என் மலர்
கோவில்கள்
அழகிய கண்கவர் குன்றின் மேல் அமைந்துள்ளது சுமார் 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அகஸ்தீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஜெயவண்ணன்
சவுந்திரநாயகி
அகஸ்தீஸ்வரர்
கோவில் தோற்றம்
அழகிய கண்கவர் குன்றின் மேல் அமைந்துள்ளது அகஸ்தீஸ்வரர் ஆலயம். சாலையின் ஓரத்திலேயே உள்ளது இந்த ஆலயம். சிறிய மலை. சுமார் 20 அகன்ற படிக்கட்டுகளைக் கடந்தால் ஆலயத்தை அடையலாம்.
இறைவன் அகஸ்தீஸ்வரர். இறைவி வடிவுடைநாயகி. அன்னையின் இன்னொரு பெயர் சவுந்திர நாயகி. சுமார் 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயம், குலசேகரமாரவர்ம சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்ட இந்த பாண்டிய மன்னன், தன் அகத்தில் சதா சர்வகாலமும் ஈஸ்வரனின் நினைவில் இருந்து, அந்த ஈஸ்வரனுக்கு ஓர் ஆலயம் அமைத்து அங்கு அருள்பாலிக்கும் ஈஸ்வரனுக்கு ‘அகஸ்தீஸ்வரர்’ என்று பெயரிட்டதாக செவி வழி வரலாறு.
நாயக்கர் காலத்தில் இந்த ஆலயம் நன்றாக புணரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. ராஜகம்பலத்து நாயக்க ஜமீன் வம்சத்தினரால் இன்றும் இந்த ஆலயம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவது வியப்பைத் தரும் தகவலாகும்.
ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முன் முகப்பை தாண்டியதும் அகன்ற பிரகாரம். எதிரே பலிபீடமும் நந்தியும் இருக்க அடுத்துள்ளது மகாமண்டபம்.
மகாமண்டபத்தின் வலதுபுறம் அன்னை வடிவுடைநாயகியின் சன்னிதி உள்ளது. எதிரே கரு வறையில் இறைவன் அகஸ்தீஸ் வரர் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். திருச்சுற்றில் தெற்கில் கன்னி மூலை கணபதி தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். வடக்கில் சண்டீஸ்வரர் சன்னிதியும் சண்முக நாதர், வள்ளி, தெய்வானை சன்னிதிகளும் உள்ளன.
பைரவர் தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கிறார். வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களும், கிழக்கு பிரகாரத்தில் சந்திரன், சூரியன் இருவரும் அருள்பாலிக்கின்றனர். தேவக்கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும் மகாவிஷ்ணுவும் வீற்றிருக்கின் றனர்.
இங்கு சூரிய- சந்திரர் இருவரும், ஒரே சன்னிதியில் அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. பெற்றோர் நோய் குணமாக இவர்கள் இணைந்து அருள்புரிவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இங்கு பிரதோஷம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சுமார் 1000 பக்தர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். சிவராத்திரியன்று நான்கு கால பூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. மொச்சை, வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், பயிறுவகை சுண்டல் முதலியன பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது. திருக்கார்த்திகை அன்று ஆலயம் முன்பு சொக்கபனை தீபம் ஏற்றும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
சவுந்திரநாயகி, அகஸ்தீஸ்வரர்பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றனர்.
மாத பவுர்ணமி நாட்களில் ஆலயத்தை சுற்றி சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
குழந்தை பாக்கியம், புத்திர தோஷம் போன்றவற்றுக்கு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் பட்டாடை சாத்தி, மஞ்சள் நிறப் பூ சூட்டி, கொண்டை கடலை மாலை போட்டு இனிப்பும், தயிர் அன்னமும் நைவேத்தியமாக படைத்து வினியோகம் செய்தால் உரிய பலன் கிடைப்பதாகக் கூறுகிறார்கள்.
தினசரி இங்கு இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. சுற்றிலும் திருமதிற்சுற்றுடன் உள்ள இந்த ஆலயம் இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தால் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலயம் பரிகார தலமாகவும் விளங்குகிறது. கன்னிமூலை கணபதி சன்னிதியின் முன் பக்தர்கள் யாகம் வளர்த்து பரிகார பூஜை செய்து பலன் பெறுகின்றனர். இந்த குன்றின் மேல் அகத்தியர் தவம் செய்துள்ளார்.
இந்த ஆலயத்திற்கு அருகே உள்ள நல்லாண்டவர் கோவில் திருவிழாவின் போது சுமார் 1000 பேர் பால்குடம் சுமந்து இங்கிருந்துதான் புறப்பட்டு ஊர்வலமாகச் செல்வார்கள்.
தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
வெளிநாடு செல்ல விரும்புவோர் இங்கு அருள்பாலிக்கும் இறைவன் அகஸ்தீஸ்வரரையும், இறைவி வடிவுடை நாயகியையும் வேண்டி வணங்க அவர்கள் பிரார்த்தனை பலிப்பது கண்கூடான உண்மையே.
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம். மணப்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில், ஆண்டவர் கோவில் பஸ் நிறுத்தத்தில் இறங்கவேண்டும்.
திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தை பற்றியும், அங்கு வீற்றிருக்கும் இறைவனைப் பற்றியும் சில செய்திகளை இங்கே பார்ப்போம்.
மனித வாழ்வில் பல சோதனைகள், வேதனைகள் இருக்கத்தான் செய்யும். அது அவரவர் செய்த கர்ம வினைகளின் பலன் ஆகும். தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்? ஆனால் அப்படிப்பட்ட தலையெழுத்தை மாற்றும் சக்தி படைத்த ஆலயங்களும் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஒன்றுதான் திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தை பற்றியும், அங்கு வீற்றிருக்கும் இறைவனைப் பற்றியும் சில செய்திகளை இங்கே பார்ப்போம்.
நம்மைப் படைத்த பிரம்மனுக்கு தனி சன்னிதிகளோ, ஆலயங்களோ அதிகம் கிடையாது. காரணம் பிரம்மனின் அகந்தை. சிவனுக்கு நிகராக ஐந்து தலைகளைப் பெற்ற கர்வத்தில் ஆணவமாகப் பேசிய பிரம்மனின் ஒரு தலையைக் கொய்தார் சிவ பெருமான். அதோடு அவரது படைப்புத் தொழிலுக்கு தடை விதித்தார். தன் தவறை உணர்ந்த பிரம்மன், சிவனைப் பணிந்து அனுதினமும் பல தலங்களில் சிவலிங்கங்கள் உருவாக்கி பூஜைகள் செய்ததன் பலனாக இழந்தவைகளை மீண்டும் பெற்றார். பிரம்மனின் சாபத்தை, சிவபெருமான் போக்கி அருளிய இடமே திருப்பட்டூர். இங்கு பிரம்மனுக்கு தனிச்சன்னிதி இருக்கிறது.
இத்தலத்தில் சிவனை அபிஷேகிப்பதற்காக, பிரம்மன் உருவாக்கிய தீர்த்தக்கிணறு ‘பிரம்ம தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. வழிபாட்டுக்காக பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 12 லிங்கங்கள், இங்கே 12 சிறிய சன்னிதிகளில் பக்தர்களால் வணங்கப்படுகிறது. பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 12 லிங்கங்களுடன், இங்குள்ள பிரம்ம புரீஸ்வரரையும் வணங்கும்போது, சிவபெருமானின் 13 திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும்.
பாதாள ஈஸ்வரர், சுத்த ரத்தினேஸ்வரர், தாயுமானவர், கயிலாசநாதர், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர், லால்குடி சப்தரிஷிஸ்வரர், திருஅண்ணாமலையார், பழமலைநாதர், பிரம்ம புரீஸ்வரர், காளத்திநாதர், ஏகாம்பரரேஸ்வரர், மண்டூகநாதர் ஆகிய சிறப்பான சிவத்தலங் களின் லிங்கங்களே பிரம்மாவால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஆதிகோவிலாக அறியப்படும் கயிலாசநாதர் சன்னிதியில் நம்பிக்கையான வழிபாடுகள் அதற்குரிய பலனைத் தரும்.
இங்கு அருள்பாலிக்கும் பிரம்மதேவனே, குரு பகவானாக வணங்கப்படுகிறார். எனவே அவருக்கு மஞ்சள் காப்பு செய்து ஆராதனை நடைபெறுகிறது. குருவுக்கு உகந்த வியாழக்கிழமைகளிலும், சிவனாருக்கு உகந்த திங்கட்கிழமைகளிலும், ராஜகிரகமான சூரியனின் ஆதிக்கம் உள்ள ஞாயிற்றுக்கிழமையிலும் இத்தலம் வந்து வழிபாடு செய்வது சிறப்பானது.
வருடந்தோறும் பங்குனி 15, 16, 17 ஆகிய தேதிகளில் சூரியன், தன் கதிர்களால் சிவபெருமானை வழிபடும் காட்சி அற்புதமானது. அந்த நாட்களில் காலை ஆறு மணிக்கு சென்றால் இந்த அற்புதக் காட்சியை கண்டு ரசிக்கலாம். சூரியன் ஈசனை வழிபடும் தினத்தில் இங்கு வந்து, பிரம்மபுரீஸ்வரரையும், பிரம்மனையும் வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள கயிலாசநாதர் கோவில் புகழ்பெற்ற பல்லவர் காலக் கட்டுமானச் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளதைக் காணலாம். ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த இதன் தேர் வடிவிலான கோவில் அமைப்பும், எந்நேரமும் மேலிருந்து விழும் அபிஷேகத்தில் குளிர்ந்தவராக அருளும் பதினாறு பட்டைகள் கொண்ட தாராலிங்கமாக இங்கே ஈசன் அருள்பாலிக்கிறார். இந்த லிங்கத்தை ‘சந்திரகலா லிங்கம்’ என்கின்றனர். இந்த சன்னிதிக்கு எதிரில் உள்ள நந்தி, நிஜ உருவத்தைப் போன்று அமைந்து வியக்க வைக்கிறது.
ஈஸ்வரருக்கு 64 மூர்த்தங்கள் உண்டு. அதில் தத்புருஷ மூர்த்தங்கள் 25 வகை என்கின்றன சைவ நூல்கள். அவற்றுள் காலபைரவரும் ஒருவர். நம் பாவபுண்ணியக் கணக்குகளை கணித்து நமக்கு நன்மைகளை வழங்குவதில் காலபைரவர் நிகரற்றவர். பொதுவாக வடகிழக்கு மூலையில் தெற்கு திசையை நோக்கியபடி உள்ள காலபைரவரையே தரிசித்திருப்போம். ஆனால் திருப்பட்டூர் தலத்தில் மேற்கு நோக்கியபடி இருக்கிறார் கால பைரவர். இவரின் வலது செவியும் அதில் இருக்கும் தாடங்கமும் மற்ற தலங்களில் உள்ளதுபோல் இல்லாமல் வித்தியாசமாக இருப்பதும் கூடுதல் சிறப்பு.
இந்த ஆலயத்தில் 36 தீபங்களை ஏற்றி வழிபடுவது சிறப்பான பலன் களைத் தரும் என்பது நம்பிக்கை. நம்மை ஆட்சி செய்யும் 27 நட்சத்திரங்கள் மற்றும் ஒன்பது கிரகங்களைக் குறிக்கும் வகையில் 36 தீபங்களை ஏற்றி, ஒன்பது முறை பிர காரத்தை வலம் வந்து பிரார்த்தனை செய்யும்போது, நமது துன்பங்கள் அனைத்தும் விலகும். கிரக தோஷங்கள் நீங்கும் என் கிறார்கள். ஒவ்வொருவரின் ஜென்ம நட்சத்திர நாளிலும் இங்கு வந்து இந்தப் பிரார்த்தனையைச் செய்வது நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.
பிரம்மாவின் தலையைக் கொய்ததால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதில் இருந்து விடுபடுவதற்காக, மகாவிஷ்ணுவை சிவபெருமானை வழிபட்டார். இதனால் மகிழ்ந்த விஷ்ணு, ஈசனின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கியருளினார் என்பது புராண வரலாறு. அதன்படி மகாவிஷ்ணுவுக்கும் இங்கு தனிக் கோவில் இருக்கிறது. பிரம்ம புரீஸ்வரர் ஆலயத்தின் மேற்குப்பகுதியில் அது அமைந்துள்ளது. இந்த வரதராஜப் பெருமாள் திருக்கோவில், எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்டதாகும்.
இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று பிரதோஷ வேளை. இத்தலத்தில் பிரதோஷ நாளில் நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும் போது, அங்கிருந்தபடி ஒரு துணில் இருக்கும் நரசிம்மரையும் தரிசிக்க முடியும். ஒரு பிரதோஷ நாளில்தான் மகாவிஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை வதம் செய்தார். ஆகவே பிரதோஷ நேரத்தில் நந்தியோடு, நரசிம்மரையும் வழிபட்டால் நம் இன்னல்கள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் உள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்தில் நுழைந்து, ஐந்தெழுத்து நாயகனான சிவனாரை தரிசித்தால் வாழ்வின் ஐந்து நிலைகளிலும் நம்மைக் காத்து ரட்சிப்பார் இத்தல இறைவன். அதே போல் கோபுர வாசலில் இருந்து ஏழு நிலைகளை கடந்துதான் இறைவனை தரிசிக்க முடியும். சூரிய பகவானே தன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன், ஏழு நிலைகளைக் கடந்தே சிவனாரை தரிசிக்கிறார் என்பது ஐதீகம். ஆகவே இங்கு வந்து தரிசிப்பவர்களின் ஏழேழு ஜென்மப் பாவங்களும் தீரும் என்கிறார்கள்.

ஒரே கல்லில் அனைத்து வடிவங்களும் கொண்ட மூலவர் விளங்கும் கோவில், மார்பில் கல் உரலை வைத்து மஞ்சள் இடிக்கும் ஊர் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குவது, ஐயம்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில்.
ஒரே கல்லில் அனைத்து வடிவங்களும் கொண்ட மூலவர் விளங்கும் கோவில், திருவண்ணாமலை அருகாமையில் அமைந்துள்ள அழகிய மலைக்கோவில், ஆடிக் கிருத்திகையை விமரிசையாகக் கொண்டாடும் ஊர், கொதிக்கும் எண்ணெயில் வெறுங்கைகளால் வடை சுடும் அதிசயத் தலம், மார்பில் கல் உரலை வைத்து மஞ்சள் இடிக்கும் ஊர், வெளிநாட்டவரைக் கவர்ந்த மலைக் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குவது, ஐயம்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில்.
இந்த ஆலயத்தின் வரலாறுக்குச் சான்றுகள் இன்னமும் கிடைக்கவில்லை. என்றாலும் இந்த மலை மீதுள்ள மூலவர் சிலை பல தலைமுறை களாக இருந்துள்ளதை ஊர்ப் பெரியவர்கள் நினைவு கூர்கின்றனர். பழங்காலத்தில் இவ்வழியாக மாட்டு வண்டியில் வரும் பயணிகள் இந்த மலையில் தங்கி உணவு அருந்திவிட்டு, சுனை நீரைப் பருகி ஓய்வெடுத்து, முருகனை வணங்கிச் செல்வது வழக்கம்.
படிகள் இல்லாதிருந்த இந்த மலைக்கு, படிகள் அமைத்து முருகனுக்கு தனி ஆலயம் எழுப்ப ஐயம்பாளையம் மக்கள் விரும்பினர். அதன் பயனாக, சிவசுப்பிரமணிய அறக்கட்டளையை ஏற்படுத்தினர். ஊர்மக்கள் ஒத்துழைப்போடு, பலரின் ஆதரவினாலும், திருவண்ணாமலை பேரூர் ஆதினத்து சோணாசல அடிகளின் வழிகாட்டுதலாலும், திருப்பணி இனிதே நடந்து முடிந்தது. ஆலய கும்பாபிஷேகமும் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது.
ஆலய அமைப்பு :
ஐயம்பாளையம் ஊரின் மேற்குப்புறத்தில் தனிக்குன்றில் முருகன் ஆலயம் அமைந்துள்ளது. தொலைவில் இருந்து பார்க்கும் போது, எழிலாகக் காட்சிதரும் மலை இது. மலையின் அடிவாரத்தில் சம்பந்த விநாயகர், அருகே இடும்பன் சன்னிதி உள்ளது. அதன் அருகே பழமையான நாகம் ஒன்று பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டிருக்கிறது. இது திருச்செங்கோடு மலையில் உள்ள நாகத்தினை நினைவு படுத்தும் விதமாக இருக்கிறது.
இந்த மலையில் ஏறி, முருகப்பெருமானை தரிசிக்கச் செல்ல 61 படிகள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. மலை உச்சியில் கிழக்கு முகமாய் சிவசுப்பிரமணியர், தன் துணையான வள்ளி- தெய்வயானை ஆகிய இரண்டு தேவியர்களோடு நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இந்த மலையில் இருந்து கிழக்கு நோக்கினால் அண்ணாமலையும், தெற்கு நோக்கினால் பர்வத மலையும் காட்சியளிக்கின்றன. இவை இரண்டும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு.
இவர் ஒரே கல்லால் ஆன தெய்வ வடிவமாகக் காட்சி தருகிறார். பொதுவாக சிலா வடிவங்கள் தனித் தனியாகவும், திருவாசி தனியாகவும் காணப்படும். ஆனால், இங்கே ஒரே கல்லில் இரண்டும் வடிக்கப்பட்டிருப்பது, கலை நயம் மிக்கதாக விளங்குகிறது. இதற்கு மேலாக மயில் நின்ற கோலத்தில், நாகத்தை கவ்வியபடி இருக்கும் காட்சி தத்ரூபமாக அமைந்துள்ளது. இவை அனைத்தும் சிற்பியின் கைவண்ணத்தை எடுத்துக் காட்டுகின்றன. இந்த சிலை வடிவம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆராய்ச்சியாளா்கள் கூறுகின்றனா்.

இந்த மலை மீது உள்ள சம்பந்த விநாயகர் அருகே வலதுபுறம் இடும்பன் சுனையும், முருகன் ஆலயத்தின் பின்புறம் இளையனார் சுனையும் அமைந்துள்ளன. திருக்கோவிலின் முக்கியத் திருவிழா ஆடிக்கிருத்திகையே ஆகும். அன்றைய தினம் மார்பு மீது கல் உரலை வைத்து மஞ்சள் இடித்தல், கொதிக்கும் எண்ணெய்யில் வேகும் வடைகளை வெறுங்கைகளால் எடுத்தல் போன்ற அதிசய நிகழ்வுகளை சில பக்தர்கள் அரங்கேற்றுகிறார்கள்.
இது தவிர, அன்று மாலை கரகம் எடுத்து தீ மிதித்தல், அலகு குத்தி தேர் இழுத்தல், செக்காட்டுதல், பறவைக் காவடி எடுத்தல், உடல் முழுவதும் எலுமிச்சைப்பழம் தொங்க விடுதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்கள் பக்தர்களால் நிறைவேற்றப்படுகின்றன. இது தவிர விநாயகர் சதுர்த்தி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம், கந்த சஷ்டி என மற்ற விழாக்கள் எளிமையாகக் கொண்டாடப்படுகின்றன.
அதிசய நேர்த்திக் கடன்கள்
இத்தலத்தில் ஆடிக்கிருத்திகைக்கு முன்பாக 9 நாள் காப்புக் கட்டிய பக்தர், ஆடிக்கிருத்திகை அன்று மாலை 3 மணி அளவில் வாணலியில் நல்லெண்ணையை ஊற்றி அதில் வடை மாவைப் போடுவார். வடை வெந்தவுடன், அதை சல்லிக் கரண்டியில் எடுப்பதற்குப் பதிலாக, தனது கரங்களைக் கொண்டே எடுத்து தட்டில் போடுவார்.
இதனால் அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை ஒரு நேர்த்திக்கடனாகவே செய்து வருகிறார்கள். அப்படி எடுக்கப்படும் வடைகள் ஏலம் விடப்படுகிறது. அவை நூறு முதல் ஐநூறு ரூபாய் வரை ஏலம் போவதைப் பார்க்க முடியும். இந்த வடைகளை சாப்பிடுபவர்களுக்கு, தீராத நோய்கள் நீங்கும். திருமணம் நடைபெறும், மகப்பேறு உண்டாகும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதே போல் முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பவர்கள், தன்னுடைய மார்பில் கல் உரலை வைத்து, அதில் மஞ்சளைப் போட்டு உலக்கையால் இடிப்பார்கள். அந்த தூளை பக்தர்கள் மீது வீசுவார்கள். அது உடலில் படும் போது பலவித குறைபாடுகள் நீங்கி, நலம் பெறலாம் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்படுகிறது.
இந்த ஆலயத்தில் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி, மாலை 4 மணி முதல் 6 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம்.
அமைவிடம் :
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஐயம்பாளையம் தலம் அமைந்துள்ளது. திருவண்ணாமலை- செங்கம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேற்கே 9 கி.மீ. தொலைவில் ஐயம்பாளையம் இருக்கிறது.

எதுர்மலையில் வரதராஜப் பெருமாள் ஆலயத்தையும் விஜய நகரப் பேரரசை மாமன்னன் கிருஷ்ண தேவராயர் உருவாக்கி கொடுத்தார். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
விஜய நகரப் பேரரசை மாமன்னன் கிருஷ்ண தேவராயர் ஆட்சி செய்தார். அவரது ராயர் வம்சத்து மக்கள் அருகே இருந்த இரண்டு கிராமங்களில் வசித்து வந்தனர். எதுர்மலை, பாலை மலை என்பது அந்த கிராமங்களின் பெயர்கள். இரண்டு கிராமங்களுக்கும் இடையே ஒரு பெரிய ஏரி.
நீர் வளமும் நில வளமும் மிக்க திருச்சினாப்பள்ளியின் மீது அந்த கிராம மக்களுக்கு ஒரு கண். எனவே அந்த கிராமங்களை விட்டுவிட்டு திருச்சினாப்பள்ளிக்கு அருகே குடிபெயர்ந்தால் என்ன? என்று தோன்றியது.
தங்கள் விருப்பத்தை மன்னரிடம் கூற மன்னரும் சம்மதம் கூறி விட்டார்.
தாங்கள் குடியேற திருச்சினாப்பள்ளிக்கு 20 கல் தொலைவில் ஓர் இடத்தை தேர்வு செய்தனர். காட்டுப் பகுதி அது. மன்னரின் ஆணையால் அந்தக் காட்டின் ஒரு பகுதி அழிக்கப்பட்டது. குடியிருப்புக்கு ஏற்ற இடமாக மாற்றப்பட்டு ராயர் வம்சத்தினர் அங்கே குடியேறினர்.
அந்த இடத்திற்கு தாங்கள் ஏற்கனவே வசித்த இடத்தின் பெயரையே வைத்தனர். தென் பகுதிக்கு பாலை மலை என்றும், வடபகுதிக்கு எதுர்மலை என்றும் பெயர் சூட்டினர். ஏரிக்கு இருபுறமும் ஊர்கள் அமைந்திருந்தன. ஊர் மக்கள் வழிபட பாலைமலையில் வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தையும், எதுர்மலையில் வரதராஜப் பெருமாள் ஆலயத்தையும் மன்னர் உருவாக்கி கொடுத்தார்.
தாங்கள் வாழ்ந்து வந்த ஊரில் இருந்த பெருமாளையே புதிதாக குடியேறிய ஊரில் அமைத்து கொடுத்த மன்னருக்கு குடியேறிய மக்கள் நன்றி கூறினர்.
அவர்களால் பெயர் சூட்டப்பட்ட பாலைமலை என்ற கிராமத்தின் பெயர், நாளடைவில் மருவி ‘பாலையூர்’ என்றும், எதுர்மலை என்ற ஊர் ‘எதுமலை’ என்றும் மாறியது. இந்த எதுமலையில் உள்ளதுதான் வரதராஜ பெருமாள் ஆலயம். முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் கொடி மரம் உள்ளது. இதில் ஆஞ்சநேயரின் திருமேனி நம் கண்களை கவரும் வண்ணம் மிகவும் அழகாக காட்சி அளிக்கிறது. இந்த ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என பக்தர்கள் கூறுகின்றனர். தாமதமாகும் திரு மணம் நடந்தேறவும், குழந்தை பேறு உண்டாகவும், கல்வி ஞானம் பெறவும் இவரை பக்தர்கள் வழிபடுகின்றனர்.
அடுத்ததாக கருடாழ்வாரின் சன்னிதி உள்ளது. அதை அடுத்து மகா மண்டபம் உள்ளது. மகா மண்டபத்தின் வலது புறம் கிருஷ்ணர், ஆஞ்சநேயர், விஷ்வக்சேனா, பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், கூத்தாழ்வார், திருப்பாணாழ்வார், நாதமுனிகள், எம்பார், ராமானுஜர், காளிங்கன் நாகர் ஆகியோரது திருமேனிகள் உள்ளன.
அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் கீழ் திசை நோக்கி சேவை சாதிக்கிறார். அருகே உற்சவர் திருமேனிகள் உள்ளன. திருச்சுற்றில் தெற்கில் கமலவல்லி தாயார் சன்னிதி உள்ளது. அன்னை கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் முகத்தில் புன்னகையுடன் அருள்பாலிக்கிறாள்.
மணமாகாத கன்னியர் கமலவல்லி தாயாரை வேண்டிக் கொள்ள, அவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். மணமானதும் தம்பதியர் சன்னிதிக்கு வந்து புத்தாடை அணிவித்து ஆராதனை செய்து நன்றியை தெரிவிக்கின்றனர்.
மேற்கு திருச்சுற்றில் ஆதி அந்தபிரபுவின் திருமேனி உள்ளது. இத்திருமேனி பாதி விநாயகரையும் பாதி ஆஞ்சநேயரையும் கொண்டதாகும். அடுத்து பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். வடக்கில் ஆலய தல விருட்சம் வில்வம் தழைத் தோங்கி வளர்ந்துள்ளது. இறைவனின் தேவக் கோட்ட விமான சுவர்களில் ஏராளமான கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆஞ்சநேயர், கருடாழ்வார், பெருமாள், பிள்ளையார், நரசிம்மர், அன்னபட்சி, மயில், வேல்முருகன், மச்ச அவதாரம், யானை, வாமன அவதாரம் போன்ற சிற்பங்களின் நேர்த்தி நம்மை வியக்க வைக்கின்றன. தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடக்கிறது.
சித்ரா பவுர்ணமி புரட்டாசி சனிக்கிழமைகளில் இறைவன் இறைவிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. இந்து அற நிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த ஆலயம், தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
திருச்சியில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், மண்ணச்சநல்லூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, எதுமலை கிராமம்.

திருவாரூர் கமலாம்பாள் சமேத வன்மீகிநாதர், தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். ‘திருவாரூர் தேர் அழகு' என்பது சொல் வழக்கு. அதுபோல ‘பிறக்க முக்தி தரும் தலம்’ இது.
1.4.2019 அன்று ஆழித் தேரோட்டம்
திருவாரூர் கமலாம்பாள் சமேத வன்மீகிநாதர், தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். ‘திருவாரூர் தேர் அழகு' என்பது சொல் வழக்கு. அதுபோல ‘பிறக்க முக்தி தரும் தலம்’ இது.
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமணத்தை, முதியவர் வடிவில் வந்து தடுத்தாட்கொண்டார் சிவபெருமான். பின்னர் திருவாரூரில் இருந்தபடி ஆலயங்கள் தோறும் சென்று திருமுறை திருப்பாட்டு பாடும் வரத்தை அளித்தார். தன்னுடைய தோழனாகவும் சுந்தரரை ஆக்கிக் கொண்டார். சுந்தரர் தினமும் தனது திருவாரூர் ஆலயத்திற்குச் சென்று தியாகேசப் பெருமானை வழிபட்டு வந்தார். அப்படி ஒரு முறை செல்லும் போது பரவை நாச்சியாரை கண்டார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முன்வினை பயனாக அவர்களுக்குள் காதல் புகுந்தது. இருவரும் இல்லற வாழ்வில் இணைந்தனர். அதோடு இருவரும் சேர்ந்து தியாகேசப் பெருமானை வழிபட்டு தொண்டாற்றியும் வந்தனர்.
இந்த நிலையில் பரவை நாச்சியார் திருவாரூரிலேயே தங்கிவிட, சுந்தரர் சிவாலய தரிசனத்திற்காக யாத்திரை மேற்கொண்டார். பல சிவாலயங்கள் சென்று ஈசனைப் பணிந்து பாடி, தான் வேண்டி யவற்றையும், தன் அன்பர்கள் வேண்டியவற்றையும் கேட்டுப் பெற்றார் சுந்தரர். தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவொற்றியூர் ஈசனை வழிபடுவதற்காக வந்தார். அங்கு சங்கிலி நாச்சியார், ஈசனுக்கு பூ கட்டி தொண்டாற்றிக் கொண்டிருந்தார்.
சுந்தரர் திருவொற்றியூர் ஆலய தரிசனத்திற்காக வந்த போது, சங்கிலியிடம் காதல் வயப்பட்டார். தொடர்ந்து ஈசனிடம் சென்று, சங்கிலியிடம் தனக்காக சென்று பேசி, தனக்கும் சங்கிலிக்கும் மணம் செய்து வைக்கும்படி வேண்டினார்.
ஈசனும் அதற்கு ஒப்புக்கொண்டு சங்கிலி நாச்சியாரிடம் சென்று, சுந்தரரை மணந்து கொள்ளும்படி அருளினார். உடனே சங்கிலியார், “சுந்தரர் ஏற்கனவே பரவையாரை மணம் செய்து கொண்டிருக்கிறார். எனவே நான் எப்படி அவரை மணக்க முடியும்?” என்று ஈசனிடம் கேட்டார்.
அதற்கு ஈசன், அவளை விட்டு சுந்தரர் பிரிந்து செல்லாதபடி சத்தியம் வாங்கித் தருவதாக கூறினார். இதையடுத்து சுந்தரரை மணக்க சங்கிலி நாச்சியார் சம்மதித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு திருவொற்றியூரிலேயே தங்கியிருந்து சிவதொண்டு செய்து வந்தனர். சில காலம் சென்றது.
திருவாரூரில் வசந்தவிழா விசேஷம் வந்தது. அதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் சுந்தரருக்கு பிறந்தது. அதனால் சங்கிலி நாச்சியாருக்கு கொடுத்த வாக்கை மீறி, ஊர் எல்லையைத் தாண்டிச் சென்றார் சுந்தரர். வாக்குறுதியை மீறியதும் அவரது இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. அதன்பின் பல சிவத்தலங்களுக்குச் சென்று, பார்வை வேண்டிப் பதிகங்கள் பாடினார், சுந்தரர். அவர் மீது கொண்ட இரக்கத்தால், திருவெண்பாக்கம் என்ற தலத்தில் ஒரு ஊன்றுகோலை மட்டும் கொடுத்தார் ஈசன்.
அதைப் பெற்றுக்கொண்டு, தன் அடியார்களின் உதவியுடன் பல சிவதலங்களை தரிசிக்கச் சென்றார், சுந்தரர். ஒரு கட்டத்தில் காஞ்சீபுரம் வந்து ஏகாம்பரநாதரை வணங்கினார். அங்கு ஏகாம்பரநாதரை உருகிப் பாடினார். இதில் மனம் மகிழ்ந்த ஈசன், சுந்தரருக்கு இடது கண் பார்வையை வழங்கினார். பின்னர் அங்கிருந்து இன்னும் சில சிவ தலங்களுக்குச் சென்று வழிபட்ட சுந்தரர், திருவாரூர் வந்து சேர்ந்தார். அங்கு ஈசனிடம் மன்றாடி வலது கண் பார்வையையும் பெற்றார்.
இந்த நிலையில் சங்கிலி நாச்சியாரை சுந்தரர் திருமணம் செய்தது பற்றிய தகவல் அறிந்த பரவை நாச்சியார், சுந்தரரை தன்னுடைய மாளிகைக்குள் விட மறுத்தார். சிவனடியார்கள் பலரும் சுந்தரருக்காக சமாதானம் பேசிப் பார்த்தும் பலனில்லை. மனம் நொந்து போன சுந்தரர், நேராக திருவாரூர் ஆலயம் சென்று தியாகேசப் பெருமானை சரணடைந்தார். தனக்காக பரவையாரிடம் தூது செல்லும்படி வேண்டினார். அதன்படியே திருவாரூர் ஆலய சிவாச்சாரியார் வேடத்தில் சென்று, பரவையாரிடம் சமாதானம் பேசினார் சிவபெருமான். அதற்கும் பரவையார் மனம் இரங்கவில்லை.
தூது சென்ற சிவபெருமானுக்காக இரவு நேரத்திலும் காத்துக் கொண்டிருந்தார் சுந்தரர். அங்குவந்த ஈசன், “சுந்தரா! பரவையிடம் சமாதானம் பேசிப் பார்த்தேன். அவள் உன்னை ஏற்க மறுக்கிறாள்” என்றார்.
அதைக் கேட்ட சுந்தரர், “ஐயனே! தேவர்களைக் காக்க நஞ்சு உண்டீர்; மார்க்கண்டேயனை எமனிடம் இருந்து காத்தருளினீர். அப்படிப்பட்ட நீங்கள் உங்களை நம்பிய என்னை கைவிடலாமா? பரவையாரிடம் நான் மீண்டும் சேர நீங்கள்தான் வழி செய்ய வேண்டும்' எனக்கூறி ஈசனின் திருப்பாதங்களில் பணிந்தார்.
அவரது பக்திக்கு இரங்கிய ஈசன், “சுந்தரா! உனக்காக இந்த நள்ளிரவிலும் மீண்டும் நாம் தூது செல்வோம். வருந்த வேண்டாம்” எனக்கூறினார். பின்னர் தன் சுய உருவத்துடனேயே பூத கணங்கள், தேவர்கள், முனிவர்கள் சூழ வீதியிலேயே நடந்து வந்து கொண்டிருந்தார். பரவை நாச்சியாரின் மாளிகை முன்புறம் திருக்கயிலைப் போல காட்சியளித்தது. சிவபெருமானைக் கண்ட பரவை நாச்சியார் ஓடி வந்து அவரது காலில் விழுந்து வணங்கி நின்றார்.
ஈசன் பரவையாரிடம், “பரவையே! தோழன் என்ற உரிமையோடு சுந்தரன் எம்மை அனுப்பிய காரணத்தினால், மீண்டும் உன் முன் வந்தேன். உன்னுடைய இல்லத்திற்கு சுந்தரன் மீண்டும் வருதல் வேண்டும். அதுவே எம்முடைய விருப்பம்” என்றார்.
“பெருமானே! தங்கள் திருவடி நோக திருவாரூர் வீதியில் நடந்து வந்ததைக் கண்ட பிறகும் நான் இசையாது இருப்பேனோ! நாங்கள் கூடி வாழ்கிறோம்” என்று கூறினார், பரவை நாச்சியார். அவருக்கு அருளாசி கூறிய சிவபெருமான், சுந்தரரிடம் சென்று, “சுந்தரா! நீ உடனே உன் பரவையிடம் செல்வாயாக” என்று கூறிவிட்டு கருவறைக்குள் சென்று மறைந்தார். முன்புபோல் சுந்தரரும் பரவையாரும் மீண்டும் ஒன்றிணைந்து சிவத்தொண்டுகள் புரியலாயினர்.
இப்படி சுந்தரருக்காக நள்ளிரவில் தம் திருப்பாதம் நோக, திருவாரூர் வீதிகளில் தூது சென்ற திருவாரூர் வீதிகளில் தான், திருவாரூர் ஆழித் தேரோட்டம் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும். ஆழித்தேர் என்று சொல்லப்படும் திருவாரூர் தேர் 96 அடி உயரமும், 31 அடி அகலமும், 350 டன் எடையும் கொண்டது. உடலில் தோன்றும் தோல் நோய், மரு போன்றவை மறைய ஆழித் தேரோட்டத்தின் போது மிளகு, உப்பு, பச்சரிசி, மஞ்சள் பொடி தூவி வழிபடுவார்கள். இப்படிச் செய்வதால் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தேவாசிரியன் மண்டபம்
திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தின் வெளிப் பிரகாரமான, பெரிய பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. இது ‘தேவாசிரியன் மண்டபம்’ என அழைக்கப்படுகிறது. தியாகேசரை வணங்க வந்து கூடும் தேவாதி தேவர்கள், தமக்குரிய நேரம் வரும் வரை காத்திருக்கும் இடம் என்பதால் இந்தப் பெயர் வந்தது.
செல்வத் தியாகர் ஆழித்தேர் விழா முடிந்து இந்த மண்டபத்தில் வந்துதான் மகாபிஷேகம் கண்டு, செங்கோல் செலுத்துவார். எனவே இந்த மண்டபத்தை ‘ராஜதானி மண்டபம்’ என்றும் அழைக்கிறார்கள். அந்த மண்டபத்தில் சிவனடியார்கள் வீற்றிருப்பார்கள்.
திருவாரூர் ஆலய தரிசனம் செய்ய வருபவர்கள், இந்த தேவாசிரியன் மண்டபத்தை வலம் வந்து அங்கிருக்கும் அடியவர்களைப் பணிந்து வணங்கி அதன் பின்னரே, மூலவர் திருமூலட்டான நாதரையும், தியாகேசப் பெருமானையும் வழிபடுவது வழக்கம். சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் இருந்த காலங்களில் எல்லாம் தேவாசிரியன் மண்டபத்தை வலம் வந்து, அங்கிருக்கும் அடியவர்களை பணிந்து பின்னர் தம் தோழரான திருவாரூர் ஈசனை பணிவார்.
அமைவிடம்
கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 37 கிலோமீட்டர் தூரத்தில் திருவாரூர் அமைந்துள்ளது.

கருவின் வளர்ச்சிக்கு அருள் புரியும் கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஒரு மனிதனுடைய வாழ்க்கை என்பது எங்கு முழுமை பெறுகிறது? கல்வி கற்பதிலா?, செல்வம் சேர்ப் பதிலா?, அல்லது திருமணம் செய்து கொண்டு மணவாழ்க்கையை நடத்துவதிலா?. இவை எதிலுமே இல்லை. ஒருவர் தன்னுடைய மண வாழ்க்கையை மேற்கொண்டு அதன் பயனாக குழந்தைச் செல்வத்தைப் பெறும் போதுதான், அவரது வாழ்க்கை முழுமை அடைகிறது.
எவ்வளவு பணம் இருந்தால் என்ன.. ஒரு மழலை விளையாடாத வீடு நிச்சயமாக வெறுமையாகத்தான் இருக்கும். குழந்தைச் செல்வம் என்பது அற்புதமான வரம். இறைவன் அருளும் பாக்கியம். ஆணும் பெண்ணும் திருமணமாகி சந்தான பாக்கியம் பெறும்போது, தாய் தந்தை எனும் பதவியைப் பெற்று தங்கள் வாழ்க்கையின் முக்கியமான இடத்தை வந்தடைகின்றனர்.
சில பெண்களுக்கு சில காரணங்களால் தாய்மை அடையும் வாய்ப்பு தள்ளிப் போகிறது. பல சிகிச்சைகள் எடுத்தும் பலன் அடையாமல் ஏங்குவோரும் உண்டு. அனைத்து உயிருக்கும் அன்னையாய் இருக்கும் அம்பிகையின் அருளாசி மூலம் அந்த குழந்தை பாக்கியத்தை வழங்கும் அற்புதமான திருத்தலங்கள் தமிழகத்தில் உள்ளது. அப்படிப்பட்ட திருத்தலங்களில் முதன்மையானது அன்னை அகிலாண்டேஸ்வரி அருளாட்சி செய்யும் கருவளர்ச்சேரி ஆகும்.
சகல உயிர்களுக்கும் அன்னையான அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி, தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள ‘கருவளர்சேரி’ என்ற ஊரில் ‘அகிலாண்டேஸ்வரி’ தாயாக அருள்பாலிக்கிறாள். இங்கு இறைவன் அகஸ்தீஸ்வரர் என்ற பெயரில் அருள் வழங்குகிறார்.
கருவளர்சேரி திருத்தலத்துக்கு வந்து அம்பிகையை வழிபடுவோருக்கு உடல்ரீதியான தோஷங்கள் விலகும். மேலும் குழந்தை வரம் கிடைக்கும். மேலும் கர்ப்பம் தரித்த பெண்களும் இங்கு வந்து வழிபடுவதால், சிக்கலற்ற பிரசவம் நடக்கும். அதனாலேயே இந்த தேவியை ‘கருவளர் நாயகி’ என்ற திருப்பெயரிலும் அழைக்கின்றனர்.
திருமணமாகி வெகுநாட்களாகியும் குழந்தையில்லாமல் ஏங்கும் பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அன்னையை மனமுருக வேண்டி, படி பூஜை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். வழிபாட்டுக்குப் பின் சன்னிதியில் பூஜை செய்த மஞ்சள் கிழங்கினை வாங்கி வந்து, தொடர்ந்து பூஜித்து வர வேண்டும். இப்படிச் செய்தால், தடைகளை எல்லாம் நீக்கி, கருவளர் நாயகி மகப்பேற்றை அருள்வாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கர்ப்பிணிகளும் இந்த பூஜையை செய்து பயன்பெறலாம். பூஜை செய்து வழிபட்டுச் சென்ற பெண்கள் சில மாதங்களிலேயே கருவுற்று, மீண்டும் இக்கோவிலுக்கு வந்து தொட்டில், வளையல் ஆகியவற்றை வேண்டுதல் பொருளாக சமர்ப்பிப்பதையும் காணமுடிகிறது.
கருவின் வளர்ச்சிக்கு அருள் புரியும் கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் மருதாநல்லூர் கிராமத்தை அடுத்து கருவளர்ச்சேரி உள்ளது. இத்தலத்து அம்மனை பிரார்த்தித்துக் கொள்ள புத்திர பாக்கியம் கிடைக்கும். இங்கு தரப்படும் மஞ்சள் பிரசாதம் சக்தி வாய்ந்தது. இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
கும்பகோணம் - வலங்கைமான் பாதையில் மருதா நல்லூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி.
அன்னையை வணங்குவோம்.. அழகு மழலை ஒன்றை பெற்று வாழ்வில் குறைகள் நீங்கி வாழ்வோம்.

பழனி மலையில் பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் முருகப்பெருமான் தனியாக இல்லாமல், வள்ளி-தெய்வானை சமேத குடும்பஸ்தராக அருள்புரிகிறார்.
முருகப்பெருமானுக்குரிய ஆலயங்களில் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் என்னும் செந்தூர், திருஆவினன்குடி என்னும் பழனி, திருவேரகம் என்னும் சுவாமிமலை, திருத்தணிகை, பழ முதிர்ச்சோலை ஆகியன ஆறுபடை வீடுகள் முக்கியமானவை.
450 அடி உயரமும் 660 படிக்கட்டும் கொண்ட பழனி மலை மீது, ஞான தண்டம் தாங்கி குழந்தையாகக் காட்சி தரும் முருகனைக் காண கண்கள் ஆயிரம் போதாது. போகர் என்ற சித்தர் ஒன்பது வகை மூலிகைகளை (நவபாஷாணம்) சேர்த்து உருவாக்கிய அற்புதச் சிலை இங்கு இருக்கிறது. போகரின் ஜீவ சமாதி, மலைக் கோவிலின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. அதைப் போல மலையடிவாரத்தில் புலிப்பாணி சித்தரின் ஜீவ சமாதி உள்ளது.
மலைக்கு அருகே அடிவாரத்தில் அமைந்துள்ள திருத்தலம்தான், திருஆவினன்குடி. குழந்தை வேலாயுத சாமியாக, இங்கும் முருகப்பெருமான் மேற்கு நோக்கி மயிலில் அமர்ந்தவாறு வீற்றிருக்கிறார். லட்சுமியும், காமதேனுவும், பூமா தேவியும், சூரியனும், அக்னியும் வழிபட்ட தலம் இது. அருணகிரிக்கு ஜபமாலை தந்த பெருமைக்குரியது இத்தலம்.
பழனி மலை மீது அருளும் ஞான தண்டாயுதபாணியை தரிசனம் செய்யும் பக்தர்கள் அனைவரும், மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி தலத்திற்கு வந்து இறைவனை வழிபடுகிறார்களா என்பது சந்தேகம் தான்.
இந்த இரண்டு ஆலயங்களையும் விட, பழனி நகரில் இருக்கும் மற்றொரு குமரன் கோவிலும் பழமையும், தொன்மையும் வாய்ந்தது. இந்த ஆலயத்தையும் சேர்த்து மூன்று கோவில்களையும் வணங்கினால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
பழனி மலையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் நகரின் மையத்தில் இருக்கும் இந்த ஆலயத்தை, ‘பெரியநாயகி அம்மன்’ ஆலயம் என்றால்தான் அனைவருக்கும் தெரியும். மற்ற இரு கோவில்களை விட இந்த ஆலயத்திற்கு தனிச் சிறப்பு ஒன்று உள்ளது.
இங்கே முருகப்பெருமான் தனியாக இல்லாமல், வள்ளி-தெய்வானை சமேத குடும்பஸ்தராக அருள்புரி கிறார். அதுமட்டுமல்ல, இவருக்கு இடதுபுறம் தந்தை கயிலாசநாதரும், வலதுபுறம் தாயார் பெரியநாயகியும் தனித்தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார்கள். எனவே இது ஒரு சோமாஸ்கந்த மூர்த்த தலம் என்பது இக்கோவிலின் சிறப்பாகும்.
பெரும்பான்மையான சிவாலயங்களில் ‘சோமாஸ்கந்தர்’ என்ற மூர்த்தம் இருக்கும். அதில் சிவன் சக்தி இருவருக்கும் நடுவில் குழந்தையாக குமரன் வீற்றிருப்பார். ஆனால் இங்கே இரண்டு தேவியர்கள் புடைசூழ, அம்மை அப்பன் இருவரும் இருபுறமும் வீற்றிருக்க, நடுநாயகமாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இங்கு வந்து வழிபட்டால், குடும்ப பிரச்சினைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
வண்ணங்களால் மிளிரும் தெய்வீக சுதைச் சிற்பங்கள் அணிவகுத்து நிற்க, கம்பீரமாய் காட்சி தருகிறது தோரண வாயில். அதை ஒட்டி நவரங்க மண்டபம் என்ற நாயக்கர் கால கருங்கல் மண்டபம் உள்ளது. இங்கே வடக்கு பார்த்த சன்னிதியில் பத்ரகாளி வீற்றிருக்கிறாள். இந்த அன்னையை வழிபட்டால் கண் திருஷ்டி அகலும், கிரக தோஷம் விலகும், மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். இங்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு கால வேளைகளில் பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த மண்டபத்தில் உள்ள கற்துதூண்கள் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. காளி சன்னிதிக்கு எதிரில் நிற்கும் தூணில், நடராஜர் சிலை தெற்கு நோக்கி இருக்கிறது. அதன் கீழ்ப்புறத் தூணில் முருகன் கல்யாண மாப்பிள்ளை கோலத்துடன் நிற்கிறார். அதன் எதிரே உள்ள தூணில் தண்டம் ஏந்தி ஆண்டிக் கோலத்தில் அருள்கிறார்.
கோவிலின் உள்ளே வடபுறத்தில் தல விருட்சமான கடம்ப மரம் அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. அதனருகில் விநாயகர் வீற்றிருக் கிறார். அவரை வணங்கி விட்டு நகர்ந்தால் பெரிய மண்டபத்தில் தனித் தனிச் சன்னிதிகள் காணப்படுகின்றன. ஒரு சன்னிதியில் கயிலாசநாதர் லிங்கத் திரு மேனியுடன் காட்சி தருகிறார். அடுத்த சன்னிதியின் வலப்புறம் வள்ளியும் இடப்புறம் தெய்வானையும் இருக்க முருகப்பெருமான் அருள்கிறார்.
அதற்கு அடுத்த சன்னிதியில் அன்னை பெரியநாயகி நின்றபடி அருள்புரிகிறாள். தாய் தந்தைக்கு நடுவில் இருப்பதால் சோமாஸ்கந்தராக, கந்தன் அருளாட்சி செய்கிறார்.
சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதிகளின் நுழைவு வாசல்களில் இருபுறமும் துவாரபாலகர்களுக்குப் பதிலாக படமெடுத்து ஆடும் ஐந்துதலை நாக சிற்பங்கள் உள்ளன. கோவிலின் தெற்குப் பகுதியில் தனி மண்டபத்தில் முத்துக்குமாரசாமி இருக்கிறார். இவர்தான் உற்சவ மூர்த்தி.
சோமாஸ்கந்தர் சன்னிதி எதிரே மயிலும், கொடிமரமும் பலிபீடமும் அமைந்துள்ளது. பெரிய நாயகி அம்மன் சன்னிதிக்கு எதிரில் நீர் ஊற்றி நிறைந்த கேணி இருக்கிறது. அதன் மீது பீடம் அமைக்கப்பட்டு நவக்கிரகங்கள் வீற்றிருக்கின்றன. இந்த அமைப்பு எல்லா தோஷங்களையும் போக்கும் என்கிறார்கள். பெருமண்டபத்தில் தெற்கு பார்த்த சன்னிதியில் நடராசர் - சிவகாமி ஐம்பொன் சிலைகள் உள்ளன.
கருங்கல்லால் அமைக்கப்பட்ட சுற்றுச் சுவருடன் கூடிய வெளிப்பிரகாரத்தை வலம் வரும்போது, வடக்கில் துர்க்கை, சண்டிகேசர் சன்னிதிகளும், காலபைர வரும் இருக்கிறார்கள்.
சித்ரா பவுர்ணமி தினத்தன்று இங்கிருந்து 108 பால்குடங்கள் எடுத்து திருஆவினன்குடி கோவிலுக்குச் செல்வார்கள். வெள்ளிரதம் ஏறி முத்துக்குமாரசாமி நகர்வலம் வருவார். வைகாசி விசாகம், தை மாத வசந்த உற்சவம், பங்குனி உத்திரம் என உற்சவங்கள் இங்கு வரிசையாக நடைபெறுகின்றன.
இந்த ஆலயத்திற்கு ‘ஆதி திருஆவினன்குடி’ என்ற பெயரும் உண்டு. ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
தனித்திருந்து அருளும் பழனி ஆண்டவரைத் தரிசிக்கச் செல்பவர்கள், குடும்பத்துடன் இருக்கும் சோமாஸ்கந்தரையும் வழிபட்டு வரலாமே.

மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு அம்சங்களால் சிறப்புற்று விளங்கும் இவ்வாலயத்தில், பிரம்மேஸ்வரரை வழிபடுவோரின் தலையெழுத்து மங்களகரமாக மாற்றப்பட்டு, திருப்பங்கள் விரைவில் ஏற்படும் என்பது ஐதீகம்.
படைப்புக் காலத்தின் தொடக்கத்தில் சிவபெருமானைப் போல், பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால், ஈசனைப்போல் தானும் ஐந்தொழில்களைச் செய்ய வல்லவன் என்ற தலைக்கணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. இச்செருக்கினை அடக்க எண்ணிய ஈசன், பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளி எடுத்தார். இதனால் பிரம்மன், நான்முகன் ஆனார். அத்துடன் படைக்கும் ஆற்றலையும் நினைவிழக்கச் செய்தார். தலை கொய்யப்பட்டதை எண்ணி அவமானமடைந்த பிரம்மன், படைப்பாற்றலும் பறிபோனதால் துவண்டுபோனார்.
இந்தச் சூழ்நிலையில் தன்னுடைய தந்தை பிரம்மாவைப் பார்த்த நாரதர், பூலோகம் சென்று சிவப் பிரதிஷ்டை செய்யுமாறு யோசனை கூறினார். அதன்படி பூலோகம் வந்த நான்முகன், துங்கபத்திரா, குண்டூர், சென்னை (பெரம்பூர், அயனாவரம், தேனம்பாக்கம்), விழுப்புரம், திருப்பட்டூர், அம்பல், அம்பாசமுத்திரம், ஈரோடு, புனலூர் உள்பட 14-க்கும் மேற்பட்ட தலங்களில் லிங்கப் பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார்.
பல்வேறு தலங்களில் லிங்கப் பிரதிஷ்டை செய்த பிரம்மா, வேலூர்பாளையம் வந்தபோது, அங்கு நிலவிய மென்மையான சூழலால் ஈர்க்கப்பட்டார். பின் அங்கே தவத்தில் ஆழ்ந்தார். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிரம்மா தவம் புரிந்ததால், அந்த கனல் கயிலையை எட்டியது. நெஞ்சம் நெகிழ்ந்த சிவபெருமான், பிரம்மாவுக்கு தாம் இட்ட சாபத்தைப் போக்க முடிவு செய்தார். உடனே உமையவளுடன் தோன்றி, “எம்மீதுள்ள பக்தியின் மிகுதியால் பூஜித்துவந்த உமது மெய்யன்புக்கு மகிழ்ந்தோம். வேண்டுவது என்ன?” என்று பிரம்மனிடம் வினவினார்.
அதற்கு நான்முகன், “ஐயனே! அடியேன் அறியாது கொண்ட அகந்தையைப் போக்கி, மன்னித்தருள வேண்டும். தங்கள் மீது என்றும் மாறாத நிறைவான பக்தியும், அன்பும் நீடித்து நிலைத்திருக்க அருள வேண்டும்” என்று கேட்டார்.
அதனையேற்று, மீண்டும் படைப்பாற்றலை வழங்கிய எம்பெருமான், “நீவிர் நற்கதியை அடைந்த இத்தலத்தில், எம்மைப் பணிந்தபின், உம்மை நேர் நின்று பணிந்திடுவோருக்கு வினைவிதியை மாற்றி, அவர்கள் வாழ்க்கையில் மேன்மையடைய அருள்புரிவாய். தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக. விதியிருப்பின் விதிகூட்டி அருள்க!” என்று பிரம்மாவுக்கு உரைத்தார்.
அப்போது பார்வதி தேவி, குருவாய் வீற்றிருந்து பிரம்மாவுக்கு உபதேசம் செய்தருளினார். ஈசன்-ஈஸ்வரியின் பேரன்புக்குப் பாத்திரமான பிரம்மாவுக்கு சாபம் நீங்கி, விமோசனம் பிறந்தது. உடனே சத்யலோகத்துக்குச் சென்ற நான்முகன், மறுபடியும் படைப்பாற்றலைப் பெற்று தம்முடைய பணியைத் தொடங்கினார் என்பது தல வரலாறு.
காஞ்சீபுரத்தைத் தலைநகராகக்கொண்டு, தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த பல்லவர்கள், பாலாறு, கூவம் நதிக்கரைகளில் சிவாலயங்களை நிர்மாணிக்க விருப்பம் கொண்டனர். அப்போது மூன்றாம் நந்திவர்மப் பல்லவன் அரசவையில் பிரம்மஸ்ரீராஜன் என்ற சிவனடியார் அமைச்சராக இருந்தார். அவர் தம் ஞானத்தின் மூலம், பிரம்மாவின் சாபம் நீங்கிய தலம் வேலூர்பாளையம் என்பதை உணர்ந்து, இவ்விடத்தில் ஆலயம் நிர்மாணிக்குமாறு அரசனிடம் கூறினார்.
அதன்படியே அங்கு ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. பிரம்மாவுக்கு சிவபெருமான் அருள் புரிந்ததால், இத்தல இறைவன் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். அம்பாளின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை ஆகும்.
சுமார் 1,166 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வாலயம் 27 செப்பேடுகளைக் கொண்டுள்ளது. அதில் ஒரு செப்பேடு, காஞ்சீபுரம் அருகே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகளவில் புகழ்பெற்று விளங்கிய தட்சசீலம் பல்கலைக்கழகம் செயல்பட்டு வந்ததைக் குறிப்பிடுகிறது. அப்போதிருந்த கோட்டை தூர்ந்து, மண்மேடாகிப் போனது.
பொதுவாக, சிவலிங்கத்தின் அடிப்பகுதி பிரம்மாவாகவும் (பூமிக்குள் இருக்கும்), நடுப்பகுதி விஷ்ணுவாகவும் (ஆவுடையார்), மேல்பகுதி ருத்ரமாகவும் விளங்கிவருகிறது. இது பிரம்மாவின் சாபம் போக்கிய தலமென்பதால், இங்கு ருத்ரபாகம் மட்டுமே உள்ளது. மேலும் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவிமடுத்து, அவர்களுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதுபோல, இந்த சிவலிங்கம் சிறிது சாய்ந்த நிலையிலேயே உள்ளது.
மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு அம்சங்களால் சிறப்புற்று விளங்கும் இவ்வாலயத்தில், பிரம்மேஸ்வரரை வழிபடுவோரின் தலையெழுத்து மங்களகரமாக மாற்றப்பட்டு, திருப்பங்கள் விரைவில் ஏற்படும் என்பது ஐதீகம். மேலும், கர்மவினைத் தாக்கங்கள் குறையும், புத்திக்கூர்மை ஏற்படும், மனதில் தெளிவு பிறக்கும், உலக வாழ்வுக்குத் தேவையான பொன், பொருள், செல்வம் என அனைத்துத் தேவைகளையும் பெற வழிவகை உண்டாகிறது என்பது நம்பிக்கை.
இவைதவிர, விரும்பும் வேலை கிடைக்கவும், கால்நடைச் செல்வங்கள் ஆரோக்கியம் பெறவும் வழிபட்டு வருகின்றனர். திருமணத்தடை நீங்க, பிரிந்த தம்பதிகள் ஒன்றுசேர, தொழில், வணிக விருத்திபெற வழிபட்டுப் பயன் பெறுகிறார்கள்.
இந்த பிரம்ம வித்யாம்பிகை உடனுறை பிரம்மேஸ்வரர் ஆலயம் தினமும் காலை 7 மணிமுதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். விஷேச நாளில் காலை 6மணி முதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும்.
மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பவுர்ணமி, ஆருத்ரா தரிசனம் ஆகியவை இவ்வாலய முக்கிய விழாக்கள் ஆகும்.
அமைவிடம்
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் கனகம்மாசத்திரம் செல்லும் சாலையிலும், சென்னை- திருத்தணி ரெயில் மார்க்கத்தில் திருவாலங்காடு ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவிலும், அரக்கோணம் பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலும், வேலூர் பாளையம் உள்ளது.

திருநெல்வேலி கோபால சமுத்திரம் கிராமத்தின் எல்லையில் சிறப்புமிக்க பசுங்கிளி சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ‘சமுத்திரம்’ என்ற பெயரில், பல ஊர்கள் சிறப்புடன் விளங்குகின்றன. அம்பாசமுத்திரம், ரவண சமுத்திரம், வீரா சமுத்திரம், ரெங்க சமுத்திரம், தளபதி சமுத்திரம், வால சமுத்திரம், கோபால சமுத்திரம், வடலை சமுத்திரம் (பத்மனேரி), ரத்னாராக சமுத்திரம் (திருச்செந்தூர்) ஆகிய இடங்கள் நவசமுத்திரம் என போற்றப்படுகிறது.
இதில் கோபால சமுத்திரம் சிறப்பு மிக்க தாமிரபரணி கரையில் உள்ள கிராமமாகும். இக்கிராமத்தின் எல்லையில் தான் பச்சையாறு வந்து சேருகிறது. சிறப்புமிக்க இந்த ஊரில்தான் பசுங்கிளி சாஸ்தா அருள்புரிகிறார்.
கோவில் வரலாறு :
பல ஆண்டுகளுக்கு முன்பே இவ்விடம் பசுமையின் புகலிடமாய் காட்சியளித்தது. இங்கு பசுங்கிளிகள் கூடி கும்மாளமிட்டன. இங்குதான் சாஸ்தா அமர்ந்திருக்கிறார். இவருக்கு முன்பாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விளைநிலங்கள்தான். அதற்கெல்லாம் சாஸ்தா தான் பாதுகாவலர். அங்குள்ள ஒரு தோட்டத்துக்கு சொந்தக்காரர் பட்டாணி. விளை நிலம் மீது மிகுந்த பற்று கொண்டவர். எனவே நல்ல உரங்கள் இட்டு கரும்பு பயிரை செழிக்க வளர்த்திருந்தார்.
இவர் ஓய்வுக்காக வீட்டுக்கு செல்லும் வேளையில் பசு ஒன்று வருவதும், கரும்புகளை மேய்வதும் வாடிக்கையாக இருந்தது. ஒரு நாள் அந்த பசுவை கண்ட பட்டாணி, அதை கொல்ல அரிவாளோடு துரத்தினார். பசுவானது, ஓடிப்போய் சாஸ்தா சன்னிதியின் முன்பு அடைக்கலமானது. அங்கும் துரத்தி வந்து பசுவை வெட்ட முயன்ற பட்டாணியின் முன்பு, சாஸ்தா தோன்றினார். பசுவை வெட்ட வேண்டாம். அது வாய் இல்லாத ஜீவன் என்று சாஸ்தா கூறியதைக் கேட்கும் மனநிலையில் பட்டாணி இல்லை.
தான் போற்றி வளர்ந்த பயிரை தின்ற பசுவை கொன்றே தீருவேன் என்று பசுவை வெட்ட முயன்றார். அப்போது சாஸ்தா, “நீ பசுவை வெட்ட அனுமதிக்க மாட்டேன். வேண்டுமானால் என்னை வெட்டிக்கொள்” என்றார் சாஸ்தா. ஆத்திரம் கண்ணை மறைத்ததால், சாஸ்தாவின் இரு கரங்களையும் பட்டாணி வெட்டி விட்டார். ரத்தத்தை பார்த்ததும் சுயநினைவுக்கு வந்த பட்டாணி, தான் செய்த தவறை உணர்ந்து வருந்தினார். அப்படியே மயங்கி சரிந்தார் பட்டாணி. அதில் அவரது உயிர் பிரிந்தது.
இந்த நிலையில் பட்டாணியின் மனைவி, பிள்ளைகள் ஓடிவந்தனர். அவரது உடலைப் பார்த்து கதறினர். அவரது உயிரை மீட்டுத் தரும்படி சாஸ்தாவிடம் வேண்டினர்.
கருணை நிறைந்த சாஸ்தா, “பட்டாணிக்கு முக்தி காலம் வந்து விட்டது. அவனை எனது தென் பாகத்தில் நான் அமரச் செய்கிறேன். என்னை வணங்க வரும் பக்தர்கள் அனைவரும் அவனையும் வணங்குவார்கள்” என்றார். அதன்படியே சாஸ்தாவின் தென்பாகத்தில் பட்டாணிக்கு பீடம் அமைக்கப்பட்டது. பின்னர் கல் மண்டபம் கட்டி, பரிவார தெய்வங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.
இந்த ஆலயத்தில் அருளும் பசுங்கிளி சாஸ்தா வேண்டும் வரம் அருளும் தெய்வமாக திகழ்கிறார். குழந்தை வரம் வேண்டுவோர், நாள்பட்ட நோயால் அவதிப்படுபவர்கள், அரசு வேலை கிடைக்க காத்திருப்பவர்கள், திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து வணங்கிச் சென்றால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
தற்போதும் இத்தல சாஸ்தா கரம் இல்லாமல் தான் காட்சி தருகிறார். ஒரு முறை இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், சாஸ்தா கரம் இல்லாமல் இருக்கிறாரே என்று நினைத்து, புதிய சாஸ்தா சிலையை செய்து அதை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். புதிய சிலை செய்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தார் சிற்பி. அவர் கோபாலசமுத்திரம் கிராம எல்லையில் வரும் போது திடீரென்று நிலை தடுமாறினார். அவருக்கு கண் பார்வை பறிபோனது போல் இருந்தது. ஊர் மக்கள் அதிர்ந்து போனார்கள்.
பின்னர் “சாஸ்தாவே.. நீங்கள் கையில்லாமலேயே இருங்கள். இந்த சிலையை அங்கு பிரதிஷ்டை செய்ய மாட்டோம். தயவு செய்து சிற்பிக்கு கண் பார்வை தாருங்கள்” என்று வேண்டினர். அதன்பிறகே அவருக்கு கண்பார்வை வந்தது. புதியதாக செய்த சிலையை சிவன் கோவிலில் வைத்துவிட்டனர்.
இந்தத் திருக்கோவில் பாண்டிய மன்னரால் எழுப்பப்பட்டது என்பதற்கு சான்றாக, சாஸ்தா சன்னிதி மேல்தளத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆலயம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் 15 கிலோ மீட்டர் தொலைவில் தருவை ஆற்றுபாலம் இருக்கிறது. அங்கிருந்து வலது புறம் சென்றால் கோபாலசமுத்திரத்தில் உள்ள பசுங்கிளி சாஸ்தாவை தாமிரபரணி ஆற்றங்கரையில் தரிசனம் செய்யலாம்.

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழ்ந்த இடம், ராமநதி அணை பகுதி. இந்த அணைக்கு மேற்கே மலையில் ராமநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது தலைமலை ஐய்யனார் கோவில்.
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழ்ந்த இடம், ராமநதி அணை பகுதி. இந்த அணைக்கு மேற்கே மலையில் ராமநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது தலைமலை ஐய்யனார் கோவில். இவரை அந்த பகுதி மக்கள் ‘தலைமலை அய்யன்' என்றும் அழைப்பார்கள். இந்த கோவிலின் வரலாற்றை பார்ப்போம்.
இந்தியாவில் பல மலைகள் இருந்தாலும் இமய மலையும், பொதிகை மலையும் தான் தலைசிறந்த, புகழ்பெற்ற மலைகளாகும். சிவன் - பார்வதி திருமணத்திற்கு அனைத்து முனிவர்களும், ஞானிகளும் இமயமலைக்கு வந்ததால், வடக்கே தாழ்ந்து தெற்கே உயர்ந்தது. இதை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு செல்லுமாறு சிவபெருமான் கூறினார். இதை ஏற்று பொதிகை மலைக்கு வந்த அகத்தியர், இங்கு தலைமலை அய்யனாரையும், ஆதிசங்கரியான அம்பாளையும், பிரம்ம சக்தியையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அவருடன் தேரையர் சித்தர், கோரக்கர், மச்சமுனி, கலைக்கோட்டு மாமுனி ஆகியோரும் அங்கு தங்கி இருந்து தலைமலை அய்யனாரை வழிபட்டு வந்தனர்.
இந்த நிலையில் சீதையை ராவணன் தூக்கிச் சென்றதை அடுத்த, காட்டு வழியே வந்த ராமனும், லட்சுமணனும் அகத்தியரை சந்தித்தனர். அப்போது அகத்தியர், இத்தல அய்யனாரை ராமர் வழிபடும் முன், அவர் குளிப்பதற்காக ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதி தான் ராமநதியாகும். அந்த ராமநதியில் குளித்து விட்டு ராமரும், லட்சுமணரும் தலைமலை அய்யானாரை வழிபட்டனர். அப்போது அகத்தியர், அம்பாளின் சக்தியை திரட்டி, ராவணனை வெல்வதற்காக ஒரு அம்பு தயாரித்து கொடுத்து, “இலங்கைக்கு சென்று ராவணனை வென்று சீதையை மீட்டு வருவாய்” என்று ஆசீர்வாதம் செய்தார்.
ராமநதியில் புனிதநீராடி தலைமலை அய்யனாரை மனதார வேண்டினால், அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தலைமலை அய்யனார் கோவில் அமைந்த வனப் பகுதிக்கு, ஒரு நிறைமாத கர்ப்பிணி விறகு பொறுக்க வந்தாள். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. உடனே அந்தப் பெண், தலைமலை அய்யனார் கோவில் கருவறைக்குள் மழைக்காக ஒதுங்கினாள். அதே நேரம் அவளுக்கு பிரசவ வலியும் ஏற்பட்டுவிட்டது. ஒரு ஆண் கருவறைக்குள் இருப்பது, கர்ப்பிணிக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் என்று எண்ணிய அய்யனார், கருவறையை விட்டு வெளியேறினார்.
அவர் சென்ற சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பெண்ணின் ரத்தவாடைக்கு, காட்டில் இருந்த கடுவாய் புலி அங்கு வந்தது. தாயையும், குழந்தையையும் அடித்து தின்ன முற்பட்டது. அப்போது அந்தப் பெண், ‘அய்யனாரே’ என்று சத்தம் போட்டாள். உடனே அய்யனார், கடுவாய் புலியை கல்லாக மாறும்படி சபித்தார். அந்த புலியின் கற்சிலையை இன்றும் ஆலயத்தில் காணலாம்.
அதே போல் கர்ப்பிணிக்கு இடம் கொடுத்த தலைமலை அய்யனார், கோவில் கருவறைக்கு வெளியே வெட்டவெளியில் தான் உள்ளார். அவர் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். அய்யனாருக்கும், ஆதி சிவசங்கரிக்கும், பிரம்ம சக்திக்கும் வெட்டவெளியில்தான் பூஜை நடக்கிறது. ராமநதி அணைப்பகுதியில் மழை பெய்யவில்லை என்றால், அந்த பகுதி மக்கள் தலைமலை அய்யனார் கோவிலுக்கு சென்று வருண ஜெபம் செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். இதனால் உடனடியாக மழை பெய்யும் என்பது அவர்களின் நம்பிக்கை.
தலைமலை சாஸ்தா அருகில் வனபேச்சி அம்மனுக்கும், கருப்பசாமிக்கும் தனியாக கோவில் உள்ளது. ராமநதியில் குளித்துவிட்டு இங்குள்ள கருப்பசாமியை 9 கடைசி வெள்ளிக்கிழமை விளக்கு ஏற்றி வழிபட்டால், நினைத்தது நிறைவேறும். இந்த அய்யனாரை வழிபட்டு வேண்டுதல் நிறைவேறிய பின்னர், பக்தர்கள் அவருக்கு மணி செய்து கட்டுகிறார்கள். இதனால் கோவில் மரம், மண்டபம் முழுவதும் மணிகளாகவே காட்சி அளிக்கிறது. இந்த கோவில் அருகில் தோரணமலை முருகன் கோவில், சூட்சமுடையார் சாஸ்தா கோவில், வில்வவனநாத சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களும் உள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா கடையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் ராமநதி அணை உள்ளது. அணை வரை கார், வேன், ஆட்டோ செல்லும். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து தான் கோவிலுக்கு செல்லவேண்டும். பாவூர்சத்திரத்தில் இருந்து தோரணமலைக்கும், ராமநதி அணைக்கும் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறு நோய்களை நீக்கியருளும் தலமாக, திருக்கூர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மகாதேவர் கோவில் உள்ளது.
ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறு நோய்களை நீக்கியருளும் தலமாக, திருக்கூர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மகாதேவர் கோவில் உள்ளது. திருக்கூர் திருத்தலமானது, கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் இருக்கிறது.
தல வரலாறு :
மாடு மேய்க்கும் பணியைச் செய்து கொண்டிருந்த ஒருவன், அந்த ஊரில் இருந்த நம்பூதிரி ஒருவரின் மாடுகளைத் தினமும் காலையில் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வதும், மேய்ச்சலுக்குப் பின்பு மாலையில் அவைகளைத் திரும்பக் கொண்டு வந்து ஒப்படைப்பதுமாக இருந்தான்.
ஒருநாள், அவன் மேய்ச்சலுக்குக் கொண்டு சென்ற மாடுகளில், ஒரு பசு மட்டும் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தான். அந்தப் பசு அங்கிருந்த மலைப் பகுதிக்கு வழி தவறிச் சென்றிருக்கும் என்று நினைத்த அந்தப் பணியாளன், மலைப்பகுதிக்குச் சென்றான். அந்த மலைப்பகுதியில் ஒரு குகை காணப்பட்டது. அந்த குகைக்குள் சென்ற பணியாளன், அங்கு பசு இருப்பதைக் கண்டு நிம்மதியடைந்தான்.
பசு கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்த பணியாளன், அந்த பசுவை மலையில் இருந்து கீழே அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக, அதன் அருகே சென்றான். அப்போது பசு மாயமாக மறைந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தான். அதே சமயம் பசு நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு பெரிய சிவலிங்கம் இருந்தது. என்ன ஏதென்று அறியாமல் விழிபிதுங்கிய பணியாளன், ஓட்டமும், நடையுமாக மலையை விட்டு இறங்கினான். பின்னர் தான் மலை அடிவாரத்தில் மேய்ச்சலுக்காக விட்டுச் சென்றிருந்த மற்ற மாடுகளை ஓட்டிக்கொண்டு ஊருக்குள் திரும்பிச் சென்றான்.
அங்கு மாடுகளின் உரிமையாளரான நம்பூதிரியிடம், பசு காணாமல் போனதில் இருந்து, மலையின் மேல் பகுதியில் அது மறைந்து, சிவலிங்கம் தோன்றியவரை சொல்லி முடித்தான். அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த நம்பூதிரி, தன்னுடன் சிலரை அழைத்துக் கொண்டு, பணியாளன் குறிப்பிட்ட அந்த மலைப் பகுதிக்குச் சென்றார்.
மாடு மேய்ப்பவன் தெரிவித்தபடி, மலைக்குகையில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். சுயம்பு வடிவில் தோன்றியிருந்த அந்த லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கினர். அப்போது நம் பூதிரியின் மனக்கண்ணில், இங்குள்ள சுயம்பு லிங்கம், அக்னி தேவனால் வணங்கப்பட்டது என்பதும், இந்த லிங்கம், பஞ்சபூதங்களில் அக்னி வடிவிலானது என்பதும் தோன்றி மறைந்தது. இதையடுத்து அந்த அக்னி லிங்கத்திற்கு, நம்பூதிரி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். தொடர்ந்து சில காலங்களில் கோவிலுக்கு தேவையான கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டார். திருப்பணிகளுக்குப் பிறகு இந்த ஆலயம் பொதுமக்கள் அனைவரும் வந்து வழிபட்டுச் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது என்பதாக கோவில் தல வரலாறு சொல்லப்படுகிறது.
ஆலய அமைப்பு :
உயரமான மலைப்பகுதியில், 30 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்டு இயற்கையாக அமைந்த குகைப் பகுதியில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. குகையின் தெற்கு திசையில், கடைசிப் பகுதியில் வடக்கு நோக்கிய கருவறையில், கிழக்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்கம் அமைந்திருக்கிறது. இதனால், இக்கோவிலில் வழிபடும் பக்தர்கள், சிவலிங்கத்தின் வலதுபுறத்தை மட்டுமே பார்வையிட்டு வழிபட முடியும். இங்கிருக்கும் இறைவன் ‘திருக்கூர் மகாதேவர்’ என்றழைக்கப் பெறுகிறார்.
ஆலயத்தின் உட்புறத் தோற்றம்
இறைவன் சன்னிதிக்கு மேற்குச் சுவரில் கணபதி சிலை செதுக்கப்பட்டிருக்கிறது. ஆலயத்தின் வளாகத்தில் சாஸ்தா, அந்திமகாகாளன், பத்திரகாளி, பகவதி, சாமுண்டி உள்ளிட்ட தெய்வங்களும் வழிபாட்டிற்காக இடம் பெற்றிருக்கின்றன. கிழக்குப் பகுதியில் துவாரபாலகர்கள் இருக்கின்றனர். முகப்பு மண்டபத்தில் வைஷ்ணவ சைதன்ய மரபிலான சாலக்கிராமம் இடம் பெற்றிருக்கிறது.
மலைப்பாறையின் மேல் பசுமையாக இருக்கும் குளம் ஒன்றும் அமைந்திருக்கிறது. 1966-ம் ஆண்டில் இருந்து கேரள மாநிலத் தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இக்கோவில் இருந்து வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
வழிபாடுகள் :
சிவராத்திரி, நவராத்திரி, திருவாதிரை, பிரதோஷ நாட்கள் மற்றும் சிவபெருமானுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோவிலில் 16 கற்தூண்களுடன் அமைக்கப்பெற்றிருக்கும் நமஸ்கார மண்டபத்தில் நவராத்திரி விழாவின் போது, சரஸ்வதி வழிபாடு மற்றும் சாக்கியார் கூத்து போன்றவை நடத்தப்பெறுகின்றன.
இக்குகைக் கோவிலில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்கு மாலை நேர பூஜையின் போது, சிவலிங்கத்திற்கு 108 வில்வ இலைகள் சமர்ப்பிக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.
கயிறு வழிபாடு :
சுவாசக் கோளாறு, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய் பாதிப்புடையவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து, கயிறு வழிபாடு செய்து இறைவனை வழிபட்டு நலம் பெறலாம் என்கின்றனர். சுவாச நோய்ப் பாதிப்புடையவர்கள் சிலர் இங்கிருக்கும் இறைவன் உயரத்துக்குச் சமமாகத் தாம்புக்கயிறு வாங்கிக் கொடுத்து வழிபடுகின்றனர். சிலர், அவர்களது எடைக்குச் சமமான தாம்புக்கயிறைத் துலாபாரம் போன்று எடை போட்டு வழங்கி இறைவனை வழிபட்டுத் தங்கள் சுவாச நோய் நீங்க வேண்டிக் கொள்கின்றனர். கயிறு வழிபாட்டில் பெறப்படும் கயிறுகள் அனைத்தும் கோவில் மண்டபத்தில் தொங்கவிடப் படுகின்றன.
சிறுவர்களுக்குச் சுவாசக் கோளாறுகள் இருப்பின் கருக ஹோமம் அல்லது இறைவனுக்குப் பின்னால் எண்ணெய் விளக்கு இடுதல் போன்ற சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
அமைவிடம் :
கேரள மாநிலம், திருச்சூர் நகரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் திருக்கூர் எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல திருச்சூர் நகரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
தல வரலாறு :
மாடு மேய்க்கும் பணியைச் செய்து கொண்டிருந்த ஒருவன், அந்த ஊரில் இருந்த நம்பூதிரி ஒருவரின் மாடுகளைத் தினமும் காலையில் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வதும், மேய்ச்சலுக்குப் பின்பு மாலையில் அவைகளைத் திரும்பக் கொண்டு வந்து ஒப்படைப்பதுமாக இருந்தான்.
ஒருநாள், அவன் மேய்ச்சலுக்குக் கொண்டு சென்ற மாடுகளில், ஒரு பசு மட்டும் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தான். அந்தப் பசு அங்கிருந்த மலைப் பகுதிக்கு வழி தவறிச் சென்றிருக்கும் என்று நினைத்த அந்தப் பணியாளன், மலைப்பகுதிக்குச் சென்றான். அந்த மலைப்பகுதியில் ஒரு குகை காணப்பட்டது. அந்த குகைக்குள் சென்ற பணியாளன், அங்கு பசு இருப்பதைக் கண்டு நிம்மதியடைந்தான்.
பசு கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்த பணியாளன், அந்த பசுவை மலையில் இருந்து கீழே அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக, அதன் அருகே சென்றான். அப்போது பசு மாயமாக மறைந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தான். அதே சமயம் பசு நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு பெரிய சிவலிங்கம் இருந்தது. என்ன ஏதென்று அறியாமல் விழிபிதுங்கிய பணியாளன், ஓட்டமும், நடையுமாக மலையை விட்டு இறங்கினான். பின்னர் தான் மலை அடிவாரத்தில் மேய்ச்சலுக்காக விட்டுச் சென்றிருந்த மற்ற மாடுகளை ஓட்டிக்கொண்டு ஊருக்குள் திரும்பிச் சென்றான்.
அங்கு மாடுகளின் உரிமையாளரான நம்பூதிரியிடம், பசு காணாமல் போனதில் இருந்து, மலையின் மேல் பகுதியில் அது மறைந்து, சிவலிங்கம் தோன்றியவரை சொல்லி முடித்தான். அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த நம்பூதிரி, தன்னுடன் சிலரை அழைத்துக் கொண்டு, பணியாளன் குறிப்பிட்ட அந்த மலைப் பகுதிக்குச் சென்றார்.
மாடு மேய்ப்பவன் தெரிவித்தபடி, மலைக்குகையில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். சுயம்பு வடிவில் தோன்றியிருந்த அந்த லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கினர். அப்போது நம் பூதிரியின் மனக்கண்ணில், இங்குள்ள சுயம்பு லிங்கம், அக்னி தேவனால் வணங்கப்பட்டது என்பதும், இந்த லிங்கம், பஞ்சபூதங்களில் அக்னி வடிவிலானது என்பதும் தோன்றி மறைந்தது. இதையடுத்து அந்த அக்னி லிங்கத்திற்கு, நம்பூதிரி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். தொடர்ந்து சில காலங்களில் கோவிலுக்கு தேவையான கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டார். திருப்பணிகளுக்குப் பிறகு இந்த ஆலயம் பொதுமக்கள் அனைவரும் வந்து வழிபட்டுச் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது என்பதாக கோவில் தல வரலாறு சொல்லப்படுகிறது.
ஆலய அமைப்பு :
உயரமான மலைப்பகுதியில், 30 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்டு இயற்கையாக அமைந்த குகைப் பகுதியில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. குகையின் தெற்கு திசையில், கடைசிப் பகுதியில் வடக்கு நோக்கிய கருவறையில், கிழக்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்கம் அமைந்திருக்கிறது. இதனால், இக்கோவிலில் வழிபடும் பக்தர்கள், சிவலிங்கத்தின் வலதுபுறத்தை மட்டுமே பார்வையிட்டு வழிபட முடியும். இங்கிருக்கும் இறைவன் ‘திருக்கூர் மகாதேவர்’ என்றழைக்கப் பெறுகிறார்.
ஆலயத்தின் உட்புறத் தோற்றம்இறைவன் சன்னிதிக்கு மேற்குச் சுவரில் கணபதி சிலை செதுக்கப்பட்டிருக்கிறது. ஆலயத்தின் வளாகத்தில் சாஸ்தா, அந்திமகாகாளன், பத்திரகாளி, பகவதி, சாமுண்டி உள்ளிட்ட தெய்வங்களும் வழிபாட்டிற்காக இடம் பெற்றிருக்கின்றன. கிழக்குப் பகுதியில் துவாரபாலகர்கள் இருக்கின்றனர். முகப்பு மண்டபத்தில் வைஷ்ணவ சைதன்ய மரபிலான சாலக்கிராமம் இடம் பெற்றிருக்கிறது.
மலைப்பாறையின் மேல் பசுமையாக இருக்கும் குளம் ஒன்றும் அமைந்திருக்கிறது. 1966-ம் ஆண்டில் இருந்து கேரள மாநிலத் தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இக்கோவில் இருந்து வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
வழிபாடுகள் :
சிவராத்திரி, நவராத்திரி, திருவாதிரை, பிரதோஷ நாட்கள் மற்றும் சிவபெருமானுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோவிலில் 16 கற்தூண்களுடன் அமைக்கப்பெற்றிருக்கும் நமஸ்கார மண்டபத்தில் நவராத்திரி விழாவின் போது, சரஸ்வதி வழிபாடு மற்றும் சாக்கியார் கூத்து போன்றவை நடத்தப்பெறுகின்றன.
இக்குகைக் கோவிலில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்கு மாலை நேர பூஜையின் போது, சிவலிங்கத்திற்கு 108 வில்வ இலைகள் சமர்ப்பிக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.
கயிறு வழிபாடு :
சுவாசக் கோளாறு, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய் பாதிப்புடையவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து, கயிறு வழிபாடு செய்து இறைவனை வழிபட்டு நலம் பெறலாம் என்கின்றனர். சுவாச நோய்ப் பாதிப்புடையவர்கள் சிலர் இங்கிருக்கும் இறைவன் உயரத்துக்குச் சமமாகத் தாம்புக்கயிறு வாங்கிக் கொடுத்து வழிபடுகின்றனர். சிலர், அவர்களது எடைக்குச் சமமான தாம்புக்கயிறைத் துலாபாரம் போன்று எடை போட்டு வழங்கி இறைவனை வழிபட்டுத் தங்கள் சுவாச நோய் நீங்க வேண்டிக் கொள்கின்றனர். கயிறு வழிபாட்டில் பெறப்படும் கயிறுகள் அனைத்தும் கோவில் மண்டபத்தில் தொங்கவிடப் படுகின்றன.
சிறுவர்களுக்குச் சுவாசக் கோளாறுகள் இருப்பின் கருக ஹோமம் அல்லது இறைவனுக்குப் பின்னால் எண்ணெய் விளக்கு இடுதல் போன்ற சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
அமைவிடம் :
கேரள மாநிலம், திருச்சூர் நகரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் திருக்கூர் எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல திருச்சூர் நகரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
கரிக்ககம் என்ற இடத்தில் உருவானது தான் ‘தேவி கரிக்கத்தம்மா’ என்று அழைக்கப்படும் கரிக்ககம் ஸ்ரீசாமுண்டி கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஆதி பரம்பொருளான சிவபெருமான் படைத்து அருள்பாலித்து வரும் இந்த பூவுலகில், பழங்காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அந்த கால கட்டத்தில் பாண்டிய மன்னர்களும், சோழ மன்னர்களும் போட்டிபோட்டு ஆலயங்களை அமைத்து வழிபட்டனர். சேரநாட்டிலும் சிவன் கோவில்கள் அமைந்தன. இருப்பினும் மகாவிஷ்ணுவின் அவதாரமாக போற்றப்படும் பரசுராமர், 108 சிவாலயங்களையும், சக்தி சொரூபிணியான பரமேஸ்வரியின் 108 பகவதியம்மன் கோவில்களையும் அமைத்தார். அதுவே கேரள தேசம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கின்றன.
அவர் அமைத்த ஆலயங்களை, பிற்கால மன்னர்கள் அந்தந்த ஊர்களின் பெயரிலேயே திருப்பணி செய்து போற்றி பராமரித்தனர். இப்படி கரிக்ககம் என்ற இடத்தில் உருவானது தான் ‘தேவி கரிக்கத்தம்மா’ என்று அழைக்கப்படும் கரிக்ககம் ஸ்ரீசாமுண்டி கோவில். பிற்கால சேர மன்னனான அனுஷம் திருநாள் ராமவர்மா காலத்தில் உருவான இந்த ஆலயத்தில், உக்கிரமாக இருக்கும் ரத்த சாமுண்டி சத்தியத்தை நிலைநாட்டும் அன்னையாக அருள்பாலித்து வருகிறாள்.
திருவிதாங்கூர் மன்னனின் படைவீரர்கள் களரிச் சண்டை பயிற்சி பெறும் களமாக விளங்கிய இடம் என்பதால், இந்தப் பகுதிக்கு ‘களரிக்களம்’ என்று பெயர் வந்தது. பின்னர் அருவே மருவி ‘கரிக்ககம்’ என்றானதாக கூறப்படுகிறது.
தல வரலாறு
வேத விற்பன்னரும் தெய்வீக அருள்பெற்றவருமான ஒரு வேதிகர், பராசக்தியை தவறாது வழிபட்டு வந்தார். அவர் மந்திர தந்திரங்களை நன்கு கற்று அருள் பெற்றிருந்த ஒரு தந்திரியை தன் சீடனாக ஆக்கிக் கொண்டு அவருக்கு அறிவுரைகளும், அருள்வாக்கும் வழங்கினார். அந்த சீடரும், குருவைப் போலவே பராசக்தியை வழிபட்டு வந்தார். அவர்கள் இருவர் முன்பாகவும் அன்னை, சிறுமி வடிவத்தில் தோன்றினாள். பின்னர் அம்மனுடன் அவர்கள் தற்போது ஆலயம் இருக்கும் பகுதிக்கு வந்தனர். அங்கு சிறிய பச்சை பந்தல் அமைத்து அம்மனை குடியமர்த்தினர். சிறுமியாக வந்த அன்னை, அவர்களுக்கு அருளாசி வழங்கி மறைந்தாள்.
இந்த ஆலயத்தில் ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது சிறப்புக்குரியதாகும். ஸ்ரீசாமுண்டி தேவி, ரத்த சாமுண்டி தேவி, பால சாமுண்டி தேவி என மூன்று வடிவங்களில் அன்னை வணங்கப்படுகிறாள். இதில் ரத்த சாமுண்டி, பால சாமுண்டி ஆகிய அம்மன்கள் சுவர் சித்திரமாகவே இருக்கின்றனர். இந்த சன்னிதிகளில் சிலை வடிவம் கிடையாது. அருள் சுரப்பது சாமுண்டி தேவி, அநீதியை முறியடிப்பது ரத்த சாமுண்டிதேவி, ஐஸ்வரியம் வழங்குவது பால சாமுண்டிதேவி.
முன் காலத்தில் இந்த ஆலய சாமுண்டி தேவி, வெள்ளி முகத்துடன், கலைமான் கொம்பில் வீற்றிருப்பது போன்று இருந்தது. பிரசன்னம் பார்த்ததில், பக்தர்களுக்கு தேவியின் உருவத்தைப் பார்த்து வணங்கி பிரார்த்தனை செய்ய, விக்கிரக பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது தெரியவந்தது. தொடர்ந்து சாஸ்திர முறைப்படி பழைய கருவறையில், அதே அளவில் சிலை அமைக்கப்பட்டது. தேவியை பஞ்சலோக விக்கிரகமாக பிரதிஷ்டை செய்தனர். அமைதியான வாழ்வுக்கும், தீராத நோய் நீங்கவும் பக்தர்கள் இந்த அன்னையை வழிபட்டு வருகிறார்கள்.
இந்த ஆலயத்தில் உள்ள சாமுண்டி தேவிக்கு ஒரு நேர பூஜை வழிபாடு செய்யப்படுகிறது. இது ‘தேவி நடை பூஜை’ என்று அழைக்கப்படுகிறது. கடும்பாயசம் தான் அன்னையின் விருப்பமான நைவேத்தியம். ரத்த புஷ்பார்ச்சனை, சுயம்வரார்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனை, பால் பாயசம், பஞ்சாமிர்த அபிஷேகம், புடவை சாத்துதல், பிடிபணம் வாருதல் ஆகியவை இந்த அம்மன் சன்னிதியில் நடைபெறும் வழிபாடுகளாகும். காலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்ததும், உடனடியாக தேவிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்தப்படும்.
நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற, தொடர்ந்து 13 வெள்ளிக்கிழமை ரத்த புஷ்பார்ச்சனை செய்து வருவது நல்லது. நித்திரையில் வரும் கெட்ட கனவுகளைக் கண்டு பயப்படாமல் இருக்கவும், வேறு தோஷங்களில் இருந்து விடுபடவும் இந்த சன்னிதியில் கறுப்புக் கயிறு தரப்படுகிறது. இது தாயத்து எழுதி தேவி பாதங்களில் 21 தினங்கள் பூஜை செய்து தரப்படுவதாகும்.
ரத்த சாமுண்டி தனி சன்னிதியில் சுவர் சித்திரமாக இருக்கிறாள். நீதியை நிலைநாட்ட இந்த சன்னிதியில் வந்து சத்தியம் செய்வது பழங்கால வழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சன்னிதியை திறந்து சத்தியம் செய்வதற்கு சிறிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு நடைபெறும் முக்கிய பூஜை ‘சத்ரு சம்ஹார பூஜை’ ஆகும். இது பகையை அழிக்கும் பூஜை. சுப காரிய தடை நீங்கவும், கண் திருஷ்டி அகலவும், ஜாதக தோஷம், பகைவர்கள் மூலம் ஏற்படும் சதித் திட்டங்கள் விலகவும் இங்கு பரிகார பூஜை செய்யப்படுகிறது. ரத்த சாமுண்டிக்கு கடும் பாயசம், சிவப்பு நிற பட்டு பாவாடை, தெற்றி பூ மாலை, கோழி, ஆடு தானம், தங்கம், வெள்ளி போன்றவற்றால் ஆன பொருட்களை சமர்ப்பிக்கலாம்.
சாந்த சொரூபிணியான பால சாமுண்டி தேவியும் தனி சன்னிதியில் சுவர் சித்திரமாகவே அருள்கிறாள். அம்மன் அழகும், அமைதியும் நிறைந்து காட்சி தருகிறாள். இந்த அன்னையை குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்கள் வழிபடுகிறார்கள். நோய் நீங்குவதற்கு நடையை திறந்து வழிபாடு செய்யும் முறை இருக்கிறது. இதற்கும் சிறிய தொகை வசூலிக்கப்படுகிறது. இந்த சன்னிதியில் உள்ள அன்னைக்கும் கடும் பாயசம், பட்டு, முல்லைப் பூ, பிச்சிப்பூக்களால் ஆன மாலை அணிவிக்கப்படுகிறது. தங்கம், வெள்ளியால் ஆன குழந்தை உருவங்கள், தொட்டில்கள், விளையாட்டுப் பொருட்களை இந்த அன்னைக்கு சமர்ப்பிக்கிறார்கள். கல்வியில் சிறந்து விளங்கவும் இந்த அன்னையின் தரிசனம் பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகம்.
இந்த ஆலய வளாகத்தில் மகா கணபதி, யக்ஷியம்மா, புவனேஸ்வரி, ஆயிரவல்லி, குரு மந்திரம், நாகர்காவு, அன்னபூர்ணேஸ்வரி ஆகிய சன்னிதிகளும் உள்ளன.
தேவியின் நட்சத்திர தினமான பங்குனி மாதம் மக நட்சத்திரத் தினத்தில் பொங்கல் விழா நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
சத்தியம் காக்கும் சன்னிதி :
சேர மன்னன் காலத்தில், ஒரு நாள் அரசியின் விலைஉயர்ந்த காதணி காணாமல் போய்விட்டது. அந்தப்புரத்தில் காவல் பணியில் ஈடுபட்ட ஒரு காவலாளி மீது சந்தேகம் கொண்டு, அவனைப் பிடித்து சிறையில் அடைத்தனர்.
அதே சமயத்தில் அந்த காவலாளியின் காதலியும், அரசியின் தோழியுமான ஒரு பெண் ஓடி வந்து, தன்னை தண்டிக்கும்படியும், காவலாளியை விடுவிக்கும்படியும் கூறினாள். காவலாளியோ, “இல்லை.. நான் தான் குற்றவாளி. எனக்கே தண்டனை கொடுங்கள்” என்றான்.
மன்னனுக்கு வியப்பு ஏற்பட்டது. யார் குற்றவாளி என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறினான். அப்போது அமைச்சர்கள் ஒரு ஆலோசனை கூறினார்கள். அதன்படி காவலாளியையும், அவனது காதலியையும், கரிக்ககம் ரத்த சாமுண்டி சன்னிதானத்தில் சத்தியம் செய்ய வைப்பது என்று முடிவானது. பொய் சத்தியம் செய்பவர்களுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். காவலாளியும், அவனது காதலியும் ஆலயக் குளத்தில் நீராடி ஈர உடையுடன் ரத்த சாமுண்டி சன்னிதிக்கு வந்தனர்.
அப்போது அரசியின் துணியை சலவை செய்யும் பெண் ஒருத்தி அங்கு ஓடி வந்தாள். அவர் “சலவைக்கு போட்ட துணியில், அரசியின் காதணி இருப்பதைக் கண்டேன். ரத்த சாமுண்டியின் அசரீரி வாக்குப்படி, அதனை ஒப்படைக்க இங்கே ஓடி வந்தேன். காவலாளியும், அந்தப் பெண்ணும் நிரபராதிகள்” என்று கூறி காதணியைக் கொடுத்தாள்.
மகிழ்ச்சியடைந்த மன்னன், காவலாளியையும், அவனது காதலியையும் விடுவித்தான். அதோடு அரசியின் காதணியை, ஆலயத்தில் உள்ள அன்னைக்கே சமர்ப்பித்தான்.
கேரளத்தில் மன்னர் ஆட்சி காலத்தில் இருந்து இன்று வரை கரிக்ககம் சாமுண்டி தேவி சன்னிதானத்தில், பல சிக்கலான வழக்குகள், சத்தியம் செய்வதன் மூலம் நிரூபிக்கப்பட்டு வந்திருக்கின்றன. குற்றம் சாட்டியவரும், குற்றவாளியும் ஆலய குளத்தில் நீராடி சாமுண்டி அம்மன் முன் காணிக்கை செலுத்தி விளக்கேற்றி, தீபச் சுடரின் மேல் சத்தியம் செய்ய வேண்டும். பொய் சத்தியம் செய்பவர்களுக்கு உடனடியாக தண்டனை கிடைத்துவிடும் என்று அனைவரும் நம்புவதால் எவரும் பொய் சத்தியம் செய்வதில்லை.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம் :
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் வடமேற்கு திசையில் பார்வதி புத்தனாற்றின் கரையில் கரிக்ககம் சாமுண்டி கோவில் அமைந்திருக்கிறது.