொழிந்தாள். கூடுவிட்டு கூடு பாயும் சித்த வித்தையான பரகாய பிரவேசம் என்ற முறையில் சீடர் உடலுக்குள் ஐக்கியம் ஆகி, குருவே சீடனாகி, கோடி சாமியாக முன்னின்று சென்னப்பமலைத் திருத்தல ஜோதிர்லிங்க உத்பவ நிகழ்வை நடத்தினார். அதை ஆயிரக் கணக்கான பக்தர்களும், மாவட்ட உயர் அதிகாரிகளும் நேரில் கண்டு பரவசம் கொண்டனர்.
இந்த தல இறைவனை பல சித்தர்களும், ஞானிகளும் வழிபட்டுள்ளனர். ரோம ரிஷி குதம்பை சித்தராக இங்கே பசுக்களை மேய்த்து வந்ததாகவும், பின்னர் அவரே பாம்பாட்டி சித்தராகவும், கோடித்தாத்தா என்ற சமீப கால சித்தராகவும் இருந்து ஜோதிர்லிங்க உத்பவம் ஆக வழி காட்டினார் என்பது ஸ்தல வரலாறு. சுமார் 1600 வருடங்களுக்கு முன்னர் ஆதிசங்கரர் கயிலாயம் செல்லும் வழியில், இந்த சென்னப்பமலை தலத்தில் ஏழு நாட்கள் தங்கி, மலையின்மேல் உள்ள பன்னீர் குளத்திலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து வழிபட்டதாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது. 800 வருடங்களுக்கு முன் வாழ்ந்த சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோர் இந்த தலத்தை பற்றி பல பாடல்களில் விவரித்து உள்ளனர். இந்தத் திருத்தலம் தென் கயிலாயமாக போற்றப்பட்டு வந்துள்ளது. உலகத்துக்கு ஒளி தரும் சூரியன் தன் சாபம் நீங்க, நந்தி வடிவில் ஒவ்வொரு நாளும் இங்கே வழிபட்டு செல்வதாகவும் ஐதீகம்.
இந்த தலத்தில் உருவான லிங்கத்துக்கு புராண ரீதியாக ‘பொன்முடி சூரிய நந்தீஸ்வரர்’ என்பது பெயர். பொன்முடி தரித்த ஈஸ்வரன், சூரியன் மற்றும் நந்தி ஆகியோர் இணைந்த பெயருக்கு ஒரு காரணம் உண்டு. ஒரு காலத்தில் சிலத முனி என்பவர் புத்திர வரம் வேண்டி பரமேஸ்வரனை நோக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் புரிந்து, கிடைத்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் சூட்டி, ஞானத்தை போதித்து வந்தார். அந்த நிலையில் அவர்கள் குடிலுக்கு வந்த இரு முனிவர்கள், நந்திக்கு ஆயுள் பலம் குறைவாக இருப்பதாக கணித்தனர்.
அதனால், கவலையுற்ற தந்தைக்கு தைரியம் தந்து, நம்பிக்கையூட்டி பரமேஸ்வரனை நோக்கி கடும் தவம் புரிந்தான் சிறுவன் நந்தி. அப்போது தன் முன்னே தோன்றிய இறைவனிடன் எப்போதும் அவருடன் இருக்கும் பாக்கியம் தர வேண்டினான். அதன்படியே வரம் தந்த இறைவன் நந்தியை தன் குடும்பத்தில் ஒருவனாக, காளை மாடு வடிவமாக்கி தன் வாகனமாக வைத்துக்கொண்டார். ஆலயங்களில் கருவறையில் உள்ள லிங்கத்துக்கு எதிரில் நந்தி பணிவுடன் அமர்ந்து மோன தவத்தில், விழிப்பு, பணிவு, பொறுமை, பக்தி, அமைதி, சாந்தம், எதையும் எதிர்பார்க்காமல் தன் ஐயன் கட்டளைக்காகக் காத்திருப்பது போன்ற அரிய குணங்களை வெளிப்படுத்துகிறார். வழிபாட்டு முறைகளை நந்தியிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்பதே அதன் தத்துவம்.
அன்றாடம் ஆதவனை தொழுதால் ஆயுள் பலம் பெருகும் என்பது சாஸ்திரம். உயிரினங்களுக்கு சக்தி தரும் சூரியன், இத்தலத்து இறைவனை அன்றாடம் வணங்கி சாப விமோசனம் பெற்று, தனது சக்தியை மீண்டும் பெறுவதாக தல புராணம் சொல்கிறது. இங்கு ஐக்கியம் கொண்டுள்ள ஜகத்குரு கோடிதாத்தா சாமியும், அவரது சீடர் ராமநாத சாமியும், அருவமும் உருவமும் கலந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஜோதிர்லிங்க தலமும் சம்பந்தப்பட்ட பகுதிக்கு ஏற்ற வகையில் சிறப்பு வழிபாட்டு முறை களையும், நியதிகளையும் கொண்டுள்ளன. அந்த வகையில் சென்னப்பமலை ஜோதிர்லிங்க வழிபாட்டு வழிமுறைகள் எங்கும் இல்லாத தனிச் சிறப்பு வாய்ந்தவை. உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரன், கற்றவன், கல்லாதவன், ஆண், பெண், குழந்தைகள், வயோதிகர்கள், ஜாதி, மதம் போன்ற எந்த பேதமும் இல்லாமல், அனைவரும் வணங்கி வளம் பெற இறைவனே அமைத்துக் கொடுத்துள்ள தலம் இதுவாகும்.
எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக சென்னப்பமலையில் பக்தர்கள் தாங்களே கருவறைக்குள் சென்று ஜோதிர்லிங்கத்தைத் தொட்டு வணங்கலாம். ஏழு முறை தொட்டு வழிபடுவோருக்கு ஜென்ம சாப விமோசனம் அப்போதே கிடைத்து, சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். அங்கு உள்ள பொன்முடி சூரிய நந்தீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி அம்பிகையை தொழுபவர்களுக்கு, சந்தான பாக்கியம், சரஸ்வதி பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.
காலை, மதியம், மாலை ஆகிய நேரங்களில் பத்மா சனத்தில் அமர்ந்து, ஜோதிர்லிங்கத் திருக்கோவில் வளாகத்தில் தியானம் செய்தால் இறைவன் ஜென்ம சாப விமோசனம் தருவான் என்பது நம்பிக்கை. மேலும், மகா சிவராத்திரி அன்று மட்டும் ஜோதிர்லிங்கத்துக்கு பக்தர்கள் தாங்களே பசும்பால் மற்றும் வில்வ இலை கொண்டு அபிஷேகம் செய்து வழிபடலாம் என்பது முக்கியமான விஷயமாகும்.
நந்தி குறிப்பிடும் அமைதி தத்துவம் :
நந்தி என்ற காளை மாடு பலம், ஆக்ரோஷம், வேகம், திறமை போன்றவை கொண்ட உருவமாக தோன்றினாலும், அமைதியோடும், பொறுமையோடும் எப்படிக் காத்திருப்பது என்ற குணத்தை நந்தியிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். அதனால்தான் நம் முன்னோர்கள் ஆலயங்களில் நந்தி அருகில் அமர்ந்து, தியான நிலையில் பரமனின் பதிலுக்காக பொறுமையுடன் காத்திருக்க பழகிக்கொள்ளும் நடைமுறையை கொண்டு வந்துள்ளனர். பிரார்த்தனைக்கும், தியானத்துக்கும் உள்ள வேறுபாடு பற்றி தெரிந்து கொள்ள நந்தியை கவனிக்க வேண்டும். அதாவது, பிரார்த்தனை வழியாக கோரிக்கைகளுடன் பரம்பொருளுடன் அனைவரும் மனதால் பேசுகிறோம். ஆனால், தியான நிலையில் பரம்பொருளின் பதிலை பெற அமைதியுடனும், பொறுமையுடனும் காத்திருக்கவேண்டும் என்பது அதன் உட்பொருளாகும்.
கோவில் அமைவிடம் :
வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகாவில் உள்ள வெங்கடசமுத்திரம் மற்றும் மிட்டாளம் ஊராட்சிகளுக்கு இடையே வனப்பகுதியில் உள்ள சென்னப்ப மலை அடிவாரத்தில் கோவில் அமைந்துள்ளது.

தேவாரத் திருப்பதிகங்கள் பாடப்பெற்ற நடுநாட்டுத் திருக்கோவில்களில், 21-வது ஆலயமாக விளங்குகிறது திருவாமாத்தூர் ஆகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தேவாரத் திருப்பதிகங்கள் பாடப்பெற்ற நடுநாட்டுத் திருக்கோவில்களில், 21-வது ஆலயமாக விளங்குகிறது திருவாமாத்தூர் ஆகும். நந்தியம் பெருமான் பூலோகத்தில் பிறந்து வளர்ந்தார். அவர் ஒரு முறை பசுக்கள் பலவற்றுடன், பம்பா நதிக்கரையில் உள்ள வன்னி வனத்திற்கு சென்றார். அங்கு சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்துக் கொண்டிருந்த அபிராமேஸ்வரரை வணங்கி பல நாட்கள் தவம் புரிந்து கொம்புகளைப் பெற்றார். எனவே இந்த தலம் ‘ஆமாத்தூர்’ என்று அழைக்கப்பட்டது. ‘திரு’ என்பது தெய்வத் தன்மை பொருந்திய வார்த்தை என்பதால், ‘திருவாமாத்தூர்’ என்று வழங்கப்படலாயிற்று.
இந்த ஆலயத்தை வட மொழியில் ‘கோமாதுபுரம்’, ‘கோமாதீஸ்வரம்’ என்று அழைக்கிறார்கள். சைவ சமயக் குரவர்களில் மூன்று பேர், இந்த ஆலயத்தைப் பற்றி திருப்பதிகங்கள் பாடிஉள்ளனர். அருணகிரிநாதரும் இந்த ஆலயம் பற்றி செய்யுளும் இயற்றியுள்ளார். அதில் இந்த தலத்தை ‘மாதை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த ஆலயம் தலம், தீர்த்தம், மூர்த்தி என மூன்றினாலும் சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது. இந்த ஆலயத்தில் அருள் பாலித்து வரும் அபிராமேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மிகவும் பழமையான திருத்தலமாக இது இருப்பதை, நந்தியம் பெருமானின் தல வரலாறு மூலமாக அறியமுடிகிறது. கருவறையில் வீற்றிருக்கும் சுயம்பு லிங்கத்தின் மீது, சந்திரப் பிறை போல, பசுவின் கால் குளம்பின் சுவடு காணப்படுவது சிறப்பு அம்சம் பொருந்தியதாக பார்க்கப்படுகிறது. இந்த இறைவன் சற்று இடதுபுறமாக சாய்ந்த நிலையில் காணப்படுகிறார் என்பது விசேஷமானது.
ஆலயத்தின் உள்ளே அஷ்ட லிங்கங்கள், அதாவது எட்டு மூர்த்திகள் அருள்பாலிக்கிறார்கள். கருவறையில் வீற்றிருக்கும் சுயம்பு லிங்க மூர்த்தி (அபிராமேஸ்வரர்), ராமபிரானின் வேண்டுகோள்படி அனுமன் கொண்டு வந்த லிங்க மூர்த்தி (அனுமதீஸ்வரர்), சகரஸ்ர லிங்கம், குபேரலிங்கம், அண்ணாமலையார், காசி விஸ்வநாதர், வாயு திசையில் உள்ள வாயு லிங்கம், ஈசான மூர்த்தி ஆகிய லிங்கங்கள் பக்தர்களுக்கு அருள் செய்வதற்காக வீற்றிருப்பது சிறப்புக்குரியதாகும்.
அபிராமேஸ்வரர் திருக்கோவில் கிழக்கு நோக்கியும், சற்று வடப்புறம் தள்ளி நேராக மேற்கு நோக்கி முத்தாம்பிகையம்மன் கோவிலும் அமைந்துள்ளது. இவர்கள் இருவரையும் வேண்டினால், நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கருவறை கோஷ்டத்தின் தென் பகுதியில் தட்சிணாமூர்த்தியும், மேற்கு திசையில் லிங்கோத்பவரும் வீற்றிருக்கிறார்கள். லிங்கோத்பவரை திங்கட்கிழமை தோறும் வழிபட்டு வந்தால் நன்மைகள் பலவும் வந்து சேரும்.
இந்த ஆலயத்தில் திருவட்டப்பாறை ஒன்று உள்ளது. இந்தப் பாறையின் முன்பாக நின்று பொய் சொல்பவர்கள், தேவர்களாக இருந்தாலும் அவர்கள் மீளாத துன்பக் கடலில் வீழ்வார்கள் என்பது ஐதீகம். எனவே பொய் சாட்சியால் சிக்கலில் இருக்கும் வழக்குகள் பலவும், இங்கு வந்து தீர்க்கப்படுவது கண்கூடாக நடக்கும் செயலாகும்.
இத்தல இறைவனை அகத்தியர், வசிஷ்டர், துர்வாசர், பிருகு, பராசரர், விசுவாமித்திரர், வியாசர் ஆகிய ஏழு முனிவர்கள் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். அம்பிகை, விநாயகப் பெருமான், முருகப்பெருமான், நாரதர், உரோமசர், பிருங்கி முனிவர், மதங்க முனிவர், பன்னிரு கதிரவர்கள், அஷ்டவசுக்கள், மகாகாளன், ராமபிரான், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், இரட்டை புலவர்கள் முதலானோரும் இத்தல இறைவனை வழிபட்டு பலன் அடைந்துள்ளனர்.
முதலாம் ராஜராஜசோழன் காலம் முதல் (கி.பி.1012), சீரங்க தேவ மகாராயர் (கி.பி.1584) காலம் வரை பேரரசர்- சிற்றரசர் காலத்து எழு பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இக்கோவிலில் காணப்படுகின்றன. திருக்கோவில் இறைவன் மீது திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களையும், திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களையும், சுந்தரர் ஒரு பதிகத்தையும் பாடியுள்ளார்கள். இதனால் இக்கோவில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் காலத்திற்கு கி.பி.7-ம் நூற்றாண்டுக்கு முன்பே இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. இந்த ஆலயத்தில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா பத்து நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும்.
அமைவிடம்
விழுப்புரம் நகரில் இருந்து திருவாமாத்தூருக்கு பஸ் வசதிகள் உள்ளன. பஸ் நிறுத்தத்தில் இருந்து சிறிது தொலைவிலேயே ஆலயம் இருக்கிறது.

அங்காள பரமேஸ்வரிக்கு திருக்கடையூரில் ஓர் ஆலயம் உள்ளது. அழகிய அந்த ஆலயம் தென் திசை நோக்கி அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் அங்காள பரமேஸ்வரிக்கு ஏராளமான ஆலயங்கள் உள்ளன. அவற்றில் பல கிராமப்புறங்களிலேயே அமைந்துள்ளன. இந்த ஆலயங்களில் மகா சிவராத்திரியின் போது திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். ஊர் மக்கள் தம் வீட்டு விழாவைப் போலவே இந்த திருவிழாவை கொண்டாடுவார்கள். அங்காள பரமேஸ்வரிக்கு திருக்கடையூரில் ஓர் ஆலயம் உள்ளது. அழகிய அந்த ஆலயம் தென் திசை நோக்கி அமைந்துள்ளது.
முகப்பைத் தாண்டியதும் விரிந்த பிரகாரமும், அடுத்து மகாமண்டபமும் உள்ளன. மகா மண்டபத் தூண்களில் கண்களைக் கவரும் வண்ணங்களில் சுதை வடிவ அஷ்டலட்சுமிகளின் திருமேனிகள் காட்சி தருகின்றன. மகாமண்டபம் நடுவில் பலி பீடமும், நந்தியும் இருக்க, அர்த்த மண்டப நுழைவு வாசலில் இரு துவாரபாலகர்கள் காவல் காத்து நிற்கின்றனர். கருவறையில் அன்னை அங்காள பரமேஸ்வரி அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் தென் முகம் நோக்கி அருள்பாலிக் கிறாள்.
அன்னையின் மேல் இரு கரங்கள் சூலம், உடுக்கையை தாங்கியிருக்க, கீழ் இரு கரங்கள் கத்தியையும் கபாலத்தையும் பற்றி இருக்கின்றன. அன்னையின் அருள் சுரக்கும் இன்முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம்; அத்தனை அழகு.
மகாமண்டபத்தின் தென்புறம் சப்த கன்னியர், பாவாடைராயன், பேச்சியம்மன் திருமேனிகள் உள்ளன. அர்த்த மண்டப நுழைவு வாசலின் இடது புறம் வலம்புரி விநாயகரும், வலது புறம் பாலமுருகனும் அருள் பாலிக்கின்றனர். கிழக்கில் பைரவர் திருமேனி உள்ளது.
இந்த அங்காள பரமேஸ்வரியின் கதை என்ன?
தனக்கு ஐந்து தலை வேண்டுமென சிவபெருமானிடம், பிரம்மதேவன் வேண்டினார். அதன்படியே அவருக்கு ஐந்து தலைகள் உருவானது. ஒரு நாள் கயிலாயத்திற்கு வந்தார் பிரம்மன். ஐந்து தலைகள் இருந்ததால் அவரை சரியாக கவனிக்காமல், ஈசன் என்றே நினைத்துக் கொண்டாள். அதே நேரத்தில் சிவபெருமானும் அங்கு வந்தார். தலைகளின் எண்ணிக்கையால் ஒரு நொடி குழப்பத்தில் ஆழ்ந்ததால் வருந்திய பார்வதி, “பிரம்மாவின் ஐந்தாவது தலையை கொய்து விடுங்கள்” என சிவபெருமானிடம் வேண்டினாள். அதன்படி பிரம்மாவின் ஐந்தாவது தலையை துண்டித்தார், சிவபெருமான்.
ஆனால் பிரம்மனின் அந்த கபாலம், சிவபெருமான் கையில் ஒட்டிக் கொண்டது. நடந்ததை அறிந்த சரஸ்வதி தேவி கோபம் கொண்டாள்.
“நீர் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து, மயானம் தோறும் அலைந்து திரிவீர்” என்று சிவபெருமானுக்கும், “நீ கோர உருவம் கொண்டு செடி கொடிகளை அணிந்து, பூத கணங்களுடன் காடு தோறும் அலைவாய்” என்று பார்வதிக்கும் சாபமிட்டாள்.

அதன்படியே சிவபெருமானை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. சிவபெருமான் பிச்சாண்டியாக உருமாறி யாசகம் பெறத் தொடங்கினார். பார்வதி சுய நினைவின்றி பசி தாளாது, மயானத்தில் கிடைக்கும் பிணங்களைத் தின்று பசியாறினாள். இவர்களின் நிலை மையை கண்டு வேதனை அடைந்த மகாவிஷ்ணு, மோகினி உருவம் கொண்டு சரஸ்வதியிடம் சென்றார். இருவரின் சாப விமோசனம் பற்றி தெரிந்து கொண்டு அதை சிவபெருமானிடமும், பார்வதியிடமும் கூறினார்.
சிவபெருமான் கையில் ஒட்டியிருந்த கபாலம், பிச்சை மூலம் நிரம்பினால் தான் சிவபெருமானின் சாபம் விலகும். ஆனால் எவ்வளவு பிச்சையிட்டாலும் அந்த கபாலம் நிரம்பவே இல்லை. உடனே அங்காளம்மனாக உருவெடுத்த பார்வதி, மகாலட்சுமியின் உதவியுடன் பிரம்மதேவனின் கபாலத்தை காலால் மிதித்துக் கொண்டாள். சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.
“நான் எப்போது உங்களை வந்து சேர்வது?” என்று அங்காள பரமேஸ்வரி உருவில் இருந்த பார்வதி, சிவபெருமானிடம் கேட்டாள். அதற்கு ஈசன், “மாசி மாத சிவராத்திரியின் போது என்னுள் நீ கலப்பாய். அதுவரை உன்னுடைய நெற்றிப் பொட்டில் நான் வாசம் செய்வேன்” என்றார். அதன்படி சிவராத்திரியின் போது பார்வதி சாபவிமோசனம் பெற்று சிவபெருமானுடன் இணைந்தாள் என்பது தல வரலாறு.
இந்த ஆலயத்தில் சிவராத்திரியின் போது மயானத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில், முதல் நாள் தீச்சட்டி, அக்னி கொப்பரை ஏந்தி பக்தர்கள் ஆலயத்தை வலம் வருவார்கள். மாலையில் அன்னை வீதியுலா வருவார். இரண்டாம் நாள் மாலை அங்காள பரமேஸ்வரியாய் வேடம் அணிந்த மருளாளி, சூலத்தோடு ஆவேசத்துடன் ஆடுவார். ஆலயம் முன்பு ஏராளமான ஆடுகள் பலியிடப்படும்.
பிறகு இரவு 2 மணிக்கு மயானத்திற்கு செல்லும் மருளாளி, அங்கேயே படுத்துக் கொள்வார். பின் பாடல்கள் பாடி அவரை ஆலயம் அழைத்து வருவார்கள். மூன்றாம் நாள் மஞ்சள் நீராட்டுடன் விழாவானது நிறைவு பெறும். இரவு அன்னை வீதியுலா வருவார்.
இந்த ஆலயத்தைச் சுற்றி மதில் சுவர்களும், ஆலய முகப்பை ஒட்டி தல விருட்சங்களான அரசும் வேம்பும் உள்ளன. தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் அச்சத்தை போக்கி, அவர்களது அனைத்து குறைகளையும் நீக்கி அருள்கிறாள் அங்காள பரமேஸ்வரி அம்மன். எனவே இத்தலம் குறை நிவர்த்தி தலமாக விளங்குவதில் வியப்பில்லை.
அமைவிடம்
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவில், காரைக்கால் செல்லும் வழித்தடத்தில் அமைந்திருக்கிறது திருக்கடையூர். பஸ் நிறுத்தத்தில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும். திருக் கடையூருக்கு ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வடமாநிலத்தை சேர்ந்த லிங்கமநாயக்கர் என்பவர் தன்னுடைய சகோதரர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சொந்த ஊரை விட்டு புறப்பட்டு பாண்டியநாடு (மதுரை) செல்ல நினைத்து பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து நடை பயணமாக பல மைல்களை கடந்து வந்தார். வழியில் பச்சை பசுமையான மலைக்காடுகள் சூழ்ந்த வனப்பகுதிகளை பார்த்ததும் லிங்கமநாயக்கர் மனதில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. இனி தென்திசையை நோக்கி செல்ல வேண்டாம் என்று அவருடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.
இதனால் லிங்கமநாயக்கர் அந்த காட்டுப்பகுதியிலேயே தங்கினார். தனது அறிவுத்திறமையால் அந்த காட்டுப்பகுதியை ஒரு குட்டி நாடாக மாற்றினார். பின்னர் கோட்டை, கொத்தளங்களை அமைத்தார். மானாவாரி பயிர்களை விளைவித்தார். விளைந்த தானியங்களை ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கினார். தான் வாழும் பகுதிக்கு “இரசை” என்று பெயரிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த திருமலை நாயக்கர், லிங்கமநாயக்கரை அழைத்து விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் “இரசை” நகரின் சிற்றரசராக லிங்கமநாயக்கர் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து இரசை நகர்ப்பகுதியை லிங்கமநாயக்கர் நீதியுடனும், நேர்மையுடனும் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வந்தார். அப்போது அரண்மனையின் தேவைக்கு, அங்குள்ள பண்ணையில் இருந்த பசும்பால் போதவில்லை. இதனால் பக்கத்து ஊரில் இருந்து பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி தினமும் ஒரு பணியாளர் பால் கறந்து, குடத்தில் கொண்டு வந்து சேர்த்தார். ஒரு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது அந்த பணியாளர் பால்குடத்தை கீழே வைத்துவிட்டு, நிழலுக்காக மரத்தடியில் ஒதுங்கி களைப்பு தீர படுத்துத்தூங்கினார். திடீரென காலில் கட்டெறும்பு கடித்ததும், கண் விழித்த அவர் பால்குடத்தை பார்த்தார். ஆனால் அதில் பால் இல்லாமல் வெற்றுக்குடமாக இருந்தது. இதே போல பல நாட்கள் அந்த மரத்தடி அருகே வரும்போது பால் மாயமாகி வந்தது. இதனால் அரண்மனையில் பசும்பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து மன்னரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே பணியாளரை கூப்பிட்டு மன்னர் விசாரித்த போது, அரசே நீங்களே ஒருமுறை நேரில் வந்து சோதனை செய்து விட்டு, பின்னர் என்னை தண்டியுங்கள், என்று பரிவாக கெஞ்சினார்.
பணியாளரின் அந்த கோரிக்கையை பரிசீலித்த மன்னர், மீண்டும் அவரிடமே பால் நிரம்பிய குடத்தை கொடுத்து அதே மரத்தடியில் வைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை மன்னர், அரண்மனை பணியாளர்கள் மற்றும் சிப்பாய்கள் ஒரு மறைவான இடத்தில் நின்று பார்த்தனர். சிறிது நேரம் கழித்து மன்னரும், மற்றவர்களும் போய் அந்த பால் குடத்தை கவனித்தனர். அப்போது அனைவரும் வியப்படையும் வகையில் பால்குடம், வெறும் குடமாக காட்சி அளித்தது. இதனால் அனைவரும் திகைத்தனர். உடனே அந்த இடத்தை தோண்டிப் பார்க்க லிங்கமநாயக்கர் உத்தரவிட்டார்.
அதன்படி அந்த பகுதியை பணியாளர்கள் தோண்டும் போது திடீரென ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வானில் கருடன்கள் வட்டமிட்டன. கடப்பாரையால் ஓங்கி குத்தியபோது பூமிக்கு அடியில் இருந்து ரத்தம் பீறிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தது. தொடர்ந்து மண்ணை அகழ்ந்து பார்த்தபோது கையில் உடுக்கை, சூலாயுதத்துடன் அமர்ந்த நிலையில் அம்மன் சிலை இருந்ததை கண்டு லிங்கமநாயக்கர் ஆச்சரியம் அடைந்தார். அம்மனின் தோளில் கடப்பாரை பட்டதால் ரத்தம் வந்த அதிசயம் நிகழ்ந்ததும் தெரியவந்தது.
சிறிது நேரத்தில் ரத்தம் வருவது நிற்கவே, அதே இடத்தில் அம்மன் சிலைக்கு மஞ்சள் நீராட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது மேகம் திரண்டு பலத்த மழை (மாரி) பெய்தது. இதனால் ‘மாரி’ அம்மன் என்று அழைக்கப்பட்டு மன்னரும், மக்களும் வணங்கத்தொடங்கினார்கள். சிற்றரசன் லிங்கமநாயக்கர், மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மனின் அம்சமான மாரியம்மனுக்கு கும்பம் இல்லாமல் விமான அமைப்பில் கோவில் கட்டினான். ‘ரத்தம் பீறிட்ட அம்மன், ரத்தம் காட்டிய அம்மன்’ என்று அழைக்கப்பட்டது நாளடைவில் மருவி ‘நத்தம் மாரியம்மன்’ என்று அழைக்கப்பட்டது. பக்தர்கள் நினைத்ததை நிறைவேற்றுவதுடன், நித்தம் அருள் தரும் நத்தம் மாரியம்மனுக்கு பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் உள்ளனர்.
அம்மனை போற்றும் படியாக மிகச்சிறப்பாக நடைபெறும் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
நோய்களை தீர்க்கும் அபிஷேக தீர்த்தம்
ந த்தம் மாரியம்மன் கோவில் வெளிப்பிரகாரம் வரை கருங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் 22 கல்தூண்கள் நிலைநிறுத்தப்பட்டு, மேல்தளம் பட்டிய கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோபுரத்திலும், பிரகாரத்தை சுற்றிலும் கலைநயம் மிகுந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பக்தர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளன. அபிஷேக மூலிகை தீர்த்தம் நத்தம் மாரியம்மனின் அருளால் பலருடைய துன்பங்களையும் போக்கி வருகிறது. அத்துடன் ‘அம்மை’ தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மாரியம்மனின் அபிஷேக மூலிகை தீர்த்தத்தை அளித்தால் 3 நாளில் குணமாகும். இது போல் மேலும் பல நோய்களை போக்கும் தீர்த்தமாகவும் மாரியம்மன் கோவில் அபிஷேக மூலிகை தீர்த்தம் விளங்குகிறது.
பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மன்
தெ ன் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நத்தம் மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி பெருந்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். திருவிழா காலத்தில், பக்தர்கள் காப்பு கட்டுதல், 15 நாட்கள் விரதமிருத்தல், அக்னிசட்டி எடுத்தல், கரும்பு தொட்டில் கட்டுதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், மாவிளக்கு, பொங்கல் வைத்தல் மற்றும் கழுமரம் ஏறுதல், பூக்குழி இறங்குதல், பால்குடம் எடுத்தல் என்று பல்வேறு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகிறார்கள். பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மனாக மாரியம்மன் திகழ்வதால் ஆண்டுதோறும் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கோவில் நடை திறப்பு
நத்தம் மாரியம்மன் கோவிலில் தினந்தோறும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு அடைக்கப்படும். பின்னர் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப் படும்.
பஸ் வசதி
நத்தம் மாரியம்மன் கோவில் மதுரையில் இருந்து 36 கி.மீ. தொலைவிலும், திண்டுக்கல் லில் இருந்து 36 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த 2 நகரங்களில் இருந்தும் கோவில் திருவிழாவுக்காக வரும் பக்தர்கள் வசதிக்காக அதிக எண்ணிக்கையில் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

குளித்தலை அருகே உள்ள மேட்டு மருதூர் என்ற கிராமத்தில் உள்ளது ஆரா அமுதீஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சோழ மன்னர்கள் நம் நாட்டில் எண்ணற்ற ஆலயங்களை கட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு பின் வந்தவர்களும் கூட அந்த ஆலயங்களை புனரமைத்து நல்ல முறையில் நிர்வாகம் செய்தனர். ஆனாலும் தொடர் படையெடுப்பு காரணமாக பல ஆலயங்கள் சிதைவுற்றும் போயிருக்கின்றன. அப்படி ஒரு ஆலயம் தான் குளித்தலை அருகே உள்ள மேட்டு மருதூர் என்ற கிராமத்தில் உள்ள ஆரா அமுதீஸ்வரர் கோவில்.
காவிரியின் தென்கரை ஆலயமான இது, கிராமத்தின் கீழ் திசையில் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலயம் இது என்று சொல்லப்படுகிறது. கி.பி.985 முதல் 1014 வரை சோழ நாட்டை ஆண்ட முதலாம் ராஜராஜனால், கி.பி.996-ல் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப் பிடுகின்றனர்.
ஆலயத்தின் கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம் அனைத்தும் கருங்கற்களால் ஆனவை. இறைவனின் கோபுரம் மட்டும் செங்கற்களால் உருவாகியிருக்கிறது. இந்த கோபுரம் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. கருவறையின் மூன்று பக்கங்களிலும் 22 தூண்கள் உள்ளன. கருவறையின் வெளிப்பக்கத்தில் கல்வெட்டு குறிப்புகள் காணப்படுகின்றன. பெரும்பாலான சோழர் கால சிவன் ஆலயங்களில் மூலவர் விக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளதைப் போலவே, இந்த ஆலயத்திலும் தாமரை இதழ் விரித்ததைப் போல் ஆவுடையாரும் அதன் மேல் ஆறடி உயரமுள்ள எண் பட்டை வடிவம் கொண்ட லிங்கமும் இருக்கிறது.
இந்த ஆலயத்தில் அம்மன் சன்னிதி இல்லை. 10 தூண்கள் கொண்ட அர்த்த மண்டபம் பல்வேறு சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கிறது. நுழைவு வாசலில் தென்புற நிலைக் காலில் முதலாம் ராஜராஜனின் கல்வெட்டு 21 வரிகளில் உள்ளது. கல்வெட்டின் முதல் 10 வரிகள் தெளிவாகவும், ஏனைய வரிகள் சற்றே சிதிலமடைந்தும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு முதலாம் ராஜராஜனின் 11-வது ஆட்சி ஆண்டை சேர்ந்தது என்கிறார்கள். இந்த கல்வெட்டைக் கொண்டு இந்த ஊரைப் பற்றியும், இக்கோவில் இறைவனைப் பற்றியும், மேலும் பல தகவல்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.
இக்கல்வெட்டில் இருந்து, இந்த ஊர் பழங் காலத்தில் ‘மாதான மருதூர்’ என்றும், இந்த ஆலய இறைவன் ‘ஆராவமிதீஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டு வந்திருப்பது தெரிய வருகிறது. தினசரி ஒரு கால பூஜை நடக்கும் இந்த ஆலயத்தில், பிரதோஷம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. சிவராத்திரியின் போது இறைவனுக்கு நான்கு கால பூஜைகள் நடக்கிறது.
கல்வி அறிவு வளரவும், தேர்வில் நல்ல முறையில் வெற்றி பெறவும், இத்தல இறைவனை வேண்டிச் செல்கின்றனர், இந்தப் பகுதி மாணவர்கள். கருவறையைச் சுற்றி 10 அடி உயரமுள்ள கருங்கல் சுற்றுச் சுவரை அமைத்த மன்னன், அதன் மேல் உள்ள 20 அடி உயரமுள்ள கோபுரத்தை மட்டும் செங்கற்களால் ஏன் அமைத்தான் என்று தெரியவில்லை. இந்த ஆலயத்தை தினமும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை தரிசனம் செய்யலாம்.
கரூர் மாவட்டம் கரூர் - திருச்சி சாலையில் உள்ளது மருதூர். இங்கிருந்து 1½ கிலோமீட்டர் தூரம் சென்றால் மேட்டு மருதூர் கிராமத்தை அடையலாம். திருச்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.

உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் கிருஷ்ணர். இக்கோயிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது. சந்திரக் கடவுள் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம். இங்கு நாள்தோறும் அன்னதானம் அளிக்கின்றனர்.
விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோயிலில் உள்ளது.
தட்சனின் சாபத்தால் தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய சந்திரன், சிவபெருமானை நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றார். அப்போது சந்திரன் நிர்மாணித்த திருக்குளம் ’சந்திர புஷ்கரணி’. நட்சத்திரங் களின் அதிபதியான சந்திரன் தவம் புரிந்ததால் (உடு=சந்திரன்;பா=அதிபதி) உடுபா என்றும் பின்னர் அது மருவி உடுப்பி என்றும் ஆனது.
உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.

புதிய சுவாமி மடத்தின் பொறுப்பை ஏற்கும் விழா பர்யாய வைபவம் என்று கொண்டாடப்படுகின்றது. உடுப்பியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாக இது அமைகிறது. இவ்விழாவின் போது விறகுத்தேர் அமைக்கப்படுகின்றது. இத்தேர் விறகுதான் கோயில் சமையலுக்குப் பயன்படுகின்றது.
முன்பு கனகதாசர் என்ற மகான் தாழ்த்தப்பட்டிருந்த குலத்தில் பிறந்திருந்ததால் உடுப்பி கோவிலில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் தினமும் உடுப்பி கிருஷ்ணனின் கருவறைக்குப் பின்னால் நின்று ஏகதாரி வீணை எனும் ஒரு கம்பி மட்டும் கொண்ட வாத்தியக் கருவியை மீட்டி வழிபட்டு வந்தார். ஒருநாள் கருவறையின் பின்பக்கச் சுவரின் கற்கள் தாமாகவே விழுந்து உடுப்பி கிருஷ்ணரும் பின்புறச்சுவர் நோக்கித் திரும்பி கனக தாசருக்கு காட்சியளித்தார்.
கனகதாசர் கண்ணனை வழிபட வழிவகுத்த ஒன்பது துவாரங்கள் கொண்ட பலகணி கனகதண்டி என அழைக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கனகதாசர் கிருஷ்ணரை தரிசித்த பலகணி வழியாகவே மூலவரை தரிசனம் செய்யும் வழக்கமும் இந்நிகழ்வுக்குப் பின்னர் ஏற்பட்டது. தற்போது அதுவே நடைமுறையில் உள்ளது.

தூத்துக்குடி மெயின் ரோட்டு வல்லநாட்டிற்கு ஒரு கிலோமீட்டர் தூரம் கலியாவூர் சாலையில் சென்றால், திருமூலநாதர் ஆலயத்தை அடையலாம். இன்று இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தாமிரபரணி கரையில் உள்ள வல்லநாடு பகுதியை, 16-ம் நூற்றாண்டில் சீமாறன் வல்லப பாண்டியன் ஆண்டு வந்தான். அதனால் அந்த பகுதியை, ‘சீமாறன் சீவல்லப வள நாடு’ என்று, அவன் பெயரிலேயே அழைத்தனர். இந்த ஊரின் செழிப்புக்கு மிக முக்கிய காரணமாக, ஊருக்கு வடபுறம் உள்ள குளம் விளங்கியது. அந்தக் குளத்தை சீமாறனனே வெட்டியதாக சொல்லப்படுகிறது. எனவே அந்தக் குளம், ‘சீவல்லப ராஜன் குளம்’ என்று அழைக்கப்பட்டது. இதுவே நாளடைவில் மருவி ‘ராஜன் குளம்’ என்றானது.
இந்த குளத்தின் கரையில், சுயம்பு லிங்கமாக இறைவன் எழுந்தருளி இருந்தார். மன்னன் அந்த வழியாக செல்லும் போதெல்லாம், அந்த சுயம்பு லிங்கத்தை வணங்காமல் சென்றதில்லை. தன் நாட்டின் செழிப்புக்கு, இந்த இறைவனே காரணம் என்று அவன் நினைத்திருந்தான். அவன் எண்ணம் உண்மை என்பது போலவே, அந்த நாட்டில் நெல், மஞ்சள், வாழை, வெங்காயம், வற்றல், சிறுகிழங்கு, சேனைக்கிழங்கு, இன்னும் சில காய்கறிகள் எனப் பார்க்கும் இடமெல்லாம் வயல்வெளிகள் நிறைந்து, முப்போகம் விளைந்து கொண்டிருந்தது.
எங்கும் பச்சைப் பரப்பி, பரந்து விரிந்து காணப்பட்டதால், அது வளமான நாடாக விளங்கியது. மன்னனும், மக்களும் மகிழ்ச்சியோடு இருந்தனர். பக்தர்களை சோதித்து, அவர்களின் வாயிலாக உலக மக்களுக்கு ஞானத்தை வழங்குவதே இறைவனின் திருவிளையாடல். அந்த வழக்கமான விளையாட்டை இறைவன், அந்த நாட்டை ஆண்டு வந்த மன்னனிடமும் காட்டினார்.
ஒரு முறை வழக்கம் போல, நாட்டை சுற்றி வந்து கொண்டிருந்தான் மன்னன். ராஜன் குளத்தை சுற்றி வந்தபோது, கரு மேகங்கள் சூழ்ந்து, மழைக்கான அறிகுறியை பறைசாற்றின. மறுகணமே, வானில் மின்னல் பளிச்சிட்டு, இடியுடன் கூடிய மழை கொட்டியது. தானும், தான் வந்த குதிரை மற்றும் பரிவாரங்களும் நனையாதபடி ஒரு இடத்தில் ஒதுங்கி நின்றான், மன்னன். திடீரென்று அவனுக்கு குளக்கரையில் இருக்கும் சுயம்பு லிங்கத்தின் நினைவு வந்தது. “என்னையும், என் நாட்டையும் வளப்படுத்திக் கொண்டிருக்கும் இறைவனை மறந்து விட்டேனே. அவர் தானே வளர்ந்த மேனியராய், எந்த பாதுகாப்பும் இன்றி தனித்து இருக்கிறாரே. இந்த அடை மழையால் அவருக்கு பாதிப்பு வந்து விடுமோ” என்று நினைத்த மன்னன், உடனடியாக அந்த இடத்திற்குச் சென்றான்.
அங்கு மழையில், சுயம்பு லிங்கம் கரைந்து கொண்டிருந்தது. அதைக் கண்டு பதைபதைத்து போனான் மன்னன். ஆனாலும், ‘ஒரு அரசன் நினைத்தால் ஆகாத காரியம் என்ன இருக்கிறது’ என்ற அகந்தையில், அந்த லிங்கத்தை சுற்றி தன்னுடைய பரிவாரங்களை நிறுத்தி பாதுகாத்தான். இயற்கையையும், இறைவனையும் பாதுகாக்க மனிதனுக்கு சக்தி ஏது? அவர்கள் எவ்வளோ முயற்சித்தும் லிங்கத்தை மழையில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. அருகில் இருந்து ஓலைகளை கொண்டு வந்து, சிறிய குடில் அமைத்தார்கள். ஆனால் திடீரென்று ஏற்பட்ட சூறாவளியில், அந்த குடில் இருந்த இடம் தெரியாமல் பறந்து போனது.
என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்ற மன்னன், அவனது கவுரவத்தை நிலைநாட்டும் மணி முடியை (வைர கிரீடம்) எடுத்து, சுயம்பு லிங்கத்தின் மீது வைத்தான். எந்த விந்தை.. உடனடியாக அடை மழை நின்றது. சுழன்றடித்த சூறாவளி காற்றும் நின்று போனது. மண்ணை ஆளும் மன்னனுக்கு மணி முடி தேவையா? இந்த உலகையே ஆளும் இறைவனுக்குத் தான் மணி முடி வேண்டும் என்று மன்னன் கருதியதால் அவனது அகந்தை அழிந்தது. உடனடியாக அந்த இடத்தில் கோவில் கட்ட நினைத்தவன், மிகப் பெரிய ஆலயத்தை நிர்மாணித்தான்.
உலகிற்கு மூலமாக இருப்பதால், அந்த இறைவனுக்கு ‘திருமூலநாதர்’ என்று பெயரிட்டான். இறைவனுக்கு அருகிலேயே, இறைவியையும் பிரதிஷ்டை செய்தான். அந்த அன்னைக்கு ஆவுடையம்மாள் என்று திருநாமம் சூட்டினான். மன்னருக்கு திருமூலநாதர் தனது திருவிளையாடல் மூலம் ஞானத்தினை அளித்த காரணத்தினால், இத்தல இறைவனை ‘ஞான ஹிருதேயேஸ்வரர்’ என்றும் அழைக்கிறார்கள்.
கல்வெட்டின் படி இந்த கோவில் அமைந்த ஊர் ‘செயங்கொண்ட பாண்டிய புரம்’ என்றும், ‘செயங்கொண்ட பாண்டிய நல்லூர்’ என்றும் குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டு குறிப்புகளின் படி இது 1500 ஆண்டுகளுக்கு முந்தைய ஆலயம் என்று அறியப்படுகிறது. இந்த ஆலயம் கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இத்தல இறைவனின் மீது மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்கள் மட்டும் சூரிய ஒளி விழும்படி கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. ஆலயத்தின் பிரதான வாசல் வழியாக சூரிய ஒளி உள் நுழைந்து, கருவறையில் உள்ள மூலவரின் மீது படுவது போல் அமைந்திருக்கும் கட்டிடக் கலையை பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த அதிசய நிகழ்வைக் காண்பதற்காகவே அந்த நாட்களில் ஆலயத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருகிறது.
ஆலயத்திற்கு கிழக்கு வாசல் தான் பிரதானமான வாசல். ஆனால் ஊர் தெற்கு பக்கமாக இருப்பதால், மக்களின் வசதிக்காக, தற்போது தெற்கு வாசலே பிரதான வாசலாக விளங்குகிறது. கோவிலுக்குள் நுழைந்தால் ஆவுடையம்மாள் தனி சன்னிதியில் கிழக்கு நோக்கியபடி உள்ளார். இந்த அம்பாளுக்கு ஆடிப்பூரம் அன்று வளைகாப்பு சாத்தி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அம்மை சன்னிதிக்குள் நுழையும் போது, விநாயகர், துவாரபாலகி ஆகியோர் உள்ளனர். அருகிலேயே கல்விக்கு அதிபதியான சரஸ்வதி வீற்றிருக்கிறார். இவரை வணங்கினால் பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்பது ஐதீகம். அம்மன் கருவறையை சுற்றிவரும்போது, சண்டிகேஸ் வரியை வழிபடலாம்.
அடுத்து பிரதான சன்னிதியில் திருமூல நாதர் உள்ளார். தானே முளைத்த லிங்கம் இவர். எனவே அபிஷேகத்தில் கரைந்து விடக்கூடாது என்பதால், மேல் பகுதியில் குவளையுடன் காட்சி தருகிறார். கேட்ட வரம் தரும் இவரது மூர்த்தி சிறியதாக இருந்தாலும், கீர்த்தி பெரியது. கருவறைக்கு முன்பாக கொடிமரம் மற்றும் நந்தி உள்ளது. வலதுபுறம் சொக்கர் - மீனாட்சிக்கு தனி சன்னிதி காணப்படுகிறது. திருவாதிரை காட்சி மண்டபத்தில் தெற்கு நோக்கி உள்ளது. இந்த மண்டபத்தின் முன்னால் உள்ள தூணில் கோவிலை உருவாக்கிய அரசனும், அரசியும் சிலை வடிவில் உள்ளனர். அவர்களுக்கு அருகில் வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் உருவாக்கிய, தாமரை வடிவிலான நவக்கிரக ஸ்தூபி காணப்படுகிறது. அதன் எதிரே வசந்த மண்டம் உள்ளது.
கோவிலுக்குள் நுழைந்தவுடன் சந்திர- சூரியர்களை வணங்கி, உள் சுற்று பிரகாரத்தில் நடந்து சென்றால், 63 நாயன்மார்களை வணங்கலாம். அவர்களுக்கு எதிரே தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். கன்னி மூலையில் கணபதியும், தொடர்ந்து பஞ்ச லிங்கமும், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியரும் அருள்கின்றனர். அடுத்ததாக சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், நடராஜர், பைரவர் திருமேனிகளும் உள்ளன.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் நாளில் அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனி மாதத்தில் நடராஜருக்கு திருமஞ்சனம் சிறப்பாக நடக்கும். அன்னை ஆவுடையம்மாளுக்கு ஆடிப்பூர வளைகாப்பு பிரசித்தம். ஐப்பசியில் அன்னாபிஷேகம், சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் போன்றவையும் சிறப்பான வழிபாடாகும். இது தவிர கார்த்திகை சோமவார பூஜைகள், மார்கழி மாத பூஜைகள், திருவாதிரைத் திருவிழா, மாணிக்க வாசகர் குருபூஜை, இராக்கால பூஜை, பிரதோஷம் போன்றவையும சிறப்பாக நடத்தப்படுகிறது. தை அமாவாசை அன்று ஆலயத்தில் பத்திர தீபம் ஏற்றப்படுகிறது.
பல ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த ஆலயத்திற்கு தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 75 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இத்தல இறைவனை வழிபட்டால் மன நலம் குன்றியவர்கள் விரைவில் குணம் அடைவார்கள் என்று பக்தர்கள் சொல்கின்றனர். இருதய பலவீனம் உள்ளவர்களும் இந்த இறைவனை வழிபடலாம். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்
நெல்லை - தூத்துக்குடி மெயின் ரோட்டில் 15 கிலோமீட்டர் தொலைவில் வல்லநாடு உள்ளது. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் கலியாவூர் சாலையில் சென்றால், திருமூலநாதர் ஆலயத்தை அடையலாம். வல்லநாட்டில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.

‘நாகேஸ்வரர் கோவில்’ அல்லது ‘நாகநாதர் கோவில்’ என்று அழைக்கப்படும் ஆலயம் துவாரகைக்கு அருகே அமைந்திருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமான், பக்தர்களின் இன்னல்களை நீக்குவதற்காக ஆலயங்களில் லிங்க வடிவில் வீற்றிருந்து அருள்புரிகிறார். லிங்க வடிவங்களில் ஜோதிர் லிங்கம் என்பவை சிறப்பு வாய்ந்தவை. இந்தியா முழுவதும் 12 ஜோதிர் லிங்க திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமான், தன்னை ஜோதி லிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் திருவாதிரை நாள் ஜோதிர் லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது.
‘நாகேஸ்வரர் கோவில்’ அல்லது ‘நாகநாதர் கோவில்’ என்று அழைக்கப்படும் ஆலயம் துவாரகைக்கு அருகே அமைந்திருக்கிறது. சிவபெருமானுக்காக அமைத்த 12 ஜோதிர் லிங்க தலங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தில் அருளும் இறைவனின் பெயர் நாகநாதர் என்பதாகும். இறைவியின் பெயர் நாகேஸ்வரி ஆகும்.
இந்த ஆலயத்தைப் பற்றி சிவபுராணத்தில் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. சுப்பிரியா என்னும் சிவ பக்தையை, தாருகா என்ற அசுரன் பிடித்துச் சென்றான். அவளை, தாருகாவனம் என்ற இடத்தில் மேலும் பலருடன் சேர்த்து அடைத்து வைத்திருந்தான். பாம்புகளின் நகரமாக விளங்கிய அந்த இடத்திற்கு, தாருகா அசுரன் தான் மன்னனாக இருந்தான். சிறையில் அடைக்கப்பட்டிருந்த சப்பிரியா, சிவபெருமானை நினைத்து அவரது மந்திரங்களை உச்சரித்தாள். மேலும் அங்கிருந்தவர்களையும் சிவனின் மந்திரங்களை உச்சரித்து வணங்கும்படி செய்தாள். இதையடுத்து அங்கு தோன்றிய சிவபெருமான், தாருகா அசுரனைக் கொன்று, அங்கிருந்த கைதிகள் அனைவரையும் விடுவித்தார். அவரே இந்த ஆலயத்தில் ஜோதிர் லிங்கமாக இருப்பதாக பக்தர் களின் நம்பிக்கை.
தாருகா அசுரன் இறக்கும் முன்பாக, இந்த இடம் தன்னுடைய பெயரில் வழங்கப்பட வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டான். அதன்படி நாகர்களின் அரசனாக விளங்கிய அவனது பெயராலேயே ‘நாகநாத்’ என்று இந்த இடம் வழங்கப்படுகிறது. ஆலயமும் நாகநாதர் கோவில் என்று பெயர் பெற்றுள்ளது. இது மிகவும் பழமையான ஆலயங்களில் ஒன்றாகும். பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களில் இதுவே மிக தொன்மையானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த ஆலயத்திற்கு மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. அதாவது தாருகாவனம் என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் பல ரிஷிகள் தங்களின் மனைவியுடன் வாழ்ந்து வந்தனர். அந்த ரிஷிகள் அனைவரும், இறைவனைப் பற்றிய சிந்தனை இல்லாமல், இந்த உலகமே தங்களால் தான் இயங்குகிறது என்று நினைத்துக் கொண்டனர். அவர்களின் கர்வத்தை அடக்க நினைத்த சிவ பெருமான், பிட்சாடன மூர்த்தியாக, தாருகாவனத்திற்கு வந்தார். அவரது அழகில் மயங்கிய ரிஷி களின் மனைவிகள், தங்களின் சுய நினைவை இழந்து, சிவபெருமானின் பின்னால் சென்றனர். இதைக் கண்ட ரிஷிகள் கோபம் கொண்டு, சிவபெருமானை கொல்ல முயன்றனர். உடனே சிவபெருமான் அங்கிருந்து ஒரு பாம்பு புற்றுக்குள் சென்று மறைந்தார். ரிஷிகள் புற்றுக்குள் பார்த்தபோது, அங்கு ஜோதிர் லிங்கமாக இறைவன் காட்சி கொடுத்தார். தங்களது தவறை உணர்ந்த ரிஷிகள், இறைவனிடம் மன்னிப்பு கேட்டனர். லிங்கமாக இருந்த சிவபெருமானுக்கு, நாகப்பாம்பு ஒன்று குடைப்பிடித்தது. இதனால் அவருக்கு நாகநாதர் என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
ஆலய அமைப்பு :
நான்கு பக்கமும் உயர்ந்த மதில் சுவர்கள் கொண்டு, விசாலமாக அமைந்திருக்கிறது இந்த ஆலயம். நாமதேவர் என்னும் சிவபக்தர், ஊர் மக்களால் விரட்டப்பட்டு ஊரின் தென் திசையில் சென்று இறைவனைக் குறித்துப் பாடினார். நாமதேவரின் பாடல் களைக் கேட்கும் பொருட்டு மூலவர் தென்திசை நோக்கித் திரும்பினார் என்று சொல்லப்படுகிறது. எனவே மூலவர் கருவறை தென்திசை நோக்கியும், கோபுரம் கிழக்கு திசை நோக்கியும் உள்ளன. சிறந்த சிற்ப வேலைகளுடன் கூடிய நீண்ட, கூம்பு வடிவ கோபுரம் இந்த கோவிலில் காணப்படுகிறது. மேலும் ஆலயத்திற்கு வெளியே மிகவும் உயரமான, யோக நிலையில் இருக்கும் சிவனின் சிலை ஒன்றும் உள்ளது. இந்த ஆலயத்தில் சிவராத்திரி மிகவும் சிறப்பாக நடைபெறும். அப்போது இங்கு அதிகமான அளவில் பக்தர்கள் கூடுவார்கள்.
குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகைக்கு அருகில் 17 கிலோமீட்டர் தொலைவில் நாகநாதர் கோவில் அமைந்துள்ளது. ரெயிலில் துவாரகைக்கு வந்து, அங்கிருந்து கார் அல்லது பஸ் மூலம் நாகநாத் செல்லலாம்.